திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

என் பிற நாவல்களைப் போல இல்லை இது. குறிப்பாக இது ஒரு கருத்துருவ-நாவல். வார்த்தையெடுப்புகள் அத்தகையவை. என் பிற நாவல்களை உணர்வு-உருவ நாவல் என நான் நினைக்கிறேன். அதில் இருந்து இது மாறுபட்டது என்ற உணர்வை… இதை எழுதுகையில் உணர்ந்தேன் என அறியத் தருவது நல்லது. உணர்வுருவ நாவலைவிட கருத்துருவ நாவல்களில் எழுத்தாளுமை, வார்த்தைக் கட்டுக்கோப்பு அலாதி முக்கியம். கருத்துருவ எழுத்து விவாதம் கிளர்த்திப் பரத்தும். கூட்டங்களில் பேர் ‘அடி ‘படும். தயாராய் இருக்கணும். இருப்பம்- அதுக்கென்ன ? கருத்துருவ நாவலில் சமுதாயம் அந்தாக்ல மரணப்படுக்கையில்… மெலிஞ்சுபோய்… நொந்து நுாலாக் கெடக்காப்ல ஒரு பிரமை தட்டும். எழுத்தாளனுக்கும் அப்டி இருந்து அவன் எழுதுவான். வாசகனுக்கும் அது புரையேர்றாப்ல உச்சிமண்டைக்கு ஏறும். இஞ்சிமுரப்பா சாப்பிட்டாப்ல. ஆனா அந்தக் காரத்துக்கு உடனே தண்ணி குடிக்கப்டாது. நாக்கு வெந்துரும்லய்யா. காரம் உள்ள சாறு-இறங்கட்டும். தொண்டை செருமும். அட்ஜெஸ்ட் செஞ்சிக்கிடுங்க என் வாசக சகாக்களே. முழுக்க படிச்சபின் நல்லா ஜீரணமானதை அனுபவிக்கிற மன ஆசுவாசம் தனி ரசனை அல்லவா ? கடிதம் போடுங்க. ஈ-மெய்ல் அனுப்புங்க. சந்திக்கவும் செய்யலாம். ஐய அதுக்கென்ன ? மவராசனா மவராசியா வாங்க.

சில இடங்கள்ல வார்த்தைகள் உக்கிரமாப் படலாம். சில இடங்கள்ல தாலாட்டு மாதிரிப் படலாம். வேற வழியில்லையில்லா… இடத்துக்குத் தக்ன அது அமைஞ்சிருது. பத்து ரெண்டாயிரம் பேர் கூடியிருக்க சபைன்னா குரலெடுப்பு வேற. சின்னக் கூட்டம்னா சப்த எடுப்பு வார்த்தை எடுப்பு வேற தானே ? என்ன நாஞ் சொல்றது.

சந்திப்பம்.

அன்புடன்

எஸ். ஷங்கரநாராயணன்

புதிய எண் 240 பழைய எண் 2/82 இரண்டாவது பிளாக்

முகப்பேர் மேற்கு சென்னை 600 037

ஈ மெய்ல் sankarfam@vsnl.net

(நாவல் அடுத்த இதழிலிருந்து தொடங்குகிறது)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்