பாிசுப் பேழை

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

கோமதிநடராஜன்


திருநெல்வேலியில், தடுக்கி விழுந்தால், ஒன்று காந்திமதியாக இருக்கும், அல்லது கோமதியாக இருக்கும்.இந்த இரண்டு பெயரைச் சொன்னால், ‘சொந்த ஊர் திருநெல்வேலியா ? எங்கே ?ஜங்ஷனா,டவுணா ? ‘ என்று நூற்றுக்கு, எழுபது பேராவது கேட்பார்கள்.அப்படிப் பட்ட ஒரு காந்திமதிதான் நம் கதையின் நாயகி.

அவள் மனதில் ரொம்பநாளாகவே ஒரு சந்தேகம்.அவளுடைய சந்தேகத்தை எழுதும் முன்,காந்திமதியின் அம்மாவைப் பற்றி ஒருசில வார்த்தைகளை எழுதினால்தான் இந்தக் கதையைத் தொடங்கமுடியும்.

காந்தியின் அம்மா,ஆழ்வார்குறிச்சி என்ற ஒரு சின்ன கிராமத்தில், பிறந்து வளர்ந்தவள். ஸ்லேட்டை அமுக்கிப் பிடித்து,பலப்பத்தைக் கையில் இறுக்கி, நாக்கைத் துருத்தி, ஐந்தாம் வாய்ப்பாடு எழுதும், நாலாங்கிளாஸ் வரைக்குமாவது படித்திருப்பாளா என்ற சந்தேகம்தான்.பத்துப் பன்னிரண்டு வயதுக்குள் பருவம் அடைந்து,உலக்கை போட்டு உட்கார்ந்தவள்.மூன்று நாள் விடுப்பு போக பாக்கி நாளெல்லாம்,ஒரு கையில் கரண்டியும்,மறு கையில் கைபிடித்துணியுமாக விறகடுப்பில்,கூட்டாஞ்சோறு என்ன சொதி என்ன,அவியல் என்ன, என்று ஆக்கப்படித்தவள்.

‘கண் பார்த்ததை கை செய்யவேண்டும் ‘ என்று, இலக்கணம் வகுக்கப் பட்டக் ‘கூறு ‘என்றகெட்டிக்காரத்தனம்,அவளுக்கு அமைந்த ,ஒரு சில வருடங்களில்,ஜங்ஷனில் ஒரு தொழிலதிபருக்கு வாழ்க்கைப்பட்டாள் .[இந்தக்கால இல்லத்தரசிகளில் 90% பேருக்குக் கூறு என்ற வார்த்தைக்கு அர்த்தமே தொியாது.கூறு என்றால் கிலோ என்ன விலை என்று வெட்கமில்லாமல் கேட்பார்கள்]

கிராமத்து சூழ்நிலையில் பிறந்து, உலக அறிவு, வளர வாய்ப்பே இல்லாத, அப்பாவியான அம்மா சீதாலட்சுமி,தன் குழந்தைகளுக்கு ஏற்றார்போல் பாிசுகளை வாங்க, எங்கே கற்றுக் கொண்டாள் ?வருடத்துக்கு லட்சங்களை வாியாகக் கட்டும்,ஒரு, தொழிலதிபாின், மனைவி என்ற தோரணையைத் தன் பேச்சில் ஒரு வாி கூட காட்டாத் தொியாத ஒரு சிம்பிள் லேடிக்கு,பார்த்துப் பார்த்துப் பாிசுகளை வாங்கும் சமயோசிதம் எப்படி வந்தது ?

இதுதான் காந்திக்கு அடிக்கடி வரும் சந்தேகம்.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த சீதாலட்சுமி ,முகம் கோணாமல்,உடல் சளைக்காமல் எண்ணி பதினேழே ஆண்டுகளில் ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானாள். அதில் கடைக் குட்டிதான் நம் காந்திமதி.

இந்தப் பட்டிக் காட்டு அம்மா, எப்படி ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களது ரசனை அறிந்துப் பாிசுப் பொருளை வழங்கினாள் ?

காந்திக்கு ஏழட்டு வயதிருக்கும்,அப்பொழுதெல்லாம், ஆழ்வார்குறிச்சி செல்வதென்றால் அவளுக்கு ஒரே குஷி.அவளுடைய மாமா வீடு இருக்கும் தெருவுக்குள்,47ம் ஆண்டு மாடல் செவர்லே கார் ஒரு சருக்கில் இறங்கும்,அந்த சருக்குப் பாதை வந்தாலே, வீடு வந்து விட்டதை கண்டுபிடித்துவிட்டு, அம்மா மடியிலிருந்து தலையைத் தூக்குவாள்.

மாமா வீட்டில் , அவளுக்குப் பிடிக்காத ஒரே ஒரு விஷயம் குளிப்பதற்கும் காலைக் கடன் கழிப்பதற்கும் ஒரு மைல் ஓடி கழிப்பறையை அடையவேண்டும். பாத்ரூமாவது பரவாயில்லை,தாமதமாகப் போனால்,தப்பில்லை. மற்ற விஷயங்களுக்கு ?

ர் வண்டிக்காரன்,மாட்டு வண்டியில், பொிய லாாி டயர் ஒன்றைப் போட்டு அதன் மேல் அண்டாவை,சைக்கிள் ட்யூபால் அசையாமல் கட்டி எடுத்து வந்தத் தண்ணீரைத், தெருவில் இருந்துகொண்டே ,கல்லில் செதுக்கிய அகல வடிகால் வழியே ஊற்றுவான்.குபு குபு என்று தண்ணீர் விழும்போதே ,குற்றாலச் சாரலையும் கூடவே,மொண்டு வந்து ஊற்றுவது போலிருக்கும். பாத் ரூமின் ஒரு ஓரத்தில் தாமிரபாய்லர்,அந்த ஜுவாலையின் கதகதப்பு,

அது வெளிப்படுத்தும் வெப்பம் அறையின் குளிர்ச்சியை மிதப்படுத்தி முதல் சொம்பு நீரை,உடல் நடுங்காமல், மேலே ஊற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும். அலுமினிய ட்ரேயில் காய்ந்த நிலையிலேயே எப்பொழுதும் இருக்கும் மைசூர் சோப்,அந்த மிதமான தண்ணீாில் பொங்கிப் பொங்கி வரும் சோப் நுரையைப் பார்க்கக் காந்திக்கு சந்தோஷமாக இருக்கும்,அதை அலச எடுக்கும் நேரத்துக்குள் அறை முழுக்க மைசூர் சந்தன வாசம் பரவ ஒரு தனி அனுபவத்தைத் தரும் சூழ்நிலையில், குளித்து வெளியே வருவாள் காந்தி.

இந்த சுகந்த மணத்தையும் அது ஏற்படுத்தும் அவளது, சிறுமிபருவத்து, நினைவலைகளையும் இழந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ அவள் மைசூர் சோப்பே வாங்குவதில்லை.தினமும் போட்டால் அந்த இனிய நினைவுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்.

இப்பொழுதும் யார் வீட்டிலாவது மைசூர் சோப்பைப் பார்த்துவிட்டால் போதும்,சந்தோஷமாக முகர்ந்து பார்த்து ஆழ்வார்குறிச்சிகே போய்விடுவாள்.பக்கத்தில் அம்மா இருப்பதையும், அத்தையுடன் [அம்மாவின் தம்பி மனைவி]கதைபேசிக் கொண்டே இருவருமாக சமையலில் ஈடுபடுவதையும் நினைத்துப் பார்த்து ரசிப்பாள்.

இந்தக்காலத்தில் இல்லத்தரசிகள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மிக்சி,கிரைண்டர்,சாப்பர்,மைக்ரோவேவ் ஓவன் என்று சகல துணைகளோடு,முக்கி முனங்கி செய்யும்,நாலுவகைக் கறி,பச்சடி பாயாசம் வடை துவையலை இவர்கள், அனாயாசமாக, அதுவும் விறகு அடுப்பில் செய்து முடிப்பதையும், கண்ணுக்குள் கொண்டுவந்து லயிப்பாள்.இந்தக் காலத்து சமையல் ராணிகள் யாரும் பக்கத்தில் நெருங்க முடியாது.

அவர்களின் கை மணமும்,சமையல் பக்குவமும் இன்னமும் காந்தியின் மனதிலும் நாவிலும் மறையாமல் நிலைத்திருப்பதால்தான் அவள் அடுத்தவர் சமையலை மறந்தும் கூட விமாிசனம் செய்யமாட்டாள்.[அப்படியே வாய் தவறி சொல்லியிருந்தால் ஏதோ பாவம் பண்ணியதாய் படபடப்பாள்]வைரத்தை ரசித்தவளுக்குக் கூழாங்கல்லை விமாிக்கத் தோன்றுமா ?இப்படி 40 வருடங்களாக மனதில் அலையாட வைக்கும் ,சமையல் மட்டுமே தொிந்து வைத்திருந்த அம்மா,எப்படி எல்லோரையும் திருப்தி படுத்தும் வண்ணம் அவரவர் திறமைக்குத் தகுந்த பொருட்களைப் பாிசாக அளித்தாள் ?காந்தி இன்றும்கூட ஆச்சாியப் பட்டுப் போவாள்.

காந்தி வீட்டிலும் மற்றவீடுகளைப் போல், ஒரு பழக்கம்,சாமி கும்பிடுவதாகட்டும்,தீபாவளிக்குப் பட்டுத் துணியை அப்பா கையால் வாங்குவதாகட்டும்,பொிய அண்ணனில் ஆரம்பித்துக் கடைக்குட்டி வரை வாிசைப் படிதான் வணங்க வேண்டும், வாங்க வேண்டும்.காந்தி ஏதோ மறதியில் ,ஒரு எட்டு முன்னே போனாலும்,அவளுக்கு இரண்டே வயது மூத்தவளான,ஸரஸ்வதி,அவளைத் தனக்குப் பின்னே நிறுத்தி விடுவாள்

ஒழுங்கான வாிசையில், அம்மாவிடமிருந்து பாிசையும் எல்லோரும் வாிசையாகப் போய் எடுத்து வந்தார்கள்.

அந்த அறையும் பாிசுப்பேழையும் எப்படி இருக்கும் என்று யாருக்கும்

ளும் சொல்லமாட்டார்கள்.

முதலில் பொியண்ணன் கதிர்வேல்,உள்ளே போய் வெளியே வரும்பொழுது அவன் கையில் ,ஒரு அழகியக் காமரா.சின்ன பெட்டிக் காமரா,ஆடாமல் அசையாமல் பட்டனைத்தட்டிப் படம் படமாக எடுத்துத் தள்ளுவார்.அவர் என்னவோ, எங்கள் எல்லோரையும் ‘சீஸ் ‘ என்று சொல்லவைத்துதான்,எடுப்பார்.படம் பாம்பேக்குக் போய் கழுவி வந்தபிறகு பார்த்தால் பேந்தப் பேந்த முழிப்பதுமாதிாி இருக்கும்,வெறும் ஜட்டியில்,பிறகு அரை பாவாடை,தாவணி என்று ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு படம் என்று பிடித்திருக்கிறார்.பெட்டிக்காமராவிலிருந்து மூவி காமரா வரை அழகாக நிபுணத்துவம் பெற்றவரானார்.கூடப் பிறந்தக் குட்டிப் படைகளான நாங்கள்தான் அவருடையப் புகைப்படக் கலையை வளர்க்க சப்ஜெக்ட்டாக இருந்து உதவினோம்.இவரே இந்தக் காலகட்டத்தில் இருந்திருந்தால்,எத்தனையோ சாதித்திருப்பார்,எங்கேயோ போயிருப்பார்.அவருக்கு அம்மா போனஸாகத் தந்தது,நகைச்சுவை உணர்வு.ஒரு இடத்தில் சிாிப்பொலியும் கலகலப்பும் நிறைந்து வழிந்தால் ,நிச்சயமாகச் சொல்லலாம் அங்கே கதிர்வேல் இருக்கிறார் என்று.

அடுத்து,குமார் பாிசுக்காகச் சென்றவர்.கையில் சுருதிப்பெட்டியுடன் வெளியே வந்தார்.

அவர் பாடத் தொடங்கினால் பாகவதரும் கிட்டப்பாவும் பக்கத்தில் அமர்ந்து ரசிப்பார்கள் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.கிட்டப்பாவையும் பாகவதரையும் ரசிக்கும் பக்குவம் காந்திக்கு இல்லையென்றாலும் அண்ணன் நன்றாகப் பாடுகிறார் என்று மட்டும் புாிந்து கொண்டு,ரேடியோவில்,பாகவதர் பாட்டு முடிந்து ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தொியுமா ‘ பாட்டுக்காகக் காத்திருப்பாள்.[சிட்டுக்குருவி என்று வந்ததால் அது சிறுமிகளுக்கான பாடல்தான் என்பது அவளது அபிப்பிராயம்.இல்லையென்றால் ‘என்னை விட்டுப் பிாிந்து போன கணவன் வீடு திரும்பலை ‘என்ற வாிகள் அவள் சின்ன காதுக்குள் விழாமல் போயிருக்குமா ?] சாி நாம் நம் குமாரைப் பார்க்கலாம்.இவர் ஒரு நல்ல ரசிகர்,ரசித்துப் பாடுபவர்,ரேடியோவில் பாகவதர் ஒலித்தால் போதும் கூடவே இணைந்து விடுவார்.என்னெஸ்கேயையும் விட்டு வைக்க மாட்டார்.காந்திவீட்டு ‘மணி ஐய்யர் ‘ அவர்.சுப்புடு இருந்திருந்தால் இப்படித்தான் பாராட்டியிருப்பார்.நிறைய புத்தகங்கள் வாசிப்பார்,மனதில் கோபமோ,கவலையோ,எதுவும் அரை நிமிடம் கூடத் தங்காது.மனதை, எப்பொழுதும், அன்றலர்ந்த மலராக வைத்திருப்பார்.

அடுத்தது, ஆறுமுகம் உள்ளே போய் போன வேகத்திலேயே வெளியே வந்தார் .அதிலும் வேகம்தான்.அவர் கையில்,சின்னதாக ஒரு வேட்டைத் துப்பாக்கி,டென்னிஸ் மட்டை என்று ,முகம் நிறைய மகிழ்ச்சியுடன் திரும்பினார்.நல்ல ஸ்போர்ட்ஸ் மேன்.அவர் கார் எடுத்து சிந்துபூந்துறையை விட்ட,அடுத்தவின்னாடி பாளையங்கோட்டை பெருமாள்புரம் வீதியில் கார் பறக்கும்.அந்தக் காலனி மாமிகள் அனைவரும், பயந்து நடுங்கிய படி,அண்ணனின் நலம் கருதி,செல்லமாகச் சாபம் இடுவார்கள் ‘இந்த ஆறுமுகம் என்னைக்கு மரத்தில மோதி நிக்கப் போறானோ,இவன் வீடு போய் சேர்ர வரைக்கும் இவனைப் பெத்தவ வயித்திலே நெருப்பைக் கட்டிட்டுத்தான் இருப்பா,பாவிப் பய… ‘ஊர்ப் பொியவர் மகன் என்ற காிசனத்தில் எல்லோருமே,அவனது வேகத்தை நொந்துகொள்வார்கள்.அவரது வேகம் அடுத்தவருக்கு உதவுவதிலும் இருக்கும்.தேவை என்று தொிந்தால் போதும் கேட்குமுன் தந்து விடுவார்.அப்படி ஒரு தாராள மனது.

கந்தனுக்காகச் ச

ங்கி வைத்திருந்தாள் சீதாலட்சுமி.அப்பாவின் தொழிலுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு வகையில் உதவியாக இருந்தார்கள் என்றால் இவர்,ஒரு நல்ல நீதிபதியைப் போல்,நிலைமையை நன்றாக சமாளிக்கத் தொிந்தவராக இருந்தார்.எல்லோரும் வேண்டும்,எல்லோரும் நல்லவர்,என்று எண்ணத் தொிந்தவர்.தொழிலின் சட்ட நுணுக்கம் அறிந்தவர்.பிரச்சனையென்று வந்தால்,பிரச்சனையை உண்டு பண்ணியவரை அலசாமல், பிரச்சனையை மட்டும் அலசித் தீர்வு காணவேண்டும் என்பதை அழகாக நடைமுறைப் படுத்தத் தொிந்தவர். இதமாய் எல்லோரையும் அணுகுவதால்,அனைவரது உள்ளத்திலும் இடம் பெற்றவர்.அம்மா அவருக்காக அதிகப்படியாக வைத்திருந்தது,ஒரு சமாதானப் புறா.யோசித்துப் பார்த்தால் அம்மா எல்லோருக்குமே வெள்ளைப் புறா வைத்திருந்து ,அது அவர் கண்ணுக்கு மட்டுமே பட்டிருக்குமோ,என்று காந்திக்குத் தோன்றும்.எல்லாப் பிள்ளைகளும் சமாதானமாகப் போகவேண்டும் என்று எந்த அம்மாதான் யோசிக்காமல் இருப்பாள்.அப்படி யோசிக்கவில்லையென்றால், அது அம்மாவாக முடியாதே. நாலு ஆண் பிள்ளைகளுக்குப் பின், ஐந்தாவது குழந்தையாக தங்கம்,நிதானமாக

வந்தாள்.வந்தவள் கை நிறைய,வண்ண வண்ண நூல்களும்,தையல் ஊசியும்,பெயிண்ட்களும் பிரஷ்களுமாக முகம் நிறைய மகிழ்ச்சியுமாக நின்றாள்.கையில் எதை எடுத்தாலும் அதைக் கலை நயம் மிகுந்த பொருளாக மாற்றுவது எப்படி என்பதைக் கற்றவள். அவள் அதை, ஜடப் பொருளில் மட்டும் காட்டாமல் மனிதர்களிடமும் பிரயோகிக்க வேண்டும் என்று நினைப்பாள்.குப்பைத் தொட்டியில் எறியப் படும் வெள்ளை பூண்டின் தோலை பூக்களாக மாற்றும் கலையை அறிந்து வைத்திருந்ததோடு நில்லாமல் ,பலரும் ஒதுக்கும் ஒரு மனிதனை,எல்லோரும் மதிக்கும் வண்ணம் மாற்றிப் பார்க்கவேண்டும் என்று, தன் கலைத்திறமையை சமுதாய மட்டத்துக்கு உயர்த்திப் பார்ப்பாள்.எத்தனையோ முறை,தோல்விகளைத் தழுவியிருந்தாலும் சளைக்காமல் தன் கலைத் திறமையை ஜடப் பொருளுக்கும் ஜனங்களுக்குமாக உபயோகமாக்கப் பார்ப்பாள்.பொிய தொழில் அதிபாின்,அருமையான பெண் என்ற ாீதியில் பொன்னும் பொருளும் கேட்டு வாங்கி,அந்த அற்ப சந்தோஷத்தில் திளைக்காமல்,வண்ணப் பூக்கள்,அது இறைவன் படைத்ததாக இருக்கட்டும்,இயந்திரத்தில் உருவானதாக இருக்கட்டும் அதன் அழகில் திளைப்பாள்.சின்னச் சின்னக் கலைப் பொருட்கள்போதும் ,அவளைக் களிப்பில் ஆழ்த்த.இந்த எளிமையை அவள் தாயிடமிருந்து அள்ளி வந்திருப்பாளோ ?

துள்ளித் துள்ளி ஓடிவருகிறாள் ஷண்பகம்,அவள் கால்களில் சலங்கைகள்.

அவள் தன் பெயரை ‘லலிதா பத்மினி ராகினி ஷெண்பகம் என்று மானசீகமாக, வாிசைப் படுத்தி,ரசித்து மகிழ்வாள்.வீட்டுக்குள் வீடியோ நுழையாத கால கட்டத்தில்,

பத்மினியும் வைஜயந்திமாலாவும் ஆடிய நடனங்களை அப்படியே பள்ளி மேடைகளில் ஆடி

கைதட்டலைப் பெற்றுவிடுவாள்.1955-60க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பாளையங்கோட்டை பள்ளியில் படித்த மாணவிகள், அறுபதை கடந்து நின்றாலும் யாருக்குமே இன்றுவரை மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி ஒன்று உண்டு என்றால் அது , ‘கண்ணும் கண்ணும் கலந்து ‘ பாடலுக்கு இவளும் இவள் தோழியும் ஆடிய நடனம்தான்.அந்த பாடலை கேட்டால் போதும் ,பலருக்கு அவர்களின் பள்ளிப் பருவத்தின் பசுமையான நினைவுகள் மனக் கண் முன் 70எம் எம் ஆக ஓட ஆரம்பித்து விடும்.செல்வச் செழிப்பில் வளர்ந்த சுவடே தொியாமல்,எளிமையான எண்ணம் ,படாடோபம் என்ற வார்த்தைக்கு

ழ்க்கை என்று இவளும் தன் சகோதாியைப் போல் வாழத் தொிந்தவள்.தாயின் சொத்தான எளிமையை இவர்கள் இருவர் மட்டும், சாிபாதியாகப் பிாித்துக் கொண்டார்களோ.பேராசை பிடித்தவர்கள்!

அலுங்காமல் குலுங்காமல் அமைதியாக வருகிறான் ,கந்தன்.அவன் கையிலும் ஆயில் பெயிண்ட் டப்பாக்கள்,ஸைஸ் வாாியாக பிரஷ்கள்,கான்வாஸ் துணிகள் என்று ஒரு ஓவியனாக வந்து நின்றான்.பள்ளிகளில் ஆகட்டும் கல்லூாிகளில் ஆகட்டும் ,அவனது ரெக்கார்ட் நோட்டுப் புத்தகங்கள் மாணவர்கள் நடுவே பார்வைக்காக சுற்றிவரும்.படங்கள் வரைவதில் காட்டும் நிதானம்,வாழ்க்கையில் அடுத்தவாிடம் பழகுவதிலும் காட்டுவார்,அதனாலேயே பலரது விரோதத்துக்கு ஆளாகிவிடுவார்.அடுத்தவருக்குத் தீது செய்ய எண்ணாத பட்டாம் பூச்சி அவர்.அவரைப் புாிந்து கொண்டவருக்கு அவர் ஒரு பூ,புாிந்து கொள்ளாதவருக்கு அவர் ஒரு புதிர்.

இனிமையான வீணையின் நாதம் காதில் விழுகிறதா ?இதோ வருகிறாள் ஸரஸ்வதி.கையில் வீணையையும் முகத்தில் புளகாங்கிதமுமாக பூாித்து நிற்கிறாள்.கலைவாணியின் கடாட்சமும்,பாரதி சொன்ன, புதுமைப் பெண் தோரணையும் ,கலந்த பெண்ணாக உலாவருவாள்.இசை மண்டபத்தில் வீணை மீட்டிய அதே கரம்,சாரணர் படையில் தேசியக் கொடிக்கு சல்யூட்டும் அடிக்கும்.எல்லாவற்றையும் தொிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் குடும்பத்தில் இவள் ஒருத்திக்கு மட்டுமே உண்டு.அனைவரையும் ஈர்க்கும் கலையையும் கற்றவள்.

இதோ நம் கதையின் கதாநாயகி,காந்தி வருகிறாள்.ஆமாம் அவள் முகத்தில் ஏன் இந்த சோகம் ?அவள் கையிலும் எதுவும் இருப்பதாகத் தொியவில்லையே!கண்ணில் ஒரு ஏமாற்றம்,முகத்தில் ஒரு அதிருப்தி .என்னவாக இருக்கும் .அம்மா அவளுக்கு எதுவும் வைக்கவில்லையா ?ஒன்று இரண்டு என்றால் சாி.இப்படி வதவத வென்று இருந்தால் பாிசு வழங்குவது எப்படி சாத்தியமாகும் ?அதுவும் கடைசியாக வந்தால் என்ன இருக்கும் .இருந்தாலும், அம்மா,அவள் கையில், தன் அளவு, சமையல் திறமையைத் தந்ததற்குச் சாட்சியாக ஒரு பொியகரண்டியைத் தரவில்லையென்றாலும் ஒரு சின்ன டாஸ்பூனாவது தந்திருக்கலாம்,சாி அதுதான் இல்லை ,ஒரு புல்லாங்குழல்,ஒரு டப்பா கோலமாவு, ஒரு துடைப்பம்,ஹும் எதுவும் இல்லை.

அவள் கையில், மறைத்து வைத்திருந்த நான்கு பேனாக்களையும் ,ஒரு கட்டு வெள்ளைத் தாள்களையும் அழுத கண்ணும் வீங்கிய முகமுமாக, வெளியே எடுத்தாள். அவைகளை ஓரமாக வைத்துவிட்டு ‘பம் ‘ என்று உட்கார்ந்து விட்டாள்.

ஆத்திரத்தோடு, அதில் நிறைய கிறுக்கினாள்,படம் போட்டாள்,கிழித்துப் வீசினாள்.ஒரு கட்டத்தில்,ஏதோ ஒரு உந்துதலில்,[நிச்சயமாக அது அம்மாவின் உசுப்பலாகத்தான் இருக்கும்.அடி அசடே!நான் உனக்கும் ஒரு பாிசைத் தந்தேனே தொியவில்லையா ?என்ற கிசுகிசுப்போடு,உசுப்பியிருப்பாள்]ஒரு சின்ன சிலிர்ப்புடன், அவள் தன் கிறுக்கலில் ஒன்றை, ஒரு பத்திாிகைக்கு அனுப்ப அது அகஸ்மாத்தாக அச்சில் வெளியாக,ஆனந்தத்தில் மூழ்கினாள். ‘யுரேகா ‘யுரேகா ‘என்று ஓலமிடாத குறையாக, அம்மாவின் பாிசின் மகத்துவத்தைப் புாிந்து கொண்டாள். ‘அம்மா ‘என்ற பாச அகராதியில் ஓரவஞ்சனை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காதே.எல்லோருக்கும் நன்றாகவே தந்திருக்கிறாள்.அவள் தந்த பாிசின் மகத்துவத்தை உணர்ந்த நாளிலிருந்து, தன் படைப்பின் முதல் எழுத்திலிருந்து முற்றுப் புள்ளி வரை அத்தனையையும் அம்மாவின் காலடியில் சமர்ப்பித்து வருகிறாள்.

எத்தனை சிசுவைத் தாங்கினாலும் அத்தனைக்கும் பாரபட்சமின்றி திறமைகளைப் பாிசாகத் தந்து கொண்டே இருக்குமே.அந்தப் பாிசுப்பேழை,அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமல்லவா!

அவளிடமிருந்துதானே அத்தனைபேருக்கும்,அந்தந்தத் திறமைகள் வந்திருக்க வேண்டும்.

பசித்தவர் பசியாதவர்,மூத்தவன் இளையவன்,இருப்பவன் இல்லாதவன், என்ற பேதம் பார்க்காமல் அனைவருக்கும் சாிசமமாக வழங்குவதுதானே அம்மா என்ற அட்சயபாத்திரம்,இல்லையென்றால் அது வெறும் பாத்திரம்தானே.

இன்னும் காந்திக்கு வியப்பு அடங்கவில்லை,ஆச்சாியம் தாங்கவில்லை.எப்படி இந்த நாலாங்கிளாஸ் அம்மாவுக்குள் இத்தனை திறமைகள் ஒழிந்து கொண்டிருந்தன ?இப்பவும்,இந்தக் கேள்வி, அவளை அலைக்களித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த சந்தேகத்துக்கு விடை,இதைவாசிக்கும் உங்களில், யாருக்காவது தொிந்தால்,தயவுசெய்து, சொல்லுங்களேன்.

கோமதி நடராஜன். ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்