தவறாமல் வருபவர்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

உஷாதீபன்


பணியிலிருந்து ஓய்வு பெற்றது முதல், தான் வேலை பார்த்த அலுவலகத்திற்குப் போய் உதவியாய் ஏதேனும் வேலைகளை விடாமல் செய்து கொடுத்துக் கொண்டிருப்பதில் மனமுவந்த ஒரு ஈடுபாட்டோடு இயங்கிவந்தார்; வேதமூர்த்தி. வுலிய விரும்பி. அவராகத்தான் அங்கு போய் வந்து கொண்டிருந்தார்ஃ யாரும் ;அவரை அழைக்கவில்லைதான். அதே சமயம் அவரது வருகையை வேண்டாம் என்றும் எவரும் சொல்லவில்லையே? அதுவே ஒரு பெரிய மரியாதைதான். எப்படி வேண்டாம் என்று சொல்வது என்ற தயக்கமிருக்கலாம். ஆனால் அதைக் கூர்மையாகக் கவனித்து, கண்டுபிடித்து விடுவார் வேதமூர்த்தி. அவர் சொல்லிக்கொடு;த்து வேலை கற்றுக் கொண்டவர்கள் அவர்கள். அவர்களின் குணாதிசயங்களை பேச்சு முறைகளை, நடத்தைகளை நன்கு அறிவார் அவர்.அவர்களோடு மானசீகமாக நெருங்கியவர். அவருக்கு அந்த அலுவலகத்தில் எல்லாரிடத்திலும் எல்லா உரிமையும் உண்டு. அதனால்தான் ;அவர் தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருக்கிறார். வேண்டாத விருந்தாளி என்று எப்பொழுது உணருகிறாரோ அன்று அவர் நிச்சயம் தனது வருகையை நிறுத்திக்கொண்டு விடுவார். அந்த விவேகம் அவரிடம் நிச்சயம் உண்டு. இன்றைய தேதியில் தனக்கு நெருக்கமும் உறவுமாக அவர் நினைக்கும் ஒரே வெளிpயடம் அந்த அலுவலகம்தான். மனைவி இறந்து சில வருடங்கள் ஆயிற்று. தனியாகத்தான் இருக்கிறார் வேதமூர்த்தி. மூன்று; சகோதரர்கள் அவருக்கு உண்டு. குடும்பம், குழந்தைகள் என்று கடமைகள் இருந்தன அவர்களுக்கு.அங்கு எ ங்கும் போய் இவர் ஒண்டுவதற்கில்லை. அதெல்லாம் இவர் போக்கிற்கு ஒத்துவராத ஒன்று. ஒரு பிள்ளை பிறந்தது வேதமூர்த்திக்கு. பிறந்த பதினைந்து நாளிலேயே இறந்து போனது. அதற்குப்பிறகு அவர் மனைவி கருவுறவில்லை. பதிலாக கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்பட்டுப்போனது. பிள்ளை இருந்திருந்தால்தான் என்ன? வைத்துக் காப்பாற்றுவான் என்பது என்ன நிச்சயம்? என்று தேற்றிக்கொண்டார் வேத மூர்த்தி. வாழ்க்கையே நம்பிக்கையின் பலத்தில்தான் என்றாலும் இந்தக் காலத்தில் எதை அறுதியிட்டு நிர்ணயிக்க முடிகிறது? இப்படி இருப்பதே பிரச்னையில்லாத பாடாக இருந்தது அவருக்கு. அதற்காக சோகமாகவே அலைய முடியுமா? அல்லது இயங்காமல் ஸ்தம்பிக்க முடியுமா? வாழ்க்கை என்பது குறிப்பிட்ட சில சுயமான தன்னிறைவுகளுக்கு மட்டும்தானா? அவனவன் பேச்சு, செயல் , இருத்தல் இவைகளுக்குத் தகுந்தாற்போல்தானே வாழ்க்கை அமைந்து போய்க் கிடக்கிறது? தகுந்த எதிர்வினைகளோடுதானே நகர்ந்து கொண்டிருக்கிறது? அவற்றையெல்லாம் உணருவதும், பக்குவப்படுவதும்தானே முதிர்ச்சி? ஏதேதோ சிந்ததையில் மூழ்கியிருந்த வேத மூர்த்தியை அந்த அழைப்பு உசுப்பியது. “காப்பி சாப்பிட வர்றீங்களா சார்? “ –தலைமை எழுத்தர் சபாநாயகம் அழைத்தார். சரி என்று எழுந்தார் இவர். சர்வீசில் இருந்த காலங்களில் அவர்; இருக்கையை விட்டு எழுந்ததேயில்லை. வாங்கிவரச்சொல்லிக் குடித்து விடுவார். இப்பொழுது அப்படியில்லையே? போகலாமே— அன்று என்னவோ எல்லோருக்கும் சேர்த்து தான் காசு கொடுக்க வேண்டுமென்று தோன்றியது இவருக்கு.அப்படியெல்லாம் நண்பர்கள் புடைசூழ வெளியேறி டீக்கடையில் நின்று பஜ்ஜியும் வடையும் தின்று தடங்கலின்றி காசை எடுத்துக்கொடுத்து, சகஜமான வழக்கமெல்லாம் அமையவில்லை அவருக்கு. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிட்டார். அவரால் யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. துன்பமுமில்லை. மற்றவர்கள் சார்பாக இவர்தான் வேலைகளை எடுத்துச்செய்து கொண்டிருப்பார். “நான் காசு கொடுக்கிறேன்…” என்று எடுத்து நீட்டினார் வேதமூர்த்தி. எல்லோரும் இவரைத் திரும்பிப்பார்த்தனர். பழகிய கடைக்காரர் ;காசை வாங்கத் தயங்கினார். “நோட்டு செல்லுமுங்க…”-ஜோக்கடித்தார் சபாநாயகம். எல்லோரும் சிரித்தனர். “வடை சாப்பிடுங்க எல்லாரும்…”என்று வேத மூர்த்தியே எடுத்து நீட்டினார். எல்லோரும்தயங்கியவாறே .வாங்கிக் கொண்டனர். “ஏன் சார் நான் கூட்டிட்டு வரப்போக நீங்க காசு கொடுக்கிறீங்க..? “ –என்றார் சபாநாயகம். “இன்றைக்கு ஒருநாளைக்கு நான் கொடுக்கிறேனே?” –குழந்தைபோல் சொன்னார் இவர். “இப்படி எல்லோரோடும் நான் கிளம்பி வந்ததேயில்லை. இன்னிக்கு சந்தோஷமா இருக்கு..”-என்றார் தொடர்ந்து. “நீங்க ரிடையர்ட் ஆனது எங்களுக்குத்தான் சார் நஷ்டம். நிறைய சந்தேகங்கள் வருது. கேட்குறதுக்கு ஆள் இல்லை…” “அப்படியெல்லாம் சொல்லாதீங்க…நீங்க எல்லாருமே நல்லா வேலை செய்றவங்கதானே? யாருக்காகவும’ஆபீஸ் வேலை நிற்காது. கொஞ்சம் முன்னே பினனேன்னு நடக்கும், அவ்வளவுதான் வித்தியாசம்…” “அதத்தான் சார் நானும் சொல்லவர்றேன் ..நாங்க அசோசியேஷன்,கூட்டம் அது இதுன்னு போய்க்கிட்டிருப்போம். எங்களுக்கு உதவியா எங்க செக்ஷன் ஃபைலை எடுத்து நீங்க எழுதிப்போட்டுருவீங்க..அது எவ்வளவு பெரிய உதவி? “ -மனதுக்குள் பெருமையாயிருந்தது வேதமூர்த்திக்கு.தன் உண்மையான உழைப்பு நினைக்கப்படும்போது ஏற்படும் நிறைவே தனிதான். திரும்பவும் அலுவலகம் வந்தபோது “இப்படி வந்து உட்காருங்க சார்..” என்றார் சபாநாயகம். “இல்ல,இல்ல, .இங்கேயே இருக்கட்டும்…என்றார் இவர். ஒரு ஓரமாய் அமர்ந்து, உதவியாய் ஏதேனும் வேலைகளைச் செய்துகொடுத்துவிட்டு, யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் போய் வந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே இவரது எண்ணமாய் இருந்தது. இடைஞ்சலாய் உணருவதைப்போல் எதுவும் ஆகிவிடக்கூடாதே என்பதாய் வேறு ஒரு பயம் இருந்தது. அப்போது அவர் அமர்ந்திருந்தது ஒரு டெஸ்பாட்ச் பிரிவு. தபால் அனுப்பும் வேலை நடக்கும் இடம் அது. பணியில் இருந்த காலத்திலேயே ;பல சமயங்களில் கொண்டாங்க நான் ;எழுதறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கே வந்து அமர்ந்துவிடுவார் அவர். இப்பொழுதா கௌரவம் பார்க்கப்போகிறார்? “எந்த வேலையானால் என்ன? எல்லாமும் ஆபீஸ் வேலைதானே? என்பார் அவர். ஒரு பியூன் தன் கடமையை ஒழுங்காகச் செய்வாரேயானால் அவருக்குள்ள மரியாதை தனிதான் ;என்பது அவர் நியதி. வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்தலே கௌரவம் என்ற கொள்மையுடையவர் அவர். “எல்லோரும் சேர்ந்து செய்துதான் இந்த ஆபீஸ் வேலைகள் நகருது, முடியுது. இங்கே எந்த அதிகாரத்துக்கும் இடமில்லே. பரஸ்பரஅ ன்புக்கும் சுதந்திரத்துக்கும் மட்டும்தான் இடமுண்டு. ..” பணியாளர்கள் ப+ரித்துப் போவார்கள். “மனுஷன்னா இவர்தான்யா…” என்பார்கள். இந்த அரவணைத்த போக்கிலேதான் தலை நிமிர்ந்தார் வேதமூர்த்தி. அந்த அலுவலகமும் நற்பெயர் பெற்றது அவரது காலத்தில். நிறைய விவசாயிகள், பொதுமக்கள் என்று வந்து போகும் இடம். அவர்களுக்குத் தேவையானதை சீக்கிரம் செய்து கொடுப்பதில் கவனமாக இருப்பார்; வேதமூர்த்தி. யார் வந்தாலும் இன்முகமாக வரவேற்று அமர்த்தி, என்ன வேண்டும் என்று கேட்டு தேவையானதை அவரே எழுதி, கையெழுத்துப் போடச் செய்து குறிப்பிட்ட கால இடைவெளி சொல்லி முடித்துக் கொடுப்பார். “அவங்களுக்காகத்தானே நாம இங்கே உட்கார்ந்திருக்கோம். இங்க வந்தா முடியுங்கிற நம்பிக்கைலதானே வர்றாங்க? அதைக் கெடுக்கலாமா?” என்பார். “அய்யா, இத்தனை வருஷமா நடக்காதது, நீங்க வந்துதான் நடந்திருக்கு சாமி…” என்று கண்கலங்கச் சொன்ன ஒரு பொது ஜனம், காரியம் முடிந்த சந்தோஷத்தில் வேட்டிக்குள் கைவிட்டு டவுசரிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து, அவசரமாக நீட்டியபோது, தாங்க மாட்டாமல் கத்தித்தீர்த்து விட்டார் வேத மூர்த்தி. “போற இடமெல்லாம் இப்டியே கொடுத்துப் பழகியிருக்கீங்க…அதே கை இங்கேயும் கொடுக்கிறதுக்கு நீளுது. என் கை இதுக்கு நீளுமான்னு யோசிச்சீங்களா? பார்க்கிற ஆளையெல்லாம் வாங்குற ஆளாN;வ தோணுது, உங்களுக்கு…! என்மூஞ்சிய நல்லாப் பாருங்க… அப்டியா லட்சணம் என்னைப் பார்த்தா? முழு மனசோட உங்களுக்குச் செய்ததுக்கு இப்டி என்னைக் கேவலப்படுத்திட்டீங்களே? “ ஆடிப் போனார் வந்தவர். “அய்யா என்னை மன்னிச்சிடுங்க சாமி.ஃ..தெரியாமப் பண்ணிட்டேன்…படிக்காத் பாமரப்பய அய்யா நானு…நீங்க தெய்வம்யா…தெய்வம் “ –என்று இவரது காலில் விழாத குறையாய் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு அழுததை அந்த ஆபீஸே பார்த்தது அன்று. இத்தனை சீக்கிரத்தில் பணியிலிருந்து ஓய்வு வரும் என்று நினைக்கவேயில்லை அவர். ஓய்வு பெறும் வயதை அறுபதாக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் ஓட்டியிருக்கலாமே என்று நினைத்தார். தினசரி அலுவலகம் வர, போக என்று இருந்ததில், சொந்தத்துயரங்கள், தனிமை, துணையின்மை என்று எவ்வளவு விஷயங்கள் மறக்கப்பட்டன? வேலையில் மூழ்கி, மூழ்கி, முத்தெடுத்ததில் ;எவ்வளவு மனத் தெம்போடு பயணித்துக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது. நாளையிலிருந்து அலுவலகம் இல்லை என்று ஓய்வு பெற்ற அன்று ஒரு நினைப்பு மனதில் வந்தபோது, திக்கென்று ஏதோ நெஞ்சில் அடைத்தது. வேலை, வேலை என்று இருந்தாயிற்று. இத்தனை வருடங்கள் ;கடமை ஒன்றே கண்ணாக இருந்ததில் எத்தனையோ விஷயங்களைத் தவறவிட்டாயிற்று. அது இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. “ஏதாவது உறவினர்கள் வீட்டு விசேடம் என்று போனால் கூட “அடே! பாருடா? இன்னிக்கு நிச்சயம் மழை உண்டுப்பா?” என்று கேலி செய்தார்கள். “சார், நீங்க எந்தக் கூட்டத்துலயும் கலந்துக்கிறதில்லை. இதுக்குக் கண்டிப்பா வந்துதான் ஆகணும்…” என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் செல்லும் சங்க நண்பர்களை உணர்ச்சியின்றிப் பார்ப்பார்; வேதமூர்த்தி. வராத நண்பர்களை விடாமல் அழைப்பதில், இருக்கையைவிட்டு எழுப்பி, கொண்டு நிறுத்துவதில் அவர்களின் முனைப்பு ;இவரை அதிசயிக்க வைக்கும். இருக்கும் இடத்திலேயே அவர்களின் பிரிவுக் கோப்புகளை இவரே எழுதிப்போட்டுவிடுவார்.அது ஒன்றுதான் சங்கப் பணி செய்யும் நண்பர்களுக்கு இவர் செய்யும்உதவி. ஆனாலும்கூட அதையெல்லாம் தவறவிட்டது தப்புதானோ என்பதாக இப்பொழுது மனது மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறோம்ஃஃ” என்று பிரிவுபசார விழாவில் சால்வை ;போர்த்தியபோது, உண்மையிலேயே கண்கள் கலங்கிப் போனார் வேதமூர்த்தி. “மனிதன் மனசுக்கு துரோகம் இழைக்கக்கூடாது. மனசாட்சிக்கு உண்மையா நடந்துக்கணும். அப்படித்தான் நானும் இருந்தேன். என்மனசு என்ன சொன்னதோ அத நான் செய்தேன்..ஏதேனும் தப்பு இருந்திருந்தா பெரிய மனசு பண்ணி எல்லாரும் பொறுத்துக்கணும்……” ; -காட்சிகள் படமாகி கண்களை நிறைக்கின்றன. இப்போது மனைவி போனபின் தனிமை, தனிமை, என்று இருந்தவருக்கு அலுவலகம் என்ற ஒன்று துணை இருந்தது. இப்பொழுது அதுவும் கைவிட்டுப்போனதே என்று ஓய்வு பெற்ற பிறகு நினைக்க ஆரம்பித்தார் வேதமூர்த்தி. அன்றாடம் வந்து போவது ஒன்றுதான் இன்று உள்ள ஒரே ஆறுதல். அதுவும் கைவிட்டுப்போய்விடுமோ என்று பயப்படுகிறது மனசு. ஒருநாள் விட்டு ஒருநாள் வந்தால் என்ன? –திடீரென்று மனதுக்கு இப்படித்தோன்றியது வேதமூர்த்திக்கு. அது சரி, அந்த வராத ஒரு நாள் எங்கு செல்வது? வீட்டிலேயே கிடப்பதா? எவ்வளவு நேரம் உறங்குவது? எவ்வளவு ;நேரம் படிப்பது? எவ்வளவு நேரம் வெளியே அலைவது? ;அலையும் வயதா இது? அட, ஆண்டவனே,! என்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டாயே? எங்கேனும் ரோட்டில் விழுந்து கிடந்தால் அனாதைப் பிணமா நான்? – எண்ண எண்ணப் பயமாக இருந்தது வேதமூர்த்திக்கு. இந்த உலகத்திற்கு நாம் தனியாகத்தானே வந்தோம். ஒருவர் மூலமாக வந்;தோம்ஃ அவ்வளவே! பிறகு? தனியாகத்தானே போயாக வேண்டும்? யார் உடன் வருவார்கள்? நாம் இறந்துவிட்டோம் என்பது நமக்குத் தெரியுமா? இருப்பவர்கள்தானே சொல்லிக்கொள்ள வேண்டும்? பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வேதமூர்த்தி தன்னைக் கடந்து போன ஒரு பேருந்தை தவற விட்டதை உணர்ந்தார். ஆபீஸில் கிளம்பும்பொழுது எல்லோரிடமும் சொல்லிக்கொண்டோமா என்று நினைத்துப் பார்த்தார். ;அவர்களுக்கென்ன தன்னையே கவனிப்பதா வேலை? . அன்றைக்கு வீடு வந்து சேர்ந்த போது, ரொம்பவும் ஆசுவாசமாக உணர்ந்தார்; வேதமூர்த்தி. வாசலைப் ப+ட்டிவிட்டு தரையில் துண்டை விரித்து அப்படியே சாய்ந்தார். கண்கள் இருண்டன. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு அவர் எங்கும் ;அசையவி;ல்லை. ஆளைக் கீழே விழுக்காட்டிவிட்டது. உடற்கூறுகள் மாறுபடுகின்றன. வயதிற்கேற்றாற்போல் இயக்கம் தடைபடுகின்றது. இனி இப்படித்தான் கழியும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். அந்த வார விடுமுறை நாட்கள் கழிந்து, அன்றைய திங்களன்று ;உற்சாகமாகக் கிளம்பினார் வேதமூர்த்தி. நான்கு நாட்கள் இடைவெளி ஏதோ மாமாங்கம் கடந்தது போல் இருந்தது அவருக்கு. அன்று அவரது மனநிலையைப் புரிந்து கொண்டது போல் பேருந்தும் ;அசை போட்டு வந்து நின்றது உடனே. ஏறிய பேருந்து நிற்கும் வழக்கமான இடத்தில் இறங்கிக் கொண்டார் இவர். சில்லென்ற காற்று மேனியைத் தழுவ மெல்ல நடக்கலானார். ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கையில் அது ஞாபகம் வந்தது அவருக்கு. அது ராமேஸ்வரம் வரை செல்லும் தண்டவாளம். மனைவி கோமளாவை ஒரு முறை அங்கு ;அழைத்துச் செல்கிறேன் என்று கூறியிருந்தார். அது அனாவசியமாய் இ;ப்பொழுது நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த ஆரம்பித்தது. இந்த மனதை, அதன் நினைவுகளைக் கட்டுப்படுத்தவே முடியாதோ? கடைசிவரை நடக்காமலே போனது அந்தக் காரியம். பேருந்திலாவது கூட்டிப் போனாரா? அதுவும் இல்லை. அவள் வாய் திறந்து கேட்டது அது ஒன்றுதான். சிரிப்பதா,அழுவதா என்று தெரியவில்லை இவருக்கு. உள்ளுர் கோவில்களைச் சுற்றிச் சுற்றி வருவாள். வெளிய+ர் என்று எங்குமே போனதில்லை. தன் விருப்பம், தன்னவள் விருப்பம் என்று எதையுமே புத்தி கணக்கில் கொள்ளவில்லையே? அன்று அந்த வழி கடக்க நேர்ந்த பொழுதில், அந்தச் சோகம் வந்து ஆட்கொண்டது இவரை. தனிமை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது மனிதனை? எண்ண ஓட்டங்கள் எப்படியெல்லாம் தறி கெட்டுப் பறக்கின்றன? புத்தி தடுமாறியவனைப்;போல் ஆகி விடுவோமோ என்று பயந்து கொண்ட அந்தக் கணத்தில் உடலில் பரவிய மெல்லிய நடுக்கத்தோடே அந்த வளாகத்தில் அடியெடுத்து வைத்தார் வேதமூர்த்தி. “என்ன சார், என்ன திடீர்னு?” என்றார் சபாநாயகத்தைப் பார்த்து. “திடீர்னு ஒண்ணுமில்லையே? எல்லாம் ஏற்கனவே உள்ளதுதானே! என்றார் சபாநாயகம். புரியாமல் விழித்தார் வேதமூர்த்தி. “சார் மறந்துட்டீங்க போலிருக்கு. நீங்க ;இருக்கிறபோது அனுப்பிச்ச ப்ரபோசல்தான் சார்…நினைவில்லையா? பில்டிங் ஷிப்ட் பண்றது? ஒரே கேம்பஸ_ல இருக்கணும்னு முடிவு பண்ணலையா? “ –சற்றே ஞாபகம் வந்ததுபோல் இருந்தது இவருக்கு. “நம்ம டிபார்ட்மென்ட் ஆபீசெல்லாம் ஒரே வளாகத்துல இருக்கணும்னு கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளே கட்டிடம் கட்டிட்டிருந்தாங்களே? அது இப்போ முடிஞ்சிருச்சு. நம்ம ஆபீசுக்கு செகன்ட் ஃப்;ளோர் ஒதுக்கியிருக்காங்க. இன்னைலேயிருந்து அங்க ஃபங்ஷன் பண்ணனும்னு கலெக்டர் உத்தரளவ சார்…”—சொல்லியவாறே லாரியில் ஏற்றப்படும் டேபிள் சேர்களை சாக்கட்டியால் எண்களிட ஆரம்பித்தார் சபாநாயகம். உள்ளே எழுத்தர்கள் அவரவர் பிரிவு ;ஆவணங்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்கள் வேலை, தன் இருப்பினால் கெடக்கூடாது என்ற நினைப்பு வர, மெல்ல வெளியேறினார் வேதமூர்த்தி. திரும்பவும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, ஊருக்கு வெளியே, வெகு தொலைவில், தனி வெளியில், பொட்டல் காட்டில் தனிக் கட்டிடமாகக் கட்டப்பட்டிருக்கும் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் எனத் தனது அலுவலகத்திற்குத் தடையின்றி இனித் தான் போய் வர முடியுமா? என்ற மலைப்பு எழுந்தது இவரிடம். கடைசியாக மிச்சமிருந்த நேசமிகுந்த ஒரு இடத்தையும் தான் இழந்து விட்டோமோ என்ற சோகத்தில், திரும்பவும் பஸ் ஸ்டாப்பிலும் நிற்க மாட்டாமல் , ஆபீஸ் பக்கமும் திரும்ப மனமில்லாமல், நட்ட நடுவீதியில் சாலையோரமாய் வெயிலையும் பொருட்படுத்தாது, செய்வதறியாது மலைத்து நின்று கொண்டிருந்தார் வேதமூர்த்தி.!


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்