இரண்டு குறுங்கதைகள்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

முரளி இராமச்சந்திரன்


வரன்

‘என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா! ‘

‘கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம். ‘

‘என்னடி நல்ல முடிவு, தூ… அவனா எனக்கு மாப்பிள்ளை ? ‘.

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ஃபோன் போட்டு ,

‘நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.

ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம் ‘ என்றார்.

‘அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே ? ‘

‘சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும் ‘.


விபத்து

நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாாி வேகமாக வந்த

போது ஒரு குழந்தை திடாரென சாலையை கடந்தது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ‘ஐயோ! ‘ என்று அலறினர்.

அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த

எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,

‘இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தொியலை ? ‘

— முரளி இராமச்சந்திரன்

murmal@gmail.com

Series Navigation

முரளி இராமச்சந்திரன்

முரளி இராமச்சந்திரன்