பழி(சி)க்குப் பழி(சி)

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

ஸ்ரீதர் விஸ்வநாத்


July 04 2004

—————–

‘ஹையா, Universal Studio வந்துடுச்சு ‘ என்று ஆங்கிலம் 80% தமிழ் 20% இல் அலறியது மூன்று வயது

ஷ்ரேயஸ்.

ஜனா productions இல் மூன்று வருடங்கள் முன் வெளியேறிய மழலை.

‘ஷ்ரேயஸ்…கத்தக்கூடாது ‘ என அதட்டிவிட்டு ‘ரொம்ப disturb பண்ணறானா ‘ என ராம்கியைப் பார்த்துக் கேட்டாள் விதயா.

‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை. குழந்தைன்னா அப்படித்தான். ஜனாவும் இப்படித்தான் குழந்தைல துறுதுறுவென இருப்பான் ‘ என்றார்

ராம்கி.

காரை drive செய்து கொண்டிருந்த ஜனா rear view mirror இல் அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

Los Angeles வந்து இரண்டு நாட்கள் தான் ஆனது ராம்கிக்கு.

பல வருடங்கள் ‘வாங்கப்பா.. ‘ என்று ஜனா கூப்பிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது தான் ராம்கியால் வர முடிந்தது.

ஜனா காலேஜ் முடிச்சு M.S. படிக்க U.S.A. வந்தவன் தான். கடந்த ஏழு வருடங்களாக ‘states ‘ வாசம் தான்.

‘Green card வாங்கிட்டான் … ‘ என கர்வமாக நங்கநல்லூர் நண்பர்களிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது.

ஷ்ரேயஸ் பிறப்பதற்கு 3 மாதங்கள் வித்யாவுடன் உதவிக்காக L.A. வந்த ஜெயம் (ஜனாவின் தாயார், ராம்கியின் பாரியாள்) கூட

சொல்லியிருக்கிறாள்.

‘Microwave லயே சமையல் முடிந்து விடுகிறது. நம்ம ஜனா ஆனால் daily விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லறான் ‘ என்று.

மீண்டும் ராம்கிக்கு பெருமையாக இருந்தது.

ஜெயம் போன பிறகு ராம்கி முற்றிலும் தனியாள்தான். அதனால்தான் புறப்பட்டு விட்டார் ‘states ‘ உக்கு.

‘ஒரு ஆறு மாசம் இருந்துட்டு வந்துடறேன் ‘ என்று பக்கத்தாத்து மாமாவிடம் சாவியைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுக்கு மாடி கட்டிடங்களும் அழகான சாலைகளும் என்று அமெரிக்கா இரண்டு நாட்களிலேயே ராம்கிக்கு பிடித்துவிட்டது.

காரை பார்க் செய்துவிட்டு Entry ticket வாங்கிவிட்டு வந்தான் ஜனா. Universal Studio வில் க்யூ நீளமாக இருந்தது.

ராம்கி இரண்டு மூன்று event பார்த்துவிட்டே களைப்பானார். July 4, அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் மக்கள் திரள் அதிகமாகவே இருந்தது.

மூன்று மணி நேரத்துக்கு பிறகு ராம்கியால் தாங்க முடியவில்லை. அசதியாக இருந்தது. பசி தான் காரணம் எனப் புலப்பட்டது.

‘Corn flakes ‘ சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் வெறும் apple மட்டும் சாப்பிட்டு புறப்பட்டதால் இந்த வினை. பசி தாள முடியவில்லை.

ஜனாவைக் கூப்பிட்டார். ஆனால் விளையாட்டு மும்முரத்தில் யாருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து ஜனா திரும்பினான்.

‘அப்பாடா ‘ எனத் தோன்றியது ராம்கிக்கு. ஆனால் அவனோ சுதந்திர தின வாண வேடிக்கையைக் காட்டிக் கொண்டிருந்தான்.

‘தீபாவளிக்கு நாங்க பார்க்காததா ‘ என பசி கடுப்பில் புலம்பியது யாருக்கும் கேட்கவில்லை.

ஒரு இடத்தில் சென்று அமர்ந்தார் ராம்கி. நினைவுகள் பின்னோக்கி சென்றது.

———————————————————————————————————————————————————————

Dec-05-1982

‘Mr. ராம்கி, வைகுண்ட ஏகாதசிக்கு இந்த தடவை ஸ்ரீரங்கம் போய்ட்டு வாருமே ‘ என்று வங்கி மேலாளர் சொன்னார். நல்ல மூடில் இருந்தார் போலும். ராம்கி State Bank இல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார்.

ராம்கிக்கு ஸ்ரீரங்கம் போகலாம் எனத் தோன்றியது.

5 மணிக்கே வீட்டுக்கு வந்தார்.

‘ஜெயம், சீக்கிரம் கிளம்பு …ஸ்ரீரங்கம் போகறோம். நாளன்னிக்கு வந்துடலாம் ‘ -ராம்கி

‘என்னங்க இப்படா திடார்னு ‘ –ஜெயம்.

‘ஸ்ரீரங்கம் தானடா..கிளம்பு…ஜனா எங்கே … ‘ -ராம்கி

‘ஜனா பக்கத்துத் தெறுவில cricket விளையாடறான்… சமையல் கூட ஆகலியே ‘ –ஜெயம்.

‘அதெல்லாம் போற வழியில சாப்பிட்டுக்கலாம். ‘ –ராம்கி

அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கிளம்பியது ராம்கியின் குடும்பம். Madras Fort அருகே உள்ள திருவள்ளுவர் bus stand சென்றனர்.

‘இன்னும் பத்து நிமிஷத்துல திருச்சி கிளம்புது சார் ‘ என்றார் கண்டக்டர். அனைவரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.

‘அப்பா பசிக்குது பா ‘ என்றான் ஜனா.

‘கிரிக்கெட் விளையாடும் போது தெரியலை. பெரிய கபில் தேவ்… ஐய்யா. வழியில நல்ல ஹோட்டல்ல சாப்பிடலாம் ‘ –ராம்கி.

‘கொஞ்சம் பொருத்துக்கோப்பா ‘ –ஜெயம்.

இரண்டு மணி நேரம் போனது.

மாமண்டூர் அருகே ‘வண்டி பத்து நிமிஷம் நிக்கும் சார் ‘ என்றார் கண்டக்டர்.

‘அப்பா பசிக்குது பா ‘ என்றான் ஜனா மறுபடியும்.

‘கண்ட இடத்துல சாப்பிடக்கூடாது ஜனா ‘ –ராம்கி. ‘எங்க வண்டிய நிறுத்துவதுனு விவஸ்தை இல்லை. நல்ல ஹோட்டலாக

நிறுத்தக்கூடாது என்று பொறுமினார். ஜனாவிற்கு பசி உயிர் போனது.

கடைசியில் திருச்சியை தொடும் தொலைவில்…பத்து நிமிடம் பஸ்

மீண்டும் நின்ற போது ‘Modern bread ‘ பாக்கெட் வாங்கிக் கொடுத்த போது தான் உயிர் வந்தது ஜனாவுக்கு.

———————————————————————————————————————————————————————

July 04 2004

—————–

வாண வேடிக்கை ராம்கியை மீண்டும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது. எதற்கு அந்த பழைய நினைவு வந்தது என்று யோசித்தார்.

காரணம் அவருக்கு புலப்பட்டது. பசி மேலும் வலுக்கத் தொடங்கியது.

ஜனா ஒரு வேளை பழி வாங்குகிரானோ என்று தோன்றியது.

‘இந்த நாளை காலெண்டர்ல குறித்துக் கொள்ளுங்கள் ‘ என அண்ணாமலை ரஜினி ஸ்டைல்ல ஜனாவும் ஸ்ரீரங்கத்துல சபதம் எதாவது எடுத்திருப்பானோ என்று தோன்றியது ராம்கிக்கு.

இருபது நிமிடங்கள் கழித்து ஜனா வந்தான். எல்லோரும் காருக்குள் அமர்ந்தனர். Restaurant போகப்போகிறோம் என நினைத்தார் ராம்கி.

‘Disneyland போகலாம்ப்பா… ‘ என குண்டை தூக்கிப் போட்டான் ஷ்ரேயஸ். ராம்கி அவனை கடுப்பாகப் பார்த்தார்.

ழ்ழ்

‘Disneyland நல்லா இருக்கும்ப்பா ‘ என்றான் ஜனா. நிச்சயம் பழி வாங்குகிறான் என முடிவு செய்து கண் அயர்ந்தார்.

10 நிமிடங்கள் தூங்கியே போனார்.

‘அப்பா எழுந்துருங்கோப்பா ‘ என எழுப்பினான் ஜனா.

‘என்ன Disneyland ஆ ‘ என ஈன ஸ்வரத்தில் முனகியது யாருக்கும் கேட்கவில்லை.

‘இது தாம்ப்பா, Los Angeles la உள்ள ஒரே உயர் தர தமிழ் சைவ உணவகம் ‘ என்றான் ஜனா.

‘சரவணபவன் – லாஸ் ஏஞ்சல்ஸ், உங்களை அன்போடு வரவேற்கிறது ‘ என்று அறிவித்தது அந்த ஹோட்டல் பலகை.

——————————

SVisvanathCognizant@mmm.com

Series Navigation

ஸ்ரீதர் விஸ்வநாத்

ஸ்ரீதர் விஸ்வநாத்