விடியும்! நாவல் – (5)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


(5)

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீனில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

சூடும் சத்தமும் உடலில் பரவும் கிட்டத்தில் விமானத்தைப் பார்த்ததும் அந்த சோர்விலும் செல்வத்திற்கு பாவமன்னிப்பு படப்பாட்டு முடுக்கியது. பார்வை படர்ந்த இடம் முழுக்க நிறைத்துக் கொண்டு பனை உயரத்தில், வாத்துவயிறு, கழுகுஇறக்கையோடு ப+தம் போல் நிற்கும் பிரிட்டிடி எயர்வேய்ஸ் பிஏ 073 விமானம் அவனுக்கொன்றும் புதிதில்லை. முன்னர் பயணம் செய்ததுதான். அப்போதெல்லாம் முடுக்காத பாட்டு இப்போது மட்டும்!

புராண காலத்தில் புடிபக விமானம் இருந்ததாம். அது உண்மையோ பொய்யோ, இரண்டாயிரமாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மனிதகுலம் கண்டுவிட்ட விஞ்ஞான வளர்ச்சியை என்னென்று சொல்வது! இயற்கைக்குச் சவாலாக முட்டி மோதுகின்ற வளர்ச்சி. பறவை பார்த்து விமானம், மீன் பார்த்து படகு, தன்னையே பார்த்து றோபோட்.. .. .. பிரமிப்பில் உயர்ந்த புருவம் இறங்க மறந்தது. முதலில் உருவான குண்டுமணி விமானத்தை படிப்படியாக பலர் இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக்கிக் கொண்டு வந்திருந்தாலும் இளம் வயதில் படித்த றைட்ஸ் சகோதரர்கள் மட்டும் ஆதிமூலமாக பளிச்சென்று மனதில் துளிர்த்தார்கள்.

பின்னால் வந்தவர்கள் ஏணியில் ஏறி முந்திக் கொண்டு போய் விட்டார்கள். இடம் பிடிக்கும் அவசரம். கோயில் பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் எனத் தெரிந்தாலும் முண்டியடித்துக் கொண்டு நிற்பது போன்ற சுபாவம். இருக்கை இலக்கம் குறித்த போர்டிங்காட் கையிலிருக்கையில் தேவையற்ற அந்தரம்!

தனித்து விடப்பட்ட உணர்வு தலைதூக்க பையைத் தோளில் மாட்டி ஒவ்வொரு படியாக ஏறி வாசலை அணுகியதும், ஓடிக்கொலன் சுகந்தமுடன் ஏசி குளிர் குப்பென்று கட்டி அணைத்தது. இருக்கை இலக்கம் தேடி பாரத்துடன் நகர, திஸ் வே பிளீஸ் கூறிய அழகிய பணிப்பெண் குறுகிய நடைபாதையில் வழிகாட்டினாள். பெரிய கூட்டமில்லை.

பக்கத்தில் ஆளில்லாமல் விமானப் பிரயாணம் செய்வதில் ஒரு சுகம் இருக்கிறது. இடைமறிக்கும் தடுப்பை பின்னுக்கு மடக்கிவிட்டு கைகாலை வசதியாக நீட்டிக் கொள்ளலாம். இடைஞ்சலின்றி புத்தகம் வாசிக்கலாம். கண்மூடி சிந்தனை லோகத்தில் பிரவேசிக்கலாம். வேண்டிய போது கண்ணயரலாம். வேண்டுமானால் தயக்கமின்றி பியர் அருந்தலாம். மரியாதை பார்க்காமல் இடிடத்திற்கு சாப்பிடலாம். நமக்கு உரித்தில்லாவிடினும், ஆளில்லாத பக்கத்து இருக்கையின் குட்டித் தலையனையை எடுத்து முதுகிற்கு முண்டும் கொடுக்கலாம்.

ஆள் இருந்தால் இதற்கெல்லாம் இடைஞ்சல். சரியான பிரயாணி அமைந்தால் பரவாயில்லை. தொண தொணப் பேர்வழியென்றால் இப்போதிருக்கும் கனதியான மனநிலையில் கடிடந்தான். அவர் தன்னை அறிமுகப்படுத்த அவன் தன் முகவிலாசம் சொல்ல வேண்டும். ப+ர்வீகம், பயோடேட்டா, வீட்டு நாட்டு நிலவரம், மீண்டும் கனடா திரும்பும் திகதி, இப்போது கொழும்பிற்குப் போகும் நோக்கம், என்பதுவரை அவர் கேட்க பொறுமையாகப் பதில் கொடுக்க வேண்டும். மரியாதைக்காக, மேற் சொன்ன அத்தனைகளையும் அவரிடமும் கேட்க வேண்டும். விலாவாரியாக அவர் சொல்வதை கொட்டாவி விட்டுக் கொண்டு விலா முறியக் கேட்டிக வேண்டும்.

செல்வத்தின் இலக்கம் ஜன்னலோரம் இருந்தது. பக்கத்து இருக்கையில் யாருமில்லை. விமானம் புறப்படுவதற்கிடையில் யாரோ ஒரு வெளடிளைக்காரர் வந்து பக்கத்தில் குந்தக்கூடும். யாருடைய தொந்தரவுமற்ற தனிமை அவனுக்கு இப்போது தேவை. கொழும்பில் இறங்குகிற வரைக்கும் இருக்கைக்குள் குனிந்து வளைந்து குறுகிக் கொண்டு சத்தம் சலார் இல்லாமல் செத்தவன் போலக் கிடக்க வேண்டும். பையை தலைக்கு மேலிருந்த கபினுக்குள் நுழைத்து மூடினான். தொப்பென்று இருக்கையில் விழுந்து பட்டியை இறுக்கி கொழுக்கி மாட்டினான். தலையைச் சாய்த்டிது கால்களை நீட்டி கண்களை மூடிக் கொண்டான்.

குடும்பத்தோடு வந்து வழியனுப்பி விட்ட டானியல் இவ்வளவிற்கும் வீட்டிற்குத் திரும்பியிருப்பான். நானும் கூட வரட்டா என்றுதான் கேட்டான் டானியல். இதென்ன இதிலிருக்கிற முச்சந்திக்கு ஓடிப் போயிற்று வாறன் என்று சொல்கிற மாதிரியா. பிள்ளை குட்டிகள் தனித்துப் போய்விடும், இது என்னுடைய தலைவிதி, நான்தான் அனுபவிக்க வேனும் என்று சொன்னான் செல்வம். வந்தா உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று சியாமளாவே தூண்டினாள். சும்மா விசர்க்கதை கதைக்காதீங்க. அங்கே என்னோடு வரப் போய் ஒன்றிருக்க ஒன்று ஆயிற்றென்றால் என்ன செய்வது. நான் போய்த் திரும்பி வருவதே நம்பிக்கையில்லாமல் கிடக்கு என்று சொல்லவுந்தான் சியாமளா வாய் மூடிக் கொண்டாள்.

டானியலுக்கு அவனைத் தனியாகக் கொழும்புக்கு விட மனமேயில்லை. இன்னும் சொல்லப் போனால் இலங்கைக்குப் போகாமல் இங்கிருந்தே முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று கூடக் கேட்டான். இது பாரதூரமான விசயம். நேரில் போனால்தான் கையாள முடியும் என்றதும் அவன் மெளனமானான்.

இலங்கையில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகள் மூளைக்குள்டி பயமாகப் படிந்து போயிருந்தாலும் டானியலை விட்டுப் பிரிவது இந்தக் கணத்தில் அவனுக்கு மிகுந்த துயரை அளித்தது. அவனைப் போல நண்பன் கிடைப்பது அரிதிலும் அரிது.

மேரியைப் பெண் கேட்டுப் போய்த்டி திரும்பி வந்த அந்த மந்தமான இரவில் அவிழ்த்துப் போட்ட சேலையாய் டானியல் அப்படிக் குலைந்து போவான் என்று செல்வம் எதிர்பார்க்கவேயில்லை. கதவைத் தட்டிய விதத்திலிருந்தே புரிந்து விட்டது, கதை கந்தல் என்று.

“வாம்மா சியாமளா நல்லாச் சென்டு போச்சு. சாப்பிட்டாங்களா ?”

அவர்கள் எதுவும் சொல்லாமல் செற்றியில் இருந்தார்கள். அங்கிள் என்று பாய்ந்து கட்டிக் கொள்கிற திலீபன் கூட அப+ர்வ வாட்டத்திலிருந்தான், பிடுங்கிப் போட்டு வெய்யிலில் காய்ந்த இளம் செடி போல. இதற்கு மேலும் விசயத்தைப் புட்டு வைக்க வேண்டியதில்லை எனப் புரிந்து கொண்டான் செல்வம். பெரிய எடுப்பில் குடும்ப சமேதராய் கிளம்பிப் போனவன் முகத்தில் கரி ப+சிக் கொண்டு திரும்பி வந்திருக்கிறான். தனக்கு உண்டான ஏமாற்றத்தை விட டானியல் அடைந்திருக்கும் கவலையையிட்டே அவன் கலங்கினான்.

மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்று அடிக்கடி வீறாய்ப்பாய் பேசிப் பழக்கப்பட்டவன். தோல்வியைத் தாங்கமாட்டாதவன். தன் நிமித்தம் தோல்வியைத் தழுவிக் கொண்டு அதைச் சொல்லவும் முடியாமல் சொல்லாமலும் முடியாமல் முடங்கிப் போயிருப்பதைப் பார்க்க அவனுக்குத்தான் ஆறுதல் தேவையேயொழிய தனக்கல்ல என்றும் செல்வத்திற்குப் புரிந்தது.

ஒரு நிமிசத்தில் நூடுல்ஸ் போட்டு விடுகிறேன் பிள்ளைகள் பசியோட இருக்கும் என்றான் செல்வம்.

இல்லை நாங்க வீட்டிற்குப் போய்ச் சாப்பிடுகிறோம். நீ இப்படி இரு என்றான் டானியல்.

அவன் பக்கத்தில் இருந்தான்.

“மச்சான் என்னை மன்னிச்சிர்டா, அந்த மடைக் கிழவனை நம்பி சும்மாயிருந்த உன்னை குழப்பி விட்டேன். மதங்களால் மக்கள் பிரிஞ்சதுதான் மிச்சம். கனடாவுக்கு அகதியாக வந்து கடிடப்பட்டு முன்னுக்கு வந்த மனுசன். பரந்த மனப்பான்மையோடு நடந்து கொள்வார் என்று எதிர்பார்த்துப் போனது என்னுடைய பிழைதான். மதத்தில் வைச்சிருக்கிற மயக்கத்தை விட மாட்டோம் என்று சொல்கிற எங்கள் மக்களின் பிரதிநிதியாகவே அவரைப் பார்த்தேன். அவரோட கதைக்கிற வரை என் மனதில் இது தைய்க்கவேயில்லை. உன் முகத்தில் முழிக்கவே வெக்கமாயிருக்கு மச்சான். என்னை மன்னிச்சிர்டா.”

முட்டி வந்த கண்ணீர்த்துளிகள் காற்சட்டையில் அடுத்தடுத்து விழுந்தன.

இது போனா இன்னொன்று. இதுக்கேன் சின்னப்பிள்ளையாட்டம் நீ கண்கலங்கிறாய். என்னுடைய தங்கச்சிக்கு நாலு மாப்பிள்ளை பார்த்து ஐஞ்தாவதுதான் முற்றானது. இது எங்கள் ஊரில் நடக்காத விசயமா. அதுஅதுக்கு நேரகாலமிருக்கு. எனக்கு இப்போது என்ன அவசரம். தங்கச்சியின் சடங்கு முடிஞ்சாப்பிறகு ஆறுதலாப் பாப்பம். என் கல்யாணம் எங்கே எப்படி நடந்தாலும் உன் முகாந்திரத்தில்தான் நடக்கும். நீ கண்ணைத் துடை என்று சொன்ன செல்வம் டானியலின் கைகளைப் பிடித்து இறுக்கினான். டானியல் மெல்ல நிமிர, சியாமளாவைப் பார்த்துச் சொன்னான் செல்வம்.

“எனக்கென்றால் ஒரு துளியும் கவலையில்லை. எல்லாம் நன்மைக்கே நடந்திருக்கிற மாதிரி படுகிறது. எங்கேயோ ஒரு இடத்தில எனக்கென்று ஒரு பெண்பிள்ளை பிறந்துதானே இருக்கப் போகிறாள். அதைத் தேடுவதை விட்டுட்டு வீணாக மனசைப் போட்டுக் குழப்பாதீங்க. பார்க்கிற மாதிரியில் இனி எனக்கு பொம்பிளையே பார்க்க மாட்டாங்க போல் அல்லவோ இருக்கிறது.”

தங்களைச் சமாதானப் படுத்துவதிலேயே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள் சியாமளா. தன் ஏமாற்றத்தை மறைத்து தங்கள் கவலையை குறைக்கிற விதத்தில் அவன் சிரித்துச் சமாளிப்பதைப் பார்த்து அவள் வியப்படைந்தாள். அவன் வளர்ந்த விதம் அப்படி. சொந்த சகோதரங்களுக்காக தன் விருப்பங்களை முன்னிலைப்படுத்தாமல் அடக்கி வாசித்த வாழ்க்கை. அவன் அப்படித்தான் பேசுவான். வேறு விதமாக சிந்திக்கவோ பேசவோ அவனால் முடியாது. வேதக்காரக் குடும்பத்தில் பெண் கேட்டுப் போவதற்கு முன் கொஞ்சமாவது நாங்கள் யோசித்திருக்க வேண்டும்.

தன் சொந்த வாழ்க்கையில் நடந்ததை அவள் நினைவு கூர்ந்தாள். டானியலின் அண்ணர் ஜேக்கப் முறையாகப் பெண் கேட்டு வருவதற்கு முந்திய இரவு எங்கள் வீட்டில் என்ன நடந்தது ? அந்தப் பிரச்னையை எப்படி இவ்வளவு கெதியாக என்னால் மறக்க முடிந்தது ?

சியாமளாவின் அப்பா அந்தக் காலத்து எஸ்எஸ்சியில் குண்டு அடித்தவர். துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மஸ்றர் கிளார்க்காக வேலை பார்த்தவர். துறைமுகத்தில் வேலை தேடுவது அப்போதெல்லாம் கடிடமான காரியமில்லை. அறிமுகந்தான் தேவை. உலகிலேயே பிரசித்தமான இயற்கைத் துறைமுகமாக திருகோணமலையிருந்தும் முக்கியமான ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் கொழும்பு காலி துறைமுகங்களில்தான் நடந்தன.

ஆண்டிலொருதரம் ஆவணியிலொருதரம் கப்பல்கள் வருகிற போது இரவு பகலாக வேலையிருக்கும். ஓவர்டைம் இருக்கும். மற்றும்படி காலையில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டில் வந்து படுத்துக் கொள்வார். அப்பம்பாவோடு சேர்த்து ஏழு பேருள்ள குடும்பத்திற்கு சம்பளம் கைக்கும் வாய்க்கும் தான் கானும்.

பட்டினியென்று இல்லை. ஆனால் சேமிப்பில்லை. தீபாவளி வருசப்பிறப்பு வந்து விட்டால் எல்லாருக்கும் புது உடுப்பு எடுக்கிறதே உழுக்கெடுத்த வேலை. முன்னமே எடுத்த சம்பள முற்பணங்களினால் கைக்குக் கிடைக்கிறது அரைவாசிதான். சியாமளா தன் ஏலெவல் படிப்பு மூலதனத்தோடு டாச்சர் வேலைக்குப் போகத் தொடங்கினாள். அந்தப் போக்குவரத்தில் டானியலை வழியில் கண்டு பழக்கம். கதைத்துப் பழக்கம். அது கல்யாணமாகக் கனியும் என்று அவள் கருதியதில்லை.

அண்ணர் முறையாகப் பெண் கேட்டு வரப் போகிறார் என்ற விசயத்தை முதல் நாள் மாலைதான் அவசரத்தில் டானியல் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அண்ணர் அவரை விட இரண்டு வயது மட்டுமே மூத்தவர். விசால மனம். நொட்டை சொட்டை பார்க்காத குணம். விட்டெறிந்து பேசாத பண்புள்ளவர் என்றெல்லாம் அவன் சொன்னாலும் வீட்டில் எழப் போகும் பிரச்னையில் அவள் குழம்பிப் போனாள். அன்று இரவு அப்பம்மா பிரச்னையைக் கிளப்பினாள். விறாந்தைச் சுவருக்கு முட்டுக் கொடுத்து இருந்து கொண்டு மந்திர ஆலோசனைக்கு அவள்தான் தலைமை தாங்கினாள்.

“எனக்கென்டால் இது நடக்கிற கல்யாணமாத் தெரியேல்லை.”

தன் நியாயமான சந்தேகங்களை ஒவ்வொன்றாக அடுக்கினாள் அப்பம்மா. அது பழைய கட்டை. அதுவும் கரவெட்டிக் கட்டை. அப்பா பக்கத்து வேலிக்குக் கேட்காமல் மெதுவாகச் சொன்னார்.

“ஏனனை அபசகுணமாப் பேசுறாய். வரட்டும் என்னன்டு கேப்பம்.”

“அதுகள் வேதக்காரச் சனம். கழுத்தில குருசை மாட்டிக் கொண்டு திரியிற சாதி. எங்களுக்கு ஒத்து வருமோ ?”

தொடர்ந்து தன் நியாயங்களைச் சொல்ல அப்பம்மா விரல் மடக்கினாள். மடக்கியதைப் பார்த்தால் சொல்வதற்கு கைவசம் நிறைய வைத்திருந்தாள் போலவே தோன்றிற்று.

“யாழ்ப்பாணத்துச் சனம் சீதனம் கீதனம் என்டு சாகிற சனங்கள். பிள்ளையிட காதில கழுத்தில இருக்கிறதை விட்டா உன்னட்டை குடுக்கிறதுக்கு என்ன கிடக்கு.”

அப்பம்மாவும் யாழ்ப்பாணந்தான். இற்றைக்கு ஐம்பது வருசங்களுக்கு முன்னால் திருகோணமலைக்கு திருமண பந்தத்தால் இறக்குமதியானவள். பிள்ளைகுட்டி பேரன்பேத்திகள் என்று குடும்பம் பரந்ததால் செறிவான செம்பாட்டு மண்ணில் விழுந்த மரவள்ளிக்கிழங்கு மாதிரி திருகோணமலை மண்ணில் வேரூன்றிப் போனவள். எண்பத்திமூன்று கலவரத்திற்குப் பிறகு உண்டான போக்குவரத்துக் கடிடங்களினால் பிறந்த மண்ணோடு இருந்த கொஞ்சநஞ்ச தொடர்பும் அறுந்து போயிற்று. உலகந் தெரிந்த மனுசி. பேரன் பேத்திகளில் உயிரை வைச்சிருக்கிற மனுசி. அவளை எதிர்த்துக் கதைக்க அப்பாவிடம் அஸ்திரமில்லை.

“நான் என்னம்மா செய்ய நல்ல குணமான பொடியன் என்டு பிள்ளை சொல்றாள். வாழப் போறவள் அவள். மூத்தவளை நல்ல இடத்தில கட்டிக் குடுத்திற்றால் மற்றதுகளுக்கு ஒரு வழிபிறக்குமல்லோ.”

“நல்ல நாடகக் கதை கதைக்கிறாய். வேதக்காரனுக்கு கட்டிக் குடுத்தால் மற்றப் பெட்டைக் கழுதைகளை ஆரடா தேடி வரப் போகுதுகள்.”

“அம்மா நீ சொல்றது எனக்கு விளங்குதனை. என்னால என்னனை செய்யேலும். எங்கயும் போய் கொள்ளையடிக்கவோ சொல்றாய். இப்பவே இருபத்தாறு முடியப் போகுது. சீதனம் என்டு குடுக்க இந்த ரெண்டறை வீட்டைத் தவிர வேற ஒன்டுமில்லை. இதில என்னால வேதம் சைவம் பாத்து காலத்தை வீணடிக்கேலாதம்மா. விசாரிச்சுப் பாத்ததில மாப்பிள்ளை தங்கமான பிள்ளையாம். குடிகிடி ஒன்டும் இல்லையாம்.”

“இக்கணம் இருக்கிற இந்த குச்சு வீட்டையும் குடுத்திட்டு மற்றதுகளுக்கு என்ன செய்யப் போறாய் ? ”

“படைச்சவன் விட்ட வழி.”

சொல்லும் போதே அப்பாவுக்கு தொண்டைக்குள் அடைத்தது. தன் இயலாமையை படைத்தவனிடம் பாரப்படுத்தி விடுவதுதான் அவருக்குத் தெரிந்த ஒரே வழி. முழுக்கை பனியனை வயிற்றிலிருந்து உயர்த்தி கண்ணைத் துடைத்து மூக்கை இழுத்துக் கொண்டார். அப்பம்மா சூடாக நியாயங்களைச் சொன்னாலும் அப்பா கண் கலங்கினால் தாங்க மாட்டாள்.

“சரி சரி நீ அழாதை. நானும் இன்னும் எத்தனை நாளைக்குக் கத்தப் போறன். சாகப் போற எனக்கு இந்தச் சங்கிலியும் ப+ட்டுக்காப்பும் என்னத்துக்கு. இந்தா இதை அழிச்சு அவளுக்கு நகையைச் செய்து போடு.”

அப்பம்மாவின் கைகளில் ப+ட்டுக் காப்பும் கழுத்தில் கட்டிச் சங்கிலியும் எப்போதுமிருக்கும். கடைசி வரைக்கும் இந்தப் ப+ட்டுக் காப்பு உன்னோடேயே இருக்க வேனும் என்று சென்றிமென்றாகச் சொன்னது மட்டும் நில்லாது மண்டையை அவளது மடியிலேயே போட்டுவிட்டுப் போயிருந்தார் அப்பப்பா. மாசத்துக் கொரு முறை அதைக் கழட்டி பிறசால் தேய்த்து சுத்தம் செய்து கொள்கிற போது மட்டும் அப்பம்மாவின் கைகள் வெறுமையாக இருக்கும். காப்பின் சுரைகளை பக்குவமாகக் கழட்டி மீண்டும் போடுவதைப் பார்ப்பதே சியாமளாவிற்கு ஒரு இனிய அனுபவம். அவளைப் பொறுத்தவரை அந்தப் ப+ட்டுக்காப்பு அன்யோன்ய பெறுமதி வாய்ந்த நகை.

அப்பம்மா உண்டாக்கிவிட்ட பயம் அப்பாவை பிடித்துக் கொண்டது. டானியலின் அண்ணர் வந்து நாளைக்கு என்னென்ன கேட்கப் போகிறாரோ ?

(தொடரும்)

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்