படகு அல்லது ஜெயபால்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அம்ாிதா ஏயெம்


வட்டமான அந்த கூத்துக் களாியிலிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பச்சையோலையால் கிடுகு இழைத்து, வட்டமாக ஒன்றரை அடி மண்ணுக்குள் புதைத்து, குருத்த மணல் கொட்டி, அடித்து இறுக்கி போடப்பட்ட மண் மேடை அது. இந்த மண் மேடைதான் கூத்துக் களாி. வெள்ளாமை வெட்டு முடிய கூத்து சீசன் ஆரம்பமாகும். இது தலித்துக்களின் கலை. கூத்துக் கட்டும் அண்ணாவிமாருக்கு இந்தக் கிராமப் புறங்களில் மதிப்பே தனிதான். நகரப் புறங்களுக்கு ஒருவேளை இந்தக் கூத்துக்கள் வெறும் கூத்துக்களாகத் தொியலாம்; பச்சோலையால் இழைத்த, என் காலுக்குப் பக்கத்திலிருந்த அந்த கிடுகை தொட்டுப் பார்த்து தடவுகிறேன். முந்தாநாள் இரவு அருச்சுனனும் அல்லியும், கண்ணனும் இல்லாவிட்டால் வேறு யாரெல்லாமோ வீரபிரதாபம் பேசி அமர்க்களம் நடாத்தி சண்டை பிடித்திருப்பார்கள். கஞ்சன் சண்டையா ?, அல்லி அருச்சுனாவா ? அல்லது கண்ணன் சண்டையா ?, தென் மோடியா ? வடமோடியா ? என இந்தக் கடலின் அலைபோல் மனம் அலை பாய்கின்றது. எச். ஜி. வெல்ஸின் கால இயந்திரமோ சேதனம், ஸ்துாலம் இரண்டையும் காவிக்கொண்டு நிகழ்காலத்தைவிட்டு தப்பித்து, மற்றக் காலங்களுக்கு போகுமாம். அல்பர்ட் ஐன்ஸ்ரைனின் சார்பியல் தத்துவம்கூட இதை ஓரளவு எதிர்காலத்துக்கு நிரூபிக்கின்றது. ஆனால் இந்தக் கூத்துக்களோ சுயநினைவீனுாடே சேதனத்தை சுமந்து எங்களை இறந்த காலத்திற்கு கொண்டுபோய் மீண்டும் நிகழ்காலத்தில் கொண்டு விடும் என்று எத்தனைபேருக்கு தொியுமோ ? தொியாது.

வாரத்திற்கு ஒரு நாள் எனது கெம்பஸின் கிழக்கு பக்கமாக எட்டு கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற இந்த கடற்கரை கிராமத்திற்கு ஆய்வுக்காக வருவது வழக்கம். அருச்சுனன் என்னென்ன மீன் பிடி உபகரணம் பாவிக்கிறார்கள், பிடிபடும் மீன்களின் இன ாீதியான மொத்த அளவு, மொத்த இனங்களின் மொத்த அளவு, ஒவ்வொரு மீன்இனங்களினதும் குறிப்பிட்ட சில மீன்களின் நீளம், அகலம், நிறை போன்றவற்றை அறிவதற்கு உதவுவான். அல்லியோ கடலாமை, சுறா, திமிங்கில மீன்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பவளப்பாறை பிரச்சினைகள், கடல் நீாின் மேல் கீழ் வெப்பம், உவர்த்த தன்மை, அமில-காரத் தன்மை, மின்சாரக் கடத்துதிறன், ஒக்சிஜன் அளவு, என்பவற்றை அளந்து அறிவதற்கு உதவுவாள். கடற்கரையெங்கும் மீன்பிடித்தும், தோணி தள்ளிக்கொண்டும் இருக்கும் கடவுள்களும், தேவர்களும், அரக்கர்களும், அரசர்களும், அரசிகளும், தோழர்களும், தோழிகளும் ஏதொவொரு வகையில் எனக்கு உதவி செய்வார்கள்.

கரை வலை வேலைகளை முடித்துக் கொண்டு தோணிகள், படகு(போட்)கள் பக்கம் போவதற்கு முன்னர் தலை நகாின் வகை தொகை தொியாத கைதுகளில் அகப்பட்டு ஜெயிலில்வாடும் கைதிகளைப் போல் அநாதரவாகவும், கேட்பாரற்றும் கிடந்த இந்த கூத்துக் களாியின் மேலிருந்துதான் நான் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது தொப்பியை மேலுயர்த்தி நேரே நிமிர்ந்து பாாக்கிறேன். அந்த நீலக் கலர் படகு (போட்) குப்புற கிடந்தது. எனது கட்டு வலை வேலைகளை முடிக்க வேண்டிய இடத்திலும், நுாற்றுக் கணக்கான கரையில் தள்ளிவைக்கப்பட்ட தோணிகளுக்கிடையிலும், பல படகுகளுக்கியைிலும் எனக்கு முப்பதடி முன்னால் புரண்டு கிடந்துது. புரண்டதா ? அல்லது புரட்டப்பட்டதா ? என கிட்டப் போய்ப் பார்க்கிறேன். வயலினின் மெல்லிய இழையை இழுத்துவிட்டாற் போல் மாதிாி மெல்லிய ஒரு அமைதி என்னுள் அந்த படகினால் குடிகொள்கின்றது. புளு மறைன் ஸ்டார் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட பதினொன்று தர நான்கு அடி படகு. படகில் இரண்டு வகை ஒன்று இன் போட். மற்றது அவுட் போட். அந்தப் புரண்ட படகு அவுட் போட் வகை. புரண்டு குப்புற கிடந்த படகை தொட்டு, தொட்டு, தடவிப் பார்க்கிறேன்.

அந்தப் படகின் முகமோ நீள்வட்ட முக்கோணம். தலை கொஞ்சம் உருண்டையாகி தட்டையாகியிருந்துது. நடுவால் புறித்துவிடப்பட்ட தலை. அலையை கிழித்து, நுரை மேலெழும்ப வெள்ளைப் பல் காட்டி சிாித்து கரையை நேக்கி வரும். இப்படித்தானே நான் என்ன உதவிகள் கேட்டபோதெல்லாம் சிாித்தது. செய்தது. செய்துவிட்டும் சிாித்தது. அப்போதுதான், நடுச்சாமம் கடலுக்குப் போய் காலை மீன் பிடித்து திரும்பியிருந்தாலும், அந்த ஊரவர்களால் கடலாமைகள் வலையில் சிக்குப்பட்டதாக அல்லது கொல்லப்பட்டதாக எனக்கு கிடைத்த செய்தியின் நிமித்தம் நான் கடலுக்கு போக வேண்டியிருந்தால், உடனே மறுப்பேதும் தொிவிக்காமல் சிாித்துவிட்டு படகை எடுத்து என்னை மூன்று, நான்கு கிலோமீற்றர் துாரத்துக்கு கடலுக்குள் கூட்டிப்போகும். பின் கரை வந்து ~செலவெல்லாம் என்னமாதிாி| என்று நான் கேட்டாலோ மறுத்து கோபித்து சிாிக்கும். சில வேளைகளில் பீல்ட் ஸ்ரடிக்கு கூட்டிக்கு போகும் பிள்ளைகளுக்கு, அது பிடித்த மீன்களை ஒவ்வொன்றாய் துாக்கி காட்டி விளக்கம் கொடுத்தாலோ அதற்கும் பொறுமையாய் சிாிக்கும். இந்த நுரையெல்லாம் விரவிக்கிடப்பது அதன் சிாிப்புக்கள்தான் .

படகின் தோளைப் பார்க்கிறேன். கறுத்த வலிமையான தோள். எவ்வளவு பாரங்களைச் சுமந்திருக்கும் தோள். சொந்தப் பாரங்களை மட்டுமா ? குடும்பப் பாரங்களை மட்;டுமா ? இது சுமந்திருக்கும். அண்ணன் இளவயதில் திருமணம் முடித்துவிட்டுப் போக, அதுதானே குடும்ப படகைச் சுமந்து சுமந்து ஓட்ட படகோட்டியது. தன்னைப் போல் தன் தம்பி படகாய் மாறி, காற்றிலும், அலையிலும் அடிபடக் கூடாதென்றல்லவா, தம்பியை தன் தோழில் தாங்கி படிக்க வைத்தது. எவ்வளவோ சமூகப் பிரச்சினைளைத் தாங்கியதுதானே அந்த தோள். அதற்கு அதன் கறுத்த தோள்கள்தான் அழகு. நான் கடலுக்குள் போகும் போதெல்லாம் அதன் தோள்களில் இருந்துதான் போவது வழக்கம். தோள்களில் இரண்டு தோள் மூட்டுக்கள் நைலோன் கயிறினால் செய்யப்பட்டிருந்தன. புடைத்த வட்டமான வலிமையான தோள்மூட்டுக்கள். அந்த தோள் மூட்டுக்களிலிருந்து இரண்டு துடுப்புக் கைகள் தொடர்ந்தன. திரண்டு, புடைத்து, உருண்டு, நீண்டு நுனியில் அகலமாய் முடிந்திருந்தது. கடலுக்குள் என்ஜின் பழுதானாலோ அல்லது வலை கட்டப்பட்ட இடங்களுக்கு மேலாய் செல்லும் போதோ, காலில் வலை சிக்குப்பட்டு, வெட்டுப்படாமல் இருக்க என்ஜின் உயர்த்தப்பட்டு இந்தக் கைகள்தானே உடம்பை இயக்கி கொஞ்ச துாரம் கொண்டு போகும். உடம்பு முன்னே போக, கைகள் பின்னால் நீருக்குள் அமிழ்ந்து, இரு அங்கையாலும், குளக்கோட்ட மன்னனின் மனம் போல் நீரை மொண்டி மொண்டி ஊற்றும். இந்தக் கைகள்தானே எவ்வளவு பேருக்கு உதவிகள் செய்தது. இந்தக் கைகள் தானே எனக்கு கடலாமைகள், பொக்ஸ், பபர் மீன்கள், சிலந்தி, நட்சத்திர. கணவாய், பவளப்பாறை மீன்;களை மியுசியத்திற்காய் வாாி வாாி வழங்கியது. படகு இப்படி புரண்டு கிடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னேயும், இந்தக் கைகள்தானே எனக்கு இரு கடற்குதிரைகளும். ஒரு சிறு கடலாமையும் பிடித்து அனுப்ப இருந்தது. ~இன்று வெள்ளிகிழமை, இதெல்லாம் கிருஸ்ணணின் வாகனம்| என்று தந்தை சொல்ல, அதே கைகள்தானே மிண்டும் கடலுக்குள் கொண்டு பிடித்தவற்றையெல்லாம் போட்டது. எவ்வளவு தரம் நிறையப்பேருக்கு பணமாய், கறியாய், உதவியாய் இந்தக் கை உதவியிருக்கும்.

நெஞ்சைத் தொடர்ந்து இடுப்புத் தொடர்ந்தது. அகன்று ஒடுங்கத் தொடங்கியது. என்ன வயிரமான இடுப்பு. இந்த இருபக்க இடுப்புகளில்தானே நான் கடலுக்கு கூட்டிச் செல்லும்,; பெட்டைகளையும் பெடியன்களையும் சமனிலைக்காக சமமாக இருக்க வைப்பது வழக்கம். இந்த இடுப்பிலிருந்துதானே ஒரு தடவை ரோகிணி கடலுக்குள் என்னைத் தள்ளிவிட்டு ~எப்பிடி அண்ண.. உங்களுக்கு கடலுக்குள்ள பாயிறதுக்கு தைாியம் வந்தது| என்று கேட்டாள். இந்த இடுப்பு நிறைய கதைகள் பேசும்.

இடுப்புக்குக் கீழிருந்து கால் தொடர்ந்தது. சுழன்று, சுழன்று ஓடக் கூடிய கால். என்ன வயிரமான கறுத்தக் கால். சாறனை மடித்துக் கட்டிவிட்டு படகிலிருந்து பாயும். அந்த உருண்டு, திரண்ட கறுத்தக் காலே அதற்கு கவர்ச்சிதான். வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்களை சந்தித்த கால். பிரச்சினைகளைத் தாங்கிய கால். வாழ்க்கைப் போராட்டங்களால் வலிமை குன்றி வலுவிழந்து வீழப் போன கால்களை நிமிர்த்திய கால். நிறையக் குடும்பங்களை வாழ வைத்த கால்.

படகின் வயிறு தட்டையானது. கறுத்தது. படகு என்பது பிள்ளை. கடல் என்பது அன்னை. ஏனெனில் கடல் உணவு கொடுக்கும். பின் சுமக்கும். பின் அலைகளில் வைத்து தாலாட்டும். தாயோடு எப்போதும் பிள்ளைக்கு தொப்பூழ் கொடியோடுதானே நேரடித் தொடர்பு. படகின் வயிறும் கடலுடன் எப்போதும் நேரடித் தொடர்பாகத்தானே இருப்பது வழக்கம். பசியென்று படகு சொல்ல கடல் வாவெங்கும். வந்தால் சுமக்கும். மீன் கூட்டங்களை, வயிற்றுக்குள் அனுப்பி பசி போக்கும். இதனால் பல போின் பசி தீரும்.

படகின் மனம் எங்கேயிருக்கிறது என்று தேடுகிறேன். பல நியுரோன்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு மனமெனப்படுவது என்கின்றது விஞ்ஞுானம். மனம் என்பது ஸ்துாலமா ? சேதனமா ?. எனக்கோ கண்ணுக்கும் தொியாமல், காற்றுமாய் இல்லாமல், காந்தமுமாய் இல்லாமல், ஏதோ ஒரு அலையாய் உடம்பைச் சுற்றி மனம் இருக்கலாம் எனப்படுகின்றது. மனம் என்பது படகின் உறுதி. இந்த மனம் தானே உறுதிக்கு காரணம். அன்றொரு நாள் ஒரு பொிய அலை படகை குப்புற புரட்ட, படகு தலைகீழாய் கவிண்டு பூமியில் தரை தட்டியது. படகுக்குள் வெளிவர முடியாமல், பதினைந்து நிமிடம் படகுக்குள் அகப்பட்டு படகு போராடியதே. படகு புரண்டதை கண்டு கரையிலுள்ளவர்கள் தானே பாய்ந்து வந்து வெளியே இழுத்து படகை மீட்டார்கள். உடலினதும் மனதினதும் உறுதிதான் இந்த நாற்பத்தியிரண்டு அடி ஆழத்திலிருந்து படகை காப்பாற்றியது. மனம்தான் ஈகைக்கும் காரணம். சமூகச் சிந்தனைகளுக்கும், பொதுச் சிந்தனைகளுக்கும் காரணம். மனம்தான் தான் சார்ந்த இனம மக்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களுக்கெதிராக எழுவதற்கும் காரணம். மனம்தான் விருப்பத்திற்கும் காரணம். விரும்பப்படுவற்கும் காரணம். காதலிப்பதற்கும் காரணம். காதலிக்கப்படுவதற்கும் காரணம்.

படகு கரையை விரும்பியது. ஊட்டி, சுமந்து தாலாட்டி வளர்த்த கடல் தாய் கரையை விரும்பவில்லை. கடலுக்கு வராமல் நிறைய நேரங்களில் படகு கரையிலேயே நின்றது. கடலுக்கும், படகுக்கும் தர்க்கங்கள் தொடங்கின. கடல் பொங்கியது. படகோ தத்தளித்தது. படகு, கடலை கோபித்தது. கடலுக்குள் போகாமல் இருந்தது. ஒரு நாள் உச்ச கட்ட கொந்தளிப்பு வெடித்தது. கடல் ஆக்ரோசமாய் வார்த்தைகளை கொட்டித் தீர்த்தது. படகோ அமிழ்ந்து எழுந்தது. கரைக்குப் போய் குப்புறமாய் விழுந்து புரண்டு கிடந்தது. அது மல்லாக்க படுத்திருந்த மாமரத்தடி மணலில், தலை குப்புற, வாயால் இரத்தம் ஒழுக, கைகளிரண்டும் வயிற்றுப் பக்கம் மடங்க, கால் உட்புறமாய் துவள, விழிகளிரண்டும் மேற்திறக்க, பற்கள் தொிய, உடம்பு வளைய குப்புற கிடந்தது. மூன்று கணத்தில் முடிக்கும் அதை பாவித்தது என்று உணர மூன்று கணமும் எடுக்கவில்லை.

காதல் என்பது உடம்பா ? மனமா ? அழகா ?. உடம்பின் அழகா ? மனத்தின் அழகா ? . காதல் என்பது அடங்குவதா ? அடக்குவதா ?, ஆழுவதா ? ஆழப்படுவதா ?, வளைத்தலா ? வளைதலா ?, மயங்குதலா ? மயக்குதலா ?, கவருதலா ? கவரப்படுதலா ?. காதல் என்பது முகமும் அல்ல. முடியும் அல்ல. பல்லும் அல்ல. காலும் அல்ல. காதல் சதைகளைத் தாண்டியது. காதல் என்பது முகமூடி களைந்து, உளவியல் தந்திரோபாயம் தவிர்த்து மதித்தல். மதித்தல் என்பது கடலை மதித்தலா ? கரையை மதித்தலா ? படகு தன் சுயத்தை மதித்தலா ?. எதை மதித்தல் ?. காதல் என்பது அறிந்து கொள்ளல், உதவல். காதல் என்பது காதலிக்கப்படுபவாின் சூழ்நிலைகளோடு அவரைப் புாிந்து கொள்ளல். காதல் என்பது கருகிச் சிதைந்தாலும், சிதைந்து கருகினாலும், அந்தம் வரை இருப்பை நேசித்தல். இருப்புக்கள்தான் உலகை ஓடவைத்து வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. இருப்புக்கள்தான் காதலின் சங்கமம். எனவே காதல் என்பது காதலிக்கப்படுவாின் சூழ்நிலைகளோடு அவரைப் புாிந்து, அவாின் இருப்பை நேசித்து, தேவையேற்படின் காதலிக்கப்படுபவாின் நலன்களுக்காக காதலை தியாகித்தல். இது பாலகுமாரனிஸம். அல்லது இது ஒருவேளை வைக்கம் முகம்மது பசீாின் ~தி ஸ்வீட் சேட் பொயம்; | (ஒரு துயரத்தின் இனிமை கலந்த மோகன காவியம்) மாதிாி என்னவோ ?. காதல் என்பது இறுதி வரையில் ஏகத்துவமானது. காதலில் தோல்வி என்பது இல்லை. காதலில் தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதம் அல்ல. அது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத மனங்களின் முரண்பட்ட நிலை, பக்குவமற்ற தன்மை, ரெளத்ரம். இவைகளினால்தானே இந்த படகும் புரண்டு கிடக்கிறது.

இப்போது பொிய அலை மோதி தெறித்த நீர், படகின் முகத்தால் வழிந்து கொண்டிருந்தது. தொட்டு நக்கிப் பார்க்கிறேன். உப்புக் காித்தது. அன்று படகின் தாயும் இப்படித்தானே அழுது கதறிய கதறுவையும், தாயின் முகத்திலிருந்து படகின் முகத்தில் வீழ்ந்த கண்ணீரும் எனக்கு இன்னும் ஞுாபகம். கரைகளை தொடாத அலைகளுக்கும், கரைகளை தேடிய படகுகளுக்கும் ஆண்டாண்டு காலமாய் உள்ள பிரச்சினை எப்போது முடியுமோ ?. பாவம் படகுகள். பாவம் கரைகள். பாவம் கடல்கள். எனக்கு இப்போது கண்ணில் நீர் முட்டி கண்ணீர் வரப் பார்க்கிறது. மனம் பொருமி விம்மப் பார்க்கிறது.அந்த அவுட்டாகிப்போன அவுட்போட் படகை ஐந்து, ஆறு தடவை சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன். தொட்டு தொட்டு பார்க்கிறேன். படகுக்கு கண்ணீர் வழிய முத்தமிட்டு எனது சைக்கிளை நோக்கி நடக்கிறேன். ஜெயபால் செத்துவிட்டான் என்று யார் சொன்னது ?.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

அம்ாிதா ஏயெம்

அம்ாிதா ஏயெம்