“கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பால குரு ராஜன்


வெகு தூரத்தில் புகைவண்டிச்சத்தம் கேட்டது.
“ஆமா! ஏம்பா ! உனக்கு எழுந்திருக்க மனசில்ல.??.இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கு அவர் வர ??”

“இல்ல அன்வர்..”

“ஏய்..முட்டாளே! என் பேரைச் சொல்லாதேன்னு எவ்வளவு தடவை சொல்றது..! ரகசியப்பேரை

மறந்துட்டியா! இப்ப என் பேர் பாண்டி! ”

“இங்கதான் யாருமில்லையே ! சரி..சரி. இன்னும் ஒரு பத்து நிமிசம் தூங்கிக்கிறேன்..”

“சரி ! தொலை..! இன்னைக்கு இரவுக்கு அப்புறம் யார் தான் தூங்க முடியும்..”

“பாண்டி மணி ஆறு ஆச்சு..! எதுக்கும் மெதுவாக இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் ! அந்த கேட் மேன்

வரானான்னு..”

“இல்ல ராசு! அவன் மொபட் சத்தம் போதும் ..மேல எறியெல்ல்லாம் பார்க்க வேண்டியது இல்ல…!”

யாருமற்ற அந்த சின்ன ரயில்வே கேட்டின் அருகில் சென்றான் ராசு.

அருகில் மொபட் சத்தம் கேட்டு வேகமாக நகர்ந்து சென்று ஓரமாக ரிப்பேர் செய்வது போன்ற பாவனையில்

லாரிக்கடியில் இருந்த பாண்டியிடம் ” ஏய் ! கேட் கீப்பர் வந்துட்டான்! அவன் பேச்சுக் கொடுத்தால் சமாளி!

நான் இதோ வந்திடறேன்!??”

“சரி…சீக்கீரம்…!” என்றபடி ஒரு பீடியைப் பற்ற வைத்தான் பாண்டி என்ற அன்வர்.

இருள் பரவ ஆரம்பித்தது.

****
அந்த கேட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த சென்னையின் புற நகர் பகுதி.

மெதுவாய் அவன் அந்த வீட்டின் கதவினைப் பூட்டியபடி கடிகாரத்தில் நேரம் பார்த்தான். 6:15 என டிஜிட்டல்

சொன்னது.

மூடிய பூட்டை இழுத்துப் பார்த்து தோல்பையிலிருந்த அந்த சின்ன செல்போன் எடுத்து எண்களை ஒத்தினான்.

சில பீப்களுக்கு பின் மறுபுறம் ரிங்கியது.

“ராசு ! நான் தான் கோபி பேசறேன்! நான் கிளம்பிட்டேன் ! இனி நான் செல்போனில் பேசமுடியுமா

தெரியில.. !”

“தலைவரே! எங்க இருக்கீங்க?”என்றான் பாண்டி.

“ஷ்ஷ் பதில் பேசாதே! செல்லை ஆன்-லேயே வை !”

செல்போனை மறுபடி பையில் வைத்தபடி நடந்தான்..

*****
சென்னை கமிசனர் அலுவலகம் அந்த இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இரண்டாவது தளத்தில் அந்த A/C கான்பரஸ் ஹாலில் எல்லா A.C-களும் கிசுகிசுத்த படி காத்திருந்தனர்.

“க்க்க்ம்ம்ம்” என்று செருமியபடி வேகமாய் அறையில் நுழைந்தார் ராகவன்.இன்று வரை அவர்தான் காவல்

துறைத்தலைவர்.

எல்லாரும் எழுந்து “குட் ஈவினீங் “என்றனர்.

“யெஸ் ! ஜெண்டில்மேன்! நேரமில்ல!? லெட்ஸ் ஸ்டார்ட்..! தம்பித்துரை இந்த CD-யை புராஜக்டர்

ஸிஸ்டத்தில் போடுங்க”

அறை மெல்லிய இருட்டாக்கப்பட்டது.ஒளிர்ந்த வெண்திரையில் சில புகைப்படங்கள் வந்தது.

“மை டியர் கொலீக்ஸ்! நல்லா பாத்துக்குங்க! இவங்க தான் நம்மள இன்னைக்குத் தூங்கவிடாம செய்யப்

போறவங்க!!”

இப்பொது ஸ்கீரீனில் புகைப்படங்கள் மெதுவாய் பெரிதாக்கப்பட்டது.

“இவன் தான் இஸ்மாயில் ..இவன் அன்வர்…அவன் ஹர்கத்கான்.,” என அணிவகுத்தார்.
“யெஸ் !உங்க யூகம் சரிதான்? இவர்கள் பாகிஸ்தானில் பயிற்சிப்பெற்ற சிறப்பு உளவாளிகள்.”

“லைட்ஸ் ஆன்” என்றார் ராகவன்.கேள்வி கேட்க எழுந்த சுப்ரமணியத்தைப் பார்வையிலேயே அடக்கியபடி..
“பிரண்ட்ஸ்! இப்ப முக்கியமான விசயம் என்னன்னா?? இவங்க ஒரு தலைவனின் ஆணைப்படி இயங்கும்படி

செயல்படும் வகையை சார்ந்த ….தீய்பா என்ற குழுவை சேர்ந்தவங்க!”

“நம்ம உளவுத்துறைக்கு வந்த தகவல்படி நாளை காலை நமது ஆந்திரா எல்லைப்பகுதியில் ஒரு அசம்பாவிதம்

நடக்கப்போகிறது ?? அது வெடிகுண்டா ! இல்லை வெடிகுண்டு கடத்தலா! நோ மோர் இன்பர்மேசன்…!!”

அறை முழுவதும் அமைதியாய் இருந்தது.

“உடனே செக்யூரிட்டி ஹை அலர்ட் பண்ணுங்க! எல்ல செக்போஸ்ட் ஆபிஸ்க்கும் இதை பேக்ஸ் பண்ணுங்க!”

” எனக்கு நாளை காலை நல்லபடி விடியனும்! அவ்வளவுதான்!” என்றார் இறுக்கமாக.

“சொல்ல மறந்திட்டனே? அதில் ஒருத்தன் செல் நம்பர் மட்டும் ட்ரேஸ் செஞ்ருக்காங்க !”

*******

ஒரு நீண்ட ஹாரனுடன் தடதடவென வந்த சார்மினார் கேட்டைக் கடந்து சென்றது.

“ராசு! அங்கே பார் நம்ம லாரி வருது..!” என்றான் பாண்டி.

தூரத்தில் மெதுவாக அந்த 20 சக்கர டிரெய்லர் முதுகு நிறைய புத்தம்புதிய குட்டிக்கார்களுடன் ஊர்ந்து வந்து

கொண்டிருந்தது.

“ஆனாலும் நம்ம ஆளுக நெட்வொர்க் பெரிசு தான் ..இல்லாட்டி நாளக்கு நடக்கப்போற அந்த கார் ஷோரூம்

திறப்பு விழாவுக்கு வரப்போற அந்த அரசியல் தலையைப் போட இப்படி ஒரு யோசனை தோன்றியிருக்குமா!”

“யேய் மெதுவாக பேசு..! ஆமா இதுக்கு எதுக்கு நம்ம தலைவர் வரார் அதான் எனக்குப் புரியிலே!”

“முட்டாள் எல்லா காரிலும் பாம் பிக்ஸ் பண்ணுனமில்ல!அதுக்குன்னு ஸ்பெஷலா தயாரித்த அந்த வஸ்து நேத்து தான் தலைவருக்கு வந்தது அத எடுத்துட்டு அவர் வரார்”

“சரி அதுக்கும் நம்ம இங்க காத்திட்டு இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்”

“தம்பி! இன்னும் 2 டிரெய்ன் கிராஸ் செய்யனும் ? எப்படியும் ஒரு ரெண்டு மணி நேரம் நமக்கு இருக்கு!
அதுக்குள்ள அந்த லாரியிலிருக்கிற எல்லா காரிலும் பிக்ஸ் செய்யனும்!?”
“உன் வேலை என்ன தெரியுமா ! அந்தலாரி வந்ததும் டிரைவரை எமலோகத்துக்கு பார்சல் செய்றது தான்

..!”

********

மீட்டிங் முடிந்து எல்லோரும் பரபரப்பாய் பேக்ஸ் மிஷின் முன் கும்பலாய் இயங்கிக்கொண்டிருந்தனர்.

“ஏன்யா ! வேலு ! உன் பிளான் என்ன! ” என்றார் ராகவன்.

“சார்! அந்த நம்பர் என்னனு சொல்லுங்க” என்றார் வேலு.

“வேலு!! ஏற்கனவே டிரை பண்ணியாச்சு! ரிங் போகுது தவிர யாரும் எடுக்கக்காணோம்?”என்றார் ராகவன்.

“என்னது… ரிங் போகுதா நல்லதா போச்சு!? சார் ! உடனே அந்த செல்போன்-ஹெட்ஆபிஸை கான்டெக்ட்

செய்ங்க”

“எதுக்கு??”

“அந்த செல் இப்ப எந்த டவர் கீழ் வருதுன்னு ட்ரேஸ் செய்து ஏதாவது க்ளு கிடைக்குமானுப் பார்க்கலாம்.”

சில சுறுசுறுப்பான நிமிடங்களுக்குப் பிறகு வேலு முகத்தில் புன்னகை.

“ஒகே! ரெண்டு டீமா கிளம்புங்க! நம்ம வண்டி வேண்டாம்!புரியுதா”

*******

அந்த மெய்ன் ரோட்டில் வந்து நின்ற டவுன் பஸ்ஸிலிருந்து கோபி இறங்கினான்.

இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகணும்.. அந்த ரெயில்வே கேட்டுக்கு என்று யோசித்தபடி மெதுவாய்

நடந்தான்.

செல்போன் கிணுகிணுத்தது.

எடுத்துப்பார்த்து புது நம்பராய் இருக்க எரிச்சலுடன் போனை கட் செய்தான்.

மெதுவாக ரோட்டைத் திரும்பி பார்த்தான். இன்னும் சிலரை இறக்கி விட்டு டவுன் பஸ் அருகிலிருந்த

ரோட்டில் வேற வழியில் ஊர்ந்தது.

தூரத்தில் எதாவது வண்டி வருதான்னு பார்த்தான்.

தோளில் இருந்த பையில் ‘அது’ அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தது.

ஒரு வேன் திருப்பத்தில் மெதுவாய் திரும்பியது.

கைக் கட்டை விரலை தலைகீழாய் திருப்பி ஆட்டியபடி நடு ரோடிர்க்கு வந்தான்.

முன்னாள் சாதரண உடையில் அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்துக்கேட்டான் கோபி

“கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
*
rbgrindia@gmail.com

Series Navigation

பால குரு ராஜன்

பால குரு ராஜன்