பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மானிட இனத்தை மயக்குபவள் ஒரு காரிகை !
முகத்துதிக் கலைகளைக் கற்பிப்பாள் அந்தக் கன்னி !
கண்கள் நம்மை ஏமாற்றும் ! காட்டுவாள் கனிவு !
மனத்தைக் கவர்ந்து பணத்தைக் கறப்பாள் !
இரைதேடிச் செல்லும் நரிபோல் தொடர்கிறோம் !
புரிவோம் வஞ்சகம் அவளது நளினம் காண !
காதலை நாடிக் கைப்பணம் இழப்போம்,
கரங்களில் அழகை அள்ளிக் கொள்ள !

— (நாடகம் : பிச்சைக்காரனின் இசைக்கச்சேரி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 5 காட்சி 4

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

அங்கம் 5 காட்சி 4

இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார். முதலில் குற்றம் சுமத்தப்படும் சமையல்காரன் ஜேகப், தான் திருடவில்லை என்று சாதித்து, வீட்டு வேலையாள் வில்லியத்தைக் காட்டிக் கொடுக்கிறான். வில்லியம் தான் திருடவில்லை; எலிஸபெத்தை நேசிப்பதாகச் சொல்லி எட்வேர்டுக்குக் கோபத்தை மூட்டுகிறான். அப்போது எலிஸபெத், மொரீன், கிளாடியா மூவரும் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே நுழைகிறார்கள். திடீரென வில்லியம்-மொரீன் ஆகியோரின் தந்தை ஆப்ரஹாம் வருகிறார். எலிஸபெத் காதலன் வில்லியத்தை மணக்கப் போவதாகச் சொல்லி விடுகிறாள். பண முடிப்பை யார் களவாடியது என்று இன்னும் தெரியாமல் எட்வேர்டு தடுமாறும் போது, இறுதியில் புதல்வன் கிரஹாம் வந்து பிரச்சனைகளைத் தீர்க்கிறான்.

கிரஹாம்: [எட்வேர்டைப் பார்த்து] அப்பா ! கவலைப் படாதீர்கள் ! யார் மீதும் பழி சுமத்தாதீர்கள் ! உங்கள் பணத்தை யார் திருடியது என்பதற்குத் துப்புக் கிடைத்துள்ளது ! அதைச் சொல்லத்தான் ஓடோடியும் வந்தேன் ! எனக்கோர் வாக்களித்தால் பணத்தை மீட்டுவர உதவி செய்கிறேன் !

எட்வேர்டு: [கிரஹாமைப் பார்த்து] அப்படியா ? பணத்தை யார் திருடியது ? முதலில் அதைப் போலீஸ் அதிகாரிக்குத் தெரிவிப்பாய் ! அந்த அயோக்கியனை முதலில் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். எங்கே இருக்கிறான் சொல் ?

கிரஹாம்: அப்பா ! பணம் பத்திரமாய் இருக்கிறது ! அதற்கு உத்திரவாதம் நான். என் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால், இப்போதே பணத் தொகை முழுவதும் உங்கள் கையில் கிடைக்கும்.

எட்வேர்டு: (மிக்க மகிழ்ச்சியுடன்) ஒரு டாலர் குறையாமல் பத்தாயிரம் டாலர் முழுத்தொகையும் கொண்டுவர ஏற்பாடு செய்வாயா ?

கிரஹாம்: அப்பா ! ஒரு டாலர் குறையாமல் வந்து சேரும். ஆனால் எனக்கோர் ஆதாயம் இல்லாமல் நான் பணத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்ய முடியாது !

எட்வேர்டு: உனக்கென்ன வேண்டும் ? உனது நிபந்தனை என்ன ?

கிரஹாம்: மொரீனை நான் மணமுடிக்க விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் பண முடிப்பு உங்களைச் சேரும். ஒன்று மொரீனை நான் மணப்பேன் ! அல்லது நீங்கள் பணத்தை இழப்பீர் ! சொல்லுங்கள் எது வேண்டும் ? பணமுடிப்பா ? மொரீனா ?

எட்வேர்டு: முதலில் என் பணம் வரவேண்டும் ! மொரீனை அடுத்து நான் மணக்க வேண்டும் ! நான் மணப்பதாக அவள் அன்னைக்கு வாக்குருதி அளித்து விட்டேனே ! எப்படி அதை இப்போது நான் மறுப்பது ? வாக்கு மாறாதவன் நான் !

கிரஹாம்: நீங்கள் ஏன் மறுக்க வேண்டும் ? நீங்கள் ஏன் வாக்கு மாற வேண்டும் ? மொரீன் என் புதல்வனைப் மணப்பாள் என்று சொன்னாலே போதும். பண முடிச்சு உங்களுக்கு ! மண முடிப்பு உங்கள் மகனுக்கு ! நீங்கள் மொரீனை நிராகரிக்கவில்லையே !

மொரீன்: நீங்கள் இருவர் மட்டும் தீர்மானம் செய்யும் திருமணம் இல்லை இது ! முதலில் என் அன்னையின் அனுமதி வேண்டும் ! பிறகு இதோ இங்கு நிற்கும் என் தந்தையின் அனுமதி ! இறுதியில் என் சகோதரன் வில்லியத்தின் அனுமதி !

ஆப்ரஹாம்: என்னருமைச் செல்வர்களே ! கடவுள் அமைக்கும் திருமணங்களைத் தடைசெய்வது என் வேலை அல்ல ! மிஸ்டர் எட்வேர்டு ! மொரீனை உங்கள் மகன் மணப்பதே முறையாகத் தெரியுது எனக்கு ! உங்கள் வயதுக்கு ஏற்ற வயோதிக மாதை நீங்கள் தேடிக் கொள்ளலாம். அதுபோல் மொரீனைக் கிரஹாம் மணப்பதை நான் வரவேற்கிறேன் !

எட்வேர்டு: வேலைக்கார வில்லியத்தை என் மகள் எலிஸபெத் மணப்பதை நான் வெறுக்கிறேன் ! செல்வந்தராகிய நீங்கள்தான் எலிஸபெத்துக்கு நல்வாழ்வு தரத் தகுதியுள்ளவர் ! வில்லியத்தின் ஊதியம் குடும்ப வாழ்வுக்குப் பற்றாது !

ஆப்ரஹாம்: மிஸ்டர் எட்வேர்ட் ! எலிஸபெத்துக்கு என் மகள் வயது ! அவள் வாலிபக் குமரி எனத் தெரிந்த பின்னும் நான் எப்படி அவளை மணப்பது ? என் மகன் வில்லியமே எலிஸபெத்துக்கு ஏற்ற மணமகன் ! என்னிடம் சொத்துள்ளது ! அவனிடம் வாலிபம் உள்ளது ! பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம். வாலிபத்தைச் சம்பாதிக்க முடியாது.

எட்வேர்டு: கிரஹாம் ! உன்னை நம்ப முடியாது ! கண்ணால் பண முடிப்பைக் காணாமல் நான் எதையும் தீர்மானிக்க முடியாது. கண்முன் காட்டு பணத்தை முதலில் !

[கிரஹாம் வெளியே சென்று கையசைக்க, வேலையாள் வின்சென்ட் பின்னால் பணப்பையுடன் ஓடி வருகிறான்]

ஜேகப்: எஜமான் ! பார்த்தீர்களா ? நான் இவனை முன்னமே சந்தேகப்பட்டேன். வின்சென்ட்தான் வீட்டுக் கள்ளன் என்று சுட்டிக் காட்டினேன் ! நீங்கள்தான் என்னை நம்ப வில்லை !

எட்வேர்டு: போடா முட்டாள் ! நீ சந்தேகப்பட்டது வில்லியம் ! வில்லியம் சந்தேகப்பட்டது வின்சென்டை ! நீ சொன்னது முழுப்பொய் ! வில்லியம்தான் உண்மையில் உத்தமன் ! வெகுமதி அவனுக்குத்தான் அளிப்பேன் ! எலிஸபெத் ! நீதான் வெகுமதி ! இந்த உத்தம வாலிபனே உன்னை மணக்கத் தகுதி உள்ளவன் ! ஆப்ரஹாமை நான் விட்டு விடுகிறேன் ! அவருக்கு சற்று வயது அதிகம் ! அவருக்கு மீசை வளர்ந்தாலும் வாலிபம் மீளாது [எலிஸபெத்தின் கையைப் பற்றி வில்லியத்தின் கையில் ஒப்படைக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி முத்தமிடுகிறார்]

ஆப்ரஹாம்: [கைதட்டிக் கொண்டு] அதுபோல் மொரீனுக்கு ஏற்ற ஒரு வாலிபன் கிரஹாம் ! எட்வேர்டை நீ மறந்து விடு ! உன் அன்னையிடம் நான் பேசுகிறேன் ! நீ எனக்கும் மகள் [மொரீன் கையைப் பற்றி கிரஹாம் கையில் ஒப்படைக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி முத்தமிடுகிறார்]

[கிரஹாம் விடுவித்துக் கொண்டு வின்சென்டிடம் பணப்பையை வாங்கித் தந்தை எட்வேர்டிடம் கொடுக்கிறான்]

எட்வேர்டு: [மகிழ்ச்சியுடன் பணப்பையை வாங்கி முத்தத்தின் மேல் முத்தமிடுகிறார்] அப்பாடா ! போன உயிர் இப்போதுதான் எனக்கு வந்தது ! வெட்ட வெயிலில் வேர்வை சொட்டச் சொட்ட சம்பாதித்த பணம் ! என்னருமைக் கண்மணி நீ தான் ! [முத்தமிடுகிறார் பணப்பையை மறுபடியும்] கிரஹாம் ! நினைவில் வை ! இந்தப் பணத்தில் ஒரு டாலர் கூட உன் திருமணத்துக்கு நான் தரப் போவதில்லை ! உனக்கும் ஒரு டாலர் இல்லை வில்லியம் ! எலிஸபெத் ஒருத்திதான் உனக்கு வெகுமதி ! இந்தப் பணத்தில் ஒரு டாலர் கூட உனக்கும் தரப் போவதில்லை ! இது என் பணம் ! எனக்குரிய பணம் ! என் திருமணத்துக்குரிய பணம் !

ஆப்ரஹாம்: கவலை படாதீர்கள் ! நானிருக்கிறேன், மொரீன் ! வில்லியம் ! உங்கள் திருமணம் என் செலவில் சிறப்பாக நடக்கும் ! நான் உங்கள் தந்தை ! உமது திருமணங்கள் சீரும், சிறப்புடன் வான வேடிக்கையோடு, வாத்திய இசைகளோடு தடபுடலாய் நடக்கும் ! நான் முன்னின்று நடத்தி வைக்கிறேன். இன்று உங்களுக்கு ஒரு பொன்னாள் ! உங்கள் திருமணப் பெருநாள் ! கொண்டாடுவோம் வாருங்கள் !

[எல்லோரும் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள்]

(இறுதிக் காட்சி)

(முற்றும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 26, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 3

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மேடம் ! சுருக்கமாய்ச் சொல்லவா ?
வெளிப்படை யாய்ச் சொல்லவா ?
என்னிதயத்தில் புண்ணுண்டாகும்
உன் நடத்தை வேதனை அளிப்பது !
என் மனச்சாட்சி குத்திக் கிழிக்குது !
இன்றோ நாளையோ நாம் பிரிவது நன்று !
பத்தாயிரம் முறை வாக்குறுதி அளிப்பினும்
உத்திர வாதம் தந்திலேன் உனக்கு !

— (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 5 காட்சி 3

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
அங்கம் 5 காட்சி 3

இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார். முதலில் குற்றம் சுமத்தப்படும் சமையல்காரன் ஜேகப், தான் திருடவில்லை என்று சாதித்து, வீட்டு வேலையாள் வில்லியத்தைக் காட்டிக் கொடுக்கிறான். வில்லியம் தான் திருடவில்லை; எலிஸபெத்தை நேசிப்பதாகச் சொல்லி எட்வேர்டுக்குக் கோபத்தை மூட்டுகிறான். அப்போது எலிஸபெத், மொரீன், கிளாடியா மூவரும் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே நுழைகிறார்கள். திடீரென வில்லியம்-மொரீன் ஆகியோரின் தந்தை ஆப்ரஹாமும் வருகிறார்.

எட்வேர்டு: [எலிஸபெத்தைக் கோபத்துடன் பார்த்து] நீ எனக்குப் பிறந்த பெண்ணே அல்ல ! போயும், போயும் வீட்டு வேலைக்காரனை விரும்பும் உன்னை என் மகளென்று சொல்லக் கூச்சப் படுகிறேன். கண்ணியமான காதலனா இவன் ! கயவன் இவன் ! என் பணத்தைக் களவாடிய எத்தன் ! பெண்ணை மயக்கி தன்வசப்படுத்தும் பித்தன் ! பணத்தைத் திருடவில்லை என்று சத்தியம் செய்யும் சித்தன் ! என் அனுமதி இல்லாமல் நீ எப்படி இந்தக் கள்வனைக் காதலிப்பாய் ?

எலிஸபெத்: அப்பா ! அவர் யாரென்று தெரியாமல் பேசுகிறீர். வீட்டு வேலைக்கு வந்தாலும், அவர் வேலைக்காரர் அல்லர். கூலி வாங்கினாலும் அவர் வேலையாளி அல்லர் ! என்னுடன் பேசிப் பழகவே அவர் நம் வீட்டு வேலைக்கு வந்தார். எப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

எட்வேர்டு: [வில்லியத்தைப் பார்த்து] எலிஸபெத் ! என் புதையல் பணத்தை எடுத்துக் கொண்டு போனவன் இவனேதான் ! தோண்டி எடுத்ததை ஜேகப் மறைந்து நின்று பார்த்திருக்கிறான் ! வில்லியம் நல்லவன் என்று நீ எனக்கு சொல்லித் தருகிறாயா ? உன்னை மணப்பதற்கு என் பண முடிப்பு உதவப் போவதாய் மனப்பால் குடிக்கிறான் இந்த மடையன் ! சிறைக்குள் அடைக்கப்படும் இந்த எத்தன் உன்னை எப்படித் திருமணம் செய்வான் என்று நான் பார்க்கப் போகிறேன் ? நான் உனக்குத் தேர்ந்தெடுத்த ஆடவரைத்தான் நீ மணக்க வேண்டும் !

எலிஸபெத்: அப்பா ! நான் அந்த கிழவரை மணக்க மாட்டேன் ! அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது. அந்தக் கிழவர் ஒரு காலை இடுகாட்டிலும், மறு காலை நடுவீட்டிலும் வைத்திருக்கிறார். அவருக்கு மகளாக இருப்பதை விட உங்களுக்கு மகளாக இருந்து விடுகிறேன். என்னுயிரைக் காப்பாற்றிய வில்லியம் ஒருவரைத்தான் நான் மணப்பேன் ! இல்லையேல் கன்னியாகவே உயிர் துறப்பேன். வில்லியம்தான் என் வருங்காலக் கணவன் !

எட்வேர்டு: [ஆச்சரியன்முடன்] என்ன ? இந்தக் கள்ளப் பயலா உன்னைக் காப்பாற்றினான் ?
எங்கே, எப்படி, எப்போது இவன் உன்னைக் காப்பாற்றினான் ? அதென்ன புதுக்கதை ? எனக்கு இதுவரை தெரியாதே !

எலிஸபெத்: போன வருடக் கோடையில் கடலில் குளிக்க நான் தோழிகளுடன் போனது ஞாபம் உள்ளதா ? கடலில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அலையடித்து என்னை இழுத்துச் சென்றது ! தோழிகள் என்னைக் காப்பாற்ற முடியாமல் அலறினார் ! உதவிக்குக் கூக்குரல் இட்டார். அப்போது தேவ குமாரனைப் போல் ஓடிவந்தவர் இந்த வில்லியம் ! மூழ்கி மூச்சு நிற்கும் தருவாயில் என்னைத் தூக்கி வந்தவர் வில்லியம். வாயோடு வாய் வைத்துத் தன் உயிர் மூச்சை என் நெஞ்சில் ஊதியவர் இந்த வில்லியம் ! அந்த உயிர் மூச்சில் பிழைத்தவள் நான் அப்பா ! அன்றே என்னை முத்தமிட்டு அணைத்துக் கொண்டவர் இந்த வில்லியம் ! அவரிடம் உடலையும் உயிரையும் அப்போதே அர்ப்பணம் செய்தவள் இந்த எலிஸபெத் ! எப்போதோ எங்கள் ஆத்மாக்கள் இணைந்து விட்டன அப்பா ! அந்த பிணைப்பை உங்களால் பிரிக்க முடியாது அப்பா !

எட்வேர்டு: வில்லியம் செய்ததை எந்த ஆடவனும் செய்வான் ! இதென்ன தீரச் செயல் ? உன்னைக் காப்பாற்றிய வாலிபனுக்குச் சன்மானத்தைக் கொடு ! உன்னிளமை அழகை ஒரு வேலைக்காரனுக்கா பலியிட வேண்டும் ? என் பூட்ஸ்களைத் துடைத்தவன் எப்படி எனக்கு மருமகன் ஆவான் ? என் வீட்டில் வேலைக்கு வந்தது எலிஸபெத் உனக்காக ! என் வீட்டில் உண்டு, உறங்கி, உலாவியது எலிஸபெத் உனக்காக ! என் உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்தது எலிஸபெத் உனக்காக ! பணத்தை ஒளித்து வைத்து இல்லை என்பது எலிஸபெத் உனக்காக ! எல்லாம் உனக்காக எலிஸபெத் ! எப்போது அதை உணரப் போகிறாய் எலிஸபெத் ?

எலிஸபெத்: உங்கள் பணத்தை நிச்சயம் வில்லியம் எடுத்திருக்க மாட்டார் ! அவரது செல்வந்தர் வீட்டுப் பிள்ளை ! உங்களுக்குத் தெரியாது அவர் யாருடைய புதல்வர் என்று ?

எட்வேர்டு: [ஆச்சரியமுடன்] என்ன செல்வந்தர் வீட்டுப் பிள்ளையா ? எனக்குத் தெரியாதே ! யார் வில்லியத்தின் தந்தை ? அவருக்குச் சொத்து எவ்வளவு இருக்கும் சுமாராக ?

எலிஸபெத்: வில்லியம் வீட்டு வேலைக்கு வந்த செல்வந்த வீட்டுப் பிள்ளை ! அவரது அப்பா பெயர் ஆப்ரஹாம் ! அவரும் உங்களைப் போலொரு சீமான் ! கோமான் ! தனவான் !

எட்வேர்டு: [ஆச்சரியமுடன்] என்ன ? ஆப்ரஹமா ? கோடீஸ்வரர் ஆப்ரஹாம் வில்லியத்தின் தந்தையா ? எனக்குத் தெரியாதே ! அப்படியானல் வில்லியம் களவாடிய பணத்தை அவரிடமிருந்து நான் வாங்கி விடலாம் ! [பெருமூச்சு விட்டு] என் பணத்தொகை எனக்குக் கிடைத்து விடும் ! கவலை இல்லை !

எலிஸபெத்: அப்பா ! வில்லியம் ஆப்ரஹாமின் மூத்த தாரத்து மகன் ! தகப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு தனியாக நம் வீட்டில் வேலை செய்து வாழ்கிறார். நீங்கள் தேடிப் போன மொரீன் ஆப்ரஹாமின் இளைய தாரத்து மகள் !

எட்வேர்டு: அந்த ஆப்ரஹாமைத்தான் நான் உனக்கு மாப்பிள்ளையாக முன்பே தேர்ந்தெடுத்து விட்டேன் ! எலிஸபெத் ! ஆப்ரஹாம் செல்வத்தில் நீந்த வேண்டியவள் நீ ! தேடிவந்த சீதேவியை உதறித் தள்ளாதே !

எலிஸபெத்: மூன்றாம் தாரமாகவா ? மூளை கெட்டுப் போச்சு உங்களுக்கு ! ஆப்ரஹாம் மூத்த மகனை நான் கணவனாக முன்பே தீர்மானித்து விட்டேன் ! வாலிப மைந்தன் வைரம் போல் இருக்க, வயோதிகத் தந்தையை மணக்க நான் என்ன மூடப் பெண்ணா ? முடமான பெண்ணா ?

[அப்போது ஆப்ரஹாம் வருகிறார்]

வில்லியம்: அதோ அப்பாவே இங்குதான் வருகிறார் ! பிரச்சனைகளை அவரிடம் சொல்வோம்.

எட்வேர்டு: [முன்னே சென்று வரவேற்று] வாருங்கள் மிஸ்டர் ஆப்ரஹாம் ! நீங்கள்தான் உங்கள் மகனிடம் பிடுங்கி என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

ஆப்ரஹாம்: [ஒன்றும் புரியாமல்] என்ன ? மிஸ்டர் எட்வேர்டு கதி கலங்கிக் காணப்படுகிறார். எந்தப் பணத்தை நான் மீட்டுத் தர வேண்டும் ? மொரீன் ! யார் உன்னருகில் இருப்பது ? வில்லியம் ! எந்தப் பணத்தைப் பற்றி இங்கே தகராறு மிஸ்டர் எட்வேர்டு ?

மொரீன்: அப்பா ! இவள்தான் எலிஸபெத் ! மிஸ்டர் எட்வேர்டின் மகள் ! அது கிளாடியா !

எட்வேர்டு: என் புதையல் பணத்தைத் தோண்டி எடுத்து எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறான் உங்கள் அருமைப் புதல்வன் ! வாங்கித் தர வேண்டியது உங்கள் பொறுப்பு !

வில்லியம்: அப்பா ! நான் அவரது புதையல் பணத்தைப் பார்த்ததுமில்லை ! தோண்டி எடுத்தது மில்லை ! மிஸ்டர் எட்வேர்டு கற்பனை செய்து கொண்டு என்மீது பழியைப் போடுகிறார் !

எட்வேர்டு: இல்லை ! என் சமையல்காரன் ஜேகப் நேராக அதைப் பார்த்திருக்கிறான் ! வில்லியம் பெட்டியைத் தோண்டி எடுத்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறான்.

வில்லியம்: நேராகப் பார்த்ததாகச் சொன்னது பொய் ! முழுப்பொய் ! எங்கே அந்த ஜேகப் ? எனக்கு நேராக அவன் உங்கள் முன் இப்போது சொல்லட்டும் !

எட்வேர்டு: [ஜேகப்பைப் பார்த்து] அடே ஜேகப் ! வாடா வந்து மிஸ்டர் ஆப்ரஹாம் முன்வந்து உண்மையைச் சொல். வில்லியம் பெட்டியைத் தோண்டி எடுத்ததைச் சொல் !

வில்லியம்: சொல்லுடா ! நீ எதைப் பார்த்தாய் ? நீ எப்போது பார்த்தாய் ? நீ எங்கே பார்த்தாய் ?

ஜேகப்: [நடுங்கிக் கொண்டே] எஜமான் ! நான் சொல்றேன். எனக்குத் தெரியாது. எதுவும் தெரியாது ! அதுதான் உண்மை !

எட்வேர்டு: அயோக்கிய ராஸ்கல் ! என்னடா பொய் சொல்கிறாய் இப்போது ? இதுவரை நீ சொன்னது உண்மை ஆயிற்றே ! பெட்டியைத் தோண்டுவதைப் பார்த்தது நீ ! வில்லியம் பணத்தை எண்ணி எடுத்ததைப் பார்த்தது நீ ! எது நீ சொல்லும் உண்மை ? இப்போது நீ சொல்வதா ? அப்போது நீ சொன்னதா ? குழப்பித் தொலைகிறாயே என்னை !

ஜேகப்: எஜமான், நான் சொன்ன எதுவும் உண்மை இல்லை ! எனக்கு உண்மையாகத் தெரியாது. நீங்கள் அதட்டியதால் பயந்துபோய் பொய்யைச் சொன்னேன் உண்மையாக !

எட்வேர்டு: உண்மையாகப் பொய்யைச் சொன்னாயா ? அல்லது பொய்யாக உண்மையைச் சொல்லி விட்டாயா ? வில்லியம் பணத்தைக் களவாடியதைப் பார்த்த நீ ஏன் இப்போது இல்லை என்று சொல்கிறாய் ? எனக்குப் பயப்படாமல் உண்மையைச் சொல் !

ஜேகப்: எனக்கு உண்மை தெரியாது எஜமான் ! வில்லியம் ஒருவேளை எடுத்திருக்கலாம் என்று ஊகித்தேன் ! அது தப்புக் கணக்காய்ப் போனது ! தவறு என் மீதுதான் ! மன்னித்து விடுங்கள் என்னை !

எட்வேர்டு: [ஆங்காரமாய்] என்ன தவறு உன்மீதா ? நீயா பணத்தைத் திருடினாய் ? பணத்தை அபகரித்துக் கொண்டு அப்பாவி வில்லியத்தின் மீதா நீ பழியைப் போட்டாய் ? உன் பல்லை உடைக்கிறேன் பார் [அடிக்கக் கையை ஓங்குகிறார். ஜேகப் ஓடுகிறான்].

ஜேகப்: [ஓடிக் கொண்டே] எஜமான், நான் பணத்தை எடுக்க வில்லை ! வில்லியம் என்று முதலில் வாய் உளறி விட்டது. பிறகு நான் என்று வாய் தவறி விட்டது. வேலைக்காரன் வின்சென்ட் என்று சொல்ல வந்தவன், தப்பாக வில்லியம் என்று சொல்லி விட்டேன்.

எட்வேர்டு: [ஆங்காரமாய்] அயோக்கியப் பயலே ! சொல்லிய பொய்மேல் அடுக்கடுக்காய்ச் சொல்லி வருகிறாய் பொய்களை ! உன் வாயில் வருவதெல்லாம் புளுகு மொழிகள்தனா ? இன்மேல்
நீ வாய் திறக்காதே ! ஓடிப் போ ! வெளியே போ ! உன் முகத்தில் விழிப்பதே ஆகாது !

ஆப்ரஹாம்: (மொரீனைப் பார்த்துப் பரிவுடன்) உன் அன்னை நலமா ? எப்படி இருக்கிறாள் ?

மொரீன்: (கண்ணீருடன்) அப்பா ! அன்னைக்கு உடல் நலமில்லை ! உங்களைப் பற்றிதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். வீட்டுக்கு வருவீர்களா ? வந்தால் அன்னைக்கு நோயெல்லாம் மாயமாய்ப் போய்விடும். தனிமையில் உங்களை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறாள் ! வீட்டுக்கு வாருங்கள் அப்பா ! வருவீர்களா ?

எலிஸபெத்: [கோபத்துடன்] அப்பா ! மனைவி உயிரோடிருக்க எப்படி என்னை இவருக்கு மணமுடிக்க ஒப்புக் கொண்டீர்கள் ? இவர் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி உள்ள போது என்னைப்போல் இன்னுமோர் இளம் பெண் தேவையா ?

எட்வேர்டு: மிஸ்டர் ஆப்ரஹாம் ! உங்கள் இரண்டாம் மனைவியை எப்போதே மணவிலக்கு செய்து விட்டீர்கள் அல்லவா ?

மொரீன்: அப்பா ! உங்களுக்குத் திருமணமா ? எனக்குத் தெரியாதே ! யாரிந்த இளம்பெண் ? அன்னைக்குத் தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவாள் !

வில்லியம்: அதோ பார் மொரீன் ! உன் பக்கத்தில் நிற்கும் எலிஸபெத்துதான் அந்த இளம்பெண் !
அப்பாவின் வருங்கால மனைவி !

மொரீன்: எலிஸபெத் ! எனக்கு நீ சொல்ல வில்லையே ! என் தந்தைக்கு வரப் போகும் சித்தியா நீ ? ஆப்ரஹாம் உன் மீது உயிரை வைத்துள்ளானே ! இதென்ன எனக்கு குழப்பமாய் உள்ளதே ! யார் யாரை மணமுடிக்கப் போவது ?

எலிஸபெத்: மொரீன் ! நான் எப்படி இதைச் சொல்வேன் ? என் தந்தை உன் தந்தையுடன் செய்த ரகசிய ஒப்பந்தம் அது ! நான் நேசிப்பது வில்லியம் ஒருவரைத்தான் ! நான் மணமுடிக்கப் போவது வில்லியத்தைதான் ! நிச்சயம், உன் அப்பாவை அல்ல !

ஆப்ரஹாம்: [தடுமாறியபடி] மொரீன் ! நான் திருமணம் செய்ய இன்னும் முடிவு செய்ய வில்லை ! உன் அன்னை நோயில் கிடக்கிறாள் ! நான் திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். நண்பர் எட்வேர்டுடன் தீவிரமாகப் பேச வில்லை. அவர்தான் தன் இல்லத்தில் ஒரு குமரிப் பெண் இருப்பதாகக் கூறினார் ! நான் வாலிபப் பெண் வேண்டாம் என்றுதான் வாதாடினேன் ! எட்வேர்டுதான் என்னை ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தினார் ! சும்மா இருந்தவனுக்குப் பெண்ணாசையை மூட்டியவர் மிஸ்டர் எட்வேர்டு !

எலிஸபெத்: [கோபத்துடன்] அப்பா ! நீங்கள்தான் இந்த முடிச்சைப் போட முந்திச் சென்றவரா ? இது அடாத செயல் என்று உங்களுக்குத் தெரியவில்லையே ! மிஸ்டர் ஆப்ரஹாம் ! நான் வில்லியத்தை மணப்பதாக முடிவு செய்து விட்டேன் ! இதோ வில்லியம் போட்ட மோதிரம் பாருங்கள் ! [மோதிரத்தைக் காட்டுகிறாள்] நான் உங்களை மணக்கப் போவதில்லை !

ஆப்ரஹாம்: எலிஸபெத் ! வில்லியத்துக்கு ஏற்ற வீனஸ் மாது நீதான் ! என் மகன் உன்னை நேசிப்பது எனக்குத் தெரியாது ! அதற்கு நான் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடு. எனக்கு மனைவியாக வருவதை விட, நீ மருமகளாக வருவதையே நான் வரவேற்கிறேன்.

எட்வேர்டு: நானதை ஒப்புக் கொள்ள முடியாது. ஆப்ரஹாம் ! நீங்கள் வாக்கு மாறக் கூடாது. எலிஸபெத்தை நீங்கள்தான் மணக்க வேண்டும் ! வீட்டு வேலை செய்யும் வேலைக்கார வில்லியம் என் மருமகனாக வருவதை நான் ஏற்கவில்லை ! திருமணம் நான் தீர்மானித்தபடிதான் நடக்கும். உங்களுக்கும் எலிஸபெத்துக்கும் ! அதை நடத்திக் காட்டுவது என் கடமை ! நினைப்பதை முடிப்பவன் நான் !

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 19, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காதல் அரங்கில் நுழைவதே தனிச்சுவை !
காதலில் உறுதியைத் தேடினால்
தேடல் வீண் போகாது !
அந்தோ ! உள்ளன
பந்தமிலாக் கொடூர நெஞ்சங்கள் !
நம்பத் தகும் ஓர் இடையனைக்
நாம் காணல் அரிது !
நிலை கெட்ட காம உணர்ச்சி
விளைவது தகாது !
காதலை அது
துறக்கச் செய்யும் ஒருவர் மீதொருவர்
வெறுப்பு மேலிட்டு !

— (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 5 காட்சி 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
அங்கம் 5 காட்சி 2

இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார். முதலில் குற்றம் சுமத்தப்படும் சமையல்காரன் ஜேகப், தான் திருடவில்லை என்று சாதித்து, வீட்டு வேலையாள் வில்லியத்தைக் காட்டிக் கொடுக்கிறான். வில்லியம் அழைத்து வரப் படுகிறான்.

எட்வேர்டு: வா ! வில்லியம் வா ! உனக்காகத்தான் அதிகாரி காத்திருக்கிறார் ! வந்து நீ பண்ணிய வஞ்சகத்தைச் சொல்லிவிடு ! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த உன் துரோகம் வெளியே தெரியட்டும் !

வில்லியம்: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை !

எட்வேர்டு: துரோகி ! செய்த குற்றத்துக்கு வெட்கப் படவில்லையா நீ ?

வில்லியம்: எந்தக் குற்றத்தைச் சொல்கிறீர்கள் ?

எட்வேர்டு: அயோக்கியத்தனம் ! செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கிறாயா ? உனது மர்மச் செயல்கள் எல்லாம் வெளிவந்து விட்டன ! உன்னைப் பற்றிய அந்தரங்கள் அனைத்தும் தெரிந்து விட்டது எனக்கு ! எனது கருணையில் என் விருந்தாளியாய் என் மாளிகையில் அனுதினம் உண்டு, உறங்கி, உழைத்து எனக்கே குழி பறித்து ஒன்றும் தெரியாதவன் போல் விழிக்கிறாய் நீ ! ஒளிமறைவில் நீ செய்தது தெரிந்து விட்டது.

வில்லியம்: ஓ அதைச் சொல்கிறீரா ? ஒருநாள் நானே அதை வெளிவிடத்தான் திட்ட மிட்டிருந்தேன். இன்று ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது எனக்கு. என் மீது கோபப்படாதிருந்தால் நான் விளக்கமாசக் சொல்வேன். ஏனப்படிச் செய்தேன் என்றும் காரணத்தையும் சொல்வேன்.

எட்வேர்டு: இந்தக் களவுக்கு என்ன காரணத்தைக் காட்டப் போகிறாய் ? முதலில் நீ திருடன் என்பதை ஒப்புக்கொள் ! பிறகு திருடியதை அப்படியே என்னிடம் திருப்பிக்கொடு !

வில்லியம்: என்னைத் திருடன் என்று குற்றம் சுமத்த வேண்டிய தில்லை ! அத்தகைய பெரும் பட்டத்தைப் பெற நான் அருகதை இல்லாதவன் ! நான் உமக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்தது தவறுதான் ! ஆனால் அது மன்னிக்கப்பட வேண்டிய தொன்று ! ஒருவகையில் நீங்கள் வரவேற்க வேண்டிய தொன்று. என்னைப் போலொரு வாலிபன் கிடைப்பானா உமக்கு ?

எட்வேர்டு: மன்னிக்க வேண்டியதா ? ஒளிமறைவாய்ப் பண்ணிய பெரிய களவவையா ?

வில்லியம்: மிஸ்டர் எட்வேர்டு ! ஆம் அது ஒருவகைக் களவுதான் ! காதல் எல்லாமே முதலில் களவில்தான் ஆரம்பமாகும். நல்ல எண்ணத்தில் புரிந்த களவுதான் அது. அதன் நோக்கத்தில் உங்கள் மதிப்போ, நிலையோ குறையப் போவதில்லை ! அந்தக் களவு ஓர் கண்ணியக் களவுதான் ! அதனால் எனக்கும் ஆதாயம் ! உங்களுக்கும் ஆதாயம் !

எட்வேர்டு: (புரியாமல் தலையைச் சொரிந்த வண்ணம்) என்ன உளறுகிறாய் ! உனக்கு ஆதாயம் ! எனக்கு நஷ்டமென்று சொல் ! மூடனைப் போல் எனக்கு ஆதாயம் என்று பேசாதே ! அதென்ன காதல் ! உனக்கு என் பணத்தின் மீதுள்ள காதல்தான் எனக்குத் தெரியுது ! உனக்கு வேறெதன் மீது காதல் உண்டாகும் ? உன் பண ஆசைக்குப் பெயர் காதலா ?

வில்லியம்: யாருக்குதான் பணக் காதல் இல்லை ? சிலருக்குப் பணமே முதல் பிரதானம் ! பணமே இரண்டாம் பிரதானம் ! பணமே மூன்றாம் பிரதானம் ! ஆனால் என் காதல் ஒரு கனி மீது !

எட்வேர்டு: உனக்கு என் சொத்தின் மீது ஒரு கண் உள்ளது ! என் சொத்து வரவு செலவுகளை நீ தானே கணக்கெழுதி வருகிறாய் ! நீ யாரென்று தெரியாமல் உன்னைப் போய் கணக்கெழுத வைத்தது என் தப்பு ! என்னிடம் எவ்வளவு பணமுள்ள தென்று நீ ஒருவன்தான் அறிவாய் ! அதிகாரி அவர்களே ! இவனைப் பிடித்துச் சிறையில் தள்ளுங்கள்.

வில்லியம்: உங்கள் சொத்தின் மீது எனக்கு இச்சை இல்லை ! ஆனால் உங்களுக்குச் சொந்தமான ஒன்றின் மீது தீராத ஆசை உண்டு ! என் கண் உங்கள் பெண் மீது. உங்களுக்குத் தெரியாமல் அவளைக் களவாடியது உண்மை ! அதற்காக என்னைச் சிறையில் இட்டால் ஏற்றுக் கொள்கிறேன் !

உளவு அதிகாரி: மிஸ்டர் எட்வேர்டு ! உங்கள் பெண் 18 வயதானல் இவனைச் சிறையில் தள்ள முடியாது. காதல், மோதல், சாதல் அதெல்லாம் வீட்டு விவகாரம் ! கோர்ட்டுக்குக் கொண்டுவர வேறு முறையில் அணுக வேண்டும் !

எட்வேர்டு: என் பணத்தைத் திருடிக் கொண்டு இவன் வேறு நாடகம் போடுகிறான் !

வில்லியம்: நான் அவள் உள்ளத்தைக் கவர்ந்தவன் ! என் உள்ளத்தைக் கவர்ந்த கன்னி உங்களுக்குச் சொந்தமானவள் ! இப்போது அவள் எனக்குப் பந்தமாகப் போகிறாள் !

எட்வேர்டு: அயோக்கியப் பயலே ! மொரீனை நீயும் காதலிக்கிறாயா ? மூடப் பயலே ! அவளை நான் மணந்து கொள்ளப் போகிறேன் ! அதற்கு என் மகன் கிரஹாம் ஒரு போட்டி ! நீயும் எனக்கொரு போட்டியா ?

வில்லியம்: இல்லை மிஸ்டர் எட்வேர்டு ! என் உள்ளத்தைக் கவர்ந்தவள் உங்கள் புதல்வி எலிஸபெத் ! இருபது வயதுக் குமரி அதிகாரி அவர்களே ! அவள் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் நான் ! ஒப்புக் கொள்கிறேன் நானொரு கள்வன் என்று !

எட்வேர்டு: அயோக்கிய ராஸ்கல் ! அதனால்தான் நீ எனக்கு வீட்டில் வேலை செய்ய வந்தாய் என்பது இப்போது புரிகிறது. ஜேகப் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ! உங்கள் திருமணம் ஒருபோதும் நடக்காது ! எலிஸபெத் ஒரு கோடீஸ்வரனைத்தான் மணப்பாள் ! உன்னைப் போன்ற வேலைக்காரனை அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள் ! உன்னிடம் அவள் பரிவாக இருப்பதைக் காதலாய் எண்ணிக் கனவு காணாதே !

வில்லியம்: இருவரும் மணமுடித்துக் கொள்ள நான் மோதிரம் போட்டுள்ளதை எலிஸபெத் விரலில் நீங்கள் பார்க்க வில்லையா ? திருமண நாள்தான் குறிக்க வேண்டும் ! அதைச் சொல்லத்தான் காத்துக் கொண்டிருந்தேன். நல்ல தருணம் இது ! இப்போது அதிகார பூர்வமாகச் சொல்கிறேன். உங்கள் புதல்வி எலிஸபெத்தை நான் மணக்க விரும்புகிறேன் ! உங்கள் மன ஒப்புதலை அளிக்கவும் !

எட்வேர்டு: அயோக்கிய ராஸ்கல் ! நீ என் பூட்ஸ்களைத் துடைத்தவன் ! எனக்கு மருமகனாக வருவாய் என்று மனப்பால் குடிக்காதே ! உங்கள் திருமணத்தை நான் முன்னின்று தடுப்பேன் !
நீ எலிஸபெத் உடையை மடிக்கத் தகுதியற்றவன் ! நான் அவளுக்கு வேறொருவனை முன்பே முடிவு செய்து விட்டேன் ! முதலில் இதை முடிவாகச் சொல் ! என் பணத்தைத் திருடி எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? தருவாயா மாட்டாயா ?

வில்லியம்: உங்கள் பணத்தை நான் திருடவில்லை ! திருடி இருந்தால் கொடுத்து விடுவேன் ! உங்கள் பணத்தை யார் திருடி இருப்பான் என்பது எனக்குத் தெரியாது ! ஒருவேளை ஜேகப் அல்லது வின்சென்ட் யாராவது ஒருவன் திருடி இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன்.

எட்வேர்டு: ஜேகப் திருடவில்லை என்று தெரிந்தாகி விட்டது ! அவன் உன்னைத்தான் சந்தேகப் படுகிறான் ! அவன் பொய் சொல்ல மாட்டான் ! நீ உண்மை சொல்ல மாட்டாய் !

வில்லியம்: தீர்மானமாக நான் சொல்கிறேன் ! கிரஹாம் வேலைக்கு வைத்திருக்கும் வின்சென்ட் நிச்சயம் களவாடி இருப்பான்.

எட்வேர்டு: உண்மையைச் சொல்கிறாயா ? உண்மையானப் பொய்யைச் சொல்லுகிறாயா ? நீதான் என் பெண்ணையும் மயக்கி என் கண்ணில் மண்ணைப் போட்டுப் பணத்தைத் திருடியவன். நீதான் பணம் திருடியவன் என்று எலிஸபெத்திடம் சொல்லி திருமணத்தை நிறுத்துவேன் !

வில்லியம்: எலிஸபெத் உங்களை நம்ப மாட்டாள் ! என்னைப் பற்றி அவளுக்குத் தெரியும் ! அப்படி யெல்லாம் நீங்கள் புளுகி எங்கள் திருமணத்தை நிறுத்த முடியாது.

எட்வேர்டு: (உளவு அதிகாரியைப் பார்த்து) வில்லியத்தைக் கைது செய்யுங்கள் ! என் பணத்தைத் திருடியவன் இவனே ! என் பெண்ணை மயக்கியவனும் இவனே ! கட்டுங்கள் விலங்கை !

உளவு அதிகாரி: மிஸ்டர் எட்வேர்டு ! வில்லியத்துடன் முதலில் நான் தனியாகப் பேச வேண்டும்.

எட்வேர்டு: அதோ எலிஸபெத் வருகிறாள் ! திருமணத்தை நான் நிறுத்தியே தீருவேன் !

(அப்போது எலிஸபெத், மொரீன், கிளாடியா மூவரும் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே நுழைகிறார்கள்)

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 11, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஞானக் கேள்விகள் மனதைத் துளைப்பவை !
முகத்துதி கேட்க ஏங்குவோம் நாம் !
மனிதர் ஒருவர் யாராயினும் சரி
தனது பாடலை வாசித்துக் காட்டின்
தைரியமாய்ச் சொல்வேன் நான்:
“எழுதத் துடிக்கும் அரிப்பு
மனத்துக்கொரு
பொழுது போக்கு ! அதை
நிறுத்திவிட
உறுதி தேவை
நாகரீக மனிதர்க்கு ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

Fig. 1
Police Enquiry

பேராசைக் கஞ்சன்

அங்கம் 5 காட்சி 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
அங்கம் 5 காட்சி 1

இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார்.

போலீஸ் உடையில்லாத உளவு அதிகாரி: (மெதுவாக) மிஸ்டர் எட்வேர்டு ! உங்கள் பிரச்சனையை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான்தான் வீட்டுக் களவுகளை விசாரிப்பவன் ! விசாரித்துக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பவன் ! கண்டுபிடித்துக் கள்ளரைச் சிறையில் தள்ளுபவன். கள்ளனைக் காணும் வரை என் கண்களுக்குத் தூக்கம் வராது !

எட்வேர்டு: இப்போது தூக்கமில்லாமல் இருப்பது நான் ! என் பணப் பெட்டி திருடுபோய் இருபத்தி மணி நேரம் ஆகி விட்டது ! . . . . (அருகில் நெருங்கி) அது சரி, இதுவரை எத்தனை கள்ளரைப் பிடித்திருக்கிறீர் ?

உளவு அதிகாரி: எத்தனை என்றா கேட்கிறீர் ? இதுதானே எனது முதல் கேஸ் ! முதல் கள்ளனைப் பிடிக்க எனக்கோர் வாய்ப்பளித்தற்கு நன்றி மிஸ்டர் எட்வேர்டு !

எட்வேர்டு: [முணுமுணுப்புடன்] என் பண முடிப்பு கையிக்கு வருவது கனவுதான் !

உளவு அதிகாரி: என்ன சொல்கிறீர் ? பண முடிப்பை உமது கையில்தான் கொடுப்பேன் ! அதற்கு முதலில் கள்ளனைப் பிடிக்க வேண்டாமா ? எங்கே இருக்கிறான் என்று சொல்லுங்கள்? இப்போதே அவனைப் பிடித்து பணத்தைப் பறித்து வருகிறேன்.

எட்வேர்டு: எனக்குத் தெரிந்தால் ஏனிங்கு நான் வருகிறேன் ? கையை முறுக்கி பணத்தைக் கறக்காமல் விடுவேனா ? யாரென்று தெரிமால்தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.

உளவு அதிகாரி: எவ்வளவு பணம் திருடு போனது ? (கிளார்க்கைப் பார்த்து) விபரத்தை எல்லாம் அவர் சொல்லச் சொல்ல எழுது !

எட்வேர்டு: பத்தாயிரம் டாலர்கள் !

உளவு அதிகாரி: பத்தாயிரம் டாலரா ? பெரிய திருடுதான் ! எங்கே திருடு போனது ? யாரைச் சந்தேகப் படுகிறீர் ? உங்களுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா ?

Fig. 2
Edward Perplexed

எட்வேர்டு: எனக்கு எதிரிகள் பலர் ! எல்லோரையும் நான் சந்தேகப் படுகிறேன் ! கள்ளன் உள்ளே உள்ளானா அல்லது வெளியே உள்ளானா என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

உளவு அதிகாரி: எதிரிகள் சிலர் என்றால் பிடிப்பது எளிது ! பலர் என்றால் பிடிப்பது கடினம் ! பல மாதங்கள் ஆகும் ! எல்லோரையும் என்றால் எனக்குத் தெரியாது. யார் யாரை என்று பெயரைக் குறிப்பிட்டால் அவரை மட்டும் விசாரிக்கலாம். யாரையும் மிரட்டக் கூடாது. ஆரவாரமில்லாமல் ஆளைப் பிடித்துப் பணத்தைப் பறிக்க வேண்டும். நீங்கள் சந்தேகிக்கும் முதல் ஆசாமி யார் ? சொல்லுங்கள், அழைத்து வருகிறோம்.

எட்பேர்டு: சமையல்காரன் ஜேகப்பை முதலில் விசாரிக்க வேண்டும். நானே அவனுக்குச் சொல்லாமல் அழைத்து வந்திருகிறேன். அதோ அவன் இங்குதான் வந்து கொண்டிருக்கிறான்.

(ஜேகப் பின்னால் திரும்பிப் பேசிக் கொண்டே நுழைகிறான்)

ஜேகப்: நான் திரும்பி வருவேன், கழுத்தை அறுத்துத் துண்டாக்கு. காலிரண்டை வெட்டு ! பிறகு தோலை உரித்துவிடு. கடைசியில் சுட்டுப் பொசிக்க வேண்டும் ! (போலீஸ் அதிகாரியப் பார்த்து) கும்பிடுகிறேன் ஸார் ! உங்களைக் கண்டுபேச வரச் சொன்னார் எங்கள் எஜமானர் எட்வேர்டு !

உளவு அதிகாரி: பயங்கர ஆசாமியா இருக்கிறான் உங்கள் வேலைக்காரன் ! இவன்தான் பணத்தைத் திருடி இருக்க வேண்டும் நிச்சயம் ! மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது !

எட்வேர்டு: ஜேகப் ! யார் தோலை உரித்துக் காயப் போடுவாய் ? என் பணத்தைத் திருடிய கள்ளனையா ?

ஜேகப்: இல்லை எஜமான் ! உங்களுக்கு மாலை விருந்து தயாரிக்க வேண்டும் ! கோழியை எப்படி அறுப்பது என்று உதவி ஆளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நான் இங்கு வந்தபின் அவன்தான் சமையல் அறை ராஜா !

எட்வேர்டு: இப்போது சாப்பாடு முக்கியமில்லை ! உனக்காக அவர் காத்திருக்கிறார். அவர் கேட்பதற்குப் பதில் சொல் !

உளவு அதிகாரி: உன் பெயரென்ன ? அதிர்ச்சி அடையாதே ! நான் ஒன்றும் உன்மீது குற்றம் சாட்டப் போவதில்லை ! பரிவாகக் கேட்பேன். பதில் மட்டும் சொல். பயப்படாமல் சொல் !

ஜேகப்: எஜமான் ! யாரிந்த நபர் ? அறிமுகப் படுத்த வில்லையே ? நம் மாளிகை விருந்தாளியா ?

எட்வேர்டு: அவர் கேட்பதற்குப் பதில் சொல். அவர் விருந்தாளி இல்லை ! நீதான் அவரது விருந்தாளியாகப் போகிறாய் !

உளவு அதிகாரி: உனக்கு ஒன்றும் நேராது ! உன் எஜமானர் முன்பு உண்மையைச் சொல். உன்னைச் சிறையில் அடைக்க மாட்டேன், தீர விசாரிப்பது என் தொழில் ! உன்னைச் சிறையில் போடுவது நானில்லை.

ஜேகப்: கேளுங்கள் ஸார் ! எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லுகிறேன். சமையல் திறமையைப் பற்றிக் கேளுங்கள் ! நான் வாகன ஓட்டி. வாகனக் குதிரையைப் பற்றிக் கேளுங்கள் ! எனக்கு நிரம்பத் தெரியும்.

எட்வேர்டு: முட்டாள் ! உன் சமையல் ராஜியத்தைப் பற்றி இங்கு அளக்காதே ! நேற்று நடந்த வீட்டுக் களவைப் பற்றி உனக்குத் தெரிந்ததைச் சொல்.

ஜேகப்: (மனக் கவலையுடன்) என்ன ? யாரோ பணத்தைத் திருடி விட்டாரா ?

Fig. 3
Edward Shocked to hear about
William

எட்வேர்டு: ஆமாடா அயோக்கியப் பயலே ! பணத்தை நீ திருப்பித் தராவிட்டால், தூக்கில் உன்னைத் தொங்க வைத்து விடுவேன் !

உளவு அதிகாரி: [சாந்தமாக] அட கடவுளே ! அவனைத் திட்டாதீர் ! கோபப் படாதீர் ! கோபம் மூட்டாதீர் ! முகத்தைப் பார்த்தால் சாந்தம் தவழ்கிறது ! (ஜேகப்பைப் பார்த்து) உன்னைச் சிறையில் தள்ளுவதற்கு முன்பே உனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிடு ! உண்மையைச் சொல்லி விடு ! என்னருமை நண்பா ! என்னிடம் சொல்லி விட்டால் உனக்கு ஒன்றும் நேராது ! அதற்கு உத்திரவாதம் தருகிறேன். உன் எஜமான் சம்மானம் அளிப்பார் ! நேற்று யாரோ அவரது பணத்தைத் திருடி விட்டார். அதைப் பற்றி உனக்குச் சிறிது தெரியும் !

ஜேகப்: (முணுமுணுத்து) வில்லியம் இந்த வீட்டுக்கு வேலையாளாய் வந்த பின் எல்லோமே தலைகீழாகப் போய்விட்டது. நம்பிக்கை நாயகனாக வேடம் போட்டு ஏமாற்றிக் கொண்டு வருகிறான். என்னை எஜமானரிடம் காட்டிக் கொடுத்து அடிவாங்க வைத்ததை நான் மறக்க முடியுமா ? அவன்தான் வீட்டில் கன்னக்கோல் இட்டுப் பணத்தைக் களவாடி இருக்க வேண்டும் !

எட்வேர்டு: என்னடா முணுமுணுக்கிறாய் ! காது கேட்கும்படி பேசு !

உளவு அதிகாரி: அதட்டாதீர் அவனை ! அவன் சொல்வதற்குப் பயிற்சி செய்கிறான். யோசித்துச் சொல்லட்டும். அவன் உத்தமன் என்று சொன்னேன் அல்லவா ?

ஜேகப்: உண்மையைச் சொல்லிவிடவா ? எஜமான், என்னை நம்புவீரா ? சொன்னால் கோபப்படக் கூடாது ! உங்கள் பணத்தைத் திருடியவன் யார் தெரியுமா ? வில்லியம் ! உங்கள் மெய்க்காவலன், நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் ! (எட்வேர்டு ஆங்காரமாய்க் கையை ஓங்குகிறார்) இதோ பார்த்தீரா ? கோபப்பட்டு அடிக்க வருவதை ! முன்பே நினைத்தேன், நம்ப மாட்டீர் என்று !

எட்வேர்டு: (கையை ஓங்கி ஜேகப்பை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்) அயோக்கிய ராஸ்கல் ! பணத்தை நீ திருடிக் கொண்டு பழியை வில்லியத்தின் மீதா போடுகிறாய் ? உனக்கு அவனைப் பிடிக்காது ! எனக்கு அது தெரியும் !

ஜேகப்: ஐயோ எஜமான் ! விட்டிடுங்கள் என்னை ! நிரபராதி நான் ! பத்து வருடமா நான்தான் சமையல் வேலை செய்கிறேன் ! இதுவரை ஒரு டாலர் கூட காணாமல் போனதில்லை ! நேற்று வந்த வில்லியம் மெய்யாக வேலை செய்ய வரவில்லை ! எதற்கு வந்திருக்கிறான் என்பதை இப்போது காட்டி விட்டான் ! பிடியுங்கள் உண்மைக் கள்ளனை ! நான் கள்வனா ? இல்லை ! இல்லை ! இல்லை !

ஜேகப்: பொய் சொல்லித் தப்பிச் செல்லவா பார்க்கிறாய் ? உன் முதுகு எலும்பைப் பிளக்கிறேன்.

உளவு அதிகாரி: (எட்வேர்டைத் தடுத்து) அது சட்டப்படி குற்றம். அது எங்கள் வேலை ! உங்கள் வேலை வில்லியத்தைப் பிடிப்பது. ஏன் வில்லியத்தைக் காப்பாற்ற முனைகிறீர் ? ஜேகப் சொல்வதில் ஏதோ உண்மை காணப் படுகிறது !

எட்வேர்டு: வில்லியம் கள்ளன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய் ?

ஜேகப்: வில்லியம் மாளிகைக்கு வேலை செய்ய வரவில்லை ! அவனைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியாது எஜமான் !

உளவு அதிகாரி: உண்மையா மிஸ்டர் எட்வேர்டு ?

ஜேகப்: எங்கே அவனுடைய தந்தை யாரென்று சொல்லுங்கள் ? எங்கே அவர் வாழ்கிறார் என்று சொல்லுங்கள் ?

எட்வேர்டு: தந்தை பெயர் தெரியாது எனக்கு. ஆனால் வீட்டு விலாசம் சொன்னான். மறந்து விட்டேன் !

ஜேகப்: வில்லியம் நீங்கள் இல்லாத போது வீட்டில் வேலை செய்வது கிடையாது ! தோட்டத்தில் நெடுநேரம் எலிஸபெத்துடன் உல்லாசமாகச் சல்லாபித்துக் கொண்டிருப்பான் ! அவனைக் கண்டால் எலிஸபெத்தின் கண்களில் ஒளி உண்டாகுது. வீட்டில் எல்லா இடமும் தெரிந்தவன் வில்லியம் ஒருவன்தான் !

உளவு அதிகாரி: யாரிந்த எலிஸபெத் மிஸ்டர் எட்வேர்டு ?

எட்வேர்டு: என் புதல்வி ! எலிஸபெத்தைக் கண்காணிக்க நான்தான் வில்லியத்தை வேலைக்கு வைத்தேன். முதலில் ஜேகப் திருடனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும் ! நேற்று நீ தனியாகத் தோட்டத்தில் திரிந்தாயா ?

ஜேகப்: இல்லை ! எதற்காக அப்படி கேட்கிறீர்கள் எஜமான் ?

எட்வேர்டு: மடையா ! அங்குதான் என் பணத்தைப் புதைத்து வைத்திருந்தேன்.

ஜேகப்: எதில் புதைத்து வைத்திருந்தீர்கள் ?

Fig. 4
Begging Servant Jakob

எட்வேர்டு: மடையா ! ஒரு பெட்டியில் புதைத்து வைத்திருந்தேன்.

ஜேகப்: ஆஹா ! எஜமான் ! வில்லியம் கையில் நேற்று ஒரு பெட்டியைப் பார்த்தேன்.

எட்வேர்டு: ஆஹா ! அப்படியா ? எப்படி இருந்தது அந்தப் பெட்டி ?

ஜேகப்: பணப் பெட்டி போல் தெரிந்தது !

எட்வேர்டு: மடையா ! எப்படி இருந்தது என்று விளக்கமாய்ச் சொல் !

ஜேகப்: பெரிய பெட்டியாய்த் தெரிந்தது !

எட்வேர்டு: இருக்க முடியாது ! நான் புதைத்த பெட்டி சிறியது !

ஜேகப்: ஆமாம் அருகில் பார்த்தால் சிறிய பெட்டியாய் தெரியும் !

எட்வேர்டு: முட்டாள் ! தூரத்தில் பார்த்தால் சிறியதாய்த் தோன்றும் ! அருகில் பார்த்தால் பெரிதாய்த் தெரியும் ! சிறியதா ? பெரியதா ?

ஜேகப்: மாற்றிச் சொல்லி விட்டேன் ! சிறிய தென்றே எடுத்துக் கொள்ளுங்கள் !

எட்வேர்டு: எந்த நிறத்தில் இருந்தது சொல் ?

ஜேகப்: எந்த நிறம் ? சிவப்பு நிறமா ?

எட்வேர்டு: இல்லை ! சாம்பல் நிறம் !

ஜேகப்: இருட்டில் சரியாகத் தெரிய வில்லை ! ஆமாம் அது சாம்பல் நிறம்தான் ! கண்டுபிடித்து விட்டோம் கள்ளனை ! மெச்சுகிறேன் ஜேகப் !

எட்வேர்டு: ஆஹா ! ஆபீஸரே ! சாம்பல் நிறப் பெட்டிதான் ! ஜேகப் ! போடா ! போய் வில்லியத்தை இழுத்து வா !

ஜேகப்: (ஓடிக் கொண்டே) எஜமான் ! வில்லியம் காதைப் பிடித்து இழுத்து வருகிறேன். போலீஸிடம் மாட்டிக் கொண்டான் போக்கிரிப் பயல் !

உளவு அதிகாரி: என் முதல் கள்ளனைப் பிடித்து விட்டேன். சம்பளவு உயர்வைக் கேட்க வேண்டும் !

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 22, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பொய் உரைத்தால் இறைவனே
என்னை அடித்துக் கொல்லட்டும்
சொன்னதைப்
பிறருக்கு உறுதிப் படுத்த !
இதயமும் இதயமும் தழுவிக் கொண்டு
பேசிக் கொள்ள அனுமதி தா !
உனது நட்பரங்கினில்
எனக்கொரு
இடம் கிடைக்கட்டும் !
உலுக்கிடு உனது நெஞ்சை,
எனக்கு
அளித்திட உனது நட்பை ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

Fig. 1
Moreen, Edward, Elizabeth & Giraham

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 4 காட்சி 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
அங்கம் 4 காட்சி 2

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகையில் தனி அறை. புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத், மணப்பெண் மொரீன் பேசிக் கொண்டிருக்கும் போது கிரஹாம் மொரீனை முத்தமிடுகிறான். திடீரென உள்ளே நுழைந்த எட்வேர்டு அதைப் பார்த்து விடுகிறார்.

Fig. 2
Quarrel Between Father & Son

எட்வேர்டு: (வந்து கொண்டே கோபமாக) என்ன ? பார்க்கச் சகிக்க முடியவில்லை ! கிரஹாம் வரப்போகும் சிற்றன்னையின் வாயில் முத்தமிடுகிறான் ! மொரீன் அதைத் தடுக்காமல் முத்தம் கொடுக்க அவனை அனுமதிக்கிறாள். ஏதோ தவறு நடந்து விட்டது ! ஏன் கிளாடியா என்னைப் பார்த்ததும் பார்க்காமல் ஓடிச் செல்கிறாள் ? (அலறிக் கொண்டு) நிறுத்துடா கிரஹாம் ! அவள் எனக்குச் சொந்தமாகப் போகிறவள் ! மொரீன் உன் சிற்றன்னை !

கிரஹாம்: மன்னித்து விடுங்கள் அப்பா ! மொரீன் இப்போது தனிப் பெண் ! மொரீன் உங்களை மணக்க இன்னும் ஒப்புக் கொள்ள வில்லை ! ஒப்புக் கொண்டதாகச் சொல்ல வில்லை ! மேலும் நீங்கள் அவளை நேசிக்க வில்லை ! ஆனால் மணக்க விரும்புகிறீர்கள் ! மொரீனை உங்கள் மனைவி என்பதை விட வீட்டு எஜமானி என்று சொல்கிறேன்.

எட்வேர்டு: அயோக்கியப் பயலே மூடு வாயை ! என்ன பிதற்றுகிறாய் ? (மொரீனைப் பார்த்து) இதோ வாகனம் வந்து விட்டது. நீங்கள் விரும்பினால் போகலாம்.

[அப்போது வாகனம் வருகிறது. எலிஸபெத், மொரீன் இருவரும் வெளியேறுகிறார்கள்.]

கிரஹாம்: அப்பா நீங்கள் போகாததால், நான் அவருக்குத் துணையாகப் போகிறேன்.

எட்வேர்டு: நீ அவருடன் போக வேண்டாம் ! நில், பாலுக்குத் துணை பூனையா ? உன்னோடு நான் பேச வேண்டும் ! எனக்குத் தெரியாமல் என்னமோ மறைவில் நடக்கிறது ! மொரீனைக் கடத்திக் கொண்டு போகப் போகிறாயா ? அவளை ஏன் வாயில் முத்தமிட்டாய் ?

கிரஹாம்: பிறகு எங்கே முத்தமிட வேண்டும் ? நீங்கள் அவளை முத்தமிட வில்லை !

எட்வேர்டு: அவள் எனக்கு மனைவியாக வரப் போகிறவள் ! உனக்குச் சிற்றன்னையாக வரப் போகிறவள் ! இதைப் பிறர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ?

கிரஹாம்: மொரீனை நீங்கள் மணந்தால் பிறர் என்ன நினைப்பார்கள் ? தாத்தாவும் பேத்தியும் தம்பதிகளாய் ஆனதைக் கைகொட்டிச் சிரிப்பார்கள் ! மொரீன் உங்களுக்குத் தகுதி இல்லாதவள் ! அவள் உங்களை அறவே வெறுக்கிறாள் ! அதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் ! மணக்கப் போகும் மனிதருக்கு வாலிப மகன் ஒருத்தன் இருப்பது தெரியாதாம் ! தெரிந்தால் இந்த திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டாளாம் ! மொரீனுக்கு உங்கள் மீது சிறிதும் அன்பில்லை ! பரிவில்லை ! பாசமில்லை ! பணத்தின் மீதுதான் கண் ! அது எனக்குத் தெரியுது ! ஆனால் உங்களுக்குத் தெரிய வில்லை ! இந்த வயதில் உங்களுக்குத் திருமணமா ? உங்களுக்கு மூச்சு திடீரென்று நின்று போனால், நேற்று வந்த மொரீன் வீட்டைச் சுருட்டிக் கொண்டு போய் விடுவாள் ! எங்களுக்கு நீங்கள் எதுவும் மரண வில்லில் எழுதி வைக்க வில்லை. நெற்றி வேர்வை சிந்தி நீங்கள் சம்பாதித்த பணத்தில் பாதி மொரீனுக்குப் போனால் எங்கள் கதி என்ன ?

எட்வேர்டு: (சற்று சிந்தித்து) நீ சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த வயதில் எனக்குத் தேவை யில்லை திருமணம் ! சரி ! இப்போது என்னிடம் சொல் ! மொரீனை நீ விரும்புகிறாயா ?

கிரஹாம்: இல்லை ! நானவளை விரும்ப வில்லை ! என்னுயிர்த் துணைப் பெண்ணாய் வர வேண்டுமென ஆராதிக்கிறேன் ! அவளில்லை என்றால் என் வாழ்க்கை இருண்டு விடும்.

எட்வேர்டு: அடாடா ! மொரீன் முதலில் வந்த போதே என்னிடம் இதைச் சொல்லி இருக்கக் கூடாதா ? இதற்கு முன்பே அவளைப் பார்த்திருக்கிறாயா ?

கிரஹாம்: ஒரு வருடமாக மொரீனைத் தெரியும். அவளும் நானும் காதலாரப் பழகி வருகிறோம். ஒருவரை ஒருவர் தெரிந்து வருகிறோம். ஆனால் நான் உங்களுடைய புதல்வன் என்பது அவளுக்கு இப்போதுதான் தெரியும்.

எட்வேர்டு: என் முன்னால் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றும் அறியாதவர் போல் நடித்தீர்களா ? நடிப்பில் கைதேர்ந்தவன் நீ !

கிரஹாம்: அப்பா உங்களிடம் சொல்லப் பயம் எனக்கு ! மொரீனின் தாயார் உங்களைத்தான் மணமகன் என்று சொல்லிப் பார்த்துவர அனுப்பி இருக்கிறாள் ! உங்கள் சொந்த வாழ்க்கையில் மைந்தன் நான் குறுக்கிடலாமா ?

எட்வேர்டு: அவளை மணம் செய்து கொள்வதாய் உறுதியாகச் சொல்லி விட்டாயா ?

கிரஹாம்: ஆமாம் நாங்கள் இருவரும் மணந்து கொள்ளத் தீர்மானம் செய்து விட்டோம். ஆனால் என் விருப்பத்தை உங்களுக்கு நான் சொல்ல வில்லை ! மொரீன் என்னைப் பற்றி அவளது அன்னைக்குச் சொல்ல வில்லை ! எப்படி எங்கள் நாடகம் ? அதற்குள் இடையே
நீங்கள் புகுந்து எங்கள் தீர்மானத்தைக் கெடுத்து விட்டீர்கள் !

எட்வேர்டு: (சட்டெனக் கோபமாக) அயோக்கியப் பயலே ! நீதான் ஊமையாக இருந்து என் திருமணத்தைக் கலைக்கத் துணிந்து விட்டாய். வாயில் முத்தமும் கொடுத்து அவளை மயக்கி விட்டாய். என்னிடமிருந்து அவளைப் பிரிக்க முனைந்து விட்டாய் ! எனக்கு எந்த வித மதிப்பும் நீ காட்ட வில்லை ! எனக்கும் அவளுக்கும் திருமணம் நடந்தால் அன்றிரவே நீ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவாய் ! என் மாளிகையில் உனக்கினி இடமில்லை ! திருமணத்துக்கு இடையூறாய் நிற்கும் நீ எனக்கினி மகனில்லை ! நான் உன் பிதா இல்லை !

Fig 3
Ed loses Money

கிரஹாம்: காதல் பிரச்சனையில் தந்தை மகன் உறவெல்லாம் அறுந்து போகும். மொரீன் மீது எனக்கும் உங்களுக்கும் போட்டி. அவள் யாரை நாடுகிறாளோ அவர்தான் அவளுக்குக் கணவன். நானெதற்கு என் வாழ்வை உங்களுக்காகத் தியாகம் பண்ண வேண்டும் ? நீங்கள் பெரிய மனது வைத்து எனக்காக மொரீனை ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது !

எட்வேர்டு: பத்து வயது பையன் என்றால் பளாரென்று அறைந்திருப்பேன் ! நீ வாலிப மூடன் ! தந்தைக்கு அமைந்த பெண்ணைக் கடத்திச் செல்ல என்னிடம் அனுமதியா கேட்கிறாய் !

கிரஹாம்: அப்பா ! சிந்திக்காமல் பேசுவது நீங்கள் ! நான் உங்கள் மணப் பெண்ணைத் தூக்கிச் செல்ல வில்லை ! நான் ஏற்கனவே மொரீனை நேசிப்பவன் ! என்னை ஏற்கனவே மணம் புரிய மொரீன் விரும்பியவள் ! நீங்கள்தான் இடையே புகுந்து என் மணப் பெண்ணைக் கடத்திச் செல்பவர் ! எனக்காக மொரீனை விட்டுவிடுங்கள் ! அல்லது நாங்கள் எங்காவது ஓடி விடுவோம் !

எட்வேர்டு: எனக்கு இப்படி ஒரு திருட்டு மகன் பிறக்க வில்லை என்று உன்னைப் புறக்கணித்து விடுவேன். மொரீனுடைய தாயிக்குப் பல்லாயிரம் டாலர் சீர்ப்பணம் தந்து மொரீனை நான் மணந்து கொள்வேன் தெரியுமா ? முட்டள் ! உனக்கு வீடில்லை ! வேலை இல்லை ! வேர்வை சிந்திப் பிழைத்த தில்லை ! உன் கையில் ஐந்து விரல்களைத் தவிர ஐந்து டாலர் கூடக் கிடையாது ! வெறுங்கையில் கோலம் போடுவாயா ? தாளம் போடுவாயா ?

கிரஹாம்: அப்படியா சொல்கிறீர் ? நான் கடன்வாங்கிக் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்து விட்டேன் ! எனக்கு உங்கள் வீடும் வேண்டாம் ! பணமும் வேண்டாம்.

எட்வேர்டு: முட்டாள் ! அறிவோடு பேசு ! உன் கடனுக்கு என் வீடல்லவா நீ அடமானம் செய்ய வேண்டும் ! அந்த அடமானத்துக்கு என் உடன்பாட்டு தேவை ! மரியாதையாக மொரீனை எனக்கு விட்டுவிடு ! எல்லாம் சரியாகப் போய்விடும் ! நான் கையெழுத்திடுகிறேன் உன் பத்திரத்தில். உனக்கு உன் கடன் தொகை கிடைக்கும் நிச்சயம் !

கிரஹாம்: எனக்கு மணப்பெண் பறிபோகும் நிச்சயம் ! நல்ல உடன்பாடு இது, கண்ணிரண்டை விற்றுச் சித்திரம் வாங்குவது ? உங்களுக்குக் கண்ணிருந்தும் பார்வை போனது.

எட்வேர்டு: அடே ! அயோக்கியப் பயலே ! வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் ! பணமில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை !

[அப்போது வேலையாள் வின்சென்ட் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான்]

வின்சென்ட்: எஜமான் ! எஜமான் ! உங்கள் குடி மூழ்கிப் போச்சு ! உங்கள் பணத்தை யாரோ களவாடிப் போய்விட்டார் ! தோட்டத்திலே இந்தப் பெட்டி காலியாகக் கிடந்தது ! தடுமாறி விழுந்த நான்தான் அதைக் கண்டுபிடித்தேன். எஜமான் இந்த இழப்பை என்னால் தாங்க முடியாது ! உங்களாலும் தாங்க முடியாது !

[காலிப் பெட்டியைக் காட்டுகிறான்]

எட்வேர்டு: (தலையில் அடித்துக் கொண்டு அலறிய வண்ணம்) அட கடவுளே ! திருட்டு நாய்கள் ! களவாடிப் பயல்கள் ! பெருத்த மோசடி இது ! கொள்ளைக்காரப் பயல்கள் ! எத்தனை ஆண்டு நெற்றி வேர்வைகள் அவை ? காவல் துறைக்கு எப்படிப் புகார் சொல்வது ? போச்சு எல்லாம் போச்சு ! பணமும் போச்சு ! மணப் பெண்ணும் போச்சு ! மானம் போச்சு ! மதிப்பும் போச்சு ! கோடீஸ்வரன் ஒரே நாளில் குடியானவன் ஆகிவிட்டேன் ! (கிரஹாம் தந்தையைப் பிடித்துக் கொள்கிறான்) நான் வீடு வீடாய்ப் போய் பிச்சை கூட எடுக்க முடியாதச் சீமான் ஆயினேன் ! சீமான் ஏமாளி ஆகி விட்டேனே ! யாரந்த திருடன் என்று கண்டுபிடிப்பேன் ! கண்டுபிடித்து அவன் கழுத்தைத் திருகுவேன் ! கழுத்தைத் திருகி அவன் குருதியை எடுப்பேன் ! குருதியை எடுத்து என் செடிகளுக்கு ஊற்றுவேன் ! போகட்டும். காவல் துறைக்குப் புகார் செய்தால் கள்ளனைப் பிடித்து விடுவார் ! கள்ளனைப் பிடித்ததும் பணத்தைக் கறப்பேன் ! பணம் கிடைக்காமல் போனால் அடுத்த கணம் நான் உயிர் துறப்பேன்.

(வேகமாக எட்வேர்டு வெளியே ஓடுகிறார். கிரஹாமைப் பார்த்து மெதுவாக வின்சென்ட் புன்னகை செய்கிறான்.)

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 22, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 1

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எல்லாக் குறைகளைப் பிறர் காட்டினும்
இளவிதவை மீதுள்ள என்காதல்
என் கண்களை மூடாது !
முதலில் என்காதில் தான் விழும் அவை !
முதலில் என்னால் ஒதுக்கப்படும் அவை !
ஆயினும் அந்தக் கலை மாது
இதய மென்மையில் நிரம்பிடுவாள் !
தவறுகள் காதில் விழுந்தாலும்,
அவற்றைக் கவனிக்காது நேசிப்பேன் !
கவர்ச்சி மிக்கது அவள் நளினம் !
தவறுகளைப் புறக்கணித்து அவள்மேல்
நிலைத்து நிற்கும் என் காதல் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

Fig. 1
The Secret Meeting

பேராசைக் கஞ்சன்

அங்கம் 4 காட்சி 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகையில் தனி அறை. புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத், கல்யாணத் தரகி கிளாடியா, மணப்பெண் மொரீன் அனைவரும் பேசிக் கொண்டே உள்ளே நுழைகிறார்கள்.

கிரஹாம்: இது ஒதுக்கமான இடம், யாருக்கும் தெரியாது ! எல்லோரு மிங்கு மனம் திறந்து பேசலாம். அப்பா முன்னால் நான் பேச முடியாது.

எலிஸபெத்: மொரீன் ! என் சகோதரன் தனியாகத் தன் மனக் கருத்தை உன்னிடம் சொல்ல விரும்புகிறான். அவன் உன்னைக் காதலிக்கிறான். அதை அப்பா முன்னால் அவன் சொல்ல முடியாமல் தவிக்கிறான். அவனது ஆசைக் காதலி மொரீனைக் கண்முன்னால் தன் தந்தை கடத்திப் போவதைக் கண்டு கண்ணீர் வடிக்கிறான்,

Fig. 2
Giraham & Moreen

மொரீன்: [கவலையுடன்] என்ன செய்வேன் ? கிரஹாம் ஒருவரைத்தான் நானும் நேசிக்கிறேன். அது கனவாகப் போகிறதே என்ற வேதனை எனக்கும் இருக்கிறது. கண்ணுக்கு அழகிய வாலிபனிருக்க, வயோதிகரை நான் மணக்க வேண்டுமா ? அது எல்லாம் விதியின் கொடுமை எலிஸபெத் !

கிளாடியா: மொரீன் ! எனக்கு முன்பே தெரிவித்திருக்கக் கூடாதா ? நீங்கள் இருவரும் துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் ! இத்தனை தூரம் வராதபடி நான் தடுத்திருப்பேன் !

கிரஹாம்: என்னால் தந்தையைத் தடுக்க முடியாது ! என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்க முடியாத நிலை ! அன்பே மொரீன் ! என்ன முடிவு செய்திருக்கிறாய் நீ ? எனக்கு நீ வேண்டும் ! தந்தைக்கு நீ வேண்டும் ! உனக்கு யார் வேண்டும் ?

மொரீன்: கூண்டுப் பறவையாக அடைபட்ட நான் பறக்க முடியாது ! பறக்க முடிந்தாலும் உயரத்தைக் கட்டுப் படுத்த முடியாது. கூண்டுக்குள்ளே கனவு காண்பதைத் தவிர வேறென்ன என்னால் செய்ய முடியும் கிரஹாம் ?

கிரஹாம்: உன் மனதில் எனக்கென்று தனிப்பற்று இல்லையா ? என்மேல் அன்பில்லையா ? பரிவில்லையா ? பாசமில்லையா ?

மொரீன்: உன்னிடம் ஒளிமறை வில்லை எனக்கு. என்னிடத்தில் நீ இருந்தால் என் வேதனை புரியும் உனக்கு ! என்னை உன்வசம் ஒப்படைக்கிறேன். கட்டளை இடு ! சொன்னபடி செய்கிறேன் விடுதலை கிடைத்தால்.

Fig. 3
The Miser Drama Actors

கிரஹாம்: தந்தையை நிராகரித்து என்னை ஏற்றுக்கொள் ! சண்டை வரும், நான் சமாளித்துக் கொள்கிறேன். நீ மட்டும் என்னைத்தான் மணப்பேன் என்று அழுத்திச் சொன்னால் போதும்.

மொரீன்: கிரஹாம் ! உன்னைக் கட்டுப் படுத்துவது உன் தந்தை ! அது போல் என்னைக் கட்டுப்படுத்துவது என் அன்னை ! தந்தையை மீற முடியாத உன்னைப் போல் தாயை மீற முடியாது என்னால். எட்வேர்டுதான் என் வரப்போகும் கணவன் என்று என் தாய் முடிவு செய்திருக்கிறாள் ! என் தந்தை சிறு வயதிலே இறந்த பிறகு என் தாய்தான் எனக்கு எல்லாம் ! பரிவும் பாசமும் கொண்டு என்னைக் கண்காணிப்பவள். தாய் சொற்படி நடப்பவள் நாள். அவளுக்கு எந்த்ச் சிறு வேதனை தரவும் அஞ்சுகிறேன். கிளாடியா ! நீதான் என் தாயிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும். என் விருப்பத்தைச் சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும். எட்வேர்டு கிழவர் ! அவரது வாலிப மகனை நான் விரும்புவதாகச் சொல் ! எட்வேர்டை நான் மணக்க நேர்ந்தால் அவருக்கு முன் நான் சாவேன் என்று சொல் ! கிரஹாமை நான் மணந்தால் நீண்ட நாள் ஆனந்தமாய் வாழ்வேன் என்று சொல் !

கிரஹாம்: கிளாடியா ! எங்களுக்கு உதவி செய்ய மாட்டாயா ?

மொரீன்: எங்களுக்கு இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய். கிரஹாம் தந்தை திருமணத்தை நிறுத்து.

கிளாடியா: முயற்சி செய்கிறேன் மொரீன். உன் தாய் சற்று நியாய சிந்தனை உடையவள். கிரஹாமைப் பற்றி எடுத்துச் சொல்கிறேன். அவள் தந்தைக்குத் தரப் போகும் திருமண சன்மானத்தை மகனுக்குக் கிடைக்க வழி செய்கிறேன். ஆனால் தடையாய் இருக்கப் போவது உங்கள் தந்தை ! உடும்புப் பிடி மனிதர். அவர் மனதை மாற்றுவது எப்படி என்று சிந்திக்கிறேன். . . . . அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. மொரீன் அது உன்னால்தான் ஆகவேண்டும். ஏதாவது ஒரு தந்திரம் செய் ! உன்மேல் எட்வேர்டுக்கு வெறுப்பும், புறக்கணிப்பும் உடனே உண்டாக வேண்டும். அப்போதுதான் நீ தப்ப முடியும் ! மொரீனை நான் மணக்க மாட்டேன் என்று அவர் ஓங்கிக் கத்தும்படிச் செய்ய வேண்டும் !

Fig. 4
Edward, Giraham & Elizabeth

கிரஹாம்: நல்ல யோசனை கிளாடியா .

கிளாடியா: (சற்று யோசித்து) அதற்கு ஒரு வழி செய்கிறேன். எனக்குத் தெரிந்த மாது ஒருத்தியைச் செல்வந்தக் குமரியாக்கி அவள் மொரீனை விடப் பொன்னும் பொருள் மிக்கவள் என்று எட்வேர்டிடம் அறிமுகப் படுத்த வேண்டும். பொன்னும் பொருளும் அவர் கண்ணுக்குத் தெரிந்தால் போதும். எந்தப் பெண்ணுக்கும் சம்மதம் தருவார். அவருக்கு வேண்டியது செல்வம் ! பெருத்த செல்வம் ! அழகிய இளம் பெண்ணில்ல !

கிரஹாம்: நல்ல திட்டம். சொல், எப்படி வேறொரு மாதைக் கொண்டு வருவது ?

கிளாடியா: அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். எனக்குத் தெரிந்த சிநேகி ஒருத்தி இருக்கிறாள். அவளை நான் ஏற்பாடு செய்கிறேன். எந்தத் தடங்களும் குறுக்கிடாது நான் பார்த்துக் கொள்கிறேன். முதலில் மொரீன் தாயாரைப் பார்க்க வேண்டும் நான். சீக்கிரம் பார்க்க வேண்டும். போகிறேன்.

(கிரஹாம் ஆசையாக மொரீனை அணைத்து முத்தமிடுகிறான். அப்போது திடீரென எட்வேர்டு வருகிறார். கிளாடியா விரைவாக வெளியேறுகிறாள்)

எலிஸபெத்: கிரஹாம் ! அதோ அப்பா வருகிறார். நாமினி இதைப் பேசக் கூடாது. அமைதி !

எட்வேர்டு: (வந்து கொண்டே) என்ன ? பார்க்கச் சகிக்க முடியவில்லை ! கிரஹாம் வரப்போகும் சிற்றன்னையின் வாயில் முத்தமிடுகிறான் ! மொரீன் அதைத் தடுக்காமல் முத்தம் கொடுக்க அவனை அனுமதிக்கிறாள். ஏதோ தவறு நடந்து விட்டது ! ஏன் கிளாடியா என்னைப் பார்த்ததும் பார்க்காமல் ஓடிச் செல்கிறாள் ? நிறுத்துடா கிரஹாம் ! மொரீன் உன் சிற்றன்னை !

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 22, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஞானத்தின் கை ஓங்கும் வலுவாக !
பூரண காரணம்
ஓரம் தொட்டுச் சொல்லும்:
“சீராகச் சிந்திப்பாய்” என்று !
பூர்வீக முறைகள் வளையாமல் நின்று
நவீன யுகத்துடன் மோதிக் கொண்டன !
பூமியில் மாந்தர் மற்றவர் சூழந்திட
வாழ்வதைத் தவிர வழியிலை வேறு !
மனித இனத்தை மாற்றிட முனைவது
மூடத் தனத்தின் முதிர்ச்சி யாகும் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 3 காட்சி 2 (தொடர்ச்சி)

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
(சென்ற வாரத் தொடர்ச்சி)

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். சமையல்காரன் ஜேகப் வரவேற்க கல்யாணத் தரகு மாது கிளாடியா கூட வர மணப்மொரீன் உள்ளே நுழைகிறாள். எதிர்பார்த்திருக்கும் எட்வேர்டு, எதிர்பாராத புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத் இருவரும் தாமதமாய் ஆச்சரியமுடன் மொரீனை வரவேற்கிறார்கள். மொரீனை முன்னிட்டுத் தந்தைக்கும் மகனுக்கும் வாய்ச் சண்டை உண்டாகிறது.

மொரீன்: கிளாடியா ! நான் திரும்பிச் செல்கிறேன் ! என்னால் தந்தைக்கும் மகனுக்கும் சண்டை வந்துவிட்டது ! இந்தத் திருமணம் இப்படி நடக்க வேண்டாம் ! நான் போகிறேன் கிளாடியா. (மொரீன் திரும்பிச் செல்ல எழுகிறாள்)

எட்வேர்டு: வேண்டாம் மொரீன் ! இது எப்போதும் எங்களுக்குள் நேரும் தர்க்கம் ! இது சண்டை யில்லை ! நாங்கள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை இது ! நீ கவலைப் படாதே !

கிளாடியா: போகாதே மொரீன் ! உனக்கு வருகிறது அதிர்ஷ்டம் ! அதை நழுவ விடாதே !

மொரீன்: (வருத்தமுடன்) என்னை உங்கள் மகன் சிற்றன்னையாகக் காண முடியாதாம். ! அப்படி என்றால் அவரை மாற்றாந்தாய் மகனாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது ! அப்படி அவர் வருந்தும்படி நான் வற்புறுத்தப்பட்டுச் சிற்றன்னையாக விரும்பவில்லை.

எட்வேர்டு: மொரீன் சொல்வது சரிதான். மூடப் புகழ்ச்சிக்கு முடத்தனமான பதில்தான் தர வேண்டும். என் மகன் பிடிவாதப் போக்கிற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் மொரீன் ! அவன் ஒரு முட்டாள் ! நாக்கில் கொட்டும் நஞ்சை நீக்க முடியா தென்று அறியாத மூடன் அவன்.

மொரீன்: அவர் பேசியது எனக்கு வெறுப்பூட்ட வில்லை ! என்னைச் சிற்றன்னையாகக் கருதாது வேறென்ன பெண்ணாய் எண்ணுகிறார் ? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச்சாதவர் அவர் ! அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசும் மனிதரைக் கண்டால் எனக்குப் பிடிக்காது.

எட்வேர்டு: என் மகன் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் உன் வெள்ளை மனது என் உள்ளத்தைத் தொடுகிறது. போகப் போக அவன் தன் தவறை உணர்ந்து உன்னைச் சிற்றன்னையாக ஏற்றுக் கொள்வான் !

கிரஹாம்: இல்லை அப்பா ! நான் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
மொரீன் ! நம்பு என்னை ! இப்போது நான் சொல்வதை, இன்னும் பாத்தாண்டுகள் கழித்தும் அப்படியே உரைப்பேன். இடத்துக்கு இடம் மாறும் பச்சோந்தி இல்லை நான்.

எட்வேர்டு: என்னடா ? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா ? இன்றைக்குப் பார்த்து உன் மூளையில் கோளாறு எப்படி ஏற்பட்டது ?

கிரஹாம்: அப்பா என் மனதை நான் ஏமாற்ற முடியாது ! என் மனம் சொல்வதை நான் புறக்கணிக்க முடியாது ! என் மனம் தடுப்பதை நான் நிராகரிக்க முடியாது. என் மனம் நாடுவதை நான் நீக்க முடியாது !

எட்வேர்டு: என் மகனுக்குப் பித்துப் பிடித்திருக்கிறது ! பேசும் தலைப்பை நாம் மாற்றலாம்.

மொரீன்: உங்கள் மனம் என்ன நாடுகிறது என்று சொல்லுங்கள் ?

கிரஹாம்: தலைப்பை மாற்றிப் பேசுகிறேன். மொரீன் ! தந்தையின் இடத்தில் என்னை நிறுத்தி நான் உன்னிடம் பேசட்டுமா ? உன்னைப் போன்ற கவர்ச்சி நளினப் பெண்ணை உலகிலே நான் காண முடியாது. உன்னை மகிழ்விப்பதே என் கடன். உன் கணவரின் சொத்து விலைமதிக்க முடியா மதிப்பு ! உலகில் பெரும் இளவரசிகளுக்குக் கிடைக்கும் பேரளிப்பு. உன் கையைப் பற்றும் பாக்கியம் ஒருவனுக்கு ஒப்பற்ற அதிர்ஷ்டம் ! உன் இதயத்தில் இடம் பிடிக்கும் ஓர் ஆண்மகனாக நானிருக்க வேண்டும். எந்தத் தடை வந்தாலும் மீறுவேன், உன்னை என்னுடைய வளாக்கிக் கொள்ள !

எட்வேர்டு: ஆஹா என்னை நன்றாகப் புரிந்திருக்கிறான் என் மகன். என் இதயமும் அவன் இதயமும் ஒரே மாதிரி இச்சை கொண்டுள்ளதே ! நீ தான் என் மகன் ! நான்தான் உன் தந்தை !

கிரஹாம்: மொரீன் ! என் மனத்தைத் திறந்து காட்டுகிறேன். அதில் என் தந்தையின் ஆசையும் தெரிகிறதா ? நல்லது ! இப்போது என் மனது உனக்குத் தெரியலாம் ! ஆனால் அந்த மனது அப்பாவுக்குத் தெரியாது. அப்பா மனது நல் மனதா அல்லது கல் மனதா என்பது உனக்குத் தெரிய வேண்டும்.

எட்வேர்டு: அருமை மகனே ! என்னைப் பற்றிப் பேச எனது நாக்கு எனக்கு உள்ளது ! உனது நாக்கு எனக்கு வேண்டாம். மொரீனை விரும்புவது முழுக்க முழுக்க நான் ! . . . யாரங்கே ? இன்னும் நாற்காலிகள் வேண்டும் ! எடுத்துக் கொண்டு வா. அமர்ந்து கொண்டு பேசுவோம்.

கிளாடியா: தேவை இருக்காது ! மொரீன் கடைவீதிக்குப் போகும் நேரம் வந்து விட்டது. போய்விட்டு விரைவில் வர வேண்டும் விருந்துக்கு !

எட்வேர்டு: ஒன்றும் சாப்பிடாமல் குளிர்பானங்கள் குடிக்காமல் போகக் கூடாது. எங்கே வில்லியம் ? . . . வில்லியம் ! கொண்டுவா குளிர்பானத்தை முதலில் !

(வெளியே வாகனத்தில் ஏற மொரீன், கிளாடியா, எலிஸபெத் நெருங்குகிறார்கள்.
மொரீன் வாகனத்தில் ஏற உதவி செய்கிறான் கிரஹாம். எட்வேர்டு கூடச் செல்கிறார்]

கிரஹாம்: (தந்தையின் மோதிர விரலைப் பற்றி மொரீனிடம் காட்டி) மொரீன் ! அப்பாவின் வைர மோதிரம் போல் ஒளிவீசும் ஒன்றைப் பார்த்திருக்கிறாயா ?

மொரீன்: இல்லை கிரஹாம் ! ஒளி கண்ணை வெட்டுகிறதே !

கிரஹாம்: (தந்தை கையிலிருந்து மோதிரத்தைக் கழற்றி அவள் கையில் கொடுத்து) பக்கத்தில் பார் அது எத்தனை பெரிதென்று ? அதன் அழகைப் பார் ! அதன் ஒளியைப் பார் ! அதன் விலையைச் சொல்லவா ?

மொரீன்: மிக்க அழகுதான் ! மின்னல் வெட்டுதான் ! விலையை நான் கேட்க மாட்டேன் (திருப்பிக் கொடுக்கிறாள்).

கிரஹாம்: நீ வைத்துக் கொள் ! அது உனக்கு அப்பாவின் பரிசு ! உன் விரலை அழகு படுத்த வேண்டிய அந்த மோதிரம், அப்பாவின் அழுக்கு விரலில் தெரியாமல் கிடக்கிறது !

மொரீன்: வேண்டாம் எனக்கு ! நான் மோதிரம் போட்டுக் கொள்ளவ தில்லை.

எட்வேர்டு: (அதிர்ச்சி அடைந்து கிரஹாமிடம்) என்ன கிரஹாம் ? மொரீன் கூட விளையாடுகிறாயா ? அவளுக்கு என் மோதிரத்தை . . . .?

கிரஹாம்: மறுக்காதே மொரீன் ! அப்பா வேதனைப் படுகிறார் பார். போட்டுக் கொள். அப்பாவின் அன்பளிப்பு இது ! நீ வைத்துக் கொள்ள நான் வற்புறுத்த வேண்டு மென்று அப்பா என்னை வருந்திக் கேட்கிறார்.

மொரீன்: நான் விலை உயர்ந்த மோதிர மெல்லாம் அணிவதில்லை ! வேண்டாம் எனக்கு !

எட்வேர்டு: [பின்புறம் திரும்பி) கோபம் வருகுது எனக்கு !

கிரஹாம்: பார் மொரீன் ! உன் புறக்கணிப்பு அப்பாவுக்குக் கோப மூட்டுகிறது ! அவரது மனம் உடையும், நீ போட்டுக் கொள்ளா விட்டால் !

எட்வேர்டு: [ஆங்காரமாய்] விட்டுவிடு ! அவள் வேண்டாம் என்று மன்றாடுகிறாள் !

கிரஹாம்: மொரீன் ! அப்பாவுக்கு உன் மறுப்பு அதிர்ச்சியைக் கொடுக்கிறது ! ஏற்றுக் கொள் ! இன்று உனக்கு நல்ல நாள் ! இந்த வீட்டுக்கு மணமகளாய் வரப் போகிறவள் நீ ! இது அப்பா உனக்களிக்கும் முதற் பரிசு ! இன்னும் பல ஆபரணம் வரப் போகுது. அடுத்து என் அன்னையின் முத்தாரம் .. . . . !

எட்வேர்டு: [பொறுக்க முடியாமல்] துரோகி ! இதையெல்லாம் போய் நீ . . . . !

கிரஹாம்: மன்னிக்க வேண்டும் மொரீன். அப்பா சொல்லப் போவதை நான் சொன்னது தப்பு ! அப்பா தரப் போகும் மோதிரத்தை நான் உனக்கு அளித்தது தப்பு ! உன் வெறுப்பால் எங்களுக்குள் மறுபடியும் சண்டை வருகிறது ! நீ போட்டுக் கொள் மோதிரத்தை. (மோதிரத்தை வாங்கி மொரீன் விரலில் சிரித்துக் கொண்டு போடுகிறான்) இன்று உன் திருமண ஒப்பந்த நாள். மறந்து விட்டாயா மொரீன் ? நீ இந்த மாளிகைக்கு மணமகளாய் வரப் போகிறவள். இந்த வைர மோதிரம் அதற்கோர் அடையாளம்.

எட்வேர்டு: அயோக்கிய ராஸ்கல் ! வற்புறுத்தாதே மொரீனை ! கட்டாயப் படுத்தாதே மொரீனை !

கிளாடியா: மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள் மொரீன் ! ஏன் பிகு பண்ணுகிறாய் ? அப்பா எப்படிக் கொடுப்பது என்று ஏங்கினார் ! அப்பாவின் விருப்பத்தை மகன் பூர்த்தி செய்கிறார். வைர மோதிரத்தை யாராவது வேண்டாம் என்பார்களா ?

மொரீன்: உங்கள் கோபத்தைத் தணிக்க தற்காலியமாக மோதிரத்தை வைத்துக் கொள்கிறேன். வேறொரு சமயம் வாய்க்கும் போது நானதைத் திருப்பித் தந்து விடுவேன் ! ஆனாலும் கிரஹாம் அன்புடன் போட்ட பிறகு ஏனோ அதை விரும்புகிறது என் மனம் ! மோதிரம் எத்தனை கோணத்தில் மினுக்கிறது பார் கிளாடியா ! காதல் மோதிரம் ! கவர்ச்சி மோதிரம் ! ஆசை மோதிரம் ! அன்பு மோதிரம் ! (கிரஹாம் முகத்தைப் பார்த்து புன்னகை புரிகிறாள். எட்வேர்டு புரிமாமல் திருதிருவென விழிக்கிறார்)

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 14, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“விட்டுவிடு உன் காதலியை” என்று
விலைமதிப் பாகப் பாரிஸை
வேந்தரே வந்தெனக்கு அளித்தாலும்
வேண்டேன் அப்பெரு நகரை !
மீண்டும் எடுத்துக் கொள்வீர்
ஹென்ரி வேந்தே என்பேன் !
எனது காதலியே வேண்டும் !
எனக்குக் காதலியே வேண்டும் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

இதுவே பொது விதி எனக்கு !
எல்லா மாந்தரை வெறுப்பேன் !
சிந்தனை கெட்டது சிலருக்கு !
செயலே கெட்டது சிலருக்கு !
வஞ்சகர் என்று விளிப்பேன் !
அயோக்கியர் என்பேன் ! மூர்க்கர் என்பேன் !
ஆயினும் வெகுமதி பெற்றிடும்
அவரது புன்னகை ! கைகுலுக்கி
அனைவரும் வரவேற்பர் அவரை !
புழுவினைப் போலவர் எதிலும்
நுழைவர் எளிதாய் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

Fig. 1
Angry Edward

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 3 காட்சி 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

Fig. 2
Edward Looking at Moreen

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். சமையல்காரன் ஜேகப் வரவேற்க கல்யாணத் தரகு மாது கிளாடியா கூட வர மணப்மொரீன் உள்ளே நுழைகிறாள். எதிர்பார்த்திருக்கும் எட்வேர்டு, எதிர்பாராத புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத் இருவரும் தாமதமாய் ஆச்சரியமுடன் மொரீனை வரவேற்கிறார்கள்.

ஜேகப்: யார் நீங்கள் ? யாரைப் பார்க்க வேண்டும் ?

கிளாடியா: நான்தான் கிளாடியா ! இவள் பெயர் மொரீன் ! நாங்கள் உங்கள் எஜமானர் எட்வேர்டைப் பார்க்க வந்திருக்கிறோம். மாளிகையில் இருக்கிறாரா ?

ஜேகப்: [அருகில் சென்று தலைவணங்கி] ஓ ! நீங்கள்தான் இந்த அரண்மனைக்கு ராணியாக வரப் போகிறவரா ? வணக்கம் அம்மையாரே ! நான்தான் ஜேகப் ! உங்களுக்கு அளிக்க அறுசுவை விருந்தை அமர்க்களமாய்த் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் ! உங்களைக் கடைவீதிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப் போகிறவனும் நானே !

கிளாடியா: ஓ ! நீதான் சமையல்காரனா ? உன்னையே வாகனத்தை ஓட்டுநராகவும் ஆக்கிவிட்டாரா உங்கள் எஜமான் ? என்ன சிக்கனம் பார்த்தாயா மொரீன் ?

ஜேகப்: அடேடே ! எங்கள் எஜமானின் சிக்கன விதி ஊரெல்லாம் பரவி இருக்கிறதே ! தயவு செய்து சோபாவில் உட்காருகிறீர்களா ? எஜமான் குளித்துக் கொண்டிருக்கிறார். உள்ளே போய்ப் பார்த்து வருகிறேன்.

[இருவரும் சோபாவில் அமர ஜேகப் உள்ளே செல்கிறான்]

மொரீன்: எத்தனை பெரிய மாளிகை இது ? எழிலாக உள்ள இந்த மாளிகையில் தாராளமாக இருபது குடும்பங்கள் வாழ்க்கை நடத்தலாம் ! மாளிகையைப் பார்த்தாலே எனக்குப் பயமாக உள்ளது ! சமையல்காரன் இந்த வீட்டு ராணி என்று சொன்னது எனக்கு அச்சத்தை உண்டாக்குது !

கிளாடியா: நீ ஏன் அச்சப்பட வேண்டும் ? மற்றவர்தான் உன்னைப் பார்த்து இனி அச்சப்படுவார் ! எஜமானர் எட்வேர்டு தங்கமானவர் ! அவரது உள்ளம் தங்கம் ! அவரது மேனி தங்கம் ! அவரது
வீடெல்லாம் தங்கம்தான் ! அவரைப் பார்த்தால் நீ மயங்கி விடுவாய் ! அஞ்சாதே மொரீன் ! நீ சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளாய் !

மொரீன்: எந்தச் சிறையில் மாட்டிக் கொள்ளப் போகிறேன் என்று பார்க்கும் போது உடம்பெல்லாம் நடுங்குகிறது கிளாடியா !

கிளாடியா: எட்வேர்டு சிறைக் காவலர் அல்லர் மொரீன் ! நிறைவான வாழ்வைக் குறையாமல் தருபவர் ! ஆமாம் உன் முகத்தைப் பார்த்தால் ஓர் அச்சத்தின் நிழலைக் காண்கிறேன் ! என்னிடம் முன்பு நீ சொல்லிய வாலிபனை மனதில் இன்னமும் வைத்திருக்காயா ? வாலிபர் எல்லாம் கன்னிப் பெண்ணைக் கேலி செய்பவர் ! கோமாளிகள் ! எட்வேர்டு வயோதிகவரும் அல்லர், வாலிபரும் அல்லர் ! இரண்டுக்கும் இடைப்பட்ட வயது ! மனமுதிர்ச்சி உடையவர் ! பெண்களை மதிப்பவர் ! பெரிய மனிதர் !

மொரீன்: (கவலையுடன்) வயோதிகர் என்றால் நரைத்த தலையா ? வழுக்கத் தலையா ?

கிளாடியா: இப்போதுதான் தலை நரைக்கத் தொடங்கி உள்ளது ! இப்போதுதான் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளது ! ஆனால் மனிதருக்கு உடல் வலு அதிகம் ! சொல் மொரீன் ! அந்த வாலிபனை இன்னமும் நினைத்துக் கொண்டுள்ளாயா ? கனவில் வந்து இரவில் உன் தூக்கத்தைக் கலைக்கிறானா ?

மொரீன்: [வெட்கமுடன்] ஆமாம் கிளாடியா ! நானதை மறுக்க மாட்டேன் ! அந்த வாலிபன்தான் என் மனத்தில் இன்னமும் இருக்கிறான் ! அதனால் என் கால்கள் இந்த இல்லத்தில் தடம் வைத்ததும் ஏனோ நடுங்குகின்றன ! அவன் என்னைப் பலமுறைச் சந்தித்து என்னிதயத்தில் ஒரிடத்தைப் பிடித்து விட்டான். ஏதோ ஓர் சக்தி என்னை இங்கே ஈர்க்கிறது !

கிளாடியா: அவன் யாரென்று தெரியுமா ? எங்கே இருக்கிறான் என்று தெரியுமா ?

Fig. 3
Elizabeth & Edward

மொரீன்: தெரியாது கிளாடியா ? ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அவன் நேசிக்கத் தகுதியான ஆண்மகன் ! தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு மட்டும் கிடைத்தால் நான் அவனைத் தவிர வேறு எவனையும் தேட மாட்டேன் ! என் நெஞ்சில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவன் !

கிளாடியா: நீ உலகம் அறியாத மங்கை ! இந்த வாலிபர் கூட்டம் அனைவரும் நல்ல நடிகர் ! உன்னைப் போன்ற அப்பாவிப் பெண்களை மயக்கிக் கட்டிப் போடும் காளைகள். அவரில் அநேகர் சர்சு எலிகள் போல் ஏழையர். ஊதியம் போதாது. ஊன்றிய வேலை கிடையாது. திருமணம் ஆன பிறகு வறுமைதான் பீடிக்கும். குடியிருக்க வீடிருக்காது ! கன்னியர் கலியாணம் செய்தால் எல்லாம் நிறைந்த வயோதிகரைத்தான் கணவனாகப் பெற வேண்டும். கவலை யில்லாது காலம் தள்ளலாம் ! வயோதிகக் கணவன் செத்தால் விதவை செல்வந்த மாதாய் ஆகிவிடுவாள் ! வாலிபக் கணவன் செத்தால் மனைவிக்கு எதுவும் கிடைக்காது. வயோதிகக் கணவன் வாழ்ந்தாலும் பொன் ! மரித்தாலும் பொன் ! இதுதான் கலியுகத் திருமண விதி !

மொரீன்: [காதுகளை மூடிக் கொண்டு] என்ன பயங்கர உலகம் இது ? வயோதிகக் கணவன் வாழ்ந்தாலும் பொன் ! மரித்தாலும் பொன் ! ஒரு கலியாணப் பெண் பணக்காரியாக வேண்டுமானால் கணவன் சாக வேண்டுமா ? ஒருவர் நினைப்பதுபோல் மரணம் யாருக்கும் சீக்கிரம் வந்துவிடுமா ?

கிளாடியா: கேலியாகப் பேசாதே மொரீன் ! அதுதான் புதுத் திருமண ஒப்பந்தம் ! எட்வேர்டை நீ மணப்பதின் காரணமே அவர் விரைவில் உன்னை விதவை ஆக்கலாம் என்பதுதான் ! . . . பொறு ! அதோ பார் ! கலியாண மாப்பிள்ளையே உன்னை வரவேற்க வருகிறார் !

[எட்வேர்டு புத்தாடை அணிந்து ஒப்பனையோடு புன்னகையோடு நிமிர்ந்த பார்வையில் வருகிறார்]

எட்வேர்டு: மன்னிக்க வேண்டும் மொரீன் ! குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக நீ வந்து விட்டாய் ! உன்னை வரவேற்க என் மகனையும் மகளையும் நியமித்திருந்தேன். அவர்கள் உன்னை வரவேற்பதற்குப் பதிலாக, இப்போது நீயே அவரை வரவேற்கப் போகிறாய் (சிரிக்கிறார்) . . . நீ இத்தனை அழகானவள் என்பது எனக்குத் தெரியாது ! (அப்போது மொரீன் முகத்தைச் சுருக்கித் திருப்பிக் கொள்கிறாள்) கிளாடியா ! மொரீனைக் கண்டுபிடித்த உனக்கு பெருத்த வெகுமதி அளிக்க வேண்டும் ! . . என்னைப் பார்த்ததில் மொரீனுக்கு ஏன் முகமலர்ச்சி யில்லை !

கிளாடியா: நீங்கள் திடீரென வந்தது அவளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி விட்டது ! புதிதாகப் பார்க்கும் ஒரு மணப்பெண் வெட்கப்பட மாடாளா ? மேலும் பெண்கள் மனதில் உள்ளதை உடனே வெளியில் காட்ட மாட்டார்கள் !

[அப்போது மகள் எலிஸ்பெத் சிரித்துக் கொண்டு வருகிறாள்]

எட்வேர்டு: உண்மைதான் கிளாடியா ! இதோ என் மகள் எலிஸபெத் ! என் இளைய புதல்வி ! [மொரீனைப் பார்த்து] உன்னை வரவேற்க வேண்டியவள் எலிஸபெத் ! நீ சற்று முந்திக் கொண்டாய் !

எலிஸபெத்: வருக வருக மொரீன் ! மன்னிக்க வேண்டும் ! பிந்தி விட்டேன் நான் !

Fig. 4
Father, Son & Moreen

எட்வேர்டு: எலிஸபெத் எங்கள் இல்லத்தில் அழகி ! அவளுக்கு உயரமும் மிகுதி ! அம்மாவின் அழகிய முகத்துடன் பிறந்தவள் !

மொரீன்: [மெதுவாகக் கிளாடியாவிடம்] பார் எத்தனை கோரமான மனிதர் ! [எலிஸபெத்திடம்] உங்கள் தாய் . . . !

எலிஸபெத்: இறந்து ஒரு வருடம் ஆக்கப் போகிறது ! அந்த இடத்திலே வேறு யாரையும் நான் நினைத்துப் பார்க்க முடிய வில்லை !

எட்வேர்டு: தேன்மொழிகளில் மெதுவாக மொரீன் என்ன சொல்கிறாள், கிளாடியா ?

கிளாடியா: [சற்று தடுமாற்றமுடன்] வயோதிகர் இன்னும் வாலிபராக இருக்கிறாரே என்று மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள் !

எட்வேர்டு: அப்படி அவள் மதிப்பு வைத்திருப்பதே எனக்குப் பூரிப்பை உண்டாக்குகிறது !

மொரீன்: [முகத்தித் திருப்பி] இந்த மிருகத்துக்கு மனைவி இறந்த ஒரு வருடத்தில் திருமணமா ?

எட்வேர்டு: என்னைப் பார்த்து நேராகப் பேசு மொரீன் ! என்ன சொல்கிறாள் கிளாடியா ?

கிளாடியா: வயோதிகருக்கு உள்ளம் வெல்லமாய் இருக்கிறது என்று சொல்கிறாள் !

மொரீன்: கிளாடியா, என்னால் இந்த காட்சியைக் காண முடியாது இனிமேல் !

[அப்போது எட்வேர்டின் மகன் கிரஹாம் வருகிறான்]

எட்வேர்டு: மொரீன் ! இதோ எனது மூத்த மகன் கிரஹாம் ! உன்னை வரவேற்க வேண்டியவன் !

மொரீன்: [கிரஹாமைப் பார்த்து புன்னகை புரிந்து, கிளாடியாவிடம்] என்ன விந்தையான சந்திப்பு !
இந்த இளஞர்தான் . . . என்னைக் கவர்ந்தவர் !

கிளாடியா: எதிர்பாராத துரதிஷ்டம் !

எட்வேர்டு: மொரீனுக்கு கிரஹாமைப் பிடித்திருக்கிறது ! அவள் முகமே மலர்ந்து விட்டதே !

கிளாடியா: இத்தகைய இளைஞருக்கு அப்பாவா நீங்கள் என்று அதிசயம் அடைகிறாள் மொரீன் !

எட்வேர்டு: வாலிபப் பிள்ளைகளை உடையவன் நான் என்று வருத்த வேண்டாம் மொரீன் ! கூடிய சீக்கிரம் அவர் இருவரும் திருமணமாகி இந்த வீட்டை விட்டுப் போய் விடுவார் ! பிறகு நீயும் நானும்தான் இந்த மாளிகைக்கு ராஜா ராணி !

கிரஹாம்: மொரீன் ! இந்த மாளிகைக்கு நீ மணப்பெண்ணாய் வருவதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்குப் பிடித்த இடத்தை நாடி நீ வருகிறாய் ! ஆயினும் இந்தச் சந்திப்பை நான் எதிர்பார்க்க வில்லை ! பழம் நழுவிப் பாலில் விழுந்தால் இனிமையாக இருக்கும் ! சமீபத்தில்தான் எனது அப்பாவின் திட்டத்தைப் பற்றி நான் அறிந்தேன் ! அதில் ஆச்சரியமும் அடைந்தேன் !

மொரீன்: நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு ! இப்போது நானும் உங்களைப் போல் ஆச்சரியம் அடைகிறேன். நானிதற்குத் தயாராக இல்லை !

எட்வேர்டு: கிரஹாம் சொல்வதும் புரியவில்லை ! மொரீன் சொல்வதும் புரிய வில்லை ! உனக்குப் புரிகிறதா கிளாடியா ?

கிளாடியா: எனக்குப் புரிந்தது சிறிது ! புரியாதது அதிகம் !

கிரஹாம்: என் தந்தை பொருத்தமானப் பெண்ணைத்தான் தேர்ந்திருக்கிறார். எனக்கு அதில் பெருமைதான். உன்னை மணப்பெண்ணாக இந்த மாளிகையில் வரவேற்கிறேன். அதற்கு எனது இனிய வாழ்த்துக்கள். ஆனால் உன்னைச் சிற்றன்னையாக என்னால் நினைக்க முடியவில்லை ! அந்தப் பட்டத்தைச் சூட எனக்கு விருப்பமில்லை ! அப்படி நான் சொல்வது சிலருக்குப் பிடிக்காது. நான் யாரெனத் தெரிந்து கொண்ட நீ இப்போது மனப் போராட்டத்தில் திண்டாடலாம் ! கிளாடியாஎனக்கு இந்த திருமண ஏற்பாட்டில் உடன்பாடில்லை ! என் சொல்லுக்கு மதிப்பிருக்குமே ஆனால் இந்த திருமணத்தை என் தந்தை நடத்தக் கூடாது !

எட்வேர்டு: [கோபம் பொங்க] முட்டாள் ! என்ன பேசுகிறாய் நீ ? இந்த திருமணத்தை நடத்தியே தீருவேன் ! யாரும் அதை நிறுத்த முடியாது !

மொரீன்: கிளாடியா ! நான் திரும்பிச் செல்கிறேன் ! என்னால் தந்தைக்கும் மகனுக்கும் சண்டை வந்துவிட்டது ! இந்தத் திருமணம் இப்படி நடக்க வேண்டாம் ! நான் போகிறேன்.

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 7, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காதலில் ஆழமாய் மூழ்கிய ஓருவன்
கண்டிக்க வேண்டும் அதிகமாய்
அழகினை அழித்திடும்
ஒவ்வோர் சிறு குறையையும்,
ஒவ்வோர் பெருந் தவறையும் !
நானொரு பெண்ணாக இருந்தால்
ஆணொருவன் செய்வதை எல்லாம்
ஆதரித்து வரவேற்கும்
காதலியர் அனைவரையும்
மோதி விரட்டுவேன் !
மூடத் தனத்தையும் எனது
போலிக் குணத்தையும்
ஏற்றுக் கொள்ளும்
மாதரையும் வெளியேற்றுவேன் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 3 காட்சி 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். எட்வேர்டு, புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத், வில்லியம், வீட்டு வேலைக்காரி மேரி, சமையல்காரன்-வாகன ஓட்டி ஜேகப் மற்றும் வீட்டுத் துணை வேலையாளிகள்.

எட்வேர்டு: [பரபரப்புடன் அங்குமிங்கும் பேசிக் கொண்டு] எல்லாரும் அருகில் வாருங்கள். நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். சொன்னபடி செய்ய வேண்டும், தவறு செய்தால் எனக்குக் கெட்ட கோபம் வரும் ! நான் திட்டி விடுவேன் ! இன்றைக்கு நல்ல நாள் ! நான் தேர்ந்தெடுத்த எனது மணப்பெண் என்னைக் காண வருகிறாள் ! நம் மாளிகையில் அவளுக்கு நான் விருந்தளிக்கிறேன். நீங்கள் யாவரும் அவளைக் கோலாகலாக வரவேற்க வேண்டும். உங்களுக்கு வீட்டு எஜமானியாக வரப் போகிறாள் ! அவளுக்கு நீங்கள் உபசாரம் செய்ய வேண்டும் பூரிப்பாக. முதல் வேலை மேரிக்கு ! [மேரியைப் பார்த்து] முழு வீட்டையும் நீ பெருக்கிச் சுத்தம் செய். மேஜை, நாற்காலி, சோ•பா, மெத்தை எல்லாவற்றையும் துப்புரவாகத் துடைக்க வேண்டும். அடுத்து விருந்துண்ணும் போது ஒயின் பாட்டில்களை நீதான் கொண்டு வந்து எல்லோருக்கும் ஊற்ற வேண்டும். ஒயின் பாட்டில் உடைந்தாலோ, அல்லது காணாமல் போனாலோ அதற்கு நீதான் பொறுப்பு. உன் சம்பளப் பணத்திலே வெட்டி விடுவேன். கவனித்துக் கொள்.

மேரி: எஜமான், உங்கள் உத்தரவுப்படியே செய்வேன். யார் பாட்டிலை உடைந்தாலும் நான்தான் பொறுப்பு ! யார் ஒயின் பாட்டிலைத் திருடினாலும் நான்தான் பொறுப்பு ! எஜமான் என் சம்பளப் பணம் போதாது இந்தக் கடனை அடைக்க ! இந்த சமயத்திலே வாரச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் நல்லது ! [போகிறாள் விரைவாக]

எட்வேர்டு: [கோபமாக] போ, போ ! நீ செய்கிற அரைகுறை வேலைக்கு உனக்கு அந்த வெகுமதிதான் தர வேண்டும், போ ! போய் வேலையைப் பார் ! . . . நில் மேரி ! பெண் வீட்டுக்காரருக்கு நீர் கலக்காத ஒயினை ஊற்று ! மற்றவருக் கெல்லாம் நீர் கலந்த ஒயின். மறக்காதே போ வேலையைத் தொடங்கு !

மேரி: [மெதுவாக] எஜமான், ஒயினில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது ?

எட்வேர்டு: அதை இங்கே கேட்காதே. விருந்து கொடுக்கும் போது சொல்கிறேன். [மகளைப் பார்த்து] எலிஸபெத் ! நீதான் வாசல்முன் நின்று மணப்பெண்ணை வரவேற்று உள்ளே அழைத்து வர வேண்டும். அவளைக் கடைவீதிச் சந்தைக்கு அழைத்துப் போய் பிறகு மாலை விருந்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

எலிஸபெத்: அப்படியே செய்கிறேன் அப்பா ! நான் எந்த உடையை அணிவது ? இருப்ப தெல்லாம் எனக்குப் பழையது ! புதிதாக நான் கவுன் வாங்க வேண்டும் அப்பா ! வரவேற்பைப் பற்றி முன்பே சொல்லியிருக்கக் கூடாதா ?

எட்வேர்டு: கவலைப் படாதே எலிஸபெத். மணப்பெண் மொரீன் எளிய உடைதான் அணிவாளாம். சிக்கனப் பெண்ணாம் ! நிறைய சேர்த்து வைப்பாளாம் ! நீ மட்டும் ஆடம்பரமாக இருந்தால், மணப்பெண் மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் ! பழைய உடையில் புதுசாக இருப்பதை உடுத்திக் கொள். உன் எளிமையைக் கண்டு மொரீன் பூரித்துப் போவாள். கலியாணத்தின் போது புதுசு வாங்கித் தருகிறேன்.

எலிஸபெத்: [சினத்துடன்] அப்பா ! யார் கலியாணத்துக்கு புதுசு வாங்கித் தரப் போகிறீர் ? உங்கள் திருமணத்துக்கா ? அல்லது என் திருமணத்துக்கா ? என்னிடம் உள்ள தெல்லாம் பழசுதான் ! அதிலே எந்தப் புதுசைத் தேடுவது ? எந்தப் புதிசைப் போடுவது ?

எட்வேர்டு: எதையாவது அணிந்து கொள் சீக்கிரம். மணப்பெண் வரும் தருணம் நெருங்கி விட்டது ! அடுத்தொரு வேலை உனக்கு. விருந்து மேஜையில் எதுவும் வீணாகாமல் பார்த்துக் கொள் நீ ! நீதான் அப்பாவுக்கு வீட்டுக்காரி ! உன் தாயை நினைத்துக் கொள் ! அவள் எப்படி விருந்தை வெகு சிறப்பாகச் செய்வாளோ அப்படி நீ நடத்த வேண்டும் !

எலிஸபெத்: அதை யெல்லாம் நான் கவனித்துக் கொள்வேன் அப்பா. என் பிரச்சனை அதுவல்ல ! வரவேற்புக்கு என்ன உடை அணிவது ? விருந்தின் போது என்ன உடை அணிந்திருப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும் !

எட்வேர்டு: [மகனைப் பார்த்து] கிரஹாம் ! ஏன் உன்முகம் கோணிப்போய் உள்ளது ? நான்தான் உன்னை மன்னித்து விட்டேனே ! நானுள்ள போது நீ ஏன் கடன் வாங்க வேண்டும் ? சரி அது போகட்டும். இப்போது உன் முகத்தில் சற்று மலர்ச்சி உண்டாகட்டும் ! மொரீன் முன்னால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளாதே ! அவள் உனக்கு மாற்றாம் தாயாக வரப் போகிறாள் ! அவளை உன் தாயாக நினைத்துக் கொள் !

கிரஹாம்: அது என்னால் முடியாதப்பா ? மொரீன் என்னை விட ஐந்து வயது இளையவள் ! அவள் எப்படி எனக்கு அன்னையாக முடியும் ? அவள் எனக்குச் சிற்றன்னையாக வருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது ! இளமையாய் கவர்ச்சியாய் இருக்கும் மொரீனை எப்படி நான் தாயாக ஏற்றுக் கொள்வது. என்னால் இயலாது ! ஆனால் மொரீனை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன். அவளுக்குப் பணிவிடை செய்கிறேன். கண்களால் இடும் பணிகளை என் கைகளால் செய்கிறேன்.

எட்வேர்டு: சரி அது போதும் எனக்கு ! நீயும் எலிஸபெத்தும் வாசலில் நிற்க வேண்டும் ! மணப்பெண் வருகின்ற நேரம்தான் ! சீக்கிரம் போங்கள் !. . . ஆமாம் உனக்கெப்படி மொரீன் வயது தெரியும் ? [ஜேகப்பை பார்த்து] இங்கே வா ஜேகப் ! உன் வேலைகளைச் சொல்கிறேன் !

ஜேகப்: சமையல்காரன் ஜேகப்பா ? அல்லது வண்டி ஓட்டி ஜேகப்பா ? யாரைக் கூப்பிடுகிறீர் எஜமான் ? நாணயத்துக்கு இரண்டு முகம் ! எனக்கும் இரண்டு முகம் ! எந்த முகம் வேண்டும் ?

எட்வேர்டு: இரண்டு பேரும் தேவை. முதலில் சமையல்காரனுக்கு வேலை.

ஜேகப்: [டிரைவர் உடையை மாற்றிக் கொண்டு ] கொஞ்சம் பொறுங்கள் எஜமான் ! என் உடையை மாற்றிக் கொள்கிறேன். [சமையல் உடை அணிந்து கொண்டு] நான் தயார் ! சொல்லுங்கள் எத்தனை பேருக்கு விருந்து ? காத்துக் கொண்டிருக்கிறேன் எஜமான். முதலில் பணத்தைக் கொடுங்கள் ! காய்கறி வாங்கக் கடைக்குப் போக வேண்டும் நான். எங்கே டிரைவர் ? . . . அதுவும் நான்தான் !

எட்வேர்டு: பொறுடா ! விருந்து என்று சொல்வதற்கு முன்பே பணத்தைக் கொடு என்று முந்திக் கொள்கிறாய் ! எப்போதும் பணம், பணம், பணம்தானா ? சமையல் பதார்த்தங்கள் என்ன சமைக்க வேண்டும் என்று முதலில் சொல்கிறேன். கேள்.

வில்லியம்: ஜேகப் ! கொடுக்கும் பணத்துக்குச் சாமான் வாங்குவாயா ? அல்லது மடிக்குள் கொஞ்சம் சொருகிக் கொள்வாயா ? ஒழுங்காய்க் கணக்குச் சொல்ல வேண்டும் ! அப்படி வழக்கம் உண்டா ?

ஜேகப்: வில்லியம் ஸார் ! உங்கள் உடையை மாற்றிக் கொண்டு சமையல் அறைக்கு வாருங்கள். பணச் செலவு செய்யாமல் விருந்து பண்ணிக் காட்டுங்கள் ! நானும் கற்றுக் கொள்கிறேன்.

எட்வேர்டு: நிறுத்துடா ஜேகப் ! வில்லியத்துடன் மல்லுக்கு நிற்காதே ! வில்லியம் என் பணத்துக்குப் பாதுகாவலன். நீ போய்ச் சமையல் வேலையைக் கவனி !

ஜேகப்: எஜமான் ! எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும் ? எத்தனை ஆடவர் ? எத்தனை மாதர் ?

எட்வேர்டு: ஏன்டா ? ஆடவர், பெண்டிர் என்று பிரிவினை செய்கிறாய் ? மொத்தம் எத்தனை பேர் என்று கேள் !

ஜேகப்: எஜமான் ! ஆண்கள் தொந்தி பெரிசு ! பெண்கள் வயிறு சின்னது ! ஆண்கள் அதிகமானல் சமையல் அண்டாவைப் பெரிதாக வைக்க வேண்டும் !

எட்வேர்டு: எண்ணிக்கையைக் கேள் ! எட்டு அல்லது பத்து நபர் வரலாம் ! ஐந்து ஆண்கள், மூன்று மாதர் ! இரண்டு பேர் வருவது சந்தேகம். வந்தாலும் வரலாம். எட்டுப் பேருக்குச் சமைத்திடு. பத்துப் பேருக்கு அது வர வேண்டும்.

ஜேகப்: அதெப்படி உங்கள் கணக்கு எஜமான் ? உங்கள் படியளவில் பத்துப் பேருக்குச் சமைத்தால்தான் எட்டுப் பேராவது உண்ணலாம் ! பற்றாமல் போனால் உங்களிடம் நான் திட்டு வாங்க வேண்டும் ! மிஞ்சிப் போனாலும் நீங்கள் கண்டிப்பீர் என்னை ? பற்றாமல் திட்டு வாங்குவதா ? அல்லது உணவு மிஞ்சிப் போய் திட்டு வாங்குவதா ? எந்தத் திட்டல் கொடூரமாக இருக்கும் ?

எட்வேர்டு: பளபளக்கும் தட்டுகளில் ஐந்துவகை உணவுகள், ரோஸ்ட், சுடச் சுட சூப்புகள், மணக்கும் கோழிக்கறி, உருளைக்கிழங்கு பொடிமாஸ், மற்றும் மொரீன் பெயரை எழுதிய கேக் தயாரிக்க வேண்டும் புரிகிறதா ?

ஜேகப்: எளிய விருந்தென்று நினைத்தேன். பெரிய திட்டமாகத் தெரியுது ! எஜமான் ! எனக்கு இரண்டு துணையாட்கள் தேவை. ஆனால் இந்த சுறுசுறுப்பு வில்லியத்தை மட்டும் சமையல் அறைப் பக்கம் தலைகாட்டாது எங்காவது கட்டிப் போடுங்கள் ! சமையல் சீக்கிரம் முடியும்.

வில்லியம்: ஜேகப் ! சாமான்களைப் பாதுகாக்கும் என்னை நீ ஒதுக்குவது எனக்கு நல்லாத் தெரியுது ! உன்னைக் கண்காணிக்க ஆளிருக்கக் கூடாது. வீட்டு எலிக்குக் காட்டுப் பூனை தேவை !

எட்வேர்டு: ஆமாம் ! வில்லியம் அடுப்புக்குப் பக்கத்தில் காவல் இருப்பான் ! இல்லாவிட்டால் கேக்கில் போடும் முந்திரிப் பருப்புகளில் பாதி உன் நாக்கில் போய் விழுந்து விடும் !

ஜேகப்: எஜமான் ! என் நாக்கில் போவது கொஞ்சம்தான் ! வில்லியம் பாக்கெட்டில் போவது அதிகம் ! எலிக்கு இரண்டடி கொடுத்தால் பூனைக்கு நாலடி கொடுக்க வேண்டும் எஜமான் !

எட்வேர்டு: போய் வேலைத் தொடங்கு ! வில்லியம் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் ! அவன் தான் இந்த வீட்டுக்குப் பூட்டு ! நீ என் பணத்துக்கு வேட்டு ! நோட்டு நோட்டாய் வாங்கிக் கொண்டு போகிறாய் ! ஆனால் உன் சமையலில் உப்பில்லை, சுவையில்லை ஒன்றுமே யில்லை!

வில்லியம்: விருந்து தயாரிப்பில் உன் வித்தையைக் காட்டு, ஜேகப் ! நீ உண்பதற்குப் பிறந்தவன். ஒருவன் உண்பதற்கு வாழக் கூடாது ! வாழ்வதற்குத்தான் உண்ண வேண்டும் !

எட்வேர்டு: ஜேகப் ! சமையல்காரனை அனுப்பிவிட்டு இப்போது வண்டிக்காரனை இழுத்துவா !
மொரீனை முதலில் அழைத்து வரவேண்டும். பிறகு மொரீனையும், எலிஸபெத்தையும் கடைவீதிக்குக் கொண்டு போக வேண்டும் வண்டியில் !

ஜேகப்: சற்று பொறுங்கள் ! டிரைவர் உடையைப் போட்டுக் கொள்கிறேன். எஜமான் ! வண்டி தயாராக உள்ளது. ஆனால் குதிரைகள் தயாராக இல்லை ! அவை நோயில் ஓய்வாக உள்ளன ! எழ முடியாமல் படுத்துக் கிடக்கின்றன ! அவைகளுக்கு ஆகாரம் போதாது ! வேலை அதிகம் ! அரை வயிறு, கால் வயிறு தீவனம் ! எப்படி வண்டி இழுக்கும் ?

எட்வேர்டு: குதிரைகளுக்கு நோயா ? இதை முன்னமே ஏன் என்னிடம் சொல்லவில்லை ! என் வாகனத்தில் மொரீன் வரவேண்டும் என்ற கனவை நாசமாக்கி விட்டாய் நீ ! குதிரைகளுக்கு நோய் என்பது எனக்குத் தெரியாது ! உன் முதுகுத் தோலை உரிக்க வேண்டும் !

ஜேகப்: சரி எஜமான் ! இப்போது தெரிந்து கொண்டீர் அல்லவா ? என்ன செய்ய வேண்டும் நான் ? நம் வாகனத்தில்தான் மணப்பெண் வர வேண்டுமென்றால் வண்டியை நானும், வில்லியமும் இழுத்துச் செல்கிறோம்.

எட்வேர்டு: [கோபத்துடன்] முட்டாள் ! வண்டி இழுக்கத்தான் நீ உகந்தவன் ! நீ ஒரு பக்கம், வில்லியம் ஒரு பக்கம் இழுத்தால் வண்டிதான் உடையும் ! போ பக்கத்துப் பங்களா பண்ணையாரிடம் குதிரைகளை ஒருநாள் வாடகைக்கு எடு ! சீக்கிரம் போ !

ஜேகப்: எஜமான் ! இரு எஜமானருக்கு ஒருத்தன் பணி செய்ய முடியாதாம் ! நான் சொல்றேன் எஜமான் ! இரண்டு வேலைகளுக்கு ஒருத்தன் ஒரே சமயத்தில் பொறுப்பேற்க முடியாது ! ஒரு சம்பளத்தில் நான் இரண்டு பணி செய்கிறேன். சமையல் வேலையை முதலில் தொடங்கவா ? அல்லது வாகனத்தை ஓட்டிச் செல்லவா ? [சமையல் அறைக்கும், வாகன அறைக்கும் அலைகிறான்]

எட்வேர்டு: போடா, போ, போய் சமையல் வேலையைத் தொடங்கு ! நான் வண்டி ஓட்ட வில்லியத்தை அனுப்புகிறேன். பாதி வேலைக்கு உனக்கு முழுச் சம்பளம் கொடுக்கிறேன். மொரீன் வந்து போகட்டும். அதற்குப் பிறகு உன் முதுகு எலும்பை எண்ணுகிறேன். வில்லியம் ! பக்கத்துப் பங்களா குதிரைகளைக் கட்டி வண்டியை ஓட்டிச் செல் ! மொரீன் குடும்பத்தை அழைத்து வா ! போ சீக்கிரம் ! நான் தாடி, மீசையை நறுக்க வேண்டும் ! குளிக்க வேண்டும் ! ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் ! நேரம் போதாது ! என் தாடி, மீசையைப் பார்த்தால் மொரீன் ஓடி விடுவாள் !

[எட்வேர்டு உள்ளே விரைந்து செல்கிறார். ஜேகப் சமையல் அறைக்கும், வில்லியம் வாசலுக்கும் செல்கிறார்கள் ]

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 31, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காதல் வேட்கை போல் மென்மையான
இனிய உணர்ச்சி எதுவும் இல்லை !
நாகரீக நேசமுடன் இருவரின்
இதயங்களும் ஒன்றாகும் !
காதல் மோகம் இல்லாது போயின்
வாழ்வில் இன்பம் இல்லை !
காதல் நீக்கப் பட்டால்
களிப்பு உணர்ச்சி இழக்கப்படும் ! — (நாடகம் : செம்மையாகப் போகும் கனவான்)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 2 காட்சி 2 பாகம் 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். திருமண ஒப்பந்த மாது கிளாடியா கோமான் எட்வேர்டுடன் மணப்பெண் மொரீன் சம்பந்தமாக உரையாடுகிறாள்.

(முன்வாரத் தொடர்ச்சி)

எட்வேர்டு: (தலையைச் சொரிந்து கொண்டு) கிளாடியா ! கிளாடியா ! பெரும் புதிரைப் போடுகிறாயே கிளாடியா ! எனக்குப் புரியவில்லையே கிளாடியா ! சிக்கனப் பெண்தான் வேண்டும் எனக்கு ! ஆனால் சிக்கனப் பெண்ணும் வரும் போது வெறுங்கையை வீசிக்கொண்டு மணப்பெண்ணாய் என் வீட்டுக்குள் நுழையக் கூடாது ! நீ கூறிய வழிகளில் எப்படி ஒரு வருடத்தில் பனிரெண்டாயிரம் பவுண் சம்பாதித்துக் கொடுப்பாள் ? அவளுக்கு உண்ண ரொட்டி தர வேண்டும் நான் ! உறங்க மெத்தை தர வேண்டும் நான் ! தங்க ஓர் இல்லம் தர வேண்டும் நான் ! இதற்கெல்லாம் ஆகும் செலவில் அவள் பங்கைக் கொண்டு வர வேண்டும் அல்லவா ?

கிளாடியா: (சிரித்துக் கொண்டு) சீமானே ! உங்களுக்கு இளம் பெண்ணைப் பற்றித் தெரியாது ! ஒருமுறைத் திருமணம் ஆனாலும் நீங்கள் பிரம்மச்சாரி போலத்தான் பேசுகிறீர் ! சீர் செல்வ மெல்லாம் கொண்டுவரும் ஒரு மணப்பெண் பெருத்த செலவாளி யானால் என்ன வாகும் தெரியுமா ? உங்களைக் கடனாளி ஆக்கி மொட்டை அடித்து விடுவாள் ! மொரீன் அப்படிச் செலவாளி இல்லை ! உங்களைக் கடனாளி ஆக்க மாட்டாள் ! உங்கள் பணப்பெட்டிச் சாவியைத் தைரியமாக நம்பி அவள் கையில் கொடுக்கலாம் !

எட்வேர்டு: கிளாடியா ! நான் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையே ! இளம் மனைவிக்கு நான் உணவு, உடை, இருப்பிடம், ஒப்பனை எல்லாம் அளிக்க வேண்டாமா ? அதற்காவது அவள் பிறந்த
வீட்டிலிருந்து கணவன் இல்லத்துக்குப் பணம் அவசியம் கொண்டு வர வேண்டும் !

கிளாடியா: நாய்க்குட்டியை வாங்கப் போகும் ஒருவர் அதன் பராமரிப்புச் செல்வை நாயிடமா எதிர்பார்ப்பார் ? வேடிக்கையாக இருக்கிறது உங்கள் வாதம் ! ஒருத்தி செலவழிக்கக் கொண்டு வரும் செல்வத்தை விட, சிக்கனமாய்ச் சேர்க்கும் செல்வமே நீடித்துப் பெருகுவது !

எட்வேர்டு: கிளாடியா ! நீ குறிப்பிடும் பணம் மெய்யான செல்வம் அல்ல ! அது போலிச் செல்வம் ! கண்ணில் தெரியாத செல்வம் ! கண்ணில் காணும் செல்வம் வேண்டும் எனக்கு ! கையில் எண்ணிப் பார்க்கும் செல்வம் வேண்டும் எனக்கு ! பெட்டியில் பூட்டி வைக்கும் பணம் வேண்டும் ! மனக் கணக்கில் கூட்டிப் பெருக்கும் செல்வம் பொய்யானது, வடிவில்லாதது ! நீ சொல்லும் சீர்வரிசை கேலியாகத் தெரிகிறது ! கையில் கிடைக்காத சீர்வரிசைக்கு நான் அங்கீகாரம் தர முடியாது ! அவள் கொண்டு வரும் செல்வத்தை என் கைவிரல்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது வரதட்சணை ஆகாது ! அது வராத தட்சணையே !

கிளாடியா: மிஸ்டர் எட்வேர்டு ! மொரீன் விசயத்தில் வராத தட்சணையே வரும் தட்சணையை விடப் பேரளவானது ! இதை நான் எப்படி இன்னும் விளக்குவது என்று தெரியவில்லை ! . . . சொல்ல மறந்து விட்டேன் ! மொரீன் அன்னை சொன்னார் ! அன்னிய நாட்டில் அவருக்குச் சொத்து உள்ளதாம். திருமணத்தில் அந்தச் சொத்து உமது பெயரில் எழுதப்படும் ! அந்த விபரத்தை அறிந்து வருகிறேன்.

எட்வேர்டு: [மகிழ்ச்சியுடன்] அப்படியா ? என்ன சொத்து ? எவ்வளவு சொத்து ? எங்கே இருக்கிறது ? முதலில் எனக்கு அது தெரிந்தாக வேண்டும். அடுத்தொரு விசயம் என்னைக் குடைந்து கொண்டு வருகிறது ! மொரீன் ஓர் இளங் குமரி ! என் வயதுக்கும் அவள் வயதுக்கும் அடிக்கடிச் சண்டைகள் மூளும் ! அவற்றை எப்படிக் கையாளுவது ? அவள் புதிய பறவை ! நானொரு முதிய பறவை ! அவள் மேகத்தில் பறக்கும் போது, நான் பூமியில் நடந்து செல்வேன் ! அவளோடு நான் பறக்க முடியாது ! என்னோடு அவள் நடக்க முடியாது ! மேலும் என் மாளிகையில் வாலிபக் குமரன் ஒருவன் இருக்கிறான், என் மகன் ! என்னை மணந்த மொரீனின் பார்வை மகன் மீது பாய்ந்தால் என் மனம் கோணிப் போகும் ! எனக்கு மொரீன் மீது காதல் ! மொரீனுக்கு என் மகன் மீது காதலாகி விட்டால், நான் அதை எப்படி அனுமதிப்பேன் ?

கிளாடியா: மிஸ்டர் எட்வேர்டு ! மொரீனை உமக்கு மண முடிப்பது என் பணி ! அவளது மனதையும் கண்ணையும் கட்டிப் போட வேண்டியது என் வேலையில்லை ! உமது வேலை ! திருமணக் முடிந்ததும் முடியும் என் வேலை ! அதற்குப் பிறகு எழும் பிரச்சனையை எதிர்கொள்வது உமது வேலை ! அறுபது வயது கிழவர் இருபது வயதுக் கன்னியைக் கட்டினால் இரவும் பகலும் கூண்டுக் கிளியாய் அடைத்து, அவளைக் காக்க வேண்டியது உமது கடன் !

எட்வேர்டு: (கோபமாக) அந்தக் கடன் வேறா ? வெறுங்கையை வீசிக் கொண்டுவரும் ஒரு வனிதாமணியைக் காத்திடக் காவலுக்கு ஒருத்தியை நான் வைக்க வேண்டுமா ? நல்ல வேடிக்கை ! அது எனக்குத் தேவையற்ற உபரிச் செலவு அல்லவா ?

கிளாடியா: கவலைப் பாடாதீர் ! மொரீனுக்கு வாலிபர் மேல் ஆசை இல்லை ! வாலிபரைக் கண்டால் அறவே வெறுப்பவள் அவள் ! முதியோர் மீது அவளுக்கு மதிப்பு மிகுதி ! மன முதிர்ச்சி இல்லாத இளைய தலைமுறைகளைக் காணச் சகியாதவள் அவள் ! உங்களுக்கு அறுபது வயது என்று நான் சொன்னதும், மொரீனின் விழிகள் எப்படி மிளிர்ந்தன தெரியுமா ?

எட்வேர்டு: அப்படியா ? மொரீன் என்னைப் பார்த்ததில்லையோ ?

கிளாடியா: அவள் பார்த்த மாதிரி காட்டிக் கொள்ள வில்லை. உங்கள் வடிவத்தை நான் தாளில் வரைந்து காட்டினேன் ! வைத்த கண் வாங்காமல் அப்படியே சிலையாக நின்றாள் !

எட்வேர்டு: நான் அப்படிக் கவர்ச்சியாக இருக்கிறேனா ?

கிளாடியா: என்ன கேள்வி இது ? ஓவியர் தீட்டும் ஒப்பனை முகமல்லவா உங்கள் முகம் ! கம்பீர நடையைக் கண்டு கன்னி எவளும் மயங்கி மடியில் விழ மாட்டாளா ? முதுமையில் உங்களுக்கு வாலிபம் மீள்கிறது ! என் கண்கள் அந்த வாலிப வடிவைத்தான் காண்கின்றன !

எட்வேர்டு: [சிரித்துக் கொண்டு] வாலிபம் எனக்கு மீள்கிறதா ? அப்படியானால் எனக்கு ஒரு மாது போதுமா ? [லொக் லொக்கென்று இருமுகிறார்] . . . எனக்கு எப்போதும் இதுபோல் இருமல் வராது ! எனக்கு வாலிபம் மீளுது என்று நீ சொல்லியதும் இருமல் எட்டிப் பார்க்குதே ! எப்போதாவது இப்படி இருமல் வரும் ! போகும் ! இதை யெல்லாம் பெண்வீட்டாரிடம் சொல்லாதே கிளாடியா !
சின்ன விசயம் இது ! சில சமயம் தும்மல் வரும் ! எனக்கது இருமலா அல்லது தும்மலா என்று கூடத் தெரியாது !

கிளாடியா: நானிதைச் சொல்வேனா ? உங்களுக்கு இருமல் உண்டு என்று சொல்ல மாட்டேன். தும்மல், இருமல், விக்கல் இல்லாதவர் யார் ? . . . ஆயினும் நீங்கள் இந்த பயங்கர இருமலுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

எட்வேர்டு: (பெரு மகிழ்ச்சியுடன்) நீ சாமர்த்தியக்காரி கிளாடியா ! இந்த சம்பந்தத்தை நிச்சயம் செய்யும் உனக்கு நான் வெகுமதி அளிக்க வேண்டும் ! நன்றி கிளாடியா ! நீ சொல்வதுபோல் நான் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் ! இளங்குமரிக்கு நான் ஈடு கொடுக்க வேண்டுமல்லவா ?

கிளாடியா: (கவனமாக) நன்றி மிஸ்டர் எட்வேர்டு. இதை எப்படி உங்களிடம் கேட்பது என்று நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். என்மேல் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நான் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் நான் வெல்ல வேண்டும். அல்லது பெருங் கடனில் நான் வீழ்ந்து மீள முடியாதபடி ஆழ்ந்து விடுவேன். அதற்கு நிதி உடனே தேவைப்படுகிறது. நீங்கள் உதவினால் நான் பிழைத்துக் கொள்வேன். (எட்வேர்டு உதட்டைப் பிதுக்குகிறார்) உங்களைப் பற்றி மறுபடியும் மொரீனிடம் சொல்லி விட்டுத்தான் போவேன். அன்னிய நாட்டுச் சொத்தைப் பற்றி அவரிடம் மறக்காமல் கேட்பேன். (எட்வேர்டு முகத்தில் புன்முறுவல்). உங்கள் பண உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன் (எட்வேர்டு உதட்டைப் பிதுக்குகிறார்).

எட்வேர்டு: என் இதயத்தில் இன்று தேனருவி பாயச் செய்து விட்டாய் கிளாடியா ? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் போதாது ! வழக்கறிஞர் நிதிச் செலவைத் தருவது போதாது ! அதற்கும் மேலாகச் செய்ய வேண்டும் நான் உனக்கு !

கிளாடியா: உங்களுக்குத் திருமணச் செலவு வரப் போகுது. நான் பெரும் தொகை கேட்க வில்லை ! எனக்குச் சிறிதளவு தொகை போதும். பெரும் சன்மானத்தை நான் எதிர்பார்க்க வில்லை ! இப்போது கொடுத்தால் உங்கள் மனம் பெரியது ! (எட்வேர்டு உதட்டைப் பிதுக்குகிறார்).

எட்வேர்டு: (கிளாடியாவைப் பார்க்காமல்) திருமணம் முடியட்டும் கிளாடியா ! முன்பணம் யாருக்கும் தரும் வழக்கமில்லை ! திரும்பி வராத பணத்தைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும் ! நானோ முதியவன் ! பெண்ணோ இளையவள் ! திருமணம் நடக்குமோ நடக்காமல் போகுமோ ? யார் சொல்ல முடியும் ? போய்வா கிளாடியா ? எனக்கு வேலை தலைக்கு மேலே இருக்குது ! மறுபடியும் இங்கே வா !

கிளாடியா: திருமணம் நடப்பது உறுதி ! நான் உங்களுக்குச் சிரமம் தரமாட்டேன் ஸார் ! சிறு உதவி பெரும் வெகுமதி ! கேட்பதை மறுக்காதீர் கோமானே ! நீவீர் கோடீஸ்வரர் ! உங்கள் மனம் தங்க மனம் ! உங்கள் மாளிகை பெரியது ! உங்கள் உள்ளம் அதை விடப் பெரியது !

எட்வேர்டு: (வெளியே திரும்பி) யாரோ என்னை அழைக்கிறார் ! நான் போக வேண்டும் ! பிறகு பார்க்கலாம் !

(எர்வேர்டு வேகமாக வெளியேறுகிறார்)

கிளாடியா: (கையை மேலே காட்டிக் கோபத்துடன்) கடவுளே ! ஒரு கொள்ளை நோய் வந்து இந்த மனிதனைக் கொண்டு போகாதா ? வீட்டை வெள்ளம் அடித்துக் கொண்டு போகாதா ? பேயடித்து இவனைப் பித்தன் ஆக்காதா ? கோமானே ! எனக்கு நீ தராவிட்டால் என்ன ? எத்தனையோ பேர் இருக்கிறார். மணப் பெண் வீட்டில் கேட்டு சன்மானம் வாங்கிக் கொள்கிறேன்.

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 25, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காதலிக்கும் மாதரின் பேதளிக்கும் இதயம்
கணக்கிலா முறையில் கவலை உட்பட்டுக்
காதலுக்கு இரையாகிப் போகும் !
பேச்செல்லாம் எமது இனிய
வேதனை பற்றி இருக்கும் ! பெரு
மூச்சைப் பற்றியும் இருக்கும் !
என்ன சொல்லிப் போனாலும்
விட்டு விடுதலை ஆவதுபோல்
இனிமை தருவ தெதுவும் இல்லை ! — (நாடகம் : செம்மையாகப் போகும் கனவான்)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 2 காட்சி 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். வேலைக்காரன் வின்சென்டு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். அப்போது திருமண ஒப்பந்த மாது கிளாடியா உள்ளே நுழைகிறாள்.

கிளாடியா: (உள்ளே புகுந்து கதவைத் தட்டி) ஹலோ ! கனவான் எட்வேர்டு இருக்கிறாரா ?

வின்சென்ட்: (துடைப்பதை நிறுத்தி வாசல்புறம் நோக்கி) மேடம், யார் நீங்கள் ? டிப் டாப்பா ஆடை அணிந்து விருந்துக்கு வந்த கோமகளைப் போல் தோன்றுகிறீர் ! வாருங்கள் உள்ளே ! அமருங்கள் இங்கே !

கிளாடியா: (நாற்காலியில் அமர்ந்த வண்ணம்) மிக்க நன்றி ! நான் விருந்துக்கு வரவில்லை ! வீட்டு எஜமானரைத் தனியே சந்திக்க வந்திருக்கிறேன் !

வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) ஓ ! . தனியே சந்திக்கவா ? . . அதற்கா . . . வந்துள்ளீர் ?

கிளாடியா: (புன்னகையுடன்) . . நீ நினைக்கும் அந்த . . சந்திப்புக்கு நான் வரவில்லை !

வின்சென்ட்: அழகாக இருக்கும் நீங்கள் புதிராகப் பேசுகிறீர் ! பிறகு எதற்கு வந்தீராம் ? யார் உம்மை அழைத்தது ? இத்தனை அழகான ஒரு மாது எங்கள் எஜமானரைத் தனியே ஏன் பார்க்க வேண்டும் ?

கிளாடியா: கனவான் எட்வேர்டுக்குக் கன்னிப்பெண் பார்த்து வந்திருக்கிறேன் ! என் தொழிலே அதுதானே ! பெண் வீட்டைத் தேடுவேன் ! பின்னந்தத் தகவலைத் தெரிவிப்பேன் ! மாப்பிள்ளை
வீட்டார் பதிலை எடுத்துச் செல்வேன் ! என்னைப் போன்ற மாதருக் கெல்லாம் இறைவன் இந்த மாதிரி வேலையைத்தான் கொடுத்திருக்கிறான்.

வின்சென்ட்: (ஆர்வமுடன்) வீடு துடைப்பதை விட இது நல்ல வேலை ஆயிற்றே ! . . . . அது சரி ! எனக்கொரு பெண் வேண்டும், பார்த்துச் சொல்வாயா ?

கிளாடியா: (சற்று சினத்துடன்) செல்வந்தருக்குப் பெண்ணமைக்கவே நேரமில்லை எனக்கு ! மேலும் ஊழியர் சம்பாதிக்கும் பணம் என் கூலிக்குப் போதாது !

வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) நீ கேட்கும் பணத்தை நான் கொடுக்க முடிந்தால் !

கிளாடியா: நான் பெரும் செல்வந்தருக்குப் பெரிய மீனைப் பிடிப்பவள் ! எனது வலை பெரியது ! அதில் சின்ன மீன்களைப் பிடிக்க முடியாது ! . . . ஆமாம், உங்கள் எஜமானர் எப்படி ? பெரும் புள்ளியா ? சிறு புள்ளியா அல்லது இரண்டு மில்லாத இடைப் புள்ளியா ?

வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) கரும்புள்ளி எங்கள் எஜமானர் ! கோபுரத்தின் மேலிருக்கும் கோமகனார்தான் ! ஆனால் காசு, பணம் என்றால் அடிவாரத்துக்கு வந்து விடுவார் !

கிளாடியா: நான் கொண்டு வந்திருக்கும் செய்தி அவர் காதில் தேனை ஊற்றுவது ! அவரை எப்படிக் கைவசப்படுத்துவது என்பது நன்றாகத் தெரியும் !

வின்சென்ட்: எஜமான் ஒரு கொடாக் கண்டன் ! மகுடி ஊதி அந்த பாம்பை ஆட வைப்பது அத்தனை சுலபமல்ல !

கிளாடியா: பார் ! அவரைப் பம்பரமாக நான் எப்படி ஆட்டப் போகிறேன் என்பதை !

வின்சென்ட்: (அரவம் கேட்டு) யாரோ வரும் சத்தம் கேட்கிறது ! ஒருவேளை எஜமானராக இருக்கலாம். நான் உள்ளே போகிறேன் ! என்னைக் கண்டால் இரண்டாகப் பிளந்து விடுவார் !

கிளாடியா: ஹலோ மிஸ்டர் ! நில்லப்பா ! உனக்குப் பெண்பார்த்தால் எனக்கு என்ன தருவாய் ? சொல்லி விட்டுப் போ !

(எட்வேர்டு நுழைகிறார். வின்சென்ட் விரைவாகப் பின்வாசல் வழியே ஓடி மறைகிறான்)

எட்வேர்டு: (கிளாடியாவைப் பார்த்து) வருக, வருக என்னருமைக் கிளாடியா ! நல்ல செய்தியா ? பொல்லாத செய்தியா ?

கிளாடியா: (சிரித்துக் கொண்டு) இன்று நீங்கள் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றுகிறீர் ! உங்கள் உடல்நலத் தெளிவு பளிச்செனத் தெரியுது பார்ப்போருக்கு !

எட்வேர்டு: (முகம் மலர) யார் ? நானா ? அப்படியா தோன்றுகிறேன் ! உண்மையாகவா ?

கிளாடியா: உண்மையாகத்தான். இப்போது இளமையாக உள்ளதுபோல் எப்போதும் நீங்கள் இருந்தது கிடையாது ! நாற்பது வயதில் நரைத்துத் தள்ளாடும் வாலிபரைதான் நான் சந்திக்கிறேன். அறுபது வயதுடைய உங்களை விட அவரெல்லாம் முதியவராய் முதுகு கூனித் தோன்றுகிறார் !

எட்வேர்டு: (வெட்கமுடன்) கிளாடியா ! நான் அறுபதைக் கடந்து விட்டேன் ! ஆனால் எழுபதைத் தொடவில்லை ! அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட வயது ! அறுபத்தி நான்கு !

கிளாடியா: அப்படி எனக்குத் தோன்றவில்லை ! அறுபத்தி நாலைத் திருப்பிப் போட்டால் என்ன வரும் ? நாற்பத்தி ஆறு ! அதுதான் உங்கள் வயது என்று சொல்வேன் நான் ! அப்படித்தான் பெண் வீட்டாரிடம் சொல்லி இருக்கிறேன். எங்கே உங்கள் கையைக் காட்டுங்கள் ? (எட்வேர்டு வலது கையைப் பற்றி) அடே அப்பா ! நீளமான வாழ்க்கை ரேகை ! குறைந்தது நூறு வயது வரை வாழ்வீர் ! நூற்றி ஐந்தைக் கூடத் தொடாலாம் ! அடடா ! காதல் மேடு எப்படி உப்பி உள்ளது பார்த்தீரா ? மங்காத தாகம் ! பொங்கும் போகம் !

எட்வேர்டு: எங்கே ? எங்கே ? காட்டு. (ரேகைகளைக் காட்டுகிறாள்) அதற்கு விளக்கம் என்ன ?

கிளாடியா: உங்களுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்ல ! நீண்ட இல்வாழ்கையும் தெரியுது ! பொங்கிப் பூத்திடும் தாம்பத்தியம் காணுது ! போக வாழ்க்கை மீண்டும் பூக்குது ! புது மணப்பெண் வாசலில் நிற்கிறாள் !

எட்வேர்டு: (பூரித்துப் போய் வெளியே எட்டிப் பார்த்து) பெண்ணைக் கையோடு அழைத்து வந்து விட்டாயா ?

கிளாடியா: இல்லை ! அப்படி உங்கள் கைரேகை சொல்லுது !

எட்வேர்டு: என் கைரேகையே களிப்பான மணவாழ்வைக் காட்டுதா ? . . . அதெல்லாம் சரி ! போன காரியம் வெற்றியா ? பெண்ணுக்கு என்னைப் பிடிக்கிறதா ? என்னைப் பற்றி என்ன கேட்டாள் உன்னிடம் ? தாயிக்குச் சம்மதமா ?

கிளாடியா: சம்மதம் பெறாமல் விடுவேனா ? நான் யார் தெரியுமா ? பலே கைக்காரி இந்தப் பணியில் ! நினைப்பதைச் சாதிப்பவள் ! என் திறமை யாருக்கும் தெரியாது ! எனக்கே தெரியாது ! இணை சேர்க்கிறதிலே யாரும் என்னை மிஞ்ச முடியாது ! எந்த இரண்டு பேருக்கும் பந்தம் உண்டாக்கி விடுவேன் ! எந்த இரண்டு பேருக்கும் பிரிவை உண்டாக்கி விடுவேன் ! நான் பெண்ணோட அம்மாவிடம் உங்களைப் பற்றி ஒரு மணிநேரம் பேசினேன். மொரீனை மணந்தால் என்ன என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர் என்று பொழிந்து தள்ளி விட்டேன் ! பெண் வீட்டு வீதியில் நீங்கள் போனதையும், பலகணி வழியே மொரீனைப் பார்த்ததையும் கூறினேன் ! ஒருநாள் கன்னி மொரீன் உங்கள் கனவில் வந்ததையும், நீங்கள் அவளது கரத்தைப் பிடித்ததையும் நான் சொல்லி இருக்கிறேன்.

எட்வேர்டு: (சற்று சிந்தித்து) கிளாடியா ! நான் அப்படிக் கனா கண்டதில்லையே ! அப்படிக் கண்டாலும் என் கனா உனக்கு எப்படித் தெரிந்தது ?

கிளாடியா: அதுதான் என் திறமை ! என் உள்ளக் கண்ணாடித் தெரிசனத்தில் இவை எல்லாம் தெரியும் ! என் மனதில் வெளிப்பட்டதை எல்லாம் கொட்டிக் குவித்து விடுவேன் ! எட்வேர்டுக்கு ஜோடி மொரீன் ! மொரீனுக்கு இணை எட்வேர்டு ! அப்படி நான் தீர்மானித்து விட்டால் இவை எல்லாம் தானாக என் மனத் திரையில் தெரிகின்றன ! நான் சொன்னதை எல்லாம் தாயும், மகளும் நன்றாகக் காது கொடுத்துக் கேட்டார்கள்.

எட்வேர்டு: முடிவில் என்ன நடந்தது ? மொரீன் என்னை மணந்து கொள்ள விரும்புகிறாளா ?

கிளாடியா: இந்த சம்பந்தத்தை அவர்கள் வரவேற்கிறார். அதில் சற்றும் ஐயமில்லை. இன்றிரவு உங்கள் மாளிகையில் திருமண ஒப்பந்தம் கையெழுத்திடும் போது, மொரீனும் அருகில் இருக்க வேண்டும் என்று சொல்லும் சமயத்தில் தாய் உடன்பட்டாள் ! என்னை நம்பி மகளை என்னுடன் பேச அனுமதித்தாள்.

எட்வேர்டு: மிக்க மகிழ்ச்சி கிளாடியா. நான் திருவாளர் ஆப்ரஹாம் அவர்களுக்கு விருந்தளிக்கும் போது, உடன் மொரீனும் வர வேண்டுமென ஆசைப் படுகிறேன். ஏற்பாடு செய்வாயா ?

கிளாடியா: அதுவும் நல்ல விருப்பம்தான். முதலில் மொரீன் உமது மகள் எலிஸபெத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் ! பிறகு மொரீன் சந்தைக் கடைக்குப் போக வேண்டுமாம். அப்புறம் மாளிகை விருந்தில் அவள் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.

எட்வேர்டு: நான் என் வண்டியை அனுப்புகிறேன் மொரீனை அழைத்து வர ! அதிலே அவள் சந்தைக் கடைக்கும் போகலாம். விருந்துக்கும் வரலாம்.

கிளாடியா: அது சரி நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர் பெண் வீட்டாரிடம் ?

எட்வேர்டு: கிளாடியா ! அதைப் பற்றி மொரீன் தாயிடம் பேசினாயா ? திருமணச் சீர்வரிசையில் பெண்ணுக்கு என்ன என்ன செய்வார் என்று மறக்காமல் கேட்டாயா ? வெறுங்கையுடன் மணப்பெண் வீட்டுக்குள் வரக்கூடாது ! ஏதாவது புதுமனைக்குக் கொண்டு வரவேண்டும் அல்லவா ? ஒன்றும் இல்லாத மாதை ஓர் ஆடவன் எப்படி மணப்பான் இந்த காலத்தில் ?

கிளாடியா: என்ன ? ஒன்று மில்லாத ஒருத்தியையா உமக்குக் கொண்டு வருவேன் ? கேளுங்கள் ! ஓராண்டுக்கு பனிரெண்டாயிரம் டாலர் கொண்டு வரும் பெண்டல்லவா மொரீன் ?

எட்வேர்டு: பனிரெண்டாயிரம் டாலரா ஆண்டுக்கு ! எப்படி முடியுது அது ? பெண் எங்காவது வேலை செய்கிறாளா ?

கிளாடியா: வெளியில் போகாமல் வீட்டில் இருந்து கொண்டே சம்பாதித்துக் கொடுப்பாள் உமக்கு ! எப்படித் தெரியுமா ? பெண் மிகவும் சிக்கனம் ! உடுத்துவது எளிய உடை ! உண்பது எளிய உணவு ! அறவே ஆடம்பரத்தை வெறுப்பவள் ! நூறு சதம் ஏற்றவள் உமக்கு ! எதையும் வீணாக்க மாட்டாள் ! உடைகள் கிழித்தால் உடனே தைத்து உடுத்துவாள் ! புதிய ஆடை வாங்கும்படி ஒருநாளும் உம்மைத் தொந்தரவு செய்ய மாட்டாள் ! அவளை மணப்பதால் உமக்கு கோடிப் பணம் மிச்சம் ! ஒரு செலவையும் இழுத்துவிட மாட்டாள் ! நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அத்தகைய புனித மாதை மணம்புரிய !

எட்வேர்டு: [தலையைச் சொரிந்து கொண்டு] கிளாடியா ! கிளாடியா ! பெரும் புதிரைப் போடுகிறாயே கிளாடியா ! எனக்குப் புரியவில்லையே கிளாடியா ! சிக்கனப் பெண்தான் வேண்டும் எனக்கு ! ஆனால் சிக்கனப் பெண்ணும் வரும் போது வெறுங்கையை வீசிக்கொண்டு மணப்பெண்ணாய் வரக் கூடாது ! நீ கூறிய முறைகளில் எப்படி ஒரு வருடத்தில் பனிரெண்டாயிரம் சம்பாதித்துக் கொடுப்பாள் ? அவளுக்கு நான் உண்ண ரொட்டி தர வேண்டும் ! உறங்க மெத்தை தர வேண்டும் ! தங்க ஓர் இல்லம் தர வேண்டும் ! இதற்கெல்லாம் ஆகும் செலவில் அவள் பங்கைக் கொண்டு வர வேண்டும் அல்லவா ?

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 18, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இரவும் பகலும் எனக்கு மனவேதனை !
அடிமைப் படுத்தும் நீ
கொடுமைப் படுத்துவாய் என்னை !
உன்மேல் நேசம் கொண்ட
ஒருவனை
இப்படி வாதனை புரிந்தால் நீ
எப்படிப் பகைவனை வதைப்பாய் ? – (நாடகம் : செம்மையாகப் போகும் கனவான்)

என் சின்னஞ் சிறு செல்வி !
இன்சுவை நியாய நாயகி !
சின்னஞ் சிறு செல்வி
செம்மறி ஆடு நீயென
நம்புவேன் ! அந்தோ !
அவளை போல் ஒருத்தி உண்டோ ?
எங்குமே இல்லை
அவளைப் போலொரு கொடூர
வனதை !
புலியை விடக் கொடியவள் ! – (நாடகம் : செம்மையாகப் போகும் கனவான்)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 2 காட்சி 1 பாகம் 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். வேலைக்காரன் வின்சென்டுடன் எட்வேர்டின் மகன் கிரஹாம் வீட்டுக்குள் உரையாடிக் கொண்டுள்ள போது, முன் வாசலில் எட்வேர்டும் புரோக்கர் சைமனும் பேசிக் கொண்டே நுழைகிறார்கள்.

சைமன்: ஆமாம் ஸார் ! வாலிபர்தான் அவர் ! அவருக்குப் பணம் தேவை ! நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் ! அவர் என்மூலம் கடன் வாங்க வேண்டும் என்றோர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ! அதற்குரிய நிபந்தனைகளுக்கு உடன்பட்டிருக்கிறார் !

எட்வேர்டு: நிச்சயமாகச் சொல்கிறீரா ? உமது வாடிக்கைக்காரர் ஊர், பெயர், குடும்பம், முகவரி எல்லாம் தெரியுமா ? ஒத்திக்கு வைக்கச் சொத்து நில புலங்கள் உள்ளனவா ?

சைமன்: உறுதியாகச் சொல்ல முடியாது ! தற்செயலாக அவரது நிதித்தேவை என் காதில் விழுந்தது ! அவரது வேலையாள் என்னை அண்டினான் ! அவனது எஜமானர் நெருக்கடியை விளக்கினார் ! வாலிபர் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தாயார் மரித்து விட்டதாகவும் அறிந்தேன். அதனால் அவருக்குக் கடன் தருவதில் சிக்கல், சிரமமில்லை !

எட்வேர்டு: நல்லது. உமது வாடிக்கைக்காரருக்கு உதவி செய்வதுதானே உமது தொழில் ! தாராளமாய்க் கொடுங்கள். பூரண திருப்தி எனக்கு !

[ஓரத்தில் ஒதுங்கிச் சற்று மறைவாக நிற்கும் வேலைக்காரன் வின்சென்ட் மெதுவாக கிரஹாமிடம் பேசுகிறான்]

வின்சென்ட்: (மெதுவாக) சைமனிடம் என்ன பேசுகிறார் உங்கள் தந்தை ? எனக்குப் புரியவில்லை ! முழு விபரம் அறியாது பூரண திருப்தி என்று முத்திரை குத்தி விட்டார் !

கிரஹாம்: (மெதுவாக) நான் யாரென்று எவராவது சைமனுக்குச் சொல்லியதுண்டா ? எனக்குக் குழம்புகிறது ! நீ காரியத்தைக் கெடுத்து விட்டாயா ?

சைமன்: (பின்னால் நிற்கும் கிரஹாமையும், வின்சென்டையும் திரும்பிப் பார்த்து) உனக்குப் பண நெருக்கடி அப்படி உண்டாகி விட்டதா ? இதுதான் அந்த ஒத்தி வீடு என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை ! உங்கள் பெயரையோ அல்லது இல்லத்தையோ நான் யாரிடமும் சொல்ல வில்லை. சொல்லியதாலும் எந்தக் தீங்கும் நேரவில்லை ! (எட்வேர்டைப் பார்த்து) ஒத்துப் போகும் நபர்கள் இவர்கள். இவர்கள் முன்னிலையிலே பேசி முடித்துக் கொள்ளலாம்.

எட்வேர்டு: என்ன சைமன் சொல்கிறாய் ?

சைமன்: (கிரஹாமைக் காட்டி) நான் குறிப்பிட்ட நபர் இவர்தான் ! இந்த வாலிபருக்குத்தான் பதினையாயிரம் பவுண் கடன் கொடுக்கப் போவதவாக நான் உம்மிடம் கூறினேன் !

எட்வேர்டு: (கோபமாக கிரஹாமைச் சுட்டிக் காட்டி ) இந்த அயோக்கியனா உம்மிடம் கடன் கேட்டது ? வருவாய் இல்லாத இந்த வாலிபனுக்கா பதினைந்தாயிரம் பவுண் கொடுக்கப் போகிறீர் ? நல்ல வேடிக்கை இது ! எனக்குத் தெரியாமல் போச்சே ! (மகனைப் பார்த்து) அறிவு கெட்டவனே ! என்னிடம் சொல்லாது நீ கடனா வாங்க முயல்கிறாய் ? இப்போது எனக்குத் தெரியாமல் என் மாளிகையை ஒத்திக்கு வைக்க முனைந்து விட்டாய் ! இப்படி இரகசியமா கடன் வாங்கியா நீ பிழைக்க வேண்டும் ?

கிரஹாம்: (வெடுக்கென) நீங்கள்தான் இரகசியமா பணம் திரட்டும் ஆசாமி ! நெஞ்சில் கைவைத்துப் பேசுங்கள் !

எட்வேர்டு: நீதான் என் இல்லத்தின் மேல் கடன் வாங்கி என்னைக் குழியில் தள்ளத் தயாராகி விட்டாய் ! யாரைக் கேட்டு கடன் வாங்கத் துணிந்தாய் ? யாரைக் கேட்டு என் மாளிகையை அடகு வைக்க முனைந்தாய் !

கிரஹாம்: நீங்கள்தான் கள்ள வாணிபம் செய்து கோடி கோடியாய்ப் பணம் திரட்டி யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்திருக்கிறீர் ! பொன்னும் பொருளும் யாருக்காக சேமித்துள்ளீர் என்று எனக்குத் தெரியாது ! உங்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லத்தான் கடன் வாங்கத் துணிந்தேன்.

எட்வேர்டு: என் மாளிகையை எப்படி நீ அடகு வைக்கத் திட்டமிட்டாய் ? இப்படி என்னை மற்றவருக்குக் காட்டிக் கொடுத்து நீ இந்த மாளிகையில் வாழக் கூடாது ! போ இந்த வீட்டை விட்டுப் போய்விடு ! என் மூஞ்சில் இனி விழிக்காதே நீ ! கண்காணாத இடத்துக்கு ஓடிவிடு !

கிரஹாம்: நானும் உங்களை விட்டு ஓடத்தான் தருணம் பார்த்திருந்தேன் ! நீங்களே பச்சைக் கொடி காட்டி விட்டீர் ! போகிறேன் ! ஆனால் என்னைத் தேடி ஆள் அனுப்பாதீர் ! எங்கே ஓடிவிட்டேன் என்று எனது இருக்கையைத் தேடாதீர் ! என் தாய் இருந்தால் இப்படி நீங்கள் என்னைத் துரத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பாளா ? இப்போது என் தாய் இருந்த இடத்தில் யாரோ ஓர் இளைய மங்கையை அடைத்துப் போடத் திட்டமிடுகிறீர் ! அந்தக் கோர காட்சியை என் கண்கள் காணக் கூடாது ! போகிறேன் நான் ! உங்கள் திருமணத்துக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். அழைப்பு வந்தாலும் நான் மீண்டும் இந்த வீட்டுத் தலைவாசலில் கால்வைக்கப் போவதில்லை ! போகிறேன் அப்பா போகிறேன் ! ஆனந்தமாகப் புது மங்கையுடன் வாழுங்கள் !

(கோபமாக கிரஹாம் வீட்டை விட்டு வெளியேறுகிறான். கூடவே வேலைக்காரன் வின்சென்டும் போகிறான். சைமன் என்ன செய்வ தென்று அறியாமல் விழிக்கிறான்.)

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 9, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நமது சுய உந்தலில் நாம் நடக்கிறோம் !
உனது உன்னத மேதமைத் தன்மை
வேதாந்த உச்சியில் உன்னை
உலாவிடும்
விடுதலைப் பெண்ணாய் ஆக்குது !
எந்தன் ஏழ்மை மனது
இந்தக் கீழான பூமியில்
என்னைத்
திருமணப் பந்தத்தில் தள்ளும் !
அந்த மண்வாசப் பூரிப்பில்
திளைத்திடச் செய்யும் !
அப்படி வேறு பட்டாலும்,
நம் அன்னைக்கு நாமிருவரும்
ஒப்பாக உள்ளோம் !
உன் ஆத்மா தாயைப் போல்வது,
மேதமைச் செல்வாக்குடன் !
ஆனால்
என் மனம் தாயைப் போல்வது
கொடூர இன்பத்துடன் !
தாயின் ஒளிவீசும் பழக்கனி நீ !
உள்ளக் கனி நீ !
நானோ வெறும்
பொருள் இச்சைக்காரி ! (நாடகம் : படித்த மாதர்கள்)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 2 காட்சி 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். வேலைக்காரன் வின்சென்டுடன் எட்வேர்டின் மகன் கிரஹாம் உரையாடிக் கொண்டிருக்கிறான்.

கிரஹாம்: (வீட்டுக்குள் நுழைந்து தேடியபடி) வின்சென்ட் ! அடே வின்சென்ட் ! எங்கே போய்த் தொலைந்தாய் ?

வின்சென்ட்: (வேகமாய் ஓடிவந்து) ஐயா ! இதோ வந்து விட்டேன் !

கிரஹாம்: உன்னை இங்கு காத்திருக்கச் சொன்னேன் ! நீயேன் போனாய் வெளியே ?

வின்சென்ட்: நான் மாளிகையில்தான் காத்திருந்தேன், என்னை விரட்டி விட்டவர் வீட்டு எஜமானர் உங்கள் தந்தை ! போகா விட்டால் உதைப்பேன் என்று கையை ஓங்கினார் ! அடிக்குப் பயந்துதான் அடியேன் ஓடினேன் ! வீட்டை விட்டே வெளியேற வேண்டிய தாயிற்று !

கிரஹாம்: நானும் வீட்டை விட்டு ஓடும் காலம் வந்து விட்டது வின்சென்ட் !

வின்சென்ட்: ஐயா ! அப்படியென்றால் என் வேலை போகும் காலமும் வந்து விட்டதா ? நீங்கள் ஏன் வெளியேற வேண்டும் இப்போது ?

கிரஹாம்: எனக்குப் போட்டியாக என் தந்தை வந்துவிட்டார் தெரியுமா ?

வின்சென்ட்: என்ன ? காதல் பிரச்சனை தானே ! போயும், போயும் உங்கள் தந்தைக்கு இந்த வயதில் காதல் பித்தா ? அவருக்குத் தானொரு வாலிபன் என்றொரு கிறுக்கு !

கிரஹாம்: நான் விரும்பும் மொரீனை என் தந்தை மோகிக்கிறார். நான் மொரீன் மீது உயிரை வைத்திருப்பது அப்பாவுக்குத் தெரியாது !

வின்சென்ட்: அது சரி, மொரீனுக்கு யார் மீது மோகம் ? ஒரு பெண்ணை அப்பாவும் மகனும் நாடுவதா ? நல்ல வேடிக்கையாக இருக்கிறதே ! யாருக்கு மணமுடிந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க முடியாதே !

கிரஹாம்: நான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை ! மொரீனுக்கு என் வாலிபத்தின் மீது பாதிக் காதல் ! தந்தையின் பெரும் சொத்து மீது மீதிக் காதல் ! இந்தப் பிரச்சனை இரவில் என் தூக்கத்தைக் கெடுக்கிறது ! எப்படித் தீர்ப்பதென்று மனம் அலைமோதிக் கொண்டிருக்கிறது !

வின்சென்ட்: ஒன்று உங்கள் தந்தை சொத்து உங்கள் கைவசப் பட வேண்டும் ! அல்லது உங்கள் வாலிபம் உங்கள் அப்பாவுக்கு மீள வேண்டும் ! ஆனால் வாலிபம் மீளாது ! அது நடக்காத நிகழ்ச்சி ! அதற்கு ஒரே வழி உங்கள் கையில் எப்படியாவது பணமூட்டை வந்து விழ வேண்டும். அதுசரி ! மொரீன் மீது உங்களுக்குள்ள காதலை ஏன் மூடி மறைத்து வைத்துள்ளீர்கள் ?

கிரஹாம்: மொரீனை நான் விரும்புவது தெரிந்தால் என்னிடமிருந்து அவளைப் பிரித்திடுவார் என் தந்தை ! என் கண்ணீர்க் கடலில் அவளுடன் தேனிலவுக்குப் படகில் போவார் ! அவருக்குத் தெரியாமல் நான் மொரீனுடன் ஓடிப்போவதுதான் சரியான வழி ! திருமணச் செலவுக்கும் தம்பதிகள் குடிவாழ்வுக்கும் முதலில் பணம் தேவைப்படும் ! யாரிடம் நான் கடன் வாங்குவது ?

வின்சென்ட்: வட்டிக்கடைப் புரோக்கர் சைமன் இருக்கிறார் மறந்து விட்டீரா ? வாடிக்கையாகக் கடன் தருபவர். ஆனால் மிகவும் கண்டிப்பான பேர்வழி ! வட்டிப் பணத்தை மாதாமாதம் கட்டா விட்டால் காதை அறுத்து விடுவார் ! முதலைத் தராவிட்டால் மனிதர் குடலை உருவி விடுவார் ! உங்களுக்கு இருப்பதோ ஒரு குடல், இரண்டு காதுகள்தான் !

கிரஹாம்: [மனக்கணக்கு செய்து] எனக்குப் பத்து அல்லது பதினையாயிரம் பவுண் பணம் தேவைப் படும், திருமணச் செலவுக்கும், குடிமனை புகுவதற்கும். போதுமென்று நினைக்கிறேன் ! பணத்தை அடைக்க முடியாமல் நான் சிறைக்குப் போக நேரிட்டால் அப்பாவின் காலைப் பிடித்துக் கொள்ளலாம் !

வின்சென்ட்: ஐயா, வட்டிக்கடை சைமன் போடும் கட்டாய நிபந்தனைகள் அதிகம் ! ஒப்புக் கொண்டால்தான் கையில் பணம் கிடைக்கும்.

கிரஹாம்: என்ன நிபந்தனைகள் ?

வின்சென்ட்: ஐயா நான் எல்லா விபரங்களும் அறிந்து வந்தேன். நிபந்தனைகள் போடுவதற்கு முன்பு நேர்காணலில் நீங்கள் பல வினாக்களுக்குப் முதலில் பதில் கூறியாக வேண்டும் ! அந்த விபரம் அறிய ஓர் அதிகாரி வருவார் ! அதற்கு ஒரு வீடும் வாடகைக்கு எடுக்கப்படும் ! நேருக்கு நேராக நீங்கள் பேச வேண்டும். நீங்கள் யார், உமது பெற்றோர் யார், உங்கள் சொத்துக்கள் எவை, வீடு வயல் எல்லாம் வில்லங்கம் இல்லாமல் உள்ளனவா என்றெல்லாம் கேட்பாராம் ! ஐயமின்றி உங்கள் தந்தையின் பெயருக்குப் பெரும் மதிப்பிருக்கும் என்பது எனது யூகம் !

கிரஹாம்: அதெல்லாம் சரி ! கடன் உடனே கிடைக்குமா ? காத்துக் கிடக்க வேண்டுமா ? தவணையில் வட்டி என்ன தர வேண்டும் ? அதுவும் எளிய வட்டியா ? அடுக்கு வட்டியா ?

வின்சென்ட்: நான் கேள்விப்பட்டது ஐந்து வீத வட்டி ! எளிய வட்டி.

கிரஹாம்: [மகிழ்ச்சியுடன்] ஐந்து சதவீதமா ? நல்ல ஆசாமியாகத் தெரிகிறதே ! பதினைந்துக்குப் பதில் இருபதாயிரம் கடன் வாங்கலாம் போலிருக்கே !

வின்சென்ட்: அவசரப் படாதீர் ! சைமன் உமக்குப் போடும் வட்டி ஐந்து சதவீதம் ! ஆனால் சைமன் பையில் அத்தனை பெரிய தொகை கிடையாது ! அவர் வேறொரு புள்ளியிடம் கடன் வாங்கி உமக்குத் தர வேண்டும் ! அவர் தரும் வட்டி இருபது சதவீதம் ! ஆக நீங்கள் தரப் போகும் வட்டி மொத்தம் இருபத்தியைந்து சதவீதம் !

கிரஹாம்: அடப் பாவி ! எனக்குத் தலை சுற்றுகிறது ! இருபத்தியைந்து சதவீதமா ? யாரவன் யூதனா அல்லது அரேபியனா ? வட்டி தின்னும் பூதம்போல் தெரிகிறதே !

வின்சென்ட்: ஆமாம் ஐயா ! வட்டி மிக மிக அதிகம்தான். இருபத்தியைந்து சதவீதம் ! சில ஆண்டுகளில் வட்டியே முதலை விடப் பெருத்து விடும் ! சிந்தித்து வாங்க வேண்டும் ! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் !

கிரஹாம்: கடனில் மூழ்கிப் போனாலும் நீந்திக் கரை சேரலாம் ! அங்கே காலைக் கவ்வும் முதலை இருந்தால் எப்படித் தப்பிப் பிழைப்பது ? ஆனால் எனக்குப் பணம் தேவை ! எப்படியும் வாங்க வேண்டும் ! தாமதப் படுத்தினால் என் காதலி மொரீனைத் தந்தை பற்றிக் கொள்வார் !

வின்சென்ட்: பொறுங்கள் இன்னுமொரு நிபந்தனை ! நீங்கள் கேட்கும் பதினையாயிரம் பவுணில் சைமன் முதலில் பணமாக பனிரெண்டாயிரம்தான் தருவார். மீதிப் பணத்தை பொருளாகத் தருவார் ! அதாவது மேஜை, நாற்காலி, கூஜா, பண்டம், பாத்திரம், துணி, மெத்தை, தலையணை, நகைகள் ஆகியவற்றைக் குறைந்த விலைக்குத் தருவார் !

கிரஹாம்: இதென்ன வேடிக்கை ! கடனுக்குத் திருமணச் சீர்வரிசையா ? அந்த சாமான்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன் ?

வின்சென்ட்: திருமணத் தம்பதிகள் சில சாமான்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ! வேண்டாதவற்றை விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம் !

கிரஹாம்: அந்த சைமன் ஓர் அயோக்கியன் ! என்ன கழுத்தறுப்பு இது ? சாமான்களை விற்கப் பாத்திரக் கடை வைக்கவா ? துணிக்கடை வைக்கவா ? அல்லது நகைக்கடை வைக்கவா ? எனக்கு வேடிக்கையாக இருக்கிறதே ! வட்டியும் அதிகம் ! நிபந்தனையும் அதிகம் ! சாமான்களை எங்கே சேமித்து வைப்பது ? கொடுக்கிற பணத்தை முழுதாகத் தரக் கூடாதா ? மோசடித்தனமாகத் தெரியுது இந்த வட்டிக் கடன் ! வஞ்சகன் ! வழிப்பறி செய்வன் ! வட்டிக்கடைப் பேய் !

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 3, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பிறப்பி லிருந்தே பூமியில்
எம்மை எல்லாம் படைத்த
எல்லாம் வல்ல கடவுள்
நம்மை வெவ்வேறு வினைகளுக்கென
உருவாக்கி வைத்துளது !
ஒவ்வொரு மனமும்
ஒன்று சேர்வதில்லை !
எவ்விதக்
கருப்பொருளில் வேதாந்திகள்
உருவாக்கப் படுகிறார்
என்பதில் அச்சம் அடைகிறேன் !
உன்னத நிலையில் நீ
வாழையடி வாழையாய்க்
கற்ற பரம்பரையில்
வாழப்
பிறந்தவளாய் ஆனாய் சகோதரி !
ஆயினும் பூதளத்தில்
எளிய
இல்லறப் பெண்ணாக வாழவே
நினைப்பவள் நான் ! (நாடகம் : படித்த மாதர்கள்)

மாலியர் வாய்மொழிகள்

Fig. 1
Elizabeth & Edward

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 4

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

Fig. 2
Edward, William & Elizabeth

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். எட்வேர்டு மகளுடன் திருமணம் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

எட்வேர்டு: உன் தமையனுக்கு ஏன் தலை சுற்றியது என்று எனக்குத் தெரியவில்லை ! எனக்குத் திருமணம் என்றதும் அவன் தலை சுற்ற ஆரம்பித்ததா ? மொரீனைப் பற்றிச் சொல்லியதும், முதலில் அவன் முகம் மலர்ந்ததே ! அந்த மலர்ச்சி பிறகு ஏன் மறைந்து போனது ? என் தலை சுற்றாமல் நிலையாக நிற்கிறதே !

எலிஸபெத்: அப்பா, கிரஹாமுக்குக் காதல் மயக்கம் ! அவன் உங்களுக்கு அதைச் சொல்லத்தான் வந்தான் ! அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் ! சரி என் காதலைப் பற்றி நான் பேசலாமா ?

எட்வேர்டு: கிரஹாமுக்கு ஏற்ற மணப்பெண்ணை நான் தீர்மானித்து விட்டேன். அவள் ஒரு பணக்காரி ! பேரழகி ! மாளிகை, பூங்கா, நீச்சல் குளம் எல்லாம் திருமணப் பரிசாக வரும். கிரஹாம் ஓர் அதிஷ்டசாலி.

எலிஸபெத்: சாகும் வரை கிரஹாம் எதற்கும் ஏங்க வேண்டாம் ! யாரந்த மாது ? எங்கே கிரஹாமுக்காகக் காத்திருக்கிறாள் ?

எட்வேர்டு: திருமணம் பற்றிய எனது தீர்மானம் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது !

எலிஸபெத்: கிரஹாமுக்கும் பெண்ணைப் பற்றித் தெரியாது ! இது என்ன திருமணம் ? சிறுவர்கள் கண்களை மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் தேடுவது போல் தெரிகிறதே !

எட்வேர்டு: பெண்ணைப் பார்த்தால் கிரஹாம் மயக்கப் போட்டு விழுவான் தெரியுமா ? பிடித்துக் கொள்ள நீ அவன் பக்கத்தில் நிற்க வேண்டும் ! சரி உனக்கும் நானொரு மாப்பிள்ளைப் பையனைத் தீர்மானித்து வைத்திருக்கிறேன் ! யாரென்று நான் சொல்லவா ? கேட்டால் நீயும் மயக்கம் போட்டு விழுந்து விடுவாய் !

எலிஸபெத்: இப்படி மயக்கம் போட வைக்கும் மணமக்களைக் கொண்டு வந்து எங்களுக்கு அதிர்ச்சி உண்டாக்குகிறீர் அப்பா ! யாரவர் ? பார்க்க அழகாக இருப்பாரா ? பணக்காரர் தானே அவர் ?

எட்வேர்டு: உனக்கென நானோர் உயர்ந்த மாப்பிள்ளையை முடிவு செய்திருக்கிறேன்.

எலிஸபெத்: அப்பா ! திருமணம் எனக்கென்றால் ஆண்மகனைக் கண்டு, பேசி, முடிவு செய்வது நானல்லவா ? உங்களுக்கு வரப் போகும் மாதை நாங்களா தேர்ந்தெடுதோம் ? நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுக்கும் எவரையும் நான் விரும்புவேன் என்று முடிவு செய்து விட்டீர்களா ? சரி யார் அந்த மாப்பிள்ளை ? அவர் ஒரு லட்சாதிபதியா ? அல்லது கோடீஸ்வரரா ?

எட்வேர்டு: உன் யூகம் சரிதான் ! அவர் ஒரு லட்சாதிபதி ! வயதானாலும் வாலிபர் ! அவருக்குப்
பெரிய மாளிகை ! மாடி வீடு ! பிறகு தோட்டத்துப் பங்களா வேறு !

எலிஸபெத்: புதிர் போடாமல் முதலில் அவர் யாரென்று சொல்லுங்கள் ! நான் மாளிகை ஒன்றையோ, தோட்டத்துப் பங்களா ஒன்றையோ கட்டிக் கொள்ளப் போவதில்லை ! அவர் வயதென்ன ? சொல்வதைப் பார்த்தால் எனக்கு வரும் மணாளர் கிழவர் போல் தெரிகிறதே ! கைத்தடி ஊன்றி நடப்பவரா அல்லது காலூன்றி நடப்பவரா ? நிஜப்பல் கிழவரா ? பொய்ப்பல் கிழவரா ? அப்பா நான் கிழவி ஆன பிறகு கிழவரைப் பற்றி விளக்கமாய்ச் சொல்லுங்கள்.

எட்வேர்டு: கேலி பண்ணாதே அவரை ! அவர் மனமுதிர்ச்சி உள்ளவர் ! மகா மேதை. நீ கேட்பதை எல்லாம் வாங்கித் தருபவர். கூர்மையான அறிவும், பரிவும் கொண்டவர். வயது ஐம்பதுக்கு மேலிருக்காது ! தலை நரைக்க வில்லை ! நான்கு தலைமறைக்கு வேண்டிய பணத்தைத் திரட்டி வைத்திருக்கிறார் ! உன்னை பூலோகக் கன்னியாகப் போற்றித் தாலாட்டுவார் ! சொத்து, சுகம் அத்தனையும் இலவசமாக வரும் !

எலிஸபெத்: [வெறுப்புடன்] அப்பா ! நான் கன்னியாகவே இருந்து கொள்கிறேன் ! இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம்.

எட்வேர்டு: [வியப்போடு] பிறகு எப்போது கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய் ?

எலிஸபெத்: அதுதான் சொன்னேனே ! கிழவி ஆன பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று !
நீங்கள் வாலிபராய்க் கொண்டு வந்தால் இந்த வயதில் அதைப் பற்றிச் சிந்திப்பேன்.

எட்வேர்டு: [சற்று கோபத்துடன்] என்ன ? தந்தையைக் கேலியா பண்ணுகிறாய் ? நீ கிழவியாகும் போது அந்த லட்சாதிபதி குழியில் அல்லவா கிடப்பார் !

எலிஸ்பெத்: இல்லை அப்பா ! வாலிபத்திலே அந்த கோரக் காட்சியை நான் காண வேண்டியதிருக்கும். என் கண்ணீரைத் துடைக்க அப்போது நீங்கள் கூட இருக்க மாட்டீர்கள் ! எனக்காகப் பேச அன்னையும் எனக்கில்லை ! எனக்கு இந்த வேடிக்கைத் திருமணமே வேண்டாம் !

எட்வேர்டு: நீ மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்ளாமல் அவரது கோர மரணத்துக்குக் கண்ணீர் விடுகிறாய் ! அவர் இந்த நகரில் பெரிய வீட்டுக்காரர் ! நான் அவரை நன்கு அறிவேன் ! ஆப்ரஹாம் லிங்கன் போலிருப்பார், பெயரும் ஆப்ரஹாம் ! உனக்கேற்ற ஆடவன் !

Fig. 3
Edward hears dog barking

எலிஸபெத்: [பதறிப்போய்] என்ன ? ஆப்ரஹாமா ! உங்கள் வயதிருக்குமே அவருக்கு ? உங்களுக்கு ஏற்ற மருமகன்தான் ! ஆனால் அவர் எனக்கேற்ற ஆண்மகனில்லை ! அவருக்குப் பொருத்தமான கிழ மாதர் எத்தனையோ பேர் இருக்கிறார் ! அறவே வெறுக்கிறேன் உங்கள் முடிவை !

எட்வேர்டு: [அதட்டலுடன்] கேள் எலிஸபெத் ! சீரும், செல்வாக்கும் கொண்ட பொருத்தமான மாப்பிள்ளை இந்த நகரில் எத்தனை பேர் இருக்கிறார் ? இருந்தாலும் உன்னைத் திருமணம் புரிய முன்வர வேண்டுமே !

எலிஸபெத்: அது மட்டும் உண்மை அப்பா ! பெண்பார்க்க வருபவன் எவற்றைப் பார்க்கிறான் ? மூஞ்சையும், மார்பையும் பார்க்கிறான் ! பால்போல பாவை இருக்கிறாளா ? மூக்குக் கோணலா ? முத்துப்பல் அழகியா ? எத்தனைத் தடிப்புக் கண்ணடி போடுகிறாள் ? இதுவா பெண்ணிடம் தெரிந்து கொள்ள வேண்டியது ? ஆண்கள் பன்றிகள் ! ஆயினும் அவர் பெண்ணுக்குத் தேவை ! இந்த வயோதிக வாலிபர் எனக்கு வேண்டாம் ! என்னைக் கட்டாயப் படுத்தாதீர் !

எட்வேர்டு: [ஆத்திரமுடன்] கட்டாயப் படுத்துவேன் உன்னை ! நானின்று இரவே உன் உடன்பாட்டைப் பெற வேண்டும். நான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமானால் உன் கணவன் ஆப்ரஹாம் என்று முடிவு செய் !

எலிஸபெத்: அப்பா ! அது நான் உயிரோடு உள்ள போது அப்படி நடக்காது !

எட்வேர்டு: [கோபமாக] நீ அழைத்துக் கொண்டுவரும் மாப்பிள்ளைக்கு நான் நடத்தி வைக்க மாட்டேன் திருமணம் ! அதைத் தெரிந்து கொள் இப்போது ! …. [அப்போது திடீரென வில்லியம் உள்ளே நுழைகிறான்] இதோ வில்லியம் வருகிறான் ! அவனிடம் இதைச் சொல்கிறேன் ! வில்லியம் சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா ?

எலிஸபெத்: [புன்னகையுடன்] ஹலோ வில்லியம் ! வில்லியம் சொன்னால் நான் கேட்டுக் கொள்கிறேன்.

எட்வேர்டு: அப்படி உடன்பட்டால் போதுமே ! கேள் வில்லியம் ! நான் சொல்வது சரியா அல்லது என் மகள் சொல்வது சரியா என்று நீ தீர்ப்பு சொல்ல வேண்டும் நீ சொல்வதை எலிஸபெத் ஒப்புக் கொள்வாள் !

வில்லியம்: நீங்கள் சொல்வதுதான் ஸார் சரியாக இருக்கும், சந்தேகமின்றி !

எட்வேர்டு: அப்போது நாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பது உனக்குத் தெரியுமா ?

வில்லியம்: அதெல்லாம் எனக்குத் தெரியாது ! நீங்கள் சொல்வதுதான் எப்போதும் சரியாக இருக்கும் ! தப்பாக இருக்க முடியாது நீங்கள் செய்வது எதுவும் !

எலிஸபெத்: [ஆச்சரியமாகப் பார்த்து] அதெப்படிச் சொல்லிவிட்டாய் வில்லியம் ? அப்பா இன்னும் என்ன வென்று உனக்குச் சொல்ல வில்லையே !

எட்வேர்டு: [வில்லியத்தைப் பார்த்து] இன்றைய நல்ல நாளில் எலிஸபெத்துக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவள் அதை உடனே நிராகரித்து விட்டாள் ! அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

வில்லியம்: நான் எப்போதும் உங்கள் கட்சி ஸார் ! நீங்கள் சொல்வதில் நிச்சயம் ஆதாயம் இருக்கும் உங்களுக்கு ! நீங்கள் சொல்வது நியாயமாகத்தான் இருக்கும் ! நீங்கள் தப்புச் செய்வதில்லை ! அதே சமயத்தில் எலிஸபெத் எதிர்ப்பதிலும் தவறிருக்க முடியாதென்று நான் சொல்வேன்.

எட்வேர்டு: நான் தேர்ந்தெடுத்த மதிப்புக்குரிய ஆப்ரஹாம் எலிஸபெத்துக்கு ஏற்றவர்தானே ! உன்னத நோக்கம் உள்ளவர் ! அறிவாளி ! அவசரப்படாதவர் ! ஆத்திரப்படாதவர் ! அமைதியானவர் ! உலக அனுபவம் பெற்றவர் ! மேலும் முதல் திருமணத்தில் அவருக்குக் குழந்தைகள் கிடையா ! இவரை விடச் சிறந்த மனிதர் எலிஸபெத்துக்கு அமையுமா ?

வில்லியம்: நிச்சயம் இந்த மாதிரி அமையாது ! ஆனால் நீங்கள் அவசரப் படுத்துவதாக எலிஸபெத் எண்ணலாம். அதில் தவறில்லை. நீங்கள் சிறிது அவகாசம் எலிஸபெத்துக்கு அளித்தால், அவள் சிந்திப்பாள் ! செயல்படுவாள் ! முடிவில் உங்களுக்கு உடன்படுவாள் !

எட்வேர்டு: இந்த வாய்ப்பை எலிஸபெத் நழுவ விடக் கூடாது ! அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும் அவள் ! இந்த தம்பதி ஏற்பாட்டில் ஒரு முக்கிய ஆதாயம் இருக்கிறது ! அதுதான் வரதட்சணை ! ஆப்ரஹாம் தனக்கு எந்த வரதட்சணையும் தர வேண்டாமென்று அழுத்தமாகக் கூறி விட்டார். வரதட்சணை விரயமில்லை !

வில்லியம்: வரதட்சணை இல்லாமலா ! வெகு அதிர்ஷ்டம் உங்களுக்கு ! இப்போது பூரண உடன்பாடு எனக்கு. உங்கள் புதல்வி ஒருவேளை சொல்லி யிருக்கலாம் உங்களுக்கு, திருமணம் எத்தனை வில்லங்கம் தரும் நிகழ்ச்சி என்று. உணர்ச்சி வசப்பட்ட பெண்களின் கண்கலங்கக் கூடாது, அவரது பஞ்சு மனம் புண்படக் கூடாது. மண வாழ்க்கை உறவு மரணம் வரை நீடிப்பது ! அதனால் எதுவும் மிகக் கவனமாகச் செய்ய வேண்டும்! இதெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லக் கூடாது.

எட்வேர்டு: ஆனால் இந்த சம்பந்தத்தில் வரதட்சணை இல்லை !

Fig. 4
Elizabeth & William

வில்லியம்: ஆமாம் அது முக்கியமானது. ஆனால் சில தருணங்களில் மணப் பெண்ணின் விருப்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அதுவும் வயது வித்தியாசம் இருக்கும் போது, வாலிப உணர்ச்சிக்கும் வயோதிகக் கட்டளைக்கும் மோதல் ஏற்படும். அதனால் தொல்லைகள் அதிகம். வயோதிக் கணவன் தூங்கி வழியும் போது, மணப்பெண் மெதுவாக நழுவிச் செல்ல வழிகள் பிறந்து விடும். ஆசியாவில் எல்லாம் பெண்கள் கணவனே கண்கண்ட தெய்வம் என்று தொழுது கிடப்பார்களாம் ! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கணவன் காலடியைக் கழுவிக் கொண்டிருப்பாராம் ! வேடிக்கையாக இல்லை ! [சிரிக்கிறான்]

எட்வேர்டு: ஆனால் எனக்கு வரதட்சணை வம்பு இல்லை ! அது போதும் என் உடன்பாட்டுக்கு !

வில்லியம்: ஆனால் மணப்பெண்ணுக்கு நகை, நட்டு, சொத்தெல்லாம் தரவேண்டாமா ? அவளும் ஒரு தாய் வயிற்றில் உதித்த மனிதப் பிறவிதானே ! வரதட்சணை பணத்தை பெண்ணுக்குக் கொடுப்பீர் அல்லவா ? பெற்றோர் கொடுத்த திருமணப் பரிசாக அதைக் கொடுக்கலாம் அல்லவா ?

எட்வேர்டு: அங்கேதான் எனக்கு விடுதலை கிடைக்கிறது. என் மனைவியின் ஆபரணங்களை எலிஸபெத்துக்குக் கொடுத்து விடலாம். ஆனால் சொத்து கொடுக்க வேண்டுமா என்பதைப் பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை.

வில்லியம்: வரதட்சணை வேண்டாம் என்னும் மாப்பிள்ளை ஓர் உயர்ந்த மனிதன் ! ஒன்றும் தேவையில்லை மணப்பெண்ணுக்கு என்று சொல்லும் தந்தை …… !

எட்வேர்டு: [கூர்ந்து கேட்டு] என்ன சத்தம் தோட்டத்திலே ? நாய் குரைக்கிறதே ! இங்கேயே இருங்கள் ! தோட்டத்தில் விலை மிக்க சாதனம் ஒன்று இருக்கிறது. நான் எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுவேன். இன்றிரவே எலிஸபெத் மனதை மாற்றி திருமணத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

(எட்வேர்டு வேகமாகத் தோட்டத்துக்குப் போகிறார்)

எலிஸபெத்: [எரிச்சலுடன்] என்ன வில்லியம் ? எங்கள் அப்பா போடுகிற மேளத்துக்கு ஏற்றபடி தாளம் போடுகிறீர் ? விளையாட்டா பேசினீரா அல்லது உண்மையாகப் பேசினீரா ? என் நெஞ்சை துடிக்க வைக்கிறாய் !

வில்லியம்: [கனிவுடன், பணிவுடன்] நான் பீரங்கி முன்னால் நிற்கும் போது என்மீது வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டா ? அதனால்தான் உன் தந்தை கேட்பதற்கு முன்பே ஆமாம் என்று தலையாட்டி விடுகிறேன். எதிர்த்துப் பேசி அவர் என்மேல் வெறுப்படையச் செய்ய விருப்பமில்லை ! நீதான் எனக்கு மணப் பெண்ணாய் வரப் போகிறவள் ! நிச்சயம் என் தந்தை எனக்குப் போட்டியாக வரமாட்டார் ! உங்கள் தந்தை மனக் கோட்டையை நான் ஏன் இடிக்க வேண்டும் ? அது அடித்தளத்தை விட்டு எழவே எழாது ! ஏன் கவலைப் படுகிறாய் ? நாம் அவரை ஆதரிப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டும் ! அவரை நண்பராக்கிக் கொண்டு இறுதியில் ஏமாற்றிவிட வேண்டும் !

எலிஸபெத்: சரி இன்றிரவே என் சம்மதம் வாங்கக் கட்டாயப் படுத்தும் தந்தையை எப்படி மாற்றுவது ? நான் உனக்கு மனைவி ஆவதற்குள் உங்கள் அப்பாவுக்கு நான் மனைவியாகக் கூடாது ! அதற்கு ஒரு வழி சொல்லிக்கொடு.

வில்லியம்: நீ முடிவைச் சாமர்த்தியமாகத் தாமதப் படுத்த வேண்டும். தலைவலி என்றோ அல்லது வயிற்றுவலி என்றோ சொல்லி இரண்டு அல்லது மூன்றுநாள் தவணை வாங்கிக் கொள். நான் அதற்குள் என் தந்தையைக் கலைக்கப் பார்க்கிறேன். நீ நோயில் கிடக்கிறாய் என்று சொன்னாலே போதும். நோயாளியை அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார் !

எலிஸபெத்: [மன வேதனையுடன்] இதெல்லாம் எனக்குத் தெரியாது ! முன்பின் இப்படிப் பொய் சொல்லி நான் யாரையும் ஏமாற்றிய தில்லை ! என்ன செய்வேன் நான் ?

வில்லியம்: பேசாமல் ஆப்ரஹாமை மணந்து கொண்டு நிம்மதியாக வாழ் ! ஏனிந்த வம்பெல்லாம் ? நான் போகிறேன் !

[எலிஸபெத் அருகில் இருந்த தலைகாணி எடுத்து வில்லியத்தின் மீது வீசி எறிகிறாள். வில்லியம் ஒதுங்கிக் கொள்கிறான்]

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 26, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எவருடைய நடத்தை
தெருப் பேச்சுக்கு வருகிறதோ
அவரே முதலில்
அண்டை அயலவரைச்
சண்டைக்கு இழுப்பார் (நாடகம்: வஞ்சகன்)

பணமே தீய செயல்
புரிவதற்கு மூல காரணம் !
கிறித்துவத் தர்மம்
உனது பாப மன்னிப்புத்
தடுப்பு வழிகளுக்குக்
குறுக்கே நிற்கும். (நாடகம்: வஞ்சகன்)

இறை வழிபாடு இல்லாதவன் நான் !
ஆனாலும் ஒரு குறைபாடு இல்லாதவன் ! (நாடகம்: வஞ்சகன்)

சந்தி சிரிக்க பொதுப் புகாரில்
சிக்கிக் கொள்வது போக்கிரித்தனம் !
ஆனால் தனியாக, மறைவாகப்
பாபம் செய்வது பாபமில்லை ! (நாடகம்: வஞ்சகன்)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 3 பாகம் 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். எட்வேர்டு உள்ளே நுழைந்த மகனுடனும், மகளுடனும் பேசிக்கொண்டிருக்கிறார்.

எட்வேர்டு: [கூர்ந்து நோக்கி, வியப்பாக] நான் பேசியது ஏதோ உங்கள் காதில் விழுந்திருக்கிறது. அதில் எனக்கு ஐயமில்லை ! எனக்குள் நான் போராடிக் கொண்டிருந்தேன் ! இந்தக் காலத்தில் பணம் தேடுவது, மிச்சப் படுத்துவது, சேமித்து வைப்பது எப்படிச் சிரமமானது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! நானொரு அதிர்ஷ்டசாலி ! வீட்டு விற்பனையில் பத்தாயிரம் பவுண் கிடைத்தால், ஒரு மனிதன் எத்தகைய ஆனந்தம் அடைவான் என்ற பூரிப்பில் பேசினேன் !

கிரஹாம்: உங்கள் சிந்தனையைக் கலைக்க எங்களுக்குத் துணிவில்லை ! அதனால்தான் உள்ளே நுழைய சற்றுத் தயங்கினோம்.

எட்வேர்டு: நான் சொல்ல வருவது என்ன வென்றால், நான்தான் பத்தாயிரம் பவுண் பணம் சம்பாதித்து விட்டதாக நீங்கள் கற்பனை செய்யக் கூடாது, குழப்பமும் அடையக் கூடாது !

கிரஹாம்: எங்களுக்குக் கற்பனா சக்தியும் இல்லை ! உங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் எங்களுக்குக் குழப்பமும் இல்லை !

எட்வேர்டு: ஆனால் அந்தப் பத்தாயிரம் பவுண் கிடைத்த அதிர்ஷ்டசாலி நானில்லை ! எவனோ ஒருவன் ! அவன்மேல் நான் பொறாமைப் படுகிறேன்.

எலிஸபெத்: ஆனால் அந்தப் பெரும் தொகை கிடைக்கும் திறமை தந்தைக்கு உள்ளது என்று நான் பெருமைப் படுகிறேன்.

கிரஹாம்: ஆனால் அந்த தொகை உங்களுக்குக் கிடைக்க வில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர் அவ்வளவுதானே ! அதை நம்புகிறேன் நான் !

எட்வேர்டு: [ஆனந்தமாக] அத்தகைய ஒரு பெரும் தொகை இப்போது கிடைத்தால் நான் ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் !

கிரஹாம்: [மகிழ்ச்சியாக] செவியில் தேனாகப் பொழிகிறது உங்கள் வாசகம் ! உங்களிடம் உள்ள பணத்தில் ஒன்றென்ன, இரண்டு திருமணங்கள் நடத்தி விடலாம் ! அப்பா ! நான் ஒன்று உங்களிடம் சொல்லத் துடிக்கிறேன் !

எலிஸபெத்: என் நெஞ்சில் பாலோடச் செய்கிறது உங்கள் பேச்சு ! அப்பா, திருமணம் என்று
நீங்கள் சொன்னதும், நானும் உங்களிடம் ஒன்றைச் சொல்ல தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எட்வேர்டு: [புளதாங்கிதம் அடைந்து] எலிஸபெத் ! கிரஹாம் ! நானும் உங்களிடம் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்ல வேண்டும். நல்ல தருணம் இது நம் குடும்பத்துக்கு ! அதைச் சொல்வதற்கு முன்பு உனக்கொரு கண்டிப்பைத் தெரிவிக்க வேண்டும்.

கிரஹாம்: [பயமுடன்] என்ன கண்டிப்பா ? எனக்கா ? நடுக்கம் உண்டாகுகிறதே !

எட்வேர்டு: [அழுத்தமாக] முதலில் உன் செலவைக் குறை ! வீண் செலவு செய்து என் சேமிப்புப் பணத்தைக் கரைக்கிறாய் ! இந்த வேகத்தில் என்னைக் கடனாளி ஆக்கிவிட்டு கையேந்த வைத்து விடுவாய் !

கிரஹாம்: [வியப்புடன்] அப்படி என்ன செலவை நான் செய்து விட்டேன் !

எட்வேர்டு: [அழுத்தமாக] வாலிப மைனர் போல் விலை உயர்ந்த உடைகளை அணிந்து கொண்டு வீதிகளில் வனப்பு மங்கையரை மயக்கி வருவதை நான் பார்த்தேன் ! நேற்று உன் சகோதரியைத் திட்டினேன். அவளும் ஆடை ஆபரணங்களில் என் பணத்தை விரயம் செய்கிறாள். நீ அவளை விட மிகவும் மோசம் ! கடைகளில் என் பெயர்க் கணக்கில் உடைகளை வாங்கிக் கொண்டு எனக்குத் தெரியாமல் என் பணத்தை சூறையாடுகிறீர் இருவரும் ! தந்தையின் பணத்தைக் கொள்ளை அடிக்கிறீர் !

கிரஹாம்: என்ன ? நாங்கள் உங்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறோமா ? நான் நாகரீகமாக உடை அணிய வேண்டாமா ? கற்கால மனிதன் என்றால் காட்டு இலை தழைகளைப் பின்னி அணிந்து கொள்ளலாம்.

எலிஸபெத்: அப்பா எனக்கு பதினெட்டு வயதாகிறது ! அழகா நான் உடை அணியா விட்டால் எந்த ஆடவனும் என்னைப் பார்க்க மாட்டான். எனக்குத் திருமணம் நடக்காது போகும் !

கிரஹாம்: அப்பா நான் … நான் காசினோவில் பணம் வைத்து சூதாடுவேன். கிடைத்த பணத்தை எல்லாம் பத்திரமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன் தெரியுமா ?

எட்வேர்டு: என்ன நீ பணத்தை வைத்து சூதாடுகிறாயா ? யாருடைய பணம் அது ? எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் ? அப்படியானல் உன் திருமணச் செலவுக்கு நீ சம்பாதித்து வைத்திருக்கிறாய் என்று சொல் ! மெச்சுகிறேன் உன்னை !

கிரஹாம்: அப்பா ! அது போதாது என் திருமணத்துக்கு ! என் வருவாய் குறைவானது ! உங்கள் உதவி எனக்குத் தேவைப்படும் ! நான் இன்று அதைப் பற்றிப் பேச வேண்டும் !

எலிஸபெத்: அப்பா ! நானும் என் திருமணத்தைப் பற்றி உங்களிடம் இன்று சொல்ல வேண்டும்.

எட்வேர்டு: [ஆர்வமுடன்] பொறுங்கள் ! உங்கள் விருப்பத்தைச் சொல்லப் பொறுங்கள். நானும் திருமணத்தைப் பற்றித்தான் உங்களிடம் பேச விரும்புகிறேன்.

எலிஸபெத்: [களிப்புடன்] அப்பாவுக்கு நிகர் அப்பாதான் ! தங்கமான அப்பா ! சொல்லுங்கள் அப்பா ! யாருடைய திருமணத்தைப் பற்றி ?

கிரஹாம்: [ஆவலுடன்] நானும் அதைப் பற்றிப் பேசத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

[எட்வேர்டு நடுவில் இருக்க கிரஹாம் ஒரு புறமும், எலிஸபெத் மறுபுறமும் ஓடிவந்து ஆவலுடன் நிற்கிறார்கள்]

எட்வேர்டு: [பூரிப்போடு] இந்தத் திருமண விஷயத்தில் உங்களுக்கு இத்தனை விருப்பமா ? [சிரிக்கிறார்] இத்தனை மகிழ்ச்சியை நான் இதுவரைப் பார்த்தைல்லை.

கிரஹாம்: நீங்கள் முன்வந்து திருமணத்தைப் பற்றி திடீரென்று பேசுவது சற்று விந்தையாகவே உள்ளது அப்பா. ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண் எனக்குப் பிடிக்காமல் போகலாம்.

எலிஸபெத்: ஆமாம் அதுபோல் உங்களுக்குப் பிடிக்கும் ஆண்மகன் எனக்குப் பிடிக்காது.

எட்வேர்டு: பொறுங்கள் இருவரும் ! ஆத்திரப்பட வேண்டாம். உங்கள் இருவருக்கும் யார் யார் தகுந்தவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்லப் போவதில் உங்களுக்கு வெறுப்பு எதுவும் உண்டாகாது. சரி உங்களில் யாருக்காவது தெரியுமா மொரீன் என்பவளைப் பற்றி ! அவள் வசிப்பது நமக்குச் சமீபத்தில்தான்.

கிரஹாம்: [பேரானந்தம் அடைந்து] அப்பா ! நன்றாகத் தெரியும் எனக்கு மொரீனை ! நான் நினைப்பதை நீங்களும் நினைத்திருக்கிறீர் !

எட்வேர்டு: [எலிஸபெத்தைப் பார்த்து] உனக்குத் தெரியமா மொரீனை ?

எலிஸபெத்: ஏதோ கொஞ்சம் தெரியும். அவளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

எட்வேர்டு: என்னருமை கிரஹாம் ! அவளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

கிரஹாம்: கவர்ச்சியான பெண் ! கனிவான பெண் ! கச்சிதமான பெண் ! நேர்மையான பெண் ! புத்தி கூர்மையான பெண் ! கனவுக் காரிகை ! அவளைக் கைப்பிடிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ ?

எட்வேர்டு: அப்படிப்பட்ட பெண் இந்த மாளிகையில் வாழத் தகுந்தவள் இல்லையா ?

கிரஹாம்: [புளதாங்கிதம் அடைந்து] உண்மை அப்பா ! நூற்றுக்கு நூறு ஏற்ற சொல் அது !

எட்வேர்டு: பொருத்தமான ஜோடி இல்லையா ?

கிரஹாம்: நிச்சயமாக !

எட்வேர்டு: ஒரு கணவன் அவளுடன் களிப்போடு வாழ முடியும் இல்லையா ? ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது !

கிரஹாம்: [சிரித்துக் கொண்டு] நிச்சயமாக ! என்ன சிக்கல் அது ?

எட்வேர்டு: மொரீன் ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். வருவாய் இல்லாத வறுமைக் குடும்பம்.
வாயும் வயிறும் காய்ந்த ஏழைக் குடும்பம் !

கிரஹாம்: அப்பா ! நம் மாளிகையில் எல்லாம் நிரம்பி வழிகிறது. மணப் பெண்ணாய் ஏற்றுக் கொள்ளும் நாம் அவளது வறுமையை நிவர்த்தி செய்யலாம் இல்லையா ? நேர்மையான ஒரு பெண்ணை மணக்கப் பணம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும் ?

எட்வேர்டு: உங்கள் பதிலும், உடன்பாடும் என் இதயத்தில் தேனைப் பொழிகிறது ! மொரீனின் தணிவான பண்பும், பணிவான அன்பும், கனிவான கவர்ச்சியும் என்னை வென்று விட்டன ! நான் மொரீனை மணந்து கொள்ளத் தீர்மானித்து விட்டேன் ! உங்கள் இருவரது ஏகோபித்த உடன்பாடும் என்னைச் சொர்க்க புரிக்கு இழுத்துச் செல்கின்றன !

கிரஹாம்: அப்பா ! என்ன இது ? நீங்கள் சொல்வது எனக்குக் குழப்பம் உண்டாக்குது !

எலிஸபெத்: என்ன ? மொரீனை நீங்கள் மோகிப்பதா ? அவள் ஓர் அப்பாவிப் பெண் !

எட்வேர்டு: ஆம் ! மொரீனை நான் மோகிக்கிறேன் ! உண்மையாக அவள் ஒரு மோகினிதான் !
உங்கள் அன்னை செத்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன ! நான் தனிமையில் சாவது உங்களுக்குத் தெரியாது ! எனக்கொரு துணை தேவை ! அவள் மொரீனாகத்தான் இருக்கப் போகிறாள் !

கிரஹாம்: அப்பா ! வேண்டாம் ! வேண்டாம் ! மொரீன் உங்களுக்கு முற்றிலும் தகுதியற்றவள் !

எலிஸபெத்: அப்பா ! உங்கள் வயது எழுபது ! மொரீன் வயது இருபது ! இருபதையும், எழுபதையும் திருமணக் கோலத்தில் பார்த்தால், தாத்தா பேத்தி தம்பதிகள் போலிருக்கும் ! சின்னஞ் சிறிய ஏழைக் கன்னிக்கு உங்கள் பணத்தைக் காட்டி ஏமாற்றாதீர் ! பாவம், பெண் பாவம் ! வாலிபனை மணக்க வேண்டிய மங்கைக்கு ஒரு வயோதிகர் வலை வீசுவது முறையா ? நெறியா ? விதியா ?

எட்வேர்டு: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் எலிஸபெத் ! எனக்கு வயதான மாதைப் பிடிக்காது ! அவளோடு சண்டை போட எனக்குச் சக்தி இல்லை ! சின்னஞ் சிறு அப்பாவிக் கன்னிதான் சொன்னபடி ஆடுவாள் ! பாடுவாள் ! நாடுவாள் ! பார்த்துக் கொண்டே பரவசப் படலாம் ! அவள்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் ! கிழவியை மணந்து கொண்டு அவளது நோய் நொடிகளைத் தீர்க்கவே என் வாழ்நாள் முடிந்து விடும் ! என் பணப் பெட்டியும் காலியாகி விடும் ! திருமணத்துக்கு நான் இனி எல்லா ஏற்படும் செய்கிறேன் ! நீங்கள் எனக்கு ஒத்தாசையாக இருந்தால் போதும் ! [பாடுகிறார்] வாழ்விலோர் திருநாள் ! வருகுதே எனக்கொரு மணநாள் ! மொரீன் ! மொரீன் ! மொரீன் ! நீதான் எனது கனவுக் கன்னி !

எலிஸபெத்: அப்பா ! திருமணத்துக்கு நாங்கள் காத்துக் கிடக்கும் போது எப்படி நீங்கள் கனவுக் கன்னியை நினைக்க முடிகிறது ?

கிரஹாம்: எலிஸபெத் ! எனக்குத் தலை சுற்றிக் கொண்டு வருகிறது ! குடிக்கத் தண்ணீர் கொண்டுவா !

[கிரஹாம் மயக்கமுற்று நாற்காலியில் விழுகிறான். எலிஸபெத் ஓடிப்போய் அவனைப் பிடித்து உட்கார வைக்கிறாள்]

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 19, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஒவ்வொருவரும் முழு நேர்மை
உடைதனை அணிந் திருந்தால்,
ஒவ்வொரு நெஞ்சிலும் நீதி நெறி பரிவு,
வெளிப்படையாய்த் தோன்றினால்,
வேறெந்தப் பண்பாடும் தேவைப் படாது !
ஏனெனில் அவற்றின் முக்கிய பயன்பாடு
மானிடர் அநீதியைத் தாங்கிட மற்றோர்க்குப்
பொறுமை தனை அளித்திடவே ! (மானிட வெறுப்பாளி)

நம்பிக்கைத் துரோகம், தவறுகள்
எல்லாத் துறைகளிலும்
நடப்பதைக் காணும் போது,
ஒழுக்கக் கேடுகள் எங்கெலாம்
அரசாளுமோ அந்தக் கசப்பு
உலகை விட்டு நான் ஓடுவேன் !
மனிதப் பிறவிகள் இல்லாத
ஓர் இடத்தை நான் தேடுவேன் !
நேர்மை நெஞ்சத்தைப் பெற
விடுதலை நாடுவேன் ! (மானிட வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

Fig. 1
Master Firing the Servant

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 3 பாகம் 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

Fig. 2
Edward Strips the Servant
To search

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். கோபமாக அங்குமிங்கும் நடக்கிறார் எட்வேர்டு. அவரது முன்பு நடுங்கிக் கொண்டு நிற்கிறான் கிரஹாமின் பணியாள் வின்சென்ட். வின்சென்ட் கையில் ஒரு பை உள்ளது.

எட்வேர்டு: போடா வெளியே ! சீக்கிரம் போ ! பதில் எதுவும் பேசாதே ! வீட்டை விட்டு வெளியேறு !

வின்சென்ட்: நான் எதற்கு வெளியேற வேண்டும் ? எஜமான் கிரஹாமுக்குப் பணியாள் நான் ! என்னை வேலைக்கு வைத்தவர் உங்கள் மகன் ! அவர் வெளியேறச் சொன்னால் நான் அதற்குப் பணிவேன். உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் !

எட்வேர்டு: நீ எனக்கு வேலை செய்தால் என்ன ? என் மகனுக்கு வேலை செய்தால் என்ன ? இந்த மாளிகைக்கு நான்தான் எஜமான் ! என் மகன் அல்ல. வெளியே போ வென்று நான் சொன்னால் உடனே போய்விடு ! நான் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படி வைத்துக் கொள்ளாதே ! சந்தேக மில்லாது உன்னைப் பிசாசு பிடித்திருக்கிறது !

வின்சென்ட்: (பணிவுடன்) ஐயா ! ஏன் என்னைத் துரத்துகிறீர் என்று காரணம் சொல்லுங்களேன் ?

எட்வேர்டு: காரணமா கேட்கிறாய் ? காவாலிப் பயலே ! எஜமானன் மாதிரி நீ கேட்பதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா ? போ வென்றால் போகாமல் ஆயிரம் கேள்விகள் கேட்பது எதற்கு ?

வின்சென்ட்: நான் போனதற்குக் காரணம் என் எஜமானர் கிரஹாமுக்குச் சொல்ல வேண்டுமல்லா ? நான் என்ன கெடுதி செய்தேன் உங்களுக்கு ? அவர் வருவதுவரை என்னைப் பொறுத்திருக்கச் சொல்லி இருக்கிறார்.

எட்வேர்டு: நான் பொறுத்திருக்க முடியாது ! போடா போ வாதாடித் தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்காதே ! கிரஹாம் வரும்வரை வீட்டுக்கு வெளியே காத்து நில் ! வீட்டுக்குள் நீ இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது ! வேவு பார்க்க வந்த விஷமக்காரன் நீ ! வீட்டுக்குள் நடப்பதை நோட்டமிட வந்தவன் நீ ! யாரும் நான் செய்வதை வேவு பார்க்க ஒளிவதை அறவே வெறுப்பவன் ! அவனை வீட்டுத் துரோகி என்று விரட்டி விடுவேன் ! நான் வைத்திருப்பதைக் களவாட நினைப்பவனை உதைப்பேன் ! ஓட ஓட விரட்டுவேன் ! என் தலை மறைந்ததும் வீட்டு மறையில் களவாடிச் செல்லக் காத்திருப்பார் சிலர் !

வின்சென்ட்: ஐயா யாரைக் குறிப்பிடுகிறீர் ? யார் உங்கள் வீட்டில் களவாடிச் செல்வார் ? எல்லா பணத்தையும், பொன் நகைகளையும், இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்து இராப்பகலாய் பாதுகாக்காத்து வருவது யாருக்கும் தெரியாதே !

எட்வேர்டு: [கோபத்துடன்] அடப் பாவிப் பயலே ! உனக்கு எப்படித் தெரிந்தது ? எல்லாப் பணத்தையும் இரும்புப் பெட்டியில் நான் பூட்டி வைத்திருப்பதை எப்போது நீ பார்த்தாய் ? எதை எல்லாம் பூட்டி வைக்க வேண்டுமோ அதை எல்லாம் நான் பூட்டி வைப்பேன் ! அதை இராப் பகலாகப் பாதுகாப்பது என் விருப்பம் ! நீ யார் அதைச் சுட்டிக் காட்டுவது ? [பார்வையாளைரைப் பார்த்து] பார்த்தீர்களா அவன் பேசுவதை ? வீட்டுக்குள் திரியும் வேவுகாரனைப் போல் தெரியவில்லையா ? எங்கே நான் பணப் பெட்டியை ஒளித்து வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்கப் பிடிக்க இங்கு நிற்கிறான் என்னும் சந்தேகத்தை நிச்சயம் செய்து விட்டான் ! (வின்சென்டைப் பார்த்து] நான் வீட்டுக்குள் பணத்தை ஒளித்து வைத்துள்ளேன் என்று வெளியே எல்லோரிடமும் போய்ச் சொல்வது உன்னைப் போன்ற அயோக்கியர் தானே !

வின்சென்ட்: [ஆச்சரியமுடன்] என்ன ? உண்மையாகவே வீட்டுக்குள் நீங்கள் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறீரா ?

எட்வேர்டு: [ஆத்திரமுடன்] நான் அப்படிச் சொல்ல வில்லை. [வேறு பக்கம் திரும்பி] எனக்குப் பைத்தியம் பிடிக்க வைத்து விடுவான் இந்த அயோக்கியன் ! என் வாயிலிருந்து ரகசியங்களை வெளிவர வழி செய்கிறானே ! [வின்சென்டை நோக்கி] நான் உன்னைக் கேட்கிறேன் இப்போது, என் பணத்தில் கொஞ்சத்தை வீட்டில் புதைத்து வைத்திருக்கிறேன் என்று பிறரிரிடம் நீ சொல்ல விரும்புவாயா அல்லது தயங்குவாயா என்பதுதான்.

வின்சென்ட்: [வெறுப்புடன்] இது என்ன கேள்வி ஐயா ? என் வாயிலிருந்து இல்லாததைப் பொல்லாததைக் கூற வழி செய்வது நீங்கள்தான் ! உங்கள் புத்திரருக்குத் தெரியாமல் நீங்கள் பணத்தைப் புதைத்து வைத்தால் என்ன ? தூக்கி அவருக்குக் கொடுத்தால் என்ன ? எனக்கு இரண்டும் ஒன்றுதான் ! எனக்குக் கவலை சிறிது மில்லை !

எட்வேட்டு: புத்தி கெட்டவனே ! பணத்தைப் புதைத்து வை என்றா எனக்குப் போதிக்கிறாய் ? புத்திரருக்குத் தூக்கிக் கொடு என்றா புத்திமதி சொல்கிறாய் ? யார் உனக்கு இந்த ஆலோசனை சொல்லித் தருவது ?

வின்சென்ட்: ஐயா ! நல்ல வேடிக்கையாகப் பேசுகிறீர் ! நீங்களே எல்லா விபரமும் எனக்குக் கொடுத்து விட்டு யாரோ எனக்கு ஆலோசனை கூறுவதாய் வேறு பழித்துச் சொல்கிறீர் !

எட்வேர்டு: [கையை ஓங்கி அடிக்க முன் வந்து] அட மடப்பயலே ! உன் காதில் அறைந்து விடுவேன் ! நான் சொன்னதாக என் மீதே பழியா சுமத்துகிறாய் ? போ வெளியே ! உதை வாங்க என் முன் நிற்காதே ! என் கோபத்தைக் கிளறாதே ! போடா போ !

வின்சென்ட்: ஐயா ! நான் போறேன் ! வழியை விட்டு நகர்ந்து செல்லுங்கள் ! நான் போகிறேன் !
[வெளியேறுகிறான்]

எட்வேர்டு: [வின்சென்டைத் தடுத்து] நில்லுடா ! எனக்கு ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும். என்னுடய பொருள் எதையாவது எடுத்துப் போகிறாயா ?

வின்சென்ட்: ஐயா ! உங்கள் பொருள் எனக்கெதற்கு ? நான் எதைத் திருடிக் கொண்டு போக முடியும் ? நான் பரம ஏழைதான் ! ஆனால் உங்கள் வீட்டில் களவாடி வாழ்பவன் நானில்லை !

எட்வேர்டு: நான் உன்னை நம்ப மாட்டேன் ! கைப் பையில் என்ன உள்ளது ? காட்டு எனக்கு.

வின்சென்ட்: என் மதிய உணவுதான் பையில் இருக்கிறது. ஏனிப்படி காவல் துறையினர் போல் என்னைச் சோதிக்கிறீர் ? நான் களவாடி இல்லை !

எட்வேர்டு: [பையைப் பிடுங்கி சோதித்து] ஒன்று மில்லை ! சரி உன் பாக்கெட் பையைச் சோதிக்க வேண்டும். அடுத்து உன் கால் சட்டைக்குள் உள்ளாதா என்று சோதிக்க வேண்டும். கழட்டு உன் கால் சட்டையை !

வின்சென்ட்: நன்றாகப் பாருங்கள் ! நான் எதைக் களவாடப் போகிறேன், எஜமானர் வீட்டில் ? [கால் சட்டையைக் கழற்றிக் காட்டுகிறான்] என்னை இப்படி யெல்லாம் அவமானப் படுத்த வேண்டுமா ?

எட்வேர்டு: [பாக்கெட் பைகளைச் சோதிக்கிறார்] ஒன்றுமில்லை. இந்த முறை தப்பிக் கொண்டாய் ! இப்போது சொல்லுடா ? இதற்கு முன்பு ஏதாவது எடுத்துக் கொண்டு போயிருக்கிறாயா ?

வின்சென்ட்: இல்லை எஜமான் ! இல்லவே இல்லை [வேறு திசையில் முணுமுணுத்துக் கொண்டு] மனுசன் என்ன கேள்வி எல்லாம் கேட்கிறார் ? பேராசை மனிதர், பேராசைக்கு ஓர் அளவில்லை.

எட்வேர்டு: என்ன முணுமுணுக்கிறாய் ? என் காதில் விழும்படிப் பேசு !

வின்சென்ட்: பேராசைத்தனம் என்று சொல்கிறேன். ஆனால் உங்களைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்ல வில்லை !

எட்வேர்டு: என்னைச் சொல்லாமல் பேராசைத்தனம் என்று வேறு யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறாய் ?

வின்சென்ட்: என் மனைவியைச் சொல்கிறேன் ! அவள் ஒரு பேராசைக்காரி ! அவள்தான் அடிக்கடிச் சொல்வாள், என் சம்பாதிப்பு பற்றவில்லை என்று ! எங்காவது போய் கொள்ளை அடித்துவா என்று விரட்டுவாள், என்னை முறத்தால் அடிப்பாள் ! மூஞ்சிலே துப்புவாள் !

எட்வேர்டு: [ஆச்சரியமுடன்] ஓ ! அப்படியா சங்கதி ! உன் சம்சாரம்தான் உனக்கு மந்திரியா ? அப்போது என் பணமுடிப்புக் காணாமல் போனால் யார் வீட்டைச் சோதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்து விட்டது !

Fig. 3
Giraham, Edward & Elizabeth

வின்சென்ட்: ஐயா ! நான் அப்படி யெல்லாம் கொள்ளை அடித்துக் குடித்தனம் நடத்தும் வஞ்சகன் அல்ல ! என் மனைவி முகம் கோணாதிருக்கப் பணமுடிப்பு திருடுபவன் நான் அல்ல ! உண்மையாய் உழைத்து ஊதியம் பெறும் அற்ப மனிதன் நான் ! உங்கள் பேச்சைப் பொறுக்க முடியவில்லை. நான் போகிறேன், போதும் நான் உங்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்தது ! நிம்மதியாகத் தூங்குவீர் ! நான் போகிறேன் ஐயா ! என்னை விட்டு விடுங்கள்.

[வின்சென்ட் வேகமாக முன் வாசல் வழியாக வெளியே போகிறான்]

எட்வேர்டு: [தனியாகப் பேசுகிறான்] நிம்மதியாக எப்படித் தூங்குவது ? இரவில் இடை இடையே எழுந்து போய் பணப் பெட்டியைப் பார்த்து வருகிறேன் ! யாரிடமும் அந்த வேலையைத் தர முடியாது. அற்பப் பயல் ! குடிசையில் பிறந்தாலும் திருடத் தெரியாத மடையன் ! அவன் சம்சாரம்தான் என்னைப் போல் புத்திசாலி ! பிழைக்கத் தெரிந்தவள் ! சம்பாதிக்கத் தெரியாத ஆண் பிள்ளையைத் தூண்டிவிடும் பெண்சாதி ! ஆனால் அந்த அயோக்கியன் என் உள்ளத்தைக் கொள்ளை அடித்து விட்டான் ! இந்த மாளிகையில் அவனைச் சுற்றி நடமாட விடுவது கோழிப் பண்ணைக்கு ஓநாயைக் காவல் வைப்பது போலாகும் ! இந்த மாளிகையில் அத்தனை பெரிய பணத்தொகையைப் பதுக்கி வைத்துப் பாதுகாப்பது சிரமமான செயல். மடிக்குள்ளே பணத்தை வைத்துக் கொள்வதும் முடியாத காரியம். வணிகத்தில் பங்குதாரராய்ப் பணத்தை முடக்கவும் துணிவில்லை எனக்கு ! வீட்டில் எங்கே ஒளித்து வைப்பது என்பதே பிரச்சனை எனக்கு. ஒரே இடத்தில் ஒளித்து வைக்கவும் பயம் எனக்கு ! எத்தனை முறைதான் இடத்தை மாற்றுவது ? இடத்தை மாற்றும் போது இரவில் யாராவது பார்த்து விட்டால் என்னாவது என்றும் துடிக்குது எனக்கு ! அவற்றைப் பின்புறத் தோட்டத்தில் புதைக்கலாமா என்று சிந்திக்கிறேன். நேற்றுதான் எனக்கு பத்தாயிரம் பவுன் நாணயம் இலாபம் கிடைத்தது. அந்தப் பெருந் தொகையை எங்கே எப்படி மறைவாக வைப்பது ? யாரிடமும் நான் யோசனை கூட க் கேட்க முடியாத நிலை. கடவுளே ! எனக்கொரு வழிகாட்டு ! எனக்கொரு இடங்காட்டு !

[அப்போது மெதுவாகப் பேசிக் கொண்டு எட்வேர்டின் புதல்வர் கிரஹாமும், எலிஸபெத்தும் தோட்டத்திலிருந்து பின்வழியே வீட்டுக்குள் வருகிறார்கள். எட்வேர்டு திடுக்கிட்டுத் தான் தனியே சொல்லிக் கொண்டிருந்ததை அவர் இருவரும் கேட்டு விட்டாரோ என்று திகைத்துப் போய் கற்சிலையாய் நிற்கிறார்.]

கிரஹாம்: அப்பா ! எப்படி இருக்கிறீர்கள் ? நாங்கள் தோட்டத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏதோ வீட்டுக்குள் தர்க்கம் புரிவது எங்கள் காதில் விழுந்தது, பார்க்க வந்தோம். யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள்?

எட்வேர்டு: வின்சென்ட் என்னோடு வாதாடிக் கொண்டிருந்தான் ! சகிக்க முடியாது வெளியே விரட்டி விட்டேன் ! ஆமாம் நான் கடைசியில் பேசியது எல்லாம் உங்கள் காதில் விழுந்ததா ? வின்சென்ட் செய்த தர்க்கத்தில் என் மூளையே கலங்கி விட்டது ! தோட்டத்தில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள் ? நீங்கள் வந்ததே எனக்குத் தெரியாது.

எலிஸபெத்: சிறிது நேரம்தான் பேசிக் கொண்டிருந்தோம் ! கையில் இருந்த தங்கத் தோடு தவறிக் கீழே விழுந்து விட்டது ! இருவரும் சிறுது நேரம் தோட்டத்தில் தேடினோம். ஆனால் தோடு கிடைக்க வில்லை !

எட்வேர்டு: என்ன ? தோடையா தேடினீர் ? கிடைக்க வில்லையா ? காதுத் தோடு கையிக்கு எப்படி வந்தது ? சரி நான் வேலைக்காரியை அனுப்பித் தேடச் சொல்கிறேன். ஆமாம் நான் உளறிய தெல்லாம் உங்களுக்கு முழுதாய்க் கேட்டதா ?

எலிஸபெத்: கொஞ்சம் காதில் விழுந்தது. ஆனால் ஒன்றும் புரிய வில்லை எனக்கு

கிரஹாம்: ஏன் வின்சென்டை வெளியே போகச் சொன்னீர்கள் ? அவன் என்ன செய்தான் ? நான்தான் அவனை வீட்டில் காத்திருக்கச் சொன்னேன் !

எட்வேர்டு: அடேடே ! உனக்கு விபராக எல்லாம் கேட்டிருக்கிறதே ! [பார்வையாளரைப் பார்த்து]
உன் குடல் நடுங்குகிறதே ! இவர்கள் எதைத் தேடினார் ? காதுத் தோடையா ? அல்லது வேறு ஒன்றையையா ?

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 12, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“ஏற்புள்ள காரணத்துக்கு நேராகவோ அல்லது எதிராகவோ உயர்வு நவிற்சியில் (Extremes) ஒருவர் ஓங்கிச் சொல்லத் தேவையில்லை ! அறிவோடு, நிதானமாகத் தணிவாக ஒருவர் மிதமான முறையில் (Moderation ) உரைத்தலே போதுமானது.” (நாடகம் : மானிட வெறுப்பாளி)

“காரணங்கள் காதலைக் கட்டி ஆள்வதில்லை !” (நாடகம் : மானிட வெறுப்பாளி)

“நட்பு இறுகும் போது நண்பரிடம் நமது முகக்துதி நடத்தை குறைகிறது ! எதையும் தணிப்பு செய்தே தூய நட்பு தன்னைக் காட்டிக் கொள்கிறது.” (நாடகம் : மானிட வெறுப்பாளி)

“ஒருவர் மீது சந்தேகம் ஏற்படுவது, அவரைப் பற்றிக் கூறும் கொடிய உண்மையை விடக் கொடூரமானது.” (நாடகம் : மானிட வெறுப்பாளி)

“உன்னதக் கவிஞராக இருந்தாலும் ஒருவர் உதவாக்கரைக் கவிதையும் எழுதுவார்.” (நாடகம் : மானிட வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

Fig. 1
Miser Drama Scene

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 2 பாகம் -1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வெர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

Fig. 2
French Drama Theatre

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். எலிஸபெத் தனியாக சோபாவில் அமர்திருக்கிறாள். அப்போது அவளது மூத்த தமையன் கிரஹாம் வீட்டுக்குள் நுழைகிறான். .

எலிஸபெத்: (கவலையோடு தானே பேசிக் கொள்கிறாள்) என்னருமைக் காதலனைப் பற்றி எப்படித் தந்தையிடம் கூறுவது ? வீட்டு வேலைக்காரனாய் வேடமிட்டுப் புகுந்திருக்கும் வில்லியத்தை நேசிக்கிறேன் என்று சொன்னால் எனக்கு அடிவிழும் ! வில்லியத்துக்கு இடிவிழும் ! என் தந்தை வில்லியத்தை விரட்டி விடுவார் ! அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது ! எதுவும் மாறாமல் இப்படி இருந்தால் வில்லியத்தைத் தினமும் பார்த்துக் கொண்டு எப்போதாவது முத்தமிட்டுக் கொள்ளலாம் ! வேலைக்காரராக வில்லியம் எனக்கும் பணிவிடை செய்யக் கட்டளை இடலாம் ! இல்லாவிட்டால் வில்லியமும் நானும் கண்காணா இடத்துக்கு ஓடிவிட வேண்டும். திருமணத் தம்பதிகளாய் அங்கே நீடூழி வாழலாம் ! ஆனால் வருவாய் இல்லாமல் தம்பதிகள் வெறுவாயில் எத்தனை நாட்கள் முத்தம் கொடுத்துக் கொள்ள முடியும் ?

[அப்போது தமையன் கிரஹாம் நுழைகிறான்]

கிரஹாம்: [புன்னகையோடு] நல்ல வேளை ! நீ தனியாக இருக்கிறாய் ! தந்தை இல்லாத போது உன்னிடம் ஒரு ரகசியத்தைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

எலிஸபெத்: ரகசியத்தைச் சொல்லப் புன்னகை எதற்கு ? என் ரகசியத்தை நான் எடுத்துச் சொன்னால் கேட்பதற்கு இங்கே யாருமில்லை ! உனக்கும் ஒரு ரகசியமா ? சீக்கிரம் சொல் ! தந்தை வரும் தருணம்தான் ! பக்கத்தில் வந்து சொல் ! கதவுக்கும் மதிலுக்கும் கூடக் காதுகள் இருக்கிறதாம் !

கிரஹாம்: [கண்ணில் ஆனந்தம் பொங்க] எலிஸபெத் ! நான் காதல் சுழலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் ! நீதான் கைகொடுத்துக் காப்பாற்ற வேண்டும் !

எலிஸபெத்: அப்படியா ? நல்லது ! நானும் காதல் கடலில் மூழ்கிப் போய் கிடக்கிறேன் ! நான் எப்படி உன்னைக் காப்பாற்ற முடியும் ! நீயும் என்னைப்போல் காதல் நோயில் வேதனைப் படுகிறாயா ?

கிரஹாம்: ஆமாம் எலிஸபெத் ! காதல் புயலடித்துக் காயப் பட்டிருக்கிறேன் ! நீதான் தந்தையிடம் தக்க தருணத்தில் அதைச் சொல்ல வேண்டும் ! தந்தையிடம் காதலைப் பற்றிப் பேச எனக்கு தைரியம் இல்லை ! அவரது அதட்டலும், மிரட்டலுக்கும் அஞ்சுகிறேன் ! இரவெல்லாம் அவள் நினைவுதான் ! தூக்கமில்லை ! உண்பதில்லை ! அவளது முகமே கனவுத் திரையில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. ஒன்று அவளை நான் அடியோடு மறக்க வேண்டும் ! அல்லது எங்காவது நாங்கள் ஓடிப்போய் மணந்து கொண்டு வாழ வேண்டும் ! ஆனால் கையில் பணமில்லை ! நானினிதான் வேலை தேடிப் பணம் சம்பாதிக்க வேண்டும். பணம் எப்போது சேர்ப்பது ? மணம் எப்போது முடிப்பது ? எலிஸபெத் ஏதாவது ஓர் ஆலோசனை கூறு எனக்கு !

எலிஸபெத்: கையில் பணமில்லாமல் என்ன கல்யாணம் வேண்டிக் கிடக்கிறது ? நீ பட்டினி கிடப்பாய் ! ஆனால் உன் மனைவி பட்டினி கிடக்க மாட்டாள் ! உன் காதலியை மறந்து விடு ! அதுதான் என் ஆலோசனை ! (மனதுக்குள்) நான் எப்படி என் காதலனை இழப்பது ?

கிரஹாம்: அப்படிச் சொல்லாமல் நீ செத்துப் போ என்று கூறலாம் எலிஸபெத் ! அவளை நான் கைவிட முடியாது ! அவள் துடித்துப் போவாள்.

எலிஸபெத்: உன்னை எப்படி நான் சாகச் சொல்வேன் ! உன் காதலியை மறப்பதே உன் பிரச்சனைக்கு முடிவு ! … ஆமாம், அவளை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டாயா ?

கிரஹாம்: இல்லை ! ஆனால் அவளைத்தான் மணப்பதாக நான் தீர்மானித்து விட்டேன் ! என் மனதை மாற்ற முயற்சி செய்யாதே எலிஸபெத் ! காதலிப்பது தவறு என்று சொல்கிறாயா ?

எலிஸபெத்: நான் உன்னைக் காதலிக்காதே என்று சொல்ல வில்லை ! காதல் புரி ! ஆனால் இப்போதே கல்யாணம் புரி என்று சொல்ல மாட்டேன் ! பையிலும் கையிலும் பணம் காய்த்துத் தொங்க வேண்டாமா ?

கிரஹாம்: கையில் பணமுள்ள போது காதலி அருகில் இருக்க மாட்டாள் ! அவள் வேறு யாராவது ஒருவனுக்கு மனைவியாய்க் குழந்தைக்குத் தாலாட்டு பாடிக் கொண்டிருப்பாள் ! உனக்குக் காதலைப் பற்றி ஏதாவது தெரியுமா ? காதலின் வேதனையும் சோதனையும் உனக்கு எங்கே புரியும் ? காதல் துடிப்பில் நீ எப்போதாவது உண்ணாமல், உறங்காமல் கிடந்திருக்கிறாயா ?

எலிஸபெத்: [சிரித்துக் கொண்டு] ஆமாம் காதலைப் பற்றித் தெரியாமல்தான் நானும் தவிக்கிறேன். என் தவிப்பு எனக்குள்ளேதான் ! உன்னிடம் உதவிக்கு வரலாமா என்று எண்ணும் போது நீ என்னிடம் உதவி நாடி வருகிறாய் ! அது விந்தைதான் ! நொண்டிக்கு நொண்டி உதவ முடியாது. ஆனால் நான் உனக்கு உதவி செய்கிறேன் ! யாரந்தப் பெண் ? அவள் அழகியா ? என்னை விட அழகியா ? என்னை விடக் குட்டையா ? அல்லது நெட்டையா ?

கிரஹாம்: [மகிழ்ச்சியுடன்] அவள் ஓர் இளமங்கை. என் கண்களுக்கு அழகாகத் தோன்றுகிறாள் ! உன் கண்களுக்கு அவள் அழகாய்த் தோன்றாது ! அவளது கண்களில் காந்த சக்தி மிகுதி ! காணும் காளையரைச் சுட்டு மயக்கும் கண்கள் ! ஒருமுறை கண்ட எந்த ஆடவனும் அவளை மறக்க முடியாது ! தேனாய்ச் சொட்டும் குரல் ! அவள் பேசினால் எந்த ஆடவனும் அவளை விட்டு விலகிச் செல்ல மாட்டான் !

Fig. 3
Father, Son & Daughter
In Miser Drama

எலிஸபெத்: நீ சொல்வதைப் பார்த்தால் உன் காதலி கிளியோபாத்ராவை மிஞ்சியவளா ? அவள் வீதியில் நடந்தால் ஆடவர் கூட்டம் அவள் பின்னால் அணிவகுத்துச் செல்லுமா ? சொல் அவள் பெயரென்ன ?

கிரஹாம்: [சிரித்துக் கொண்டு] அப்படிப்பட்ட பேரழகி இல்லை ! ஓரளவு அழகி ! நான் சொல்ல வில்லையா ? என் கண்களுக்கு அவள் அழகி ! அது போதும் ! கண்டதும் காதல் என்பார்களே அந்த விதியில் காதல் பற்றியது ! அவளும் என்னை நேசிப்பதாய் நான் அறிந்து கொண்டேன் ! அவளது பெயர் மொரீன் ! மொரீன் என்று வாயில் சொல்லும் போதே நாக்கில் தேன் வழியுது !

எலிஸபெத்: சுவையான பெயர்தான் ! எங்கே வசிக்கிறாள் ? தந்தை என்ன செய்கிறார் ?

கிரஹாம்: நம் தந்தையை விடக் கண்ணியமானவர். கனிவுள்ளவர் ! என்னை மொரீன் அறிமுகப்படுத்தும் போது அவர் முகத்தில் மின்னிய மலர்ச்சியைச் சொல்ல முடியாது ! மொரீனுக்கு உள்ள கனிவும், காந்த சக்தியும் அவளது தந்தையிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். கண்களே ஆத்மாவின் பலகணி என்பது உண்மைதான் ! மொரீன் கண்களில் தெரியும் முழுநிலா ஒளி உள்ளத்தைக் கொள்ளை கொள்வது ! மொரீனுக்குள்ள பந்தம், பாசம், பணிவு மற்ற பெண்களிடம் நான் காணவில்லை ! அவள் கோடியில் ஒருத்தி !

எலிஸபெத்: திருமணத்துக்குப் பிறகு பணப் பற்றாக்குறை உண்டாகும் போது எப்படி மொரீன் மாறிப் போவாள் என்பது தெரியாது. மரத்தில் தொங்கும் மாங்கனி கவர்ச்சியாகத்தான் இருக்கும் ! போகப் போகத்தான் தெரியும் மாங்கனி இனிக்குமா அல்லது புளிக்குமா என்று !

கிரஹாம்: [எலிஸபெத் சொல்வதைக் கேட்காமல்] மொரீனுடைய அன்னை நோயில் கிடக்கிறாள். தாய் மீது மொரீனுக்கு அன்பும் பரிவும் அதிகம். அன்னைக்கு அருகில் இருந்து பணிப்பெண் போல எல்லா உதவிகளையும் செய்கிறாள் ! தாய் மீது இத்தனை அன்பைப் பொழிபவள் என் மீதும் அப்படிக் கனிவாய் இருப்பாள் என்று நிச்சயம் சொல்வேன்.

எலிஸபெத்: கிரஹாம் ! உன் சமன்பாடு தப்பானது ! ஒருத்தி தாய் மீது உயிரையே வைத்திருந்தால் உன் மீதும் அப்படி இருப்பாள் என்று மணப்பால் குடிக்காதே ! நீ வேறு ! பெற்ற தாய் வேறு !

கிரஹாம்: அப்படிச் சொல்லாதே எலிஸபெத். அவர்களுக்கு வருவாய் போதாது என்று அறிந்து கொண்டேன். ஆனாலும் அந்த குடும்பத்தில் ஆனந்தமாக வாழ்கிறார். செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் நாம் எப்படி அற்பர்களாய் வாழ்கிறோம் தெரியுமா ? எல்லாவற்றையும் தன்கைக்குள் வைத்துக் கொண்டு தந்தை வயது வந்த நம்மை எல்லாம் கைப் பொம்மைகளாக ஆட்டி வருகிறார் ! வீட்டுக்கு மூத்தவன் நான் ! எனக்கு எந்த ஆற்றலும் இல்லை ! காலிருந்தும் முடமாய்க் கண்ணிருந்தும் குருடாய் காலம் தள்ளி வருகிறேன் ! நான் விரும்பும் பெண்ணுக்கு உறுதி சொல்ல முடியாத கோழையாக இருக்கிறேன் ! என்ன கேவல வாழ்க்கை இது ?

எலிஸபெத்: உனக்கொரு வேலையும் இல்லை. வேறு வருவாயும் இல்லை. எப்படி நீயும், மொரீனும் தம்பதியாய் வாழப் போகிறீர் ?

கிரஹாம்: ஒருநாள் தந்தையிடம் மொரீனைப் பற்றிச் சொல்லி விட வேண்டும் ! ஆனால் அவளைப் பிச்சைக்காரி என்று நிச்சயம் ஏளனம் செய்வார் ! திருமணத்திற்குத் தடை போடுவார் ! அப்படி எங்கள் திருமணத்தைத் தடுத்தால் நாங்கள் இருவரும் எங்காவது ஓடி விடுவோம். அவரது எதேட்சை அதிகாரத்திலிருத்து தப்பிச் செல்வோம். அவரது கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை அடைவோம்.

எலிஸபெத்: ஓடிப் போவதற்கு முன்னால் எங்கே போகிறீர் என்று எனக்கு மட்டும் சொல்வீர்களா ? நாங்களும் உங்கள் பாதையில் ஓடத்தான் !

கிரஹாம்: (திடுக்கிட்டு) என்ன ? நீங்கள் என்றால் யார் யார் ? எதற்காக ஓட வேண்டும் ? அதுவும் எங்கள் பாதையில் ஏன் ஓட வேண்டும் ?

எலிஸபெத்: முதலில் நான் சொல்லப் போனதை நீ காதில் கேட்க வில்லை ! நானும் காதல் கடலில் மூழ்கித் தத்தளிக்கிறேன் உன்னைப் போல் !

கிரஹாம்: ஆ ! அப்படியா ? யாரந்த அதிர்ஷ்டசாலி ? சொல் எலிஸபெத் !

எலிஸபெத்: [மகிழ்ச்சியுடன்] வில்லியம் ! என்னருமைக் காதலன் வில்லியம் !

கிரஹாம்: [கோபத்துடன்] சே என்ன சொன்னாய் ? வில்லியமா ? வீடு பெருக்கும் வில்லியமா ? எனது பூட்ஸைத் துடைத்துப் பாலிஷ் போடும் வேலைக்காரனா ? என் சட்டைகளைத் துவைத்து மடித்து வைக்கும் வில்லியமா ? போயும், போயும் ஒரு வேலைக்காரனாய்க் காதலிக்கிறாய் ?

(தொடரும்)

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Repertory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 4, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பத்தாயிரம் டாலரை ஒளித்து வைத்துளேன் !
புதைக்கப் பட்டுள்ளது பணம் ! ஆயினும்
ஏருழுத மண்ணும் மலையாய்க் குவியுது !
காண்பாய் நீ ! பத்தாயிரம் டாலர் !
பெருத்த தொகை ! அந்தோ கடவுளே !
மூடன் நான் ! மூளை யில்லாமல்
வெளிப் படையாய்ப் பணத்தைப் பற்றி
உளறி விட்டேன், புதல்வர் அருகே ! (நாடகம்: கஞ்சன்)

“பொறாமைப் படுபவன் செத்துப் போவான்.
ஆனால் பொறாமை சாகாது.” (நாடகம்: வஞ்சகன்)

“ஒவ்வொன்றையும் புகழ்ந்து விடுபவன்,
எதையும் புகழ்பவன் அல்லன்.” (நாடகம்: வஞ்சகன்)

“ஒருவன் தன்னைப் பற்றி நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்த பிறகுதான்
அடுத்தவனைக் கண்டிக்க நினைக்க வேண்டும்.” (நாடகம்: வஞ்சகன்)

மாலியர் வாய்மொழிகள்

Fig. 1
Miser Drama Cartoon

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 1 பாகம் -2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வெர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

Fig. 2
Miser Drama Actors

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். வில்லியம், எலிஸபெத் ஆகியோர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வில்லியம்: மற்ற ஆடவ¨ரைப் போல் என்னை எடை போடாதே எலிஸபெத் ! என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள். ஆனால் என் காதலை மட்டும் குறைத்து எடை போடாதே ! என் காதல் மாறாது ! என்றும் மாறாது ! நான் உயிரோடு உள்ளது வரைக் குன்றாது என் காதல் ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நான் என்ன மாறி விட்டேன் என்று சொல்கிறாய் ! யார் சொன்னது அப்படி ?

எலிஸபெத்: வில்லியம் ! காதலர் அனைவரும் உன்னைப்போல்தான் வாசகம் ஒப்பிக்கிறார் ! இப்படிக் கேட்டுக் கேட்டு எனக்குக் காதும் சலித்து விட்டது ! அழுத்தமாக உறுதி அளிப்பதில் அத்தனை ஆடவரும் ஒன்றே ! நீ விதி விலக்கல்ல ! ஒருவரது நடத்தைதான் ஒருவரது குணத்தைக் காட்டும் ! சொல்லை வைத்து நான் இனி ஏமாற மாட்டேன் !

வில்லியம்: கண்ணே எலிஸபெத் ! அப்படி யென்றால் நானினி உன்னுடன் பேசக் கூடாதா ? நாக்கு சொல்லும் எதையும் நீ நம்பப் போவதில்லையா ? என்னுள்ளம் கள்ளம் கபடமற்றது ! என் சொற்களில் தவறு இருந்தால் சொல்லிவிடு ! என் செய்கையில் நல்லது இருந்தால் பாராட்டிவிடு ! ஆனால் என்னைச் சொல் அம்புகளால் கொல்லாதே ! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் ! என்னைச் சந்தேகப் படுகிறாயா ? கொஞ்சம் அவகாசம் கொடு ! நான் ஆயிரம் உதாரணங்கள் சொல்லி நல்லவன் என்று உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் !

எலிஸபெத்: [சிரித்துக் கொண்டு] எத்தனை ? ஆயிரமா ? பத்து உதாரணங்களைக் கேட்கக் கூட எனக்குப் பொறுமை இல்லை ! வில்லியம் நீ நல்லவன் ! அதற்கு ஆயிரம் உதாரணம் தேவையில்லை ! நீ என்னை உண்மையாக நேசிக்கிறாய் என்று நம்புகிறேன். நேர்மையாக நடப்பாய் என்று நம்பிக்கை உண்டு எனக்கு. அதில் சந்தேகமில்லை எனக்கு ! ஆனால் …… ! என்மேல்தான் பழி விழுந்துள்ளது ! அதுதான் என்னைப் பாதிக்கிறது !

வில்லியம்: [வியப்புடன்] என்ன ? பழி உன்மீதா ? எதற்கு ? என்ன பாதிப்பு ? புரியவில்லை எனக்கு !

எலிஸபெத்: வில்லியம் ! நான் உன்னைப் பார்ப்பதுபோல் மற்றவர் உன்னைப் பற்றி எண்ணுவதில்லை ! அதுதானே பிரச்சனை ! என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறேன் ! நம்மிருவரையும் இணைத்த அந்த பயங்கரச் சம்பவத்தை நினைக்கும் போது, என்னுடல் நடுங்குகிறது ! நானின்று தென்றல் காற்றை சுவாசிப்பது உன்னால் ! உண்டு, உறங்கி, வேலை செய்வது உன்னால் ! என் பெற்றோருக்குப் பெண்ணாய் இன்னும் இருப்பது உன்னால் ! ஒவ்வொரு நாளும் அந்த விபத்தைப் பற்றி எண்ணாத வேளையில்லை ! உயிருக்கு அஞ்சாமல் நீ கடலில் குதித்து மூழ்கிவிட்ட என்னைக் கரை சேர்த்தாய் ! மோதி அடிக்கும் அலைகளை மீறி என்னைத் தூக்கி வந்தாய். கரை சேர்த்த பின் கனிவுடன் முதல் உதவி செய்தாய். என் மூச்சை மீள வைத்தாய். நழுவிச் செல்லும் உயிரை என் உடலில் மீண்டும் ஆள வைத்தாய் ! எல்லாமோர் கனவுக் காட்சியாகத் திரைப்படம் போல் மனதில் தெரிகிறது ! அந்த அபாய விபத்தே நம்மை ஒன்று சேர்த்தது ! என்னருகில் வாழ
நீ உன் உறவுகளைத் துறந்தாய். ஊரையும், உற்றார், பெற்றார் அனைவரையும் விட்டு எங்கள் மாளிகையில் வேலைக்காரனாகச் சேர்ந்தாய் ! என்ன விந்தை இது ? எனக்காக உன் சுகங்களை விட்டு உதவியாக இருக்கத் துணிந்தாய் ! அவை எல்லாம் எனது நெஞ்சில் தேனை ஊற்றுகிறது ! ஆனால் என் மனதை நிரப்பும் அவை ஏனோ பலருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது ! அதுதான் என் நெஞ்சில் கொந்தளிப்பை உண்டாக்குது ! என்ன செய்வேன் ?

வில்லியம்: எலிஸபெத் நீ யாரைச் சொல்கிறாய் ? உன் தந்தையைத்தானே ! அவர் எதையும் நிறுத்துப் பார்ப்பவர் ! பணப் பெட்டியின் கனத்தை நிறுத்துப் பார்ப்பார் ! உன் குணத்தையும் நிறுத்துப் பார்ப்பார் ! அதுபோல் என் பணத்தையும், குணத்தையும் எடை போடுவார் ! அவரது கையில் ஒரு தராசு ! பையில் ஒரு தராசு ! அவர் பேராசைக்காரர் ! எலிஸபெத், நான் அப்படிச் சொல்வதற்கு என்னை மன்னித்துவிடு ! ஆனால் என்னை உன் தந்தை ஏற்றுக் கொள்வாரா ? உனக்கேற்ற கணவன் நான் என்று ஒப்புக்கொள்வாரா ? ஒருவேளை என் பெற்றோரைக் கண்டால் உன் பிதா என்னை ஒதுக்க மாட்டார் ! அவர்கள் இப்போது எங்கிருக்கிறார் என்று நான் அறிய வேண்டும். அந்த செய்திக்கு நான் காத்திருக்கிறேன். அவரைக் கண்டு பேச வேண்டும் இப்போது. நான் போகிறேன் எலிஸபெத் !

Fig. 3
Miser Drama Performance
One Scene

எலிஸபெத்: [வருத்தமுடன் கையைப் பற்றிக் கொண்டு] வில்லியம் போக வேண்டாம். என்னைத் தனியே விட்டுச் செல்ல வேண்டாம் ! எப்படி என் தந்தை மனதை மாற்றலாம் என்று திட்டமிடலாம் ! போகாதீர் என்னை தவிக்க விட்டு ! எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்.

வில்லியம்: [கொஞ்சலுடன்] கண்ணே எலிஸபெத் ! என் கனவில் வந்து தினமும் பயமுறுத்துபவர் உன் தந்தைதான் ! உன் பிதாவை என் மாமனாராய் எப்படி ஆக்கலாம் என்று நான் அல்லும் பகலும், அனுதினமும் துதிக்கிறேன். வேலைக்காரனாக வேடமிட்டு அவரிடம் வேலை பெற்றுக் கொண்டதே என் முதல் வெற்றி ! அடுத்து அவரது குறுகிய நெஞ்சுக்குள் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் ! அதற்காக அவரை எப்படி யெல்லாம் மகிழ வைக்கலாம் என்று திட்டமிடுகிறேன். அவரது அன்பை எப்படிப் பெறலாம் என்று இரவெல்லாம் சிந்திக்கிறேன். முகத்துதி செய்வதில் தவறில்லை ! அதில் யாரும் காயமடைவதில்லை ! ஆமாம் எலிஸபெத் உன் பிதாவுக்கு எதெல்லாம் பிடிக்கும் ? எதெல்லாம் பிடிக்காது ? சொல். குறித்துக் கொள்கிறேன். முகத்துதி மட்டுமே ஏற்றது எனக்கு ! முகத்துதி செய்வது முகத்துதி செய்பவர் தவறல்ல ! முகத்துதியால் மதி இழப்பதுதான் தவறு செய்வதாகும். அந்த வழியே எனக்கு நல்ல வழி !

எலிஸபெத்: [கவனமுடன்] வில்லியம் ! என் தமையன் உதவி நமக்குத் தேவை ! அவனிடம் பேச வேண்டும் ! எல்லாம் நாம் கவனமாகச் செய்ய வேண்டும். வேலைக்காரி மேரிக்கு நமது ரகசியம் தெரிந்து விட்டது ! நாம் கூடிக் கொஞ்சுவதை ஒருமுறைப் பார்த்து விட்டாள். அவளை எளிதில் வெல்ல முடியாது ! தந்தையிடம் எப்போதாவது சொல்லி விடுவாள் ! அவளை நம் பக்கம் இழுக்க வேண்டும் ! என் நகை ஒன்றை அன்பளிப்பாகத் தருகிறேன் அவளுக்கு !

வில்லியம்: அதுவும் நல்ல யோசனை. உன் தந்தை ஒரு மாதிரி ! உன் தமையன் வேறு மாதிரி ! இருவரையும் எப்படிக் கையாளுவது ? தனித்தனியாக கையாள வேண்டும் ! என்னைப் பார்த்தாலே உன் தமையன் முகம் கோணிப் போகிறது ! முதலில் உன் தமையன் முகத்தை நேராக்க வேண்டும். வேலைக்காரி ஓரக் கண்ணையும் நேராக்க வேண்டும் ! ஆனால் உன் தந்தையின் கூன் முதுகை எப்படி நிமிர்த்துவது ? அதான் நமது மலையான் பிரச்சனை ! நாமொன்றாக வாழ விட மாட்டார் ! என்னைப் பிச்சைக்காரன் என்பார் ! என்னைக் கட்டிக் கொண்டால் நீயும் பிச்சைக்காரி ஆவாய் என்று கேலி செய்வார் !

(தொடரும்)

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 29, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“ஒருவர் நேசிக்கும் ஒருவரால், எளிதாக அவர் முட்டாளாக்கப் படலாம்” [நாடகம் வஞ்சகம்]

“இருபது வயதினில் தனிமைத் துயர் ஆத்மாவைக் கொந்தளிக்க வைக்கிறது.” [நாடகம் மனித வெறுப்பாளி]

“துல்லியமான சிறிது கூற்று சில சமயம் டன் கணக்கான விளக்கத்தைத் தவிர்க்கிறது.” [நாடகம் L’Etourdi]

“தர்க்கத்தின் போது பெருத்த ஆரவார ஆணையுடன் நிலைநிறுத்த முற்படுபவன் தன் காரணம் வலுவற்றது என்று காட்டுபவன்.” [நாடகம் மனித வெறுப்பாளி]

மாலியர் வாய்மொழிகள்

Fig 1
Miser Drama Scene -1

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

Fig. 2
Moliere Acting in Play

பேராசைக் கஞ்சன்

அங்கம் 1 காட்சி 1

இடம்: பாரிஸில் ஒரு மாளிகை

நேரம்: பகல் வேளை

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வெர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: ஓர் இரகசிய மாது..

சைமன்: ஒரு புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

காட்சி அமைப்பு:

செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். வில்லியம், எலிஸபெத் உள்ளே நுழைகிறார்கள்

வில்லியம்: [கவனமுடன்] எலிஸபெத் ! ஏன் சோகமாய் இருக்கிறாய் ? என்ன ஆயிற்று உனக்கு ? என்னிடம் அன்பு கனியப் பேசி எனக்கு ஊக்கம் அளித்தவள் நீ ! இப்பொது நீ ஏன் சோர்ந்து போய் இருக்கிறாய் ? என் மகிழ்ச்சியைக் கண்டு நீ பெரு மூச்சு விடுகிறாய் ! ஏன், ஏன், ஏன் ? என் பூரிப்பு உனக்கு வருத்தத்தை உண்டாக்குதா ? சொல் !

எலிஸபெத்: [வருத்தமுடன்] வில்லியம் ! உன் மேல் எதுவுமில்லை ! உன் பூரிப்பில் வருத்தமில்லை! எனக்கு எதன் மீதும் வெறுப்பில்லை ! ஆனாலும் எப்படிச் சொல்வ தென்று எனக்குத் தெரியவில்லை. சொல்ல வல்லமையும் இல்லை ! உண்மையாகச் சொல்லப் போனால் எனக்குப் பயம் ஏற்பட்டுள்ளது ! உன் மேலுள்ள நேசம் குன்றப் போகிறது என்ற அச்சம் உண்டாகி விட்டது. [கண்ணீர் விடுகிறாள்]

வில்லியம்: [கண்ணீரைத் துடைத்து] நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மீதுள்ள நேசம் ஏன் குன்றப் போவதாக நீ அஞ்ச வேண்டும் ? கண்களில் நீர் ஏன் கொட்டுகிறது ?

Fig. 3
The French Theatre

எலிஸபெத்: வில்லியம்; எண்ணற்ற காரணங்கள் ! முதலில் நம் நட்பை எதிர்த்து என் தந்தையின் கோபம் ! என் குடும்பத்தாரின் எதிர்ப்புகள் வேறு ! அண்டை வீட்டு மாந்தர் குசுகுசுப்புப் பேச்சுகள் ! எல்லாவற்றுக்கும் மேலாக உன் மன மாற்றம் ! பொதுவாக அப்பாவிப் பெண்மீது ஆடவரின் திடீர் பாராமுகம் ஏற்படும் அல்லவா ?

வில்லியம்: ஒ ! அப்படியா ? மற்ற ஆடவ¨ரைப் போல் என்னை எடை போடாதே எலிஸபெத் ! என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள். ஆனால் என் நேசத்தை மட்டும் குறைத்து எடை போடாதே ! என் காதல் மாறாது ! என்றும் மாறாது ! நான் உயிரோடு உள்ளது வரைக் குன்றாது என் காதல் ! நான் என்ன மாறி விட்டேன் என்று சொல்கிறாய் ! யார் சொன்னது அப்படி ?

(தொடரும்)

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

3. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 23, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா