என் சுவாசக் காற்றே

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

திருதிருக்கை


பாகம் – 1

2050-ம் ஆண்டு, காலை 9 மணிக்கு பரபரவென்று ரெடியாகிக் கொண்டிருந்தது அண்ணா சாலையில் அமைந்திருந்த பன்னாட்டு அலுவலகம் ஒன்று.

சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தனர் அலுவலகம் அமைந்திருந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு. ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய நு|ற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்ட அலுவலகத்தோப்பு.

ஏர்பிரஷ் என்ற கம்பெனி அமைந்திருந்த நான்காவது மாடிக்கு அசோக் லிப்டில் மேலெழுந்து கொண்டுருந்தபொழுது அவன் மனதிலும் எண்ணங்கள் எழுப்பிய அலை மேலெழுந்து அவன் முகம் முழுவதும் ரேகைக் கோடுகளைப் பரப்பி அவனுக்கு ஒரு முதிய உருவத் தோற்றத்தை தர முயன்று கொண்டிருந்தன.

இந்த சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதைப் போல் ஒரு சிறிய மணி ஓசையில் நான்காவது மாடி வந்துவிட்டதை அறிந்து விடுவிடுவென வெளியேறி வலது புறம் அமைந்துள்ள அலுவலகத்தை அடைந்தான்.

பாண்டியன் MBA என்ற பெயர்பலகை அவனை அறைக்குள் வரவேற்றது. அறை முழுவதும் பரவியிருந்த சுகந்தமான மணம் உயிரை உய்விப்பதாக இருந்தது. வெறும் ரூம் ஸ்பிரே மணத்தை போலல்லாமல் ஒவ்வொரு சுவாசமும் உள்ளத்துள் ஓராயிரம் உற்சாகங்களைத் தந்து விடும் அளவுக்க ஏதோ ஒரு அமைப்பில் இருந்தது. இதற்குக் காரணம் கட்டிட அமைப்போ, வாஸ்து சாஸ்திரமோ, வாசனை வஸ்துவோ, என்றெண்ணியபடியே பாண்டியனின் அறைக்குள் நுழைந்தான் அசோக்.

வாங்க சார் ப்ளிஸ் டேக் யுவர் சீட் என்ற அழைத்த பாண்டியனின் அழைப்பை ஆமோதித்து இருக்கையில் அமர்ந்தான் லீகல் அட்வைசர் அசோக்.

இந்த கம்பெனி ஆரம்பிப்பதற்கு நீங்க உறுதுணையாக ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கீங்க ஆனால் தொடங்கிய இரண்டு மாதத்துக்கள் 10 வருடங்களுக்கு தேவையான பிரச்சனைகளை நாம் சம்பாதிfத்து விட்டோம். இந்த பிஸினஸ்சை இந்தியாவிலே முதன் முதலாக சென்னையில் ஆரம்பித்து பெரும் தொல்லைகளிலே அகப்பட்டுக்கொண்டேன்.

என்ன பாண்டியன், எந்த பிஸினஸ்ல பிராப்ளம் இல்லாம இல்லை. நாங்களெல்லாம் எதற்கு இருக்கோம். எந்த மாதிரியான பிரச்சனைகளானாலும் மக்களிடையே பிரபலமாயிட்டா ஈஸியா சமாளிச்சுடலாம். நீ அமெரிக்காவில படிக்கிற சமயத்திலே பார்த்து, தெரிஞ்சு அனுபவிச்சதைத்தான் இங்க செய்ய நினைக்கிற. அங்க எப்படி இந்த பிஸினஸ் பிரச்சனை இல்லாம போய்கிட்டு இருக்கோ, அதே போல இங்கும் இது வர்ற நாள் வெகு தொலைவில் இல்லை.

அப்படி நான் நினைக்கில அசோக், நம்ம நாட்டு மக்களின் நினைப்பு, அறிவுத்திறமை, சட்ட சிக்கல்கள் எல்லாம் வெச்சே பார்க்க முடியாது.

சரிசரி அப்படி என்ன பிரச்சனை, விவரமாத்தான் சொல்லேன்.

நாம் சென்னையில அதிகாரப்பூர்வமான ஏன் இந்தியாவிக்கே அதிகாரப்பூர்வமான ஏர்பிரஷ் கம்பெனியோட ஏஜண்ட். நாம இந்த சிட்டியிலே 15 இடத்திலே ஏர்பிரஷ் ஷோரும் அமைச்fசிருக்கோம். இந்த மாதிfரி பொல்யூசன் ஆன சிட்டியிலே சுத்தமான காற்றை சுவாசிக்கிறதே பெரும்பாடாக இருப்பதை, சரி செய்யும் பொருட்டுத்தான், மக்களுக்கு சுத்தமான காற்றைத் தர 15 சுவாச ஷோரும்களை அமைச்சிருக்கோம். ஜனங்கள் எவ்வளவு நேரம் வேணுமோ அவ்வளவு நேரம் வந்து சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிச்சு நல்லா உடம்பை வச்சுக்கலாம் என்று ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளுக்கு விஸ்தரித்தோம்.

வீடுகளுக்கு சுவாசத்திற்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை சப்பளை செய்யும் எலக்ட்ரானிக் மெஷினைக்கூட இறக்குமதி பண்ணி சிட்டியில பத்து இடங்களில் இன்ஸ்டால் பண்ணி இருக்கோம். ஆனால் இப்ப என் பிரச்சனை வேற.

இதில்லெல்லாம் இல்லாத பிரச்சனை வெறென்ன ?

நான் இந்த புராஜக்ட்டை மெரினா பீச்சுக்கும் விரிவுபடுத்த விரும்புறேன். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடம் பீச்தான். அங்க நம்ம ஏர்பிரஷ் மெஷினை பிட் பண்ணி சுத்தமான ஆக்ஸிஜனை காற்றில் கலந்து விடறதற்கு செகரட்டிரியேட்டில் பேசினேன். அவற்களுக்கு இந்த விஷயத்தைப்பற்றி அவ்வளவு அறிவும் இல்லை, அவசியம்னும் அவங்க நினைக்கல. எனக்கு இந்த லட்டு மாதிரி பிஸினஸ் பண்ணக்கூடிய இடம் இருந்தும் அறிவில்லாத அதிகாரிங்களால் என்னால ஒண்ணும் பண்ண முடியலை. அதனால் முதலமைச்சரேயே நேரில் சந்தித்து இதனால் விளையக்கூடிய நன்மைகளை விளக்கிச் சொல்லலாம் என்று இருக்கிறேன். இதற்கு உன் ஆலோசனை என்ன ?

முதலமைச்சரேயேவா இதற்கு சந்திக்கணும் ?

என்னோட நோக்கம் பீச் புராஜகட்டை பத்தி பேசறது மட்டுமல்ல. என்னோட இந்த பிஸினஸ்க்கு சில மக்கள் அமைப்புகள் எதிரா செயல்படறாங்க. மக்களிடையே தவறா பிரச்சாரம் பண்றாங்க. காற்றை விக்கறாங்க என டிவியில கூட எதிர்ப்பிரச்சாரம் செய்யறாங்க இதையெல்லாம் சாமளிக்க, அடக்க எனக்கு அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பு ரொம்ப அவசியம். இதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்

என்ன அவங்களை அபிஸியலா பார்க்கணுமா ? இல்லை, வீட்டிலே பார்க்க முடிந்தாக்கூட போதுமா.

பாகம் 2

பாண்டியன் அமர்ந்திருந்த டோயோட்டா சிறு பரிசோதனைக்குப்பின் முதலமைச்சரின் வீட்fடினுள் அனுமதிக்கப்பட்டது.

தயாராக இருந்த முதலமைச்சரின் உதவியாளர் வரவேற்று, பாண்டியனை உள்ளழைத்துச்சென்றார். அறைக்குள் நுழைவதற்கு முன்பு தனது கம்பெனீ விவரங்களடங்கிய பிரிப்கேஸினை உதவியாளரிடம் தந்து விட்டு கூப்பிய கைகளுடன் சென்றான், பாண்டியன்.

வாங்க உட்காருங்கள் பாண்fடியன்.. என்று உபசரித்தார் வெள்ளிமுடி முளைத்த முதலமைச்சர்.

என்ன விஷயம் சொல்லுங்கஸ.

நான் உங்க உதவியாளரிடம் எல்லா விவரத்தையும் தெளிவாச் சொல்லியிருந்தேன்.. என்று ஒரு நிமிடம்…. இடைவெளிவிட்டான்.

ஆமாம் சொன்னார், இந்த பீச் ப்ராஜக்ட்டைப் பத்தியும் சொன்னார். ஆனால் அரசே இந்த மாதிரி முன்மாதிரியா சில புதிய புராஜக்ட்டை எடுத்து செய்யறதுக்கு சில தடைகள் இருக்கு. இருந்தாலும் இந்த புராஜக்ட் எனக்குகூட பிடிச்சிருக்கு. இதனால மக்களின் உல்நலத்துக்கு கேடு ஏதும் ஆகுமா.

அப்படி ஒன்னும் இதுவரை ரிப்போர்ட் இல்லை சார். யு எஸ்ல கடந்த பல வருடமா பல இடங்களில் இந்த மாதிரி யுனிட்கள் ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஏர்பிரஷ் கம்பெனியோட மொத்த வியபாரம் பல பில்லியன் டாலர்களுக்குமேல். இதிலிருந்தே நீங்க எந்தளவு இந்த பிஸினஸ்க்கு ஸ்கோப் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

அப்படி இருந்தாலும், காற்று இயற்கையில கிடைக்கிற ஒரு உருவமற்ற பொருள், அதை ஒரு வியபாரப்பொருளாக்கற மாதிரி அரசே செயல்படமுடியுமா ? அப்படியே இந்த புராஜக்ட்டை செயல்படுத்தினாலும் அதற்கான செலவை ஈடுகட்ட என்ன வகையில் அரசுக்கு வருமானம் வர்றதுக்கு வழி இருக்கு.. என்று கூறி தனது அறையில் மாட்டப்பட்டு இருந்த ஒரு நீண்ட மேகத்திரள் ஓவியத்தை உற்று நோக்கினார் முதலமைச்சர் அண்ணன் அழகுநாச்சி.

தப்பா நினைக்கிவில்லையென்றால், நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன், இது நாள் வரைக்கும் இயற்கை வளங்களை விற்றுத்தான் ஒவ்வொரு நாடும் முன்னுக்கு வந்துள்ளன. பெட்ரோல், இயற்கை எரிவாயு, தண்ணீர் ஆகிய இயற்கைப் பொருள்கள் யாவும் இன்று வியபாரப் பொருளாகி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய மக்களும் அதை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

அது மட்குமல்லாமல், பீச்சை ஒரு பொழுதுபோக்கிடமாக மக்கள் பல்லாண்டுகள் உபயோகப்படுத்தி வர்றங்க, அந்த மாதிரி இடத்தை சுத்தமா பாராமரிக்கறதுக்கு ஒரு சிறு நுழைவுக்கட்டணத்தை வசுலிப்பதில் தடையேதும் இல்லையே. இதுவும் 40,50 வருடமாக சென்னையிலே கிஷ்கிந்தா, ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பார்க் ஆகியவற்றில் செயல்படுத்தி வருவதுதான். போழுதுபோக்கிடங்கள் மூலமாக இந்த நிறுவனங்கள் இவ்வளவு ஆண்டுகளாக நன்றாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கும்போது அரசக்கு சொந்தமான பொழுதுபோக்கு இடங்களை து|ய்மையா பராமரித்து அதன் முலம் லாபம் தரும் திட்டங்களை செயல்படுத்தினா அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கவும், மக்கள் திருப்தியடையவும் ஒரு வழி கிடைக்கும்.

நீங்க சொல்றதை வச்சு பார்க்கறபோது எல்லாம் சரியா வரும் போலத்தான் எனக்கும் தோணுது. ஆனா நீங்க ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஏஜண்ட் நேரடியா என்னைச் சம்மதிக்கவெச்ச விஷயம் வெளிய தெரிஞ்சா, எதிர் கட்சிகளின் பாடு கொண்டாட்டம் தான். 1999 ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில பன்னாட்டு நிறுவனங்களின் பலத்தோடுதான் ? பல்வேறு அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன. அரசின் கொள்கை முடிவுகளை அவர்கள்தான் மறைமுகமாகத் தீர்மானிக்கிறார்கள். அதனால நீங்களே இந்த புராஜக்ட்டை என்னிடம் கன்வின்ஸ் செய்ததுபோலல்லாமல், எங்கள் துறைமூலமாக ஒரு அறிவிப்பு வெளியிடுறோம் அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக என்னென்ன இதற்கு செய்யமுடியுமோ அதை நான் செய்து தர்றேன்.

ஒரு காலத்திலே அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டைக்காட்டிலும் முன்னாடி இருந்தது, ஆனா நீங்க பதவிக்கு வந்ததிலிருந்து எங்கள மாதிரி நிறுவனங்களுக்கு காட்டற சலுகை இந்தியாவில தமிழ்நாட்டை மிக உன்னதமான நிலைக்கு உயர்த்திச் செல்லும். நான் கொண்டுவந்த டாகுமென்ட்களை உங்கள் உதவியாளரிடம் கொடுத்துள்ளேன்ஸ.. என்ற தகவலைத் தெரிவித்துக்கொண்டு மிக்க நன்றியுடன் விடை பெற்றுக்கொண்டான் பாண்டியன்.

****

thirukkai@gmail.com

Series Navigation

திருதிருக்கை

திருதிருக்கை