கா ற் று த் த ட ம்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சைதன்யா


—-

ஆனால் கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது சோகங்களை அலையெனப் புரட்டுவதாகவே இருக்கிறது. அல்லது நினைவுகள் சோகத்தின் மீளாத் தாலாட்டில் அலைக்கழிக்கப் படுகின்றன. மெளனம் நீண்ட கடற்கரை வெளுபோல உலவக் கிடக்கிறது. சிறு நிழலும் ஒதுங்க இல்லை அங்கே. சற்று துீரத்தில் இடப்பக்கமாக கடல் தன்பாட்டுக்குப் பொங்கிப் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. அது இன்னொரு உலகம். பிராகார ஓரத்தில் கட்டிப் போட்டிருக்கிற கோவில்யானை சும்மா தும்பிக்கையாட்டிக் கொண்டு யாருக்காகவும் இல்லாமல் காத்திருக்கிறதைப் போல… யானைக்குத் தனியுலகம் உண்டா ? யார் கவலைப் படுகிறார்கள். அது வேறுலகம். அருகில் இருந்தாலும் நம் உலகம் வேறு. வேடிக்கை பார்த்தாலும் அதன் உலகம் புரிபட சாத்தியமில்லைதான்.

காலம் கதவைச் சாத்திக்கொண்ட கணங்கள். நியதிகளை விலக்கி நிறுத்திக்கொண்ட கணங்கள் அவை. சிறு உலாவலில் ஒரு சிறு கிரணம் உள்ளே விழுந்து அப்படியே தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. கிரணம் பயணப்பட விருப்பங் காட்டாதது வியப்பே அல்லவா ? காலம் அதை அனுமதித்தது அதனினும் ஆச்சரியமான விஷயமே…. விஷயங்கள் புரிந்தபோது எட்டிய சமாச்சாரம் இதுவரை நமக்கு அந்த விஷயம் புரியவில்லை என்பதே. அதைத் தெரிந்து கொள்வது வெற்று வாயை அசைபோடுவது போலவே. அனுபவங்கள் பாடங்களை அல்ல… சோகங்களை, இழப்புகளைப் பற்றிய சேதிகளை சைக்கிளில் வரும் காலைநாளிதழ்ப் பையன்போலவே வீசிவிட்டுக் காணாமல் போய்விடுகின்றன. அவைகள் செய்திகள். ஆ நம்மைப் பற்றிய செய்திகள். ஆ நமக்கே அவை புதிய செய்திகளாக அல்லவா அமைகின்றன. இதுவரை அவற்றை நாம் அறிந்து கொண்டிருக்கவில்லை… இதை இப்போது நாம் அறிநிதுகொள்வதால், அதாவது இழப்பை கணக்கில் கொள்வதால் என்ன பயன் நமக்கு ? குறைந்த பட்சம் இப்போதுகூட அந்த செய்திளை… நம் இழப்புகள் பற்றிய தகவலை அறிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிலாக்கியமாய் இருந்திருக்கும் அல்லவா ? நம்மால் முடிந்ததெல்லாம் ஒரு நீண்ட பெருமூச்சை சிலந்தியின் எச்சில் கம்பியிழையென வெளுயேற்றுவதுதான். அதைப் பற்றிக்கொண்டு மீண்டும் தொங்கி மேலேறி புதிய கூடுகளை மனசில் கட்ட நாம் முயல்கிறோம்.

நாம். நாங்கள். நான். நீங்கள். மற்றும் அவள்…

அமிர்தவர்ஷிணி.

அந்தப் பெயர் அவனுக்குப் பிடித்திருக்கிறது. கல்லுீரி வளாகத்தில் அவனைச் சந்தித்த முதல்கணம் அவனை அவளைநோக்கி வளைத்தது ஈர்த்தது அவளது பெயர் என்றான் அவன். அவளுக்கு மூத்த வகுப்பு மாணவன் அவன். சிவகுமார். நுீலகத்தில் இலக்கியப் புத்தகங்கள் பகுதியில் அவனைப் பார்த்திருந்தாள். இலக்கியம் அவனது பாடம் அல்ல. ஒய்வான பொழுதுகளை அவன் இலக்கியத்தில் செலவிட விருப்பங் காட்டியது போலிருந்தது. பாடப் புத்தகங்களை இரவல் தர மாட்டார்கள் நுீலகத்தில் – அங்கேயே புரட்டி தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அச்சுநிழல் பிரதிகள் – ஜெராக்ஸ் – எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகங்களை… பலரது தேவைகருதி… வெளுயே கொணர அனுமதியில்லை.

இலக்கியப் புத்தகங்கள். கதைகள். பெரிய புத்தகங்கள். ஆனால் சிற்றெழுத்துக்கள். இவ்வளவும் எப்போது படிப்பது ? கண் தாளுமா ? இதன்பிறகு பாடங்கள் படிக்கவும் நேரம் கிடைக்குமா எனத் திகைக்க வைக்கும் புத்தகங்கள். குறிப்புகள் எடுக்க அவள் தினசரி நுீலகம் வந்தால், அவனையும் அடிக்கடி பார்த்தாள். அமிர்தவர்ஷிணி. இரண்டேநாளில் அந்த தடித்த பொடியெழுத்துக் கதைப் புத்தகத்தை அவன் திருப்பிச் செலுத்தினான். ஒருவேளை படிக்க நேரம் இல்லாமல் திருப்பித் தருகிறானோ ? அத்தனை சுவாரஸ்யமான படிப்பு அனுபவம் அந்தப் புத்தகம் தரவில்லையோ ?… ஆனால் நுீலகரிடம் அவன் உற்சாகமாக அந்தப் புத்தகம் பற்றி விஸ்தாரமாக ஆர்வத்துடன் பேசினான். அப்போது மிக மகிழ்ச்சியாக உணர்ந்ததை அந்த முகப் பொலிவு காட்டியது. ஆக படித்திருக்கிறான். நுணுக்கமாக வாசித்திருக்கிறான். நுகர்ந்திருக்கிறான். நற்கணங்களுக்கு ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறான். அக்கணங்கள் அதோ அவன் மனசில் தங்கி விட்டன. கிரணங்களுக்குக் கூடுகட்டி விட்டான் அவன். நுீலகர் முன் அத்தருணங்கள் சிறகு முளைத்து வெளுக் கிளம்புகின்றன.

அறிவாளிகள் முறைப்படுத்தப் பட்ட பாடத்திட்டங்களை பெரிதும் சட்டைசெய்கிறதில்லை. அவன் உலகம்… அவன் தன்னில் வகுத்துக்கொண்ட பாடத் திட்டங்கள்… பிராகார ஓரக் கோவில்யானையா அவன் ? சுயதேர்வு அடிப்படையிலான தன்னுலகம், தனியுலகம் கண்டவனா அவன் ? சற்று கூரிய நாசி. ஒல்லியான வற்றலான தேகம். /யானை என்பது உருவப் பொருத்தமான உவமை அல்லதான்./ கண்ணாடி அணிந்திருக்கிறான். பின்னே ? அந்தப் புத்தகங்கள் கண்ணாடி அணிவதை நிர்ப்பந்திக்கவே செய்யும் என நினைத்துக் கொண்டாள் அவள். அமிர்தவர்ஷிணி.

அடிக்கடி சந்திக்கிற நுீலக வளாகம். ஒருவேடிக்கை போல… தன் மேசையில் வேலைசெய்து கொண்டிருக்கையில் பேனாவைக் கடித்தபடி சிறு யோசனையில் தலைதுீக்க, மனம் வேறொன்றைக் குறித்துக் கொண்டது. நுீலகர் அருகில் அவன் ஒருவேளை இருக்கலாம்… எனக் கண் தன்னைப்போல அலைகிறது. அவன் அவள்பார்த்த தக்கணம் இல்லை என்றாலும் மனம் தன்னைப்போல தேடியதே அதுதானே விஷயம் ? அதுதானே விசேஷம் ?

கல்லுீரியளவில் பாடங்கள் பெரும் சுமையாய் அமைந்தன. ஒவ்வொரு பேராசிரியரும் அகத்திய ரிஷிபோல் – கடலை வெளுயேற்றியது போல் பாடங்களை அமிர்தவர்ஷிணியாக மேகதாரையாகக் கொட்டித் தீர்க்கிறார்கள். மேலும் விளக்கக் குறிப்புகளுக்காகவும் தெளுவுகளுக்காகவும் அவளது மீதிப் பொழுதுகளை அவள் நுீலகத்தில் கழிக்க நேர்கிறது. வகுப்பில் அவள் நன்மாணவி. ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரம். மிக மென்மையானவள். அமைதியானவள். சிறு திருநீற்றுக் கீற்று. அடியே சின்னக் குங்குமவண்ண ஸ்டிக்கர் பொட்டு. சுடிதாரில் நாட்டமில்லை. புடவைகள்… பருத்திப் புடவைகள். கஞ்சிபோட்டுத் துவைத்த இஸ்திரி மடிப்பின் ‘அப்பள ‘ மொடமொடப்பான புடவைகள். காலில் கொலுசு போன்ற சப்தஆர்ப்பாட்டங்களை விரும்பினாள் இல்லை. அமைதி காக்க – என்கிற நுீலக வளாகத்தில் புத்தக அடுக்குகள் இடையே கொலுசொலிகள் கேட்கவே செய்கின்றன. குளிர்சாதன அறைக்குள் செருப்புகளை வெளுயே விட்டுவிட்டு நுழைகிறதைப் போல, இந்தப் பெண்கள் கொலுசைக் கழற்றிவிட்டு வரப் பணித்தால் என்ன ?

சில சந்தர்ப்பங்களில் அவள் எழுந்து வெளுக் கிளம்புகையில் நுீலகர் அருகே அவன் நின்றிருக்கவும் நேர்கிறது. சிறு புன்னகையை அவளை நோக்கி அவன் கொக்கிபோல வீசுகிறான். அவளது புன்னகைக்கான துீண்டில் அது. சிநேகமாக தன்விருப்பத்துடனேயே அவள் சற்று தாராளமாகவே புன்னகை காட்டினாள். அமிர்தவர்ஷிணி. இப்போது அவன்முறை. அவன் ஏதாவது பேச வேண்டியிருப்பதாக சூட்சுமம் துீண்டியது அவனை. ஷூ லேஸ்களை துவாரங்களில் நுழைத்துக் கொள்வதைப் போல அவர்கள் ஒருவரில் மற்றவர் வார்த்தைகளால் நுழைந்து கொண்ட வேளை அது. ‘ ‘நிறைய உங்களை நுீலக வளாகத்தில் பார்க்கிறேனே ? ‘ ‘ என்கிறான் அவன். சிவகுமார். மென்மையான வாக்கியம். இதமான தட்பவெட்பத்தை உணர்கிறாப் போல அவளுக்கு அது அமைகிறது. ‘ ‘எனில் நீங்களும் அப்படிப்பட்டவர் எனத் தெரிகிறது அல்லவா ? ‘ ‘ என்றாள் அவள். அமிர்தவர்ஷிணி. ‘ ‘ஆனால் நான் அறிவுத் தேடல் கொண்டவன் அல்ல. இவை பாடப் புத்தகங்கள் அல்ல… ‘ ‘ என்கிறான் சிவகுமார். அலங்காரமாகப் பேசிக் கொள்ள அவர்கள் தேர்ந்து கொண்டு விட்டார்கள். காலம் வெளிளொளி துறந்து வண்ணக்கலவை காட்டிய தருணங்கள்… அவை பாடநுீல்கள் அல்ல- என்பது சரி. ஆனால் நீங்கள் அறிவுத் தேடல் இல்லாதவர் என்பது தவறு… என அவள், சொல்ல வாய்வரை கொணர்ந்தவள் சற்றே வெட்கம் பூசிய முகத்தோடு உள்நாக்கில் மடக்கி வார்த்தைகளை அடக்கி, புன்னகைத்தாள். இணக்கமான நற்தருணங்கள் அவை. ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்.

‘ ‘அமிர்தவர்ஷிணி. நல்ல பெயர்… ‘ ‘ என்றான் அவன் பிறகு. ‘ ‘பேராசிரியர்கள் மத்தியில் உங்களைப் பற்றி நல்லபிமானம் இருக்கிறது. உங்கள் பெயரின் பின்னணியில் கல்லுீரியின் மதிப்பும் கவனமும் பொலிவுபெறும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்… ‘ ‘

பெண்மையின் சிறுகுகளுக்குள,ி குளிர்ந்த அந்த கணங்களைக் கதகதப்பாக்கிக் கொள்கிறாள். ஆனாலும் கண்கள் வார்த்தைகளின் வேலையைச் செய்கிறதை ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கிறது. பெரும் புத்தகங்கள். பாடப் புத்தகங்கள் எப்போது வாசிப்பான் தெரியவில்லை… ‘ ‘பாடப் புத்தகங்களை ஆசிரியர் நடத்தியபோது நான் கவனித்த அளவில் எழுந்த சந்தேக நிவர்த்திக்கு எனவே நான் புரட்டுகிறேன்… ‘ ‘ என்றபடியே கண்ணாடியை சற்று பின்தள்ளிக் கொண்டான் அவன். சிவகுமார்.

‘ ‘உலகம் அழகானது ‘ ‘ என்றான் தனக்கேபோல. ‘ ‘உங்கள் கண்கள் அழகானவை ‘ ‘ என்கிறாள் லகரியுடன். சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ‘ ‘நீங்கள் அழகானவர் ‘ ‘ என்கிறான் துணிச்சலாய். அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆ… வாலிபக் கணக்குகளை இயற்கை நிர்ப்பந்திக்க முயல்கிறதா ? கனவுகள் மெல்ல அவள் கண்ணுக்குள் மையிட ஆரம்பித்திருக்கிறதா ? தலையைக் குனிந்து கொண்டாள். சிறிது படபடப்பாய் உணர்கிறாள். பாடங்கள் நிறைய இருக்கின்றன. நான் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது. மெளனமாய் அவனது அருகாமையை நீங்கி, பிடியுருவிக் கொள்கிறாள். வணக்கம் சொல்கிறான். ‘சந்திப்போம் ‘ ‘ என்கிறான் நம்பிக்கையுடன். சிறு புன்னகையுடன். அவள் தலையாட்டுகிறாள். தன் வகுப்பறைக்குள் நுழைகிறாள் அவள். அமிர்தவர்ஷிணி. அழகான பேர் கொண்டவள் அவள். அழகானவள்.

‘ ‘நேற்றைக்கு நீங்கள் நுீலகத்துக்கு வரவில்லை போலிருக்கிறதே ? ‘ ‘ என்று அவன் கேட்கிறான். சிவகுமார். அவள் நகைக்கிறாள். அவனுக்கும் புன்னகை வருகிறது. ‘ ‘சொல்லிவிட்டுச் சிரியுங்கள். நானும் ரசிக்கலாம்… புரியாமல் சிரிப்பதை விட அறிந்துகொண்டபின் அனுபவிப்பது தனிசுகம் ‘ ‘ – ‘ ‘நான் கேட்க நினைத்தேன் ‘ ‘ என்கிறாள் அவள். அவன் அவளை சற்று அவதானிப்புடனே பார்த்தான். ஆமாம், அவர்கள் வேறு வேறு கணங்களில் நுீலகம் வந்திருந்தாலும், அட ஆமாம், அவர்கள் ஒருவரையொருவர் எதிர்பார்த்திருந்தார்கள். அவள் வேதியியல் பட்டதாரி. கணித மாணவன் அவன். ‘ ‘Chemistry is a volatile subject ‘ ‘ என்கிறாள் அவள். Mystery. மீண்டும் மீண்டும் கடற்கரை மணல்வெளுக் குதிரைபோல அதில் புரண்டு கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ‘ ‘மட்டுமில்லை… வாசிப்புருசி என்பது தனி அனுபவம். புத்தகம் இல்லா நாட்கள் பிறவாநாளே… ‘ ‘ என்கிறான் சிவகுமார். பிறவாநாளே… திருநாவுக்கரசர் வாக்கு என ஞாபகம் அவளுக்கு. தேவாரம். பள்ளியில் வாசித்திருக்கிறாள். இலக்கிய ஆளுமைகளைப் பதப்பட பயன்படுத்துதல் அவள் அறியாதது. மொழிவீச்சு கொண்டவன் அவன். தமிழில் போலவே ஆங்கிலத்திலும் அவன் சரளம் காட்டினான். Chennai is a scar-city because of water scarcity, என்று வெகு இயல்பாய் அடுக்கினான் அவன். /How is your factory ?/ /Satisfactory/ என்கிற நகைச்சுவை அவள் அறிந்ததே.

நன்னுீல்கள்… வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள கற்றுத் தருகின்றன, என்கிறான் அவன். சந்தோஷமாக வாழ்கிறவர்கள் நன்னுீல்களை வாசிப்புத் துணையெனக் கொள்வர், என்பது அவள் கணிப்பு. ‘ ‘நீங்கள் சந்தோஷமானவர்தாமே ? ‘ ‘ என்று அவன் – சிவகுமார் – அவளை – அமிர்தவர்ஷிணியை… அழகானவளைக் கேட்டான். ‘ ‘ஆனால் எனக்கு கதைப்புத்தகங்கள் ஓய்வு-மனநிலைக்கானவை ‘ ‘ என்று சட்டென அவனது கேள்விக்கு டென்னிசில் frontvolley போல அவள் வார்த்தையாடினாள். ஹா, என அவன் மீளவும் கண்ணாடியைப் பின்னோக்கித் தள்ளிக் கொள்கிறான். வேடிக்கையாய் இருந்தது. எதோ பேச அவன் குனிந்தால் அவனுக்குமுன் முணுக்கென அவன் கண்ணாடியும் கேச-முன்நீட்சியும் முன்வந்து தொங்கிவிடுகிறது… ஏதோ சொன்னான் அவன். ஆமாமாம், இப்படிச் சொன்னான் அவன். ‘ ‘ஓய்வு என்பது அமைவதல்ல. எடுத்துக் கொள்வது. ஒய்வு என்பதே ஒரு பிரமை. பாவனைதான்… ‘ ‘ – ‘ ‘சரி ‘ ‘ என அந்த வார்த்தையலையையும் குதிரையடக்கினாள். ரசித்தான் அதை. அவன். சிவகுமார்.

ஆனால் அவள் அனுபவம் வேறு விதமாக அல்லவா அமைந்தது ? ஓய்வு என்பது எடுத்துக் கொள்வது அல்ல. நம் தேர்வு அல்ல அது. தானாகவே அமைந்து விடுகிறது. கண்ணயர்ச்சியும் மன அலுப்புமான கணங்கள் அறிவு தீட்சண்யப்படாமல் ஒத்துழைக்காமல் ஓய்வென ஒடுங்கி விடுகின்றன. அறைவிளக்கு ஒளுர்ந்து கொண்டிருக்கிறது. எனினும் எழுந்துபோய் அணைக்கவும் கூடாமல் அவள் கண்ணை உறக்கம் தழுவுகிறது. மார்புமேல் புத்தகம். தாய்மேல் குழந்தைபோல… கண்ணை மூடிக் கொள்கிறாள். ஒளு காணாமல் போகிறது. மூச்சு சிதறாமல் தன்னொழுங்கு காண்கிறது. அழகான பெயர் கொண்டவள் அவள். அழகானவள். அந்நேரம் ஏன் சிவகுமார் நினைப்பு அவளுக்கு வரவேணும் ? வாழ்க்கை புதிர்களால் ஆனது. சுவாரஸ்யங்கள் நிரம்பியது அது. அழகானது உலகம். அவள் பெயரும். அவளும்.

அடடா காலையில் தேர்வு எனப் பதறும் மனசைத் தளர்த்தினாள். இருக்கட்டும். அவளை அவன் காதலிக்கிறானா, என முதல்கேள்வி அவளில் மழைத்துளி என விழுந்த ஓய்வுக் கணம் அது. ஏன் நான் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ள வேணும், என்று தோன்றியது உடனே. அதுகூடப் பரவாயில்லை. அடடா, அவள் தன்னைப் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டுக் கொள்ள நேர்ந்ததே… ஆமாம், அவள் தன்னை இப்படிக் கேட்டுக் கொண்டாள், சிறிது வெட்கத்துடன். /நான்… அவனை… அவரை… காதலிக்கிறேனா ?/ பதில் தன்னிடம் இருந்தல்ல, வெளுயில் இருந்து, தொடர்ந்த நற்தருணங்கள் அவளுக்கு பதிலைச் சொல்லும், என்றே தோன்றியது. அவள் இலக்கியம் அறிந்தவள் அல்ல. இலக்கியங்கள் காதலைப் போற்றுகின்றன. அவன் ஒருவேளை காதலைப் பற்றித் தெரிந்தவனாய் இருக்கலாம்… அவனிடம் போய் அவள் கேட்க முடியுமா ? என்ன கேட்பது ? காதல் என்றால் என்ன ? – என்றா ? அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. மனம் மெல்ல மிதக்கத் துவங்கியிருந்தது. கணிப்புகள் பிடியுருவி – மார்புமேல் கிடந்த புத்தகம் போன்ற – குழந்தையாய் வெளுயே இறங்கியோடத் துவங்கிவிட்டன. வேடிக்கை. கும்மாளம். அடாடா, நாளை வேதியியல் தேர்வு – என்று எழுந்தமர்ந்த சூட்சுமத்தை அவள் – ஆமாம், அவள்தான்… ஒதுக்கினாள். அடக்கினாள். அழகான பெயர் கொண்ட அவள்.

உடைசார்ந்த கவனம் சிறிதும் அவனிடம் இல்லை. அட இவன் கண்ணாடி ஃப்ரேமை சற்று இறுக்கமாய் சரிசெய்து கொண்டால்தான் என்ன- சில குழந்தைகள் நிமிஷத்துக்கொருதரம் சர்ரென்று உள்ளிழுத்து சளியை உறிஞ்சினாப் போல… என்ன பழக்கம் இது ?… அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். அவனைப் பற்றி அவளுக்குத் தேவையில்லாத விவரங்கள், நினைவுகள், யோசனைகள்… மனப்பதிவு காண்கின்றன. நாளை வேதியியல் தேர்வு. அந்தக் கேள்வித்தாளில் – அவன் அவளைக் காதலிக்கிறானா, என்றோ… அவள் அவனைக் காதலிக்கிறாளா, என்றோ கேட்க மாட்டார்கள் அல்லவா ? படிக்க உட்கார். அல்லது துீங்கு மனமே, என்கிறாள் அவள். அமிர்தவர்ஷிணி.

அறிவுச்சுடர் கொண்ட சிவகுமார். சூர்ய சந்திர மூர்த்தி. நெற்றியில் சூரியன். உச்சியில் சந்திரன். புனல்சடையன். ஹா ஹா – இறுக்கந் தளர்ந்த கண்ணாடி அணிந்தவன்… அவள், அழகான அமிர்தவர்ஷிணி ‘ ‘துீங்கு மனமே ‘ ‘ என்று செல்ல அதட்டல் அதட்டினாள். எனக்குத் தெடியுமடி பெண்ணே… தெரியாதா என்ன ?… நீ துீங்கு என்றால் துீங்காதே என்று பொருள். /துீங்காதே என்றால் ?…/ அதற்கும் துீங்காதே என்றே பொருள். மனம் வேடிக்கை காட்டுகிறது. உந்து-ஊர்தியில் இரவுப் பயணம் போகிறதைப் போல அவளில் இருளும் ஒளுயும் மாறி மாறி விழுகின்றன. அவள் மார்பு படபடக்கிறது. மார்புமேல், அது… குழந்தையா புத்தகமா… என்றே தடுமாறிப் போகிறது. ஓய்வு கண்ட கணங்கள். மனக் களிப்பு. எக்களிப்பு. ஆசிர்வதிக்கப்பட்ட பொற்கணங்கள். மிருகம் ஒன்று சொரசொரப்பான பாறையில் முதுகுரசல் கண்டு சுகம் கொண்டாற் போன்ற கணங்கள். நாளைமுதல் அவனைச் சந்திப்பதைத் தவிர்ப்பேன், என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதுவே, அந்த முரண்டுமே வேடிக்கையாய் மனம் உணர்ந்தால் என்ன செய்வது ? அவளுக்குத் திகைப்பாய்த் திகட்டியது. தருணங்களுக்கு ருசி உண்டா ?

சீக்கிரமே படுத்துவிட நேர்ந்தது நேற்றிரவு. அறைவிளக்கு காலைவரை எரிந்து கொண்டிருந்தது. காலையில்தான் அவள் அதை அறிந்தாள். மனம் தன்னயர்ச்சியாய் உறக்கங் கண்டு விட்டது. கனவற்ற பேருறக்கம். சட்டென காலைவழக்கப்படி அவளுக்கு விழிப்பு வந்தது. அறைவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனைப் பார்ப்பதைத் தவிர்ப்பேன், என மீண்டும் வலியுறுத்திக் கொண்டாள். தானே ஈருருவாகி தன்னெதிரே தானே நின்று உரையாடி மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். மனம் வேடிக்கை காட்ட ஆரம்பித்திருந்தது. புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டி உள்ளே துள்ளித் திரிகிறது. அதோ அவன்! சிவகுமார். சூர்ய சந்திர மூர்த்தி. புனல்சடையன். கண்ணாடியணிந்த சிவகுமார். கவனத்தைத் திருப்ப முயன்றாள். பிறகு, ஹலோ… என்றாள்.

அவனை அவள் காதலிக்க ஆரம்பித்திருந்தாள். மனசில் இருந்து அடிக்கடி ஒரு குயில் கூவ ஆரம்பித்திருந்தது. மெல்ல தனக்குள் நகைத்துக் கொண்டாள். இலக்கியம் அறிந்தவனே ? காதலை அறிவாயா ? என்னை அறிவாயா ?… உன் கண்கள் அழகானவைதாமே ?… மனம் என்னென்னவோ பேசுகிறது. பிதற்றுகிறது. ஒருவேளை காதலைப்பற்றி அவளைவிட அவன் நன்றாக அறிந்திருக்கவும் கூடும். நான் இலக்கியம் கற்றவள் அல்ல. காதலை எனக்குச் சொல்லித்தா. பயிற்றுவி. நுீலக வளாகத்தில் அல்ல. வெளுயே. பாடத்திட்டங்களுக்கு அப்பால் நானும் கற்றுக் கொள்ள வருகிறேன்.

அவளிடம் பேச அவன் சந்தர்ப்பங்களை எற்படுத்திக் கொள்கிறவனாக இருந்தாற் போலிருந்தது. அல்லது அவள்தான் ஏற்படுத்திக் கொடுக்கிறவளாக இருந்தாளோ தெரியாது. நான் ஒத்துக் கொள்கிறேன். அறிவின் திளைப்பில் சிறு ஆசுவாசம் அவளுக்கு அவன். நிழல். எளிமையான சிவகுமார். தானறிந்த நன்னுீல்களை அவளுடன் அவன் பகிர்ந்துகொள்ள முன்வராமல் இருந்தான். நுீலகரிடம் இலக்கியம் பற்றி விலாவாரியாய்ப் பேசினான். அவளிடம் பேச லோகாயத விஷயங்களை – sweet nothings – அவன் தேர்ந்து கொண்டான். அழுத்தாத திணிக்காத பாவனை கொண்டாடினான். அவனும் தனது ஆசுவாசமாக அவளை உணர்கிறானோ ?… எனில், அது நல்ல விஷயமே என உவகை கொண்டாள் அவள். அழகான அமிர்தவர்ஷிணி. அவன் அழகானவனா ? எனில் அவள் கண்கள் அழகானவைதாம் போலும். அழகான பெண்ணின் கண்கள் அழகாக அமைவது சாத்தியமே.

அவனது நினைவுகள் அவள் அனுமதியின்றியே உள்ளே வளையவர ஆரம்பித்திருந்தன. தடுக்க முயன்ற அவள் உணர்ச்சிகள் தோல்வி கண்டன. அவனுடன் வார்த்தையாட மனம் எழுச்சி கொண்டது. தான் அவனைக் காதலிப்பதை இந்நாட்களில் அவள் ஒத்துக் கொண்டாள். பெண்மை அவனது ஆளுமையை அருகாமையை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தன் கணங்களை, அந்தரங்கபூர்வமான ரகசியக் கணங்களை அவனுடன் பகிர அவள் விழைவு கொண்டாள். அவன்சார்ந்த புதிய விஷயங்களை அவள் விரும்பி மனப்பதிவு செய்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அவனுக்கும் இந்நிலை வாய்த்திருக்குமா என கேள்விகேட்க உதடு துடித்தது. வாய்க்குள் வார்த்தைகளை நாணம் அடக்கி மடக்கியது. பொங்கிய அலையைத் திருப்பி யனுப்ப வேண்டியிருந்தது.

அவன் அவளைக் காதலிக்கிறதாக அவள் நம்ப அவளுக்குப் பிடித்திருந்தது. கேட்க ஏனோ சிறு தயக்கம். அவனே சொல்லவேண்டுமாய் இருந்ததா ? சொல்லேன் சிவகுமார். சொல்லிவிடேன். அறிவுப்புயல் நீ. நான் அன்புப்புனல். பிரபஞ்சவெளுயை நாம் நிறைப்போம். பாவனைகள். கனவுகள். வாழ்வை அவை நிரந்தரமாக்குகின்றன. கண் அப்போது அழகு பெறுகிறது. ஒளுபடைத்த கண்ணாய் ஆகிறது. நான் காத்திருக்கிறேன் சிவகுமார். பெண்மை காத்திருக்கிறது சிவகுமார். தளர்ந்த உன் கண்ணாடியை இறுக்கிக் கொள்கிறதைப் போல, தளர்ந்து நீளவிட்ட உன் நினைவுத்-தாம்புக்-கயிறை இறுக்கி என்னை அருகழை சிவகுமார். சொல் சிவகுமார். சொல் என் காதில். ரகசியமாய், அந்தரங்கமாய்ச் சொல். நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொல். காதலை நீ அறிந்தவன்தானே ? இலக்கியம் அறிந்தவன் தானே ? என்னைப் புரியவில்லையா உனக்கு ? நான் கஞ்சிவிரைப்பு கொண்ட உடைகளை அணிந்தவள். பெண். நீ இறுக்கந் தளர்ந்த உடைகளை விரும்புகிறவன். உன் நினைவுகளையும் இறுக்கந் தளர்த்தி வெளுயே சீட்டுவிளையாட்டில் போல இறக்கக் கூடாதா சிவகுமார் ? நான் காத்திருக்கிறேன் சிவகுமார்.

வாசிப்புருசி கொண்டவள் நீ. கட்டாயம் அருமையான நுீல்களை வாசிக்கப் பழக வேண்டும். எத்தகைய பெரும் பேறு அவை. நல்ல நண்பர்களை விரும்பாமல் முடியுமா ? புத்தகங்கள்… அவை சிறந்த நண்பர்கள் அல்லவா ? – என்றான் ஒருநாள். வாழ்க்கை சுவாரஸ்யமானது. புத்தகங்கள் வாழ்க்கை பற்றிச் சொல்கின்றன. எனில் வாழ்க்கையை உணர்கிறவனுக்கு புத்தகம் சுவைகூட்டுமோ ?… என்றிருந்தது அவளுக்கு. அவள் அப்பா செய்தித்தாள்ப் பிரியர். காலையில் ஹிண்டு இல்லாமல் முடியாது அவருக்கு. வாக்கிங் ஸ்டிக் அல்ல, என்றாலும் சிறு குச்சியுடன் சில பெரியவர்கள் நடக்கிறார்கள். அது ஒரு தோரணை. நம்பிக்கை தருகிற விஷயமாக அவர்கள் உணரக் கூடும். புத்தகங்கள் அப்படியாய் இருக்கலாம்…

பட்டப்படிப்பு முடிந்து சிவகுமார் கல்லுீரி வளாகத்தில் இருந்து வெளுயேறிப் போகிற கட்டம் அமைகிறது. அவள் மனம் முன்னிலும் அவனையிட்டு உட்சுழல் காண்கிறது. மூச்சு திகைக்கிறது. தகிக்கிறது. ஒரு சிற்றடையாளம். உன்மூச்சு என்மேல் படலாமோ ? சிறு முத்தம் ஒன்று நீ உரிமையுடன் என்னை அருகிழுத்து எல்லைமீறிவிட மாட்டாயா ? இந்நாட்களில் அவள் பரபரத்திருந்தாள். அவனிலும் இந்தப் படபடப்பு இருக்குமா தெரியவில்லை. வாசிக்க என ஒரு கதைப்புத்தகம் தந்தான் அவன். எளிமையான நடை. இலக்கியப் பெருவெளுக்குள் நுழைகிற வாசலை இது உனக்குக் காட்டும் வர்ஷிணி, என்கிறான் அவன். அவன் மனங் கோணக் கூடாது என வாங்கிக் கொண்டாள் அவள். நான் கேட்டது புத்தகம் அல்ல சிவகுமார். என் கேள்வியை நீ அறிய மாட்டாதவனா ? நடிக்கிறாயா சிவகுமார்… மனம் எங்கியது. எண்ணங்கள் உள்விக்கல் கண்டன.

அவளுக்கும் ஆண்டுத் தேர்வின் நெருக்கடிகள் இருந்தன. இடையில் ஓய்வு கிடைக்க வாய்ப்பே இல்லை என்றிருந்தது. அவனுக்காகவாவது அவள் அந்தப் புத்தகத்தையாவது வாசிக்க வேண்டுமாய் நினைத்தாள். ஓய்வு என்பது அமைவதல்லதான் சிவகுமார். நாம் ஏற்படுத்திக் கொள்ள வேணும். ஆனால் தேர்வுகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்தப் புத்தகம் – இதை வாசிக்க எனக்குக் கட்டுப்படி ஆகாதுதான். ஓரிரு முறை கேட்டபின்… அவள் சற்று வெட்கத்துடன் ‘வாசிக்கிறேன் ‘ என்பதாகவே பதில் சொல்கிறதில் அவன் சற்று ஏமாந்தாற் போலிருந்தது. நான் நிர்ப்பந்திக்க மாட்டேன் – என்கிறான் பெருந்தன்மையாய்… என்றாலும் மனம் சற்று சூம்பிய அந்த விநாடியை முகம் அறிவிக்கிறதே.

உந்து ஊர்தியில் அவன் … அவள் வழியனுப்ப வந்தாள். மனம் கலங்கி இருண்டிருந்தது. அவன் கடைசிவரை தன்னை வெளுப்படுத்திக் கொள்ளவேயில்லை. மனம் மருண்டது. தன்னை அவன் ஒருவேளை காதலிக்கவில்லையோ, என்கிற யோசனையில் அழுகை தாள முடியவில்லை. அந்தப் புத்தகத்தை அவள் மறந்திருந்தாள். ஊர்தி கிளம்பியது. ஆ – அவன் நினைவுகூர்ந்தான் அதை. ‘ ‘அந்தப் புத்தகம்… ‘ ‘ என்றான் புன்னகையுடன். அவள் வாசிக்கவில்லை என்பதேகூட சட்டென்று தோணவில்லை. திருப்பித் தரவில்லையே என்றுதான் இருந்தது. பெருமூச்சு விட்டான். ‘ ‘எதையும் நிர்ப்பந்திப்பது, அதற்குரிய அளவிலேயே எதிர்வினைகளை நிகழ்த்தும்… நல்லது ‘ ‘ என்றான் சிவகுமார். ‘ ‘போய்வருகிறேன் ‘ ‘ என்று கைகூப்பினான். ‘ ‘அந்தப் புத்தகம் என் நினைவாக உன்னிடமே இருக்கட்டும் ‘ ‘ என்றான். ஊர்தி கிளம்பியது. மெல்ல சிற்றசைவு காட்டியது. பிறகு புழுதியெழ பேரோசை எழுப்பி கண்ணில் விலகி மறைந்தது.

அவளுக்கு அழுகை வந்தது. வாழ்க்கை சட்டையுரிபட்டு அபத்தமாக உணரவைத்த கணம் அது. துக்கக் கணம். அந்தப் புத்தகத்தை அவனுக்காகவது அவள் வாசித்திருக்கலாமோ ? அதுபற்றி இனி ஒன்றும் செய்வதற்கில்லை. திரும்பி பஸ் சென்ற திக்கைப் பார்த்தாள். புகையும் புழுதியும் கூட அடங்கி யிருந்தன. வெளு வெறுமையாய்க் கிடந்தது. நான் உன்னைக் காதலித்தேன் சிவகுமார்… கத்திவிடட்டுமா ? பஸ்சில் போகிற அவனுக்குக் கேட்குமா ?

துவளத் துவள நடந்தாள். தன்னறைக்கு வந்தாள். அவளிடம் இனி மிச்சமிருப்பதெல்லாம் அவனின் நினைவுகள் மாத்திரமே. தவிர ஆ… அந்தக் கதைப் புத்தகம். இலக்கியம். இலக்கியங்கள் காதலைப் பேசுகின்றன. போற்றிப் பாடுகின்றன. என்ன புத்தகம் அது என்று கூட அவள் பிரித்துப் பார்க்கவில்லை. இதுவரை பார்க்காதது சரி. இப்போது பார்க்காமல் இருப்பது…. இனியும் பார்க்காமல் இருப்பது சரியல்ல. கல்லுீரித் தேர்வும் முடிந்த இந்தக் கணம் அவனுக்காக நான் செலவழிக்கிற கணங்களாக அமையட்டும்.

உன் புத்தகத்துக்கு நன்றி சிவகுமார். உன் அண்மையில் அல்ல, சேய்மையில் நான் இலக்கியம் பயில்கிறேன். காதலைப் பயில்கிறேன். இலக்கியம் காதலைப் போற்றுகிறது. அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். உள்ளேயிருந்து விழுந்தது ஒரு காகிதம். சில வரிகள் கொண்ட… சிவகுமார் எழுதிய காகிதம் அல்லவா அது ? – உலகம் அழகானது. வாழ்க்கை அழகானது. நீ அழகானவள். – ஆமாம் விஷயம் இதுதான். நீ அழகானவள் என்பதால் உலகமும் வாழ்க்கையும் அழகாய் அமைகின்றன. நான் உன்னைக் காதலிக்கிறேன் வர்ஷிணி… மேலும் அவன் எழுதியதை கவனிக்க முடியவில்லை அவளால். கண்ணீர் நிறைத்தது கண்ணை. புத்தகத்தில் சிதறின கண்ணீர்த் துளிகள். ஓவென அழ ஆரம்பித்தாள். உலகம் துயருருக் கொண்டிருந்தது.

—-

storysankar@rediffmail.com

Series Navigation

சைதன்யா

சைதன்யா