பாசுவின் தவம்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

புதியமாதவி


இருட்டை வெளிச்சமாக்கி விடியலை நோக்கி மும்பை வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

பெட் ரோல் பம்ப் வைத்திருக்கும் சர்தார்ஜி சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு கையை கழுவுவதற்கு நல்லியை திிறந்தான்.

நல்லியில் தண்ணீர் வரலை

மனைவி குர்மீட்திடம் கேட்டான். ‘அவள் வாட்ச்மேன் ஏதோ சொன்னான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நல்ல சோப்ரா, வீரார், மீரார் ரோடு ..எல்லா இடங்களிலும் தண்ணீர் கஷ்டம் . சில இடங்களில் முனிசிபல் வாட்டரே கிடையாது. தினமும் லாரியில் தான் தண்ணீர் வரும். ‘அதனால் இங்கே எல்லாம் வீட்டு குடியிருப்புகள் விலை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்.

காட்கோபரில் இருக்கும் இவர்களின் கங்கா கார்டன்ஸ் காலனியில் 24 மணிநேரமும் தண்ணீர் ..

‘இந்த வசத்ிக்காகவே பிளாக் 60, வொயிட் 40 ரேட்டில் இந்த காலனி ப்ளாட்டுகள் விலைக்குப் போனது.

இப்போ என்னடான்னா . இங்கேயும் வாட்டர் சார்ட்டேஜ் ..

என்ன தான் நடக்கு இங்கே ?

சர்தார்ஜி பக்கத்து ப்ளாட்டுகளில் குடியிருக்கும் மசூம்தார், சாவந்த் இருவரையும் அழைத்து கொண்டு கீழே இருக்கும் வாட்ச்மேனடம் போனார்கள்.

‘சலாம் சார் ‘- சீருடையிலிருக்கும் வாட்ச்மேன் அவர்களுக்கு சல்யூட் அடித்தான்.

‘ தண்ணீர் ஏன் வரலை ? ‘ சாவந்த் நேரடியாகவே வாட்ச்மேனிடம் கேட்டான்.

‘சாப் .அப்நா செகரட் ரி சாப் புரபொசர் பாசுனே போலா ‘ என்றான்.

‘க்யூம் ? ஏ புரபொசருக்கு கியா வோகயா ? ‘

மூவரும் வாட்ச் மேனிடம் தண்ண்ர்ீ வருதா..என்று விசாரித்தார்கள்.

அவன் தண்ணீர் டேங்க் நிறஞ்சி போறதுனு உண்மையைச் சொன்னான்.

அவன் அப்படி சொன்னபின் அவர்களுக்கு புரபொசர் பாசு மீது கோபம் வந்தது.

இந்த புரபொசர் மனசிலே என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் ?

செகரட் ரி ஆயிட்டா இவனுக்கென்ன அமெரிக்க பிரசிடெண்ட் புஸ்…ுனு நினைப்பா ?

இப்பவே இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.

மூவரும் லிஃப்டில் 10வது மாடிக்கு போனார்கள்.

முஜம்தாருக்கு இரவு 11 மணிக்கு ப்பின் பாசுவின் வீட்டு கதவை தட்டுவது சரியாகப் படவில்லை.

நாளை பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தான்.அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை.

‘ மும்பையில் யார் சாரு 11 மணிக்கெல்லாம் தூங்க போறது ?.. மாசா மாசம் சொசய்டி சார்ஜ் மட்டுமே ரூபாய் மூவாயிரம் நாலாயிரம்னு கட்டறோம். அதிிலே கொஞ்சம் லேட்டானா லேட் சார்ஜ் வேற… யாரிட்ட கேட்டிட்டு இவன் தண்ணீருக்கு டைம் குறிச்சான் ? ‘ சாவந்த் ஏக வசனத்த்ில் பேசினான்.சர்தார்ஜியின் பகடியும் அதற்கு ஏற்ற மாதிரி தாளம் போட்டது.

தமிழ் செய்திகள் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததற்கு எதிர்கட்சி காரணம் என்று ஆளும் கட்சியும், ஆளும் கட்சி காரணம் என்று எதிர்கட்சியும் மாற்றி மாற்றி சொல்வதை சளைக்காமல் டி.விக் காரர்களும் செய்திகளாக்கி கொண்டிருந்தார்கள்.

தஞ்சாவூரிலிருந்து அவன் அம்மா எழுதியிருந்த கடிதம் அவன் சட்டைப் பையில் கனத்து கொண்டிருந்தது. பாசு என்றழைக்கப் படும் பாஸ்கரன் அவர்கள் மூவரையும் வீட்டுக்குள் அழைத்தான். அவர்கள் பாசுவை வெளியில் வரும்படிவாஅழைத்தார்கள். பாசு தன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு அவர்களுடன் கீழே வந்தான்.

கொஞ்ச நேரத்தில் வார்த்தைகள் தடித்தது.

’24 மணிநேரமும் தண்ணீிர் வருதுனு தானே இவ்வளவு ஹய் ரேட்டிலே இங்க வீடு வாங்கியிருக்கோம் நீ யார்டா ரூல்ஸ் போடரதுக்கு ? ‘

– ‘தண்ணியை நீங்க எல்லாரும் வேஸ்ட் பண்றீங்க ‘

‘நாங்க இதுக்கெல்லாம் சேர்த்து தான் பணம் கட்டறோம் ‘

‘இந்த நாட்டிலே யாருக்கும் தண்ணியை வேஸ்ட பண்ற அதிகாரம் கிடையாது . நான் அனுமத்ிக்க மாட்டேன் ‘

‘நீ யார்டா எங்களுக்கு அனுமத்ி தர்றதுக்கு.. யே அம்ச்சி மும்பை ஹய்.. ..ஸாலா மதராஸி. ‘

‘யேய் மைண்ட் யுவர் வொர்ட்ஸ். யே மேரா பாரத் தேஸ் ஹய்.. ‘ பாசுவின் குரலில் உணர்ச்சி வெடித்தது.

அவன் ஆத்திிரத்தில் சாவந்தின் சட்டை காலரைப் பிடித்து இறுக்கினான். ‘உங்க அப்பன் வீட்டு தண்ணியாடா.. ? ‘

‘ஏய் துமாரா பாப்கா .. ‘

‘ஏய் பாப்கா பச்சே ‘..

கூட்டம் கூடிவிட்டது. முஜம்தாரும் சர்தார்ஜியும் இப்போது நடுவர்களாக் நின்று சாவந்தையும் பாசுவையும் சமாதானப்படுத்தினார்கள்.

‘என்ன இருந்தாலும் சாவந்த் இப்படி பேசியிருக்க கூடாது.. ‘

‘வாக்குவாதம் பண்றப்போ புரபொசர் கையை நீட்டியிருக்கப் ப1/4ாது. ‘

மியூசிக் கிளாஸிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பாசுவின் மகனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை.

நடக்க கூடாதது, நடக்க விரும்பாதது நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது.

‘ஏ… ஏ.. தேக்கோ ‘..உங்க அப்பன் செய்திருக்கிறதைப் பாருன்னு சாவந்த் தன் கிழிந்து தொங்கும் சட்டை பையை அவனிடம் காட்டினான்.

பாசுவின் மகன் பாசுவை தள்ளி கொண்டு லிஃப்டில் ஏறினான்.

‘பாரும்மா..இங்கே பாரு.. அப்பா செய்திருக்கிற காரியத்தைப் பாரு ‘ என்று அம்மாவிடம் கத்தினான்.

களைத்துப் போய் பாசு சோபாவில் உட்கார்ந்தான். அந்த குளிர்நேரத்திலும் அவன் உடம்பு வேர்த்திருந்தது.

‘பாசு ஏன் இப்படி தண்ணீ தண்ணினு பைத்தியம் மாதிரி அலையறீங்க.. அன்னிக்கி என்னடான்னா வேலைக்காரி பாத்திரம் கழுவறப்போ மடமடனு தண்ணியை திறந்து வச்சிருக்கானு அவளைத் திட்டினீங்க..அவ இப்போ வேலையை விட்டுட்டா. வாஷிங் மஷினில் தண்ணி அதிகமா செலவாகுதுனு கையாலே துவைக்க சொல்றீங்க.. ஏன் ஏன் இப்படி எல்லோரும் பார்த்து சிரிக்கிற மாதிரி நடந்துகிறீங்க.. அழுகையும் கோபமும் சேர்ந்து வர அவள் எழுந்து உள்ளே போனாள்.

இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது.

‘அம்….மா.. இங்கே ஓடி வாயேன்.. அப்பாவுக்கு என்னாச்சுனு பாரேன் ‘ அவள் ஓடி வருவதற்குள் பாசு மயங்கி சோபாவில் சரிந்தான்.

‘டாக்டர்,.. அவருக்கு ஒன்னுமில்லியே..டாக்டர்.. ‘

‘ப்ளிஸ் அழாத்ீங்க சத்தம் போடதீங்க அவருக்கு இப்போ ஓய்வு தேவை. ‘ டாக்டர் சொல்லிட்டு போனார்.

‘பாபி.. மாஃப் கர்னா பாபி … ‘ சாவந்த் ஓடிவந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். ஆஸ்பத்திரியில் இருந்த சிஸ்டர் சாவந்தை சத்தம் போட்டு விரட்டினாள்.

பாசு கண் விழிப்பது போலிருந்தது.

அவள் ஓடிப் போய் அவனருகில் நின்று அவன் நெற்றியைத் தடவி விட்டாள்.

‘காவேரி.. ‘

‘ஆங் ..உங்க காவேரிதாங்க ‘ அவள் அவன் கைகளைப் பிடித்தாள்.

‘காவேரி .. உன் பேரு காவேரிங்கறதினால்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தெரியுமா உனக்கு.. ‘

‘ அய்யோ இதை எத்தனை தடவை சொல்லிட்டாங்க பாசு .. பாசு இந்தப் பாருங்க நான் உங்க காவேரி ங்க…. டாக்டர் உங்களுக்கு ஒன்னுமில்லைனு சொல்றாரு ‘

அவன் கண்களில் மிரட்ச்சி.. … ‘ நீ எங்க காவேரி தானே ..ஏன் என்கிட்டே வரமாட்டேங்க.. ‘

‘அய்யோ என்ன பாசு என்ன பேசறீங்க நான் உங்க கூடவே தானே இருக்கேன்.. ‘

‘மனுசா செத்துப் போனா அழுதிடலாம்..இங்கே மண்ணே செத்துண்டிருக்கே.. நான் தவம் செய்யப் போறேன்.. பாகிரதன் கங்கைக்காக தவம் செய்த மாதிரி நான் தவம் செய்ய போறேன் தவம் .. த் .. த்வ.. ‘ அவன் வார்த்தைகள் வறண்டு கொண்டிருந்தது. காவேரி கத்தினாள்.

‘ டாக்டர். ப்ளீஸ் இங்கே வந்து பாருங்களேன்.. எனக்கு பயம்மா இருக்கு .. அவர் என்னவோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசற மாதிரி இருக்கு.. ‘

டாக்டர் மீண்டும் வந்து அவனைப் பார்த்தார்..

அவனுக்கு ஊசி போட்டார்…

‘தூங்கறதுக்கு ஊசி போட்டிருக்கேன் நல்ல தூங்கினா உடம்பும் மனசும் ரெஸ்ட் எடுத்து எல்லாம் சரியாயிடும். ஹி இஸ் ஆல்ரைட்.. ‘

காவேரி கண்களிலிருந்து கண்ணீர் மடை உடைத்துக் கொண்டு வந்தது.!.

***

puthiyamaadhavi@hotmail.com

புதியமாதவி,

மும்பை. 42.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை