ரோஜாப் பெண்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

சாரங்கா தயாநந்தன்


அவள் முகம் மலர்ந்திருந்தது. ஒரு பூவின் மலர்வோடு ஒளி தங்கிய முகத்தின் விழிகள். ஒருவித னந்தக் கிறக்கத்தைப் போர்த்திருந்தன.மெல்லத் தன் வயிற்றை விரல்களால் வருடிய போது சொல்லவியலாத சந்தோஷத்தை உணர்ந்தாள். உள்ளுக்குள் வளர்கிற சின்ன உயிர் அள்ளி எற்றிய சந்தோஷந்தானே முழுவதும்.

அவன் இன்னும் சிறிது நேரத்தில் அலுவகத்திலிருந்து வந்து விடுவான். பிறகு இப்படி றுதலாக இருக்க முடியாது. அவனது பாஷையில் மகாராணி போல வீற்றிருக்க முடியாது. மகாராணிகள் மட்டுமா ஒரு ண்மகனின் முன் ஓய்வு கொள்ள முடியும் ? அவ்வாறாயின் அம்மா ஒரு மகாராணியாக இருந்தாள். வாழுங்காலம் முழுதும் தன் வசீகர விழிகளில் கண்ணீணிரின்றி வாழ்ந்திருந்தாள். .அது அவளது கெட்டித்தனம் இல்லை. அவளது பேசும் விழிகளைப் புரிந்து கொள்ளும் ற்றல் அப்பாவுக்கு இருந்தது. சில்லென்று வீசிய குளிர்காற்றில் சிலிர்த்தாள்.

‘ ‘குட்டி இளவரசிக்கும் குளிருமோ…. ‘ ‘

அம்மா இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். அவள் தான் அந்த அழகிய கிராமத்தை ஒதுக்கி , இந்த இயந்திர நகரத்தில் வாழ்க்கைப்பட்டாகி விட்டதே.

அவள் பார்வை தன்னிச்சையாக மதிலோரம் செழித்திருந்த ரோஜா வேலியில் படர்ந்தது. பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. அவை மெல்லச் சிரித்தன . னால் முள்ளிருப்பதில் பயமுறுத்தின. ‘ ‘வா பார்க்கலாம்…. ‘ ‘ சொல்கின்றனவோ ? அவளது மகள் கூட ஒரு ரோஜாப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். தன்னைத்தானே காவல் செய்யத்தக்க மகாசக்தியாக ஒளிரவேண்டும்.

‘ ‘ரோஜாப் பெண்….என் செல்ல ரோஜாப்பெண்…. ‘ ‘

கிசுகிசுப்பாய்த் தனக்குத்தானே சொல்லிப் பார்த்தபோது அளவிடமுடியாத திருப்தியும் சந்தோஷமும் மனதில் முட்டின. உலகம் வெளிப்பாகத் தோன்றியது.

அவள் உரத்துச் சிரிப்பதில்லை. பழகிப் போய் விட்டது. நல்ல குடும்பத்துப் பெண்கள் மிருதுவாகவே சிரித்துக்கொள்வார்கள் என்று அம்மா சொல்லியிருந்தாள். அம்மா உண்மையில் அன்பு காட்டியதில்லை. அன்பே அவளாக இருந்தாள். தன்னிரு கைகளுள் பொத்திய அதிஷ்ட முத்தாகத்தான் மகளைக் கருதிி யிருந்தாள். கண்ணம்மா என்று சொல்லி இவளை முத்தமிடுவாள். மடியில் படுத்தித் தலை கோதுவாள். இவள் கண்மூடிப் படுத்திருப்பாள். அம்மா நிறையக் கதைகள் சொல்லுவாள். கண்கள் மூடியிருக்க செவிகள் திறந்திருப்பது ஒருவகைச் சுகம். இவளுக்குச் சிறுவயதிலேயே பிடிபட்டுப் போயிருந்த சுகம் அது. அம்மாவின் உலகம் சிறு வட்டமிட்ட உலகம். உள்ளங்கை அனுபவம் அவளது. அவளது கதைகள் பெரும்பாலும் பெண்களின் பொறுமை பற்றிக் கூறும். இரவின் கனிந்த அமைதியில் அம்மாவின் குரல் ஒரு ராக இழையாய் எழும்பும்.

‘ ‘அது ஒரு அழகான கிராமம். வரட்சி கவ்விய பூமி. எங்கும் பட்டினி. பசியில் துடிக்கும் குழந்தைகளின் அழுகை ஓலம். வானம் பார்த்த பூமி மழைக்காய்த் தவங் கிடந்தது. ஒரேஒரு முறை வானம் திறக்காதா ? என்ற ஏக்கம்…. ‘ ‘

அம்மா கதையை நிறுத்துவாள். சொல்லப்பட்ட ஏக்கத்தை ழப்படுத்துவதான அந்த மெளனத்தை இவள் குழப்புவதில்லை. மெளனம் சிலபொழுதுகளில் அழகாகப் பேசும். அதனைக் காயப்படுத்தக்கூடாது. இவளது சின்ன மனம் முழுதும் கிராமம் விரியும்.

‘ ‘….அந்தக் கிராமத்தில் ஏழைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளது சின்ன மகள் கிரிசாம்பாள். சின்னஞ் சிறுமி. பொறுமை நிறைந்தவள். துடுக்குத்தனமும் குறும்பும் அற்றவள். நிறைய ண்பிள்ளைகளும் பின்னர் பெண்பிள்ளைகளுமான வரிசையில் இறுதியில் நின்றாள் அச்சிறுபெண். அவ்வூர்ச் செல்வந்தரின் உபயத்தில் மோதகங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. வம்புப் பெண்களும் குறும்புப் பையன்களும் கூச்சலிட்டபடி முண்டியடித்து விழுந்தெழும்பினார்கள். னால் கிரிசாம்பாள் அவ்விதம் செய்யவில்லை. பொறுமையோடு ஒதுங்கி நின்றாள். அவள் கண்களில் நம்பிக்கை. மோதகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை…. ‘ ‘

இவ்வாறாகத் தொடரும் கதை இறுதியில் பொறுமையுடைய அச்சிறுபெண் தங்க மோதிரத்தையுடய மோதகத்தைப் பெற்றாள் என்பதாகப் பொறுமையின் மகத்துவம் கூறும். இவ்வாறான பல கதைகள் அவளது வாழ்வை மென்மையாக வடிவமைத்தன.

பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ பொறுமையுடன் இருந்து கொள்ள வேண்டும். புருஷன் பிறன் மனை நாடிக் களைத்து வந்து கதவு தட்டும்போது முன் பொருநாளிலான அவனது ‘ ‘மாசறு பொன்னே…வலம்புரி முத்தே… ‘ ‘ உளறல்களை நினைவு கூர்ந்து அறுசுவை உணவைப் பரிமாறுவாள் பெண். அவள் கண்ணகி. அவளை உலகம் வணங்கும். அவன் பரத்தையரை விரும்பினாஅல் அவனைக் கூடையிலிருத்தி சுமந்து சென்று பரத்தையர் வீட்டில் விட்டு வருவாள் பெண். அவள் நளாயினி. புருஷன் மனதில் சந்தேகம் கிளைக்கிற பொழுதில் தீயினுள் பாயத்தக்கவள் அவளெனின் கற்பின் குறியீடாக க முடியும் அவளுக்கு. காலகாலமாய்க் கல்லாய்க் கிடந்து ஒரு ண்மகனின் பாதம் படுகையில் மீட்சியுறுவாள் அகலிகைப் பெண் .தான் மகாசக்தி என்பதைப் புரியாத பாவனையில் சிவனின் இடமாகி நளினஞ் சுமந்து அருள் நகை சொரியவேண்டும் அவள். அப்பெண்களின் நீட்டப்பட்ட வரிசையில் தான் நிச்சயமாய் இவள் நின்றிருந்தாள்.

அவன் த்திரமாய்க் கன்னத்தில் அறைந்த பொழுதில்கண்ணிர் குமிழ்க்கும் விழிகளை மெல்ல மலர்த்தி அவனைப் பார்ப்பாள்.

‘ ‘முறைப்பென்ன …வேண்டிக்கிடக்குது…. ? ‘ ‘

அவனது உறுமலுக்கு நிலம் பார்ப்பாள்.கண்ணிமைகள் வெட்டிக்கொள்ள கண்ணிர் கன்னங்களின் வழியுருளும். அவள் அதைத் துடைப்பதில்லை. காற்று அதை உலர்த்தும்.

வயிற்றில் அதிர்வு தெரிந்தது. மெதுவாக அசைந்தாள். னந்தச் சிலிர்ப்பு மீண்டும் உடலில் ஓடிற்று. பிஞ்சு மகள் காலால் உதைப்பாளோ ?கருவறையைச் சிறையாயாய்க் கருதிய ,சினத்தில் வெளிவரத் தவிக்கும் துடிப்போ ? ‘ இன்னும் கொஞ்ச நாள் தான். பொறுத்துக்கொள்வாய் என் செல்வமகளே ‘ என்று சொல்லுந் தவிப்பெழுந்தது.

கடந்த மாதந் தான் மகளெந்த் தெரிய வந்தது. அவன் உற்சாகம் வடிந்த முகத்தில் சற்றே சினந்தேக்கியபடி அந்த செய்தி கேட்டான். அவளுக்கு அப்படி இல்லை. அவள் உயிர் கொடுக்கின்ற புதிய ஜீவிதம் அந்த குழந்தை. மோத்த மகனையும் அவ்விதமே பாசங் ேகொண்டு வளர்த்த போதிலும் றாம் வகுப்பில் அவனை பிரிய வேண்டி ஏறபட்டது. அடுத்த நகரில் இருக்கின்ற பிரபலமான ண்கள் கல்லூரி விடுதியில் அவனைச் சேர்த்தபிறகு தான் விஷயம் அவளுக்கு தெரிந்தது. அவனது செயல்களில் குறுக்கிடுந் தைரியம் அவளுக்கில்லை.

அலுவலக வசதிகருதி அவனருகில் வாழ வேண்டியருந்தது. இப்போது விடுமுறைகளில் வரும் போது கூட வேறுயாரோ போல ஒட்டாமல் நடந்து கொள்கிறான் மகன். இவளின் இதயத்தை கசக்கி பிழியும் துயரமும் தனிமையும் ழமானவை. நீண்ட இடைவேளையின் பின் அவளை அதரவு செய்யக்கிடைத்திருக்கும் குழந்தை இவள். ஒரு பூவின் மகளென உலகிற்கு முகங் காட்ட போகிறாள் அவள். மென் சிவப்பு வர்ணப் பூக்கள் சிதறிய சட்டையைக் கைநீட்டி எடுத்தாள். இந்த பூக்களின் மேலே அழகான் மஞ்சள் மலராய் மகளின் முகம் மலரப்போகிறது.

‘பெயரென்ன வைப்பது அவளுக்கு ? ‘

யிரமாயிரம் பெயர்களைக் கற்பனையில் வைத்தாகி விட்டது. னால் மறுகணமே அவற்றை அழித்து எழுதி விடுகிறது அவளது தாய் மனம். ஒருநாள், மகளெனத் தெரியவந்த பிறகு அவனிடம் கேட்டாள்.

‘ பேரென்ன வைக்கிறது.. ? ‘

‘பிறக்கட்டும் பார்ப்பம். எதை வைச்சால் என்ன ?… ‘

கதை தொடராது முறிந்து போனது. னால் அவள் கனவுகள் முறியவில்லை.

‘துளசிகா ‘

மெல்ல அழைத்து பார்த்தாள். பிறகு அது துளசி எனவே சுருங்கும். துளசி என்றால் புகழ். அவளது சின்ன மகள் புகழின் ஒளிர்வில் வசிப்பாள்.

‘நிதர்சனா ‘ என்று அழைக்கச்சொன்னாள் அம்மா. பேரக்குழந்தை உண்மையின் உறைவிடமாக திகழ வேண்டுமாம். அனால் பழகிப்போன பெயர்களில் ஒன்றாய் காற்றிழுத்துச்செல்லும் பெயரது. வேண்டாம். ‘துளசிகா ‘ கூட பொதுவான ஒரு பெயராகத்தானிருக்கிறது.

‘யுகசாதனா ‘ என அழைக்கலாம். யுகங்களை கடக்குக்ம் வண்ணம் சாதனைகளை செல்ல மகள் செய்வாள். காற்று அவள்பெயரை காலகாலமாய் காவித்திரியும். னால் அவ் அழகிய பெயர் ‘யுகா ‘ எனச்சுருங்கிக் கருத்திழந்து போகும் பத்துண்டு. இனிய பூக்களின் நறுமணங்காவிய தென்றல் அவள் சூட்டிப் பார்க்கும் அழகிய பெயர்களை அவளது மிர்துவான் குரலில் காவிப்போகும். அதிகாலையில் எழும் பறவைகளின் கீதங்கள் போல இனிமையாக ‘அம்மா ‘ என்று குட்டிமகள் அழைக்கும் நாளுக்காய்த் தாய்மனம் ஏங்கிற்று. மறுகணமே அழகிய சந்தனநிறப் பட்டுப்பாவாடை சட்டையோடு இவளது சுட்டு விரலைப் பற்றி நடக்கின்ற சின்னப் பெண்ணாய் மகளின் தோற்றம் கண்டாள். பின்னர் ஒரு அழகிய கன்னிப்பெண்ணாய் செல்ல மகள் நடந்தாள். சுருங்கச் சொன்னால் மகள் பற்றிய நினைவுகளால் மட்டும் நிரம்பிய தாயின் உலகம் அது.

‘சித்திரா… ‘ அவளது அதிகாரம் நிரம்பிய கண்டிப்பான குரல் அவளைக் குறுக்கறுத்தது. பதட்டமாய் எழுந்தாள். இரண்டந்த்தடவை கூப்பிடுவதற்கிடையில் அவனுக்கு கோபம் பொங்கும். கோபப்படுவது அவனது உரிமை எனச் சின்ன வயதில் படிவித்தவர் யார் ? அவளுள் வழமையான கேள்வி எழுந்தது. அவசரமாய் நடந்து போய் கதவு திறந்தாள். அவளது குங்குமம் துலங்கும் பொன்னிற முகத்தை அவன் ஒருமுறை உற்றுப்பார்த்தான். நெற்றியோரம் துளிக்கின்ற வியர்வை பற்றி அவன் விசாரிக்க கூடாதா ? என்ற ஏக்கம் முன்பொரு காலம் அவளிடம் இருந்தது. னால் இப்போது அவ்விதமாக இல்லை. திரும்பி நடந்தாள். பிறகும் குழந்தையின் அதிர்வு உணர்ந்தாள்.

‘ரோஜாப் பெண்ணே பொறுத்துக் கொள்வாய்,

அம்மாவின் கடமை முடிந்த பிறகு காணலாம்.

அம்மா உன்னோடு கதைத்துக்கொள்ளலாம்.

பொறுத்திரு குட்டிப் பெண்ணே…. ‘

மனதினுள் எண்ணம் ஓடிற்று. அவன் முகங்கழுவப் போனான். அவள் சாப்பட்டறை நோக்கி நடந்தாள். அவனுக்குத் தானாகப் பரிமாறக்கொள்ள முடியாது. பழகிப்போய்விட்டது. பரிமாறும் செயல் தாயிடமிருந்து மருமகளுக்கு செல்கின்ற போதில் ண் அதைச் செய்து கொள்ள வேண்டியதில்லையாம்.

‘சித்திரா ‘

அவன் உரத்து அழைத்தான்.

அக்குரல் அவளது காதுகளை வலிமையாக அறைந்தது. வீட்டின் பின்புறமிருந்து வந்தது அழைப்பு. அவள் அவசரமாய் நடந்தாள். அவன் கிணற்றடியில் நின்றான். குளிர் நீரால் முகத்தை கழுவிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

‘கணேஷ் வந்தானா ? ‘

‘இல்லை ‘ மெலிந்த குரலில் சொன்னபடியே மேலதிகமாக வலம் இடமாக தலையை அசைத்தாள். அவன் வீட்டினுள் வந்த பிறகு றுதலாகக் கேட்டிருக்கத்தக்க கேள்வி அது. அவன் பின்னால் நடந்தாள். அதே கேள்வியை சாப்பாடு பரிமாறுகையில் சினேகபூர்வமாக கேட்டிருக்க கூடாதா ? என்ற ஏக்கம் அவளுள் கிளர்ந்தது. அவ் எண்ணம் கிளர்ந்ததற்கான சாயலே இன்றி சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள். மனதினுள் ரோஜாப் பெண் வந்த பிறகு முன்போலப்ப் பதுமையாக இருக்க முடியவில்லை அவளுக்கு.

வைத்திய சாலை கட்டில். வலதுபுறம் திரும்பிப் படுத்தாள். பிஞ்சுமகள் பூவாய்ப் பிறந்தாயிற்று. அவளது இடுப்பினுள் சின்னஞ்சிரு பூம்பாதங்களை நீட்டி இருந்தாள் குழந்தை. அவள் மனதில் மகளுக்கு வைத்து பார்த்த பெயரெல்லாம் ஊர்வலம் போயின.

‘ஸ்வேதிகா…. ‘ மிருதுவாய் அழைத்தாள்.

ஸ்வாதி பிரகாசமிக்க நட்சத்திரம். ஸ்வஸ்திகம் வணங்குவதற்குரிய சின்னம் மேலும் அழைக்கும் போது நொறுங்கிப்போகாத பெயரிது. அவளுக்கு மிகப் பிடித்திருந்தது.

‘என்… ஸ்வேதிகா… ‘

இந்தக் குட்டிப்பெண் அவளது வாழ்க்கைத்தோட்டதின் அற்புதமான் மலர். அவளை அன்பும் துணிவும் கொண்டவளாக வளர்த்துவிட வேண்டும். பெயர் சொல்லா மூடப்பதுமையல்ல அவளது செல்லமகள். நியாய அநியாயங்களின் வழி போராடுந் திறமை மிக்கவள்.

காலடிச்சத்ததுக்குத் திரும்பினாள். அவன் நின்றிருந்தான். அவளுள் தன்னையறியாத அன்பு சுரந்தது. அவனது விழிகளைத் துணிவாக சந்தித்தாள். அனால் அம்முகத்தில் எந்த மென்மையான உணர்வையும் கண்டாளில்லை. உணர்ச்சியற்ற இரு சிறிய விழிகளையே அவள் கண்டாள். மெல்ல விழிகளை தாழ்த்திக் கொண்டாள். அவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தால் நல்லது என எண்ணத் தலைப்பட்டாள்.

‘சுகந்தினி… என்று கூப்பிடலாம் ‘

அவளது நினைவுகளை ஒருநாள் தன்னும் குறுக்கறுத்திராத பெயரை அவள் பிரேரித்தாள். ‘பொதுவான பெயர் ‘ விசேஷமில்லை. பாடசாலை நாட்களில் தந்தையின் பெயரோடு மட்டும் மகள் அறியப்படுவாள். சு.சுகந்தினி என்றும் நாளடைவில் ‘சுனா ‘ என்றும் அப்பெயர் நிலவும். பெயரில் கூட தனித்தியங்கும் வல்லமையற்றவள் க மகள் இருக்க வேண்டாம். சுகந்தனின் மகள் என்பதை ‘சுகந்தினி ‘ என்பதி வலியுறுத்த வேண்டாம். அவள் தன் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

‘ஸ்வேதிகா என்ற பெயரை வைக்கிறதாய் நான் தீர்மானிச்சிட்டன் ‘ அவன் முகம் மாறிற்று. குரலிலிருந்த உறுதி அவனைத் திகைக்க வைத்தது. அவள் அவனது விழிகளை தொடர்ச்சியாக் நோக்கினாள். அவன் மெளனமாய் விலகிய போழுதில் குழந்தையின் பக்கம் திரும்பிப் படுத்து மெல்லக் குழந்தையின் தலை வருடி அழுத்தமாக உச்சரித்தாள்.

‘ஸ்வேதிகா… ‘

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்