பிரசாத்திற்குக் கல்யாணம்……!

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

என். அனந்த்குமார்


பிரசாத்திற்கு இருப்பு கொள்ளவில்லை.. அனைவரும் அவ்வளவு சீாியஸாக அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உற்றார், உறவினர் அனைவருக்கும் பிரசாத் என்றால் ஒருவித அலாதி ப்ாியம். அவ்வளவு நல்ல பையன். சத்தமாகக் கூட பேசமாட்டான். பரம சாது. ஆனால் நல்ல ஜாலியான ஒரு கேரக்டர். அவன் சிாிப்பதோடு மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி விடுவான். இன்னமும் அவனைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால், அனைவாின் கவனமும் அவனுக்கு ஏற்ற பெண்ணாகப் பார்க்க வேண்டுமே என்றே இருந்தது. பிரசாத்தின் அம்மா லட்சுமி. அழகிற்க்கு ஆர்த்தியும், ஆஸ்த்திக்கு பிரசாத்தும் கிடைத்தது லட்சுமி, இராகவன் இருவாின் பூர்வ ஜன்மப் புண்ணியம் என்று பலரும் கூறியுள்ளனர்.

சென்ற வாரம் தன் பொியம்மா வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தனர். பொியம்மாவிற்க்கு ஐந்து பெண்கள். ஆண்குழந்தை வேண்டும் என்பதற்க்காக எடுத்த முயற்ச்சியில் பெற்ற ஆறுதல் பாிசு இவர்கள். பொியம்மா பிள்ளைகள் ஏகமனதோடு சொன்னார்கள் ‘ எங்களுக்கு வரப்போகும் நாத்தனாரை நாங்கள் தான் செலக்ட் செய்வோம். நாள பின்ன வந்து போகனுமில்ல.. ? ‘ பிரசாத்தின் அம்மா லட்சுமியோ உடனே ‘எனக்குத் தொிஞ்சு உங்க அஞ்சு பேருக்கும் பொதுவா இந்த உலகத்தில எதுவுமே இல்லை. ங்க அஞ்சு பேரும் என்னைக்கு ஒன்னு சேந்து….என்னைக்கு செலக்ட் பண்ணி…. ? ‘ என்று பெருமூச்சு விட்டாள். அவர்களோ ‘ம்ம்…அதெல்லாம் முடியாது..! நாங்க பார்க்கும் பெண் தான்..! ‘ என்றார்கள். அதற்கு அம்மாவோ ‘ஏண்டி! ங்க அஞ்சு பேரும் அஞ்சு பொண்ணைப் பாத்தா என்னடி பண்றது ? ‘ என்றாள். அதுவரை தன் கல்யாணத்திற்க்குத் தன்னைத் தவிர அனைவ்ரும் பெண் பார்க்கிறார்களே என்றபடி பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரசாத் ‘அம்மா! ங்க கவலையே பட வேண்டாம். நான் அஞ்சு பேரையும் கட்டிக்கிறேன்..! ‘ என்று கூற லட்சுமி அருகில் இருந்த ஒரு பொிய கம்பை எடுக்க வீடே சிாிப்பலையில் மூழ்கியது.

அலைந்து, திாிந்து ஒரு வழியாகப் பிரசாத்திற்குப் பெண் பார்த்தாயிற்று. ‘பொண்ணு பேரு ஷாலினி. நல்ல குணம். பாக்க நல்லா, லட்சணமா இருப்பா..! நல்ல குடும்பம்! பொண்ணுக்கு ஏதோ ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை. நல்ல சம்பளமும் கூட.. பொண்ணு அப்பாவுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை.. கூடப்பொறந்தது ஒரே ஒரு அண்ணன். அவனுக்கும் நல்ல வேலை! ‘ லட்சுமி தன் வீட்டிற்க்கு வருவோாிடமும், போவோாிடமும் சிக்கிவிட்ட டேப்பைப் போல சொல்லிக்கொண்டு இருந்தாள்.

பிரசாத்தைப் பற்றி சொல்வதற்க்கில்லை. அவனுக்கு ஒன்றும் புாியவில்லை…! புது அனுபவம் அல்லவா ? லட்சுமி திட்டிக்கொண்டே இருந்தாள் ‘எப்பப் பார்த்தாலும் என்னடா எதையாவது நினைச்சுக்கிட்டே…சிாிச்சுக்கிட்டே இருக்க..! மாப்பிள்ளை மாதிாி கொஞ்சம் பவுசா இருடா.. ‘ ம்ஹ ‘ம்..பிரசாத் கண்டுகொள்ளவதாகவே இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன. ஆம்! ஷாலினியைப் பெண் பார்க்கப்போகிறார்கள்! பிரசாத் தரையிலேயே இல்லை. லட்சுமி ஆர்த்தியிடம் ரொம்ப வருத்தப்பட்டாள். ‘இவன் இங்கயே இப்படி இருக்கிறானே! அங்க வந்து ஏதாவது தத்து பித்துனு உளாிருவானோன்னு ரொம்ப கவலையாயிருக்குடி! ‘

கிளம்பிவிட்டார்கள் அனைவரும். ஷாலினியை… .இல்லையில்லை..பெண்ணைப் பார்க்க…..! பிரசாத் முதல் ஆளாகக் கிளம்பிவிட்டிருந்தான். கூடவே லட்சுமி, ராகவன், ஆர்த்தி, பொியம்மா மற்றும் அவர்கள் படைக்கலங்களும்…! ஆரவாரத்துடனும், ஆர்ப்பாட்டமுடனும் அவர்கள் பயணம் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெண் வீட்டிற்க்குக் கிளம்பியது.

**********************************************************************

பிரசாத் பெண்ணின் போட்டாவை ஏற்கனவே பார்த்திருந்தாலும் நோில் பார்க்கப் படு ஆர்வமாக இருந்தான். (எல்லாம் வயசுக் கோளாறு தான்..!). அனைவருக்கும் பெண்ணின் வீட்டில் நல்ல வரவேற்பு. அவர்கள் வீட்டின் நாய் கூட பிரசாத்தைப் பார்த்ததும், அறிமுகமில்லாத ஆள் என்றும் பாராமல் தன் பங்கிற்க்கு வாலை ஆட்டியது. என்ன இருந்தாலும் அது பெண் வீட்டுக்காரர் அல்லவா ?

வீட்டிலுள்ள அனைவரும் ஹாலை ஆக்கிரமித்திருந்தனர். முக்கியமான ஒருவரைத் தவிர….சாி.. பரவாயில்லை, படத்தில் எல்லாம் பார்ப்பது போல் கண்டிப்பாகக் காப்பி கொடுக்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தான் பிரசாத்.. அவன் ஆசையில் மண் விழுந்தது. காப்பியை பெண்ணின் தாயார் கொண்டு வந்தார். பிரசாத் வெறுத்தே விட்டான். ஏதோ சொல்வது போல், தன் அம்மா லட்சுமியைப் பாிதாபமாகப் பார்த்தான். தன் மகனின் ஆவலைத் தொிந்து கொண்ட லட்சுமி, ‘சாி…சாி…கொஞ்சம் பொண்ணக் கூப்பிடுங்க..! ‘ என்றாள். அதுவரைப் பொறுமையாக இருந்த அனைவரும் அப்போது தான் நினைவு வந்தது போல் ஆமோதிப்பதாக தலையை ஆட்டினார்கள். பிரசாத் உற்சாகமானான்.

ஷாலினியை அவள் அம்மா அழைத்து வந்தாள். பூப்போன்ற பாதம் தரையில் பட்டும் படாமலும் வந்தாள் ஷாலினி. பிரசாத் சிலிர்த்து, கொஞ்சம் வியர்த்தும் போனான். தான் எதிர்பார்த்ததை விட ஷாலினி அழகாக இருந்த்தாள். ஷாலினியை லட்சுமி ‘வாம்மா..இப்படி உட்கார்..! ‘ என்றதும் அவசரமாகவும், கொஞ்சம் நப்பாசையுடனும் தனக்கு அருகில் கொஞ்சம் இடம் உருவாக்கி ஷாலினியை உட்கார வைக்க நினைத்தான். லட்சுமி தன் மகனின் எண்ணத்தைப் புாிந்துகொண்டதும், ஷாலினியின் கையைப்பிடித்து, கொஞ்சம் இழுத்துத் தன்னருகில் உட்கார வைத்தாள். பிரசாத்தோ…நொந்தே போனான். ‘…ம்ம்ம். கல்யாணம் மட்டும் முடியட்டும். அப்புறம் பார்த்துக்கறேன்..இவங்க மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ? ‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

லட்சுமி கேட்டாள். ‘ஏம்மா! உனக்கு எங்க எல்லாரையும் பிடிச்சிருக்கா ?

பிரசாத் ஆர்வத்துடன் ஷாலினியின் இதழ்களை நோக்கினான்.

‘ம் ‘ என்று ஷாலினி ஒரெழுத்தில் பதில் சொன்னாள். அது பிரசாத்திற்கு ஏதோ ஒரு ஹைக்கூ கவிதை போல் கேட்டது. அடுத்து தன்னைத் தான் கேட்பார்கள் என்று பிரசாத் கொஞ்சம் ரைப் பருகித் தயாரானான்.

லட்சுமி கேட்டாள் ‘உனக்கு சமையல் தொியுமா ? ‘

அதற்கு ஷாலினியின் அப்பா பதிலளித்தார். ‘எப்பல்லாம் என் பொண்டாட்டி ஊருக்கு போறாளோ, அப்பெல்லாம் ஷாலினி சமையல் தான். பிரம்மாதமா இருக்கும். அதனால் என் பொண்டாட்டி ஊருக்குப் போனால் எனக்கு இரட்டை சந்தோஷம் ‘ என்றார் வாயெல்லாம் பல்லாக….

பிரசாத் தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

பொியம்மா பெண் கேட்டாள். ‘கோலம் போட.. ? ‘

பிரசாத்திற்கு வந்ததே கோபம். ‘இந்தா…. கொஞ்சம் சும்மாயிருக்கிறீங்களா ? அது தொியுமா..இது தொியுமான்னுட்டு.. பாவம்! ஏன் அவளை எல்லாரும் இப்படி டார்ச்சர் பண்றீங்க ? ‘ என்று கூறியதைக் கேட்டு அனைவரும் அசந்தே போனார்கள்.

முதலில் அதிர்ந்தாலும் லட்சுமி தொடர்ந்தாள் ‘சாி, இனி ஆக வேண்டியதைப் பேசுவோம். ‘ என்று ஆரம்பித்ததும் இதர இத்தியாதிகள் அனைத்தும் பேசப்பட்டன. பிரசாத் காதில் எதுவுமே விழவில்லை. அவன் ஷாலினியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ பிரசாத் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை இரசித்துக் கொண்டும், வெட்கப்பட்டுக் கொண்டும் இருந்தாள்.

கல்யாணப் பேச்சு முடிவிற்க்கு வரும்பொழுது ‘சாி! கல்யாணத்தை எப்போ வைத்துக்கொள்ளலாம் ? ‘ என்றாள் ஷாலினியின் தந்தையார். இது தான் தக்க சமயம் என்று அறிந்ததும் பிரசாத் பேச முற்ப்பட்டான். மகனின் எண்ணத்தை அறிந்த லட்சுமி உடனே

‘இது பங்குனி மாதம். வைகாசியில் வைத்துக் கொள்வோம்! ‘ என்றாள்.

உடனே பிரசாத் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான். விரலை விட்டு எண்ணினான். ‘பங்குனி…. சித்திரை… வைகாசி.. அய்யோ! இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறதே! ‘ கண்கள் சிவந்தன. கைகள் நடுங்கின… இதயம் எக்கு தப்பாக அடிக்க முற்ப்பட்டது. ஆனால், சற்றே சுதாாித்து,இவற்றை எல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாதவனாக கிண்ணத்தில் உள்ள மிக்ஸரை சாப்பிட நினைத்தவன் அதை வாயில் போட்டு கோபத்தோடு கடிக்க, அதில் எதிர்பாராமல் கலந்திருந்த ஒரு கல் ாபடால்!ா என்று பிரகாஷ் வாயினுள் உடைந்தது. ‘ஆ..! ‘ என்றான் பிரகாஷ். அனைவரும் ‘என்ன ஆச்சு! ‘ என்று பதட்டத்துடன் பார்த்தனர். பொியம்மாவின் கடைக்குட்டி அப்போது ‘ஆலப் போல்…வேலப் போல்..ஆலம் விழுது போல்.. ‘ என்று பாட… ஹாலே களேபரமாயிற்று.

இறுதியில் ‘அப்ப நாங்க வரோம்..! ‘ என்றாள் லட்சுமி எழுந்தவளாக. இராகவன் ாஆமாம்!ா என்பது போல் வேகமாக தலையசைத்தார். ாஇப்ப வீட்டில போய் என்ன வேலை ? ராக்கெட்டா விடப்போறாங்க ? கொஞ்சம் இருந்துவிட்டுத் தான் போலாமோ என்று பிரசாத் அனைவரையும் மனதிற்க்குள் திட்டினான். ‘என்ன..! எந்திாி! ‘ என்று லட்சுமி அதட்ட…. முனகியவாறே எழுந்தான்.

யாாிடம் சொல்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ஷாலினியிடம் சொல்லிவிட்டு செல்லவேண்டும் என்று எண்ணி அவளிடம் செல்ல..ஆர்த்தி ‘அண்ணா! வழி இந்தப் பக்கம்..! ‘ என்று சிாித்துக் கொண்டே சொன்னாள். தன் இறுதி முயற்சியும் செல்லாததில் சொல்லொண்ணாத் துயரம் கொண்டான்.

காாினுள் புகுந்தபின்பு தான் ஞாபகம் வந்தது. ‘ஆ.! அம்மா..நான் என் சாவியை உள்ளே மறந்து வச்சுட்டேன். ஒரே நிமிஷம்.. எடுத்துட்டு வந்துடறேன்..! ‘ என்று ஓட முயன்றவனை, ஷாலினியின் அண்ணன் தடுத்தார். ‘மாப்பிள்ளே! ங்க இருங்க. நான் எடுத்துட்டு வரேன் ‘ என்றவரை பிரசாத் ஒரு மார்க்கமாகப் பார்த்தான். ாஇருந்திருந்து ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு..அதப்போய் ஏன்யா.. ?ா என்று எண்ணியவறே ‘இல்ல..இல்ல உங்களுக்குத் தொியாது. நானே போய் எடுத்துக்கறேன். நோ, தேங்கஸ்! ‘ என்று ஷாலினியைப் பார்க்கும் ஆவலில் சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

உள்ளே ஷாலினி சந்தோஷாத்தின் உச்சியில் பாடிக்கொண்டு இருந்தாள். பிரசாத் உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அக்கம், பக்கம் யாருமில்லை..

‘சாவி…சாவி..எடுக்க மறந்துட்டேன்.. அதான்.. ‘ என்று இழுத்தான். ஷாலினி ஒன்றும் பேசவில்லை. மனதினுள் சிாித்துக் கொண்டாள்.

‘அப்ப நான்..! ‘ என…. அவளோ ‘……ம்ம்ம்ம் ‘ என்று இழுத்தாள். பிரசாத்தை ரொம்ப நேரம் காணாமல் லட்சுமி தேடிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கு தன் அருமை மகன்

‘தன் ாவழிா…… தனி ாவழிா ‘ என்று வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள்.

‘இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா…. ? ‘ என்று கேட்டதும். பிரசாத் வேறுவழியில்லாமல் கண்களால் ஷாலினியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

************************************************************************

மறுநாள் காலை, அலுவலகத்தில் பிரசாத்திற்கு வேலையே ஒடவில்லை. எப்பொழுதும் ஷாலினியின் ஞாபகமாகவே இருந்தது. எங்கேயாவது தொலைப்பேசி மணி அடித்தால் ஓடிப்போய் எடுத்தான். அடிக்கடி வெட்கப்பட்டுக் கொண்டான். விஷயம் தொிந்து வாழ்த்த வந்த நண்பர்கள் அனைவரும் ‘நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்..பாவம்! ‘ என்று வினவிவிட்டு.. ‘மாப்ள! என்ன ஆச்சு உனக்கு ? ‘ என்றனர்.

‘ம்ம்..என் கவலை எனக்கு ‘ என்றான்.

நண்பர்களோ ‘கல்யாணம் என்றாலே கவலை தான். அதான் மெதுவா பண்ணனும் சொல்வாங்க. இப்ப உனக்குப் புாியுதா.. நாங்க ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றோம்னு ‘ என்று புத்திமதி சொன்னார்கள்.

‘டேய்! என்னப் பத்தி என்ன நினைச்சீங்க! நான் முன்ன வச்ச காலைப் பின்ன வைக்க மாட்டேன். எனக்குக் கல்யாணத்தை பத்தி ஒன்னும் பயமில்லை.. ‘ என்றான்.

நண்பர்களுக்கோ குழப்பம்.. ‘அய்யா..ராசா.. நல்லா இருப்ப..விவரம்மாச் சொல்லு. அப்புறம் என்னடா கவலை. ‘ என்றார்கள்.

‘டேய்! பொண்ணு தான் பாத்தாச்சே ஒழிய, கல்யாணம் இப்ப இல்லடா..மூணு மாசம் கழிச்சு தான்..அதான் ரொம்ப வருத்தமா இருக்கு..நானும் என்னால முடிஞ்ச வரை போராடிப் பாத்தேன்.. ம்ஹ ‘ம்…. யாரும் அசையற மாதிாி தொியல..இந்த பாயிண்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. தொிஞ்சிருந்தா எல்லாம் பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடியே முடிவுகட்டியிருப்பேன். ச்சே..மிஸ் ஆயிருச்சு..! ‘ என்றான் கவலை தோய்ந்த தொனியில்.

நண்பர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். கொஞ்சமும் பலனில்லை. ‘கிணற்றுத் தண்ணீரை ஆற்றுத் தண்ணீரா கொண்டு போகப் போகிறது ? ஷாலினி உனக்குத் தான்..கவலையை விடு.! ‘ என்றார்கள். இவனோ பழமொழிக்கு பழமொழியாய் ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே..! ‘ என்றான்.

நண்பர்களுள் ஒருவன் சொன்னான் ‘மாப்ள! நான் ஒரு நல்ல யோசனை சொல்றேன் ‘. பிரசாத்தோ ‘போடா! நான் எத்தனை படம் பாத்திருக்கேன். நண்பன் சொல்ற ஐடியா எல்லாம் வொர்க்கவுட் ஆகாது ‘ என்று மறுக்க, அவனோ ‘டேய்! அவசரப்படாதே..முதல்ல சொல்றதக் கேளு..யாருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. ஒரு மனிதன் காதல் கல்யாணம் செய்யலாம்……. அல்லது நிச்சய கல்யாணம் செய்யலாம். ஒன்று கிடைத்தால் மற்றொன்று கிடைக்காது. உனக்குக் கிடைச்சிருக்க சான்ஸை வைச்சு மூனு மாசம் ஷாலினியை காதலிச்சுட்டு, அப்புறமா கல்யாணம் பண்ணிக்கோ..! காதலும் பண்ணின மாதிாி ஆச்சு..கல்யாணமும் பண்ணின மாதிாியும் ஆச்சு.! எப்படி என் ஐடியா.. ? ‘ என்றான். பிரசாத் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமானது.

‘டேய்! இது நல்லாயிருக்குடா.. என்னடா பண்ணலாம் மூணு மாசம் ‘ என்றான் பிரசாத்.

‘ம்ம்.. கல்யாணத்திற்க்கு மாங்காய் வாங்கிக் கொடு ‘ என்று ஒருவன் கூற…. அலுவலகமே அல்லோல கல்லோலப்ப்ட்டது. ‘சும்மா.. சினிமா.. பார்க்.. அப்படான்னு சுத்துடா…. ‘ என்றார்கள். பிரசாத்திற்கு நல்ல யோசனையாய் தோன்ற ‘இன்னைக்கே ஆரம்பிக்கறண்டா…! ‘ என்றான் உற்சாகத்தோடு.

இன்று மாலையே ஷாலினியைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் முடிந்தால் சினிமாவிற்க்கு…வேண்டாம்.. ஆரம்பத்திலேயே சினிமா என்றால் ஒப்புக்கொள்ள மாட்டாள். ரொம்ப கூச்சப்படுவாள்.. ஐஸ்கிாீம் பார்லருக்குப் போகலாம் என்று மனக்கணக்கு போட்டான். மாலையானதும் தன் இருசக்கர வண்டியை கிளப்பிக்கொண்டு ஷாலினியின் அலுவலகம் இருக்கும் திசையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.

************************************************************************

ஷாலினியின் அலுவலகம் இருக்கும் சாலையை அடைந்த பின் ‘என்ன செய்வது ? எப்படி திட்டத்தை துவங்குவது ? ‘ என்று யோசித்தவாறே.. ஒரு ஜூஸ் கடையின் அருகில் வண்டியை நிறுத்தினான். ஷாலினி அலுவலகம் முடிவடையும் நேரம் ஆயிற்று. தேடினான்…சாலையின் அனைத்து இடங்களிலும்.. பிரசாத்தின் துரதிர்ஷ்டம்..அனைத்து பெண்களும் ஷாலினியைப் போலவே இருந்தனர். வண்டியில் சுற்றிச் சுற்றித் தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருந்தான்.

ஆ…அதோ..ஷாலினி…நிஜமாகவா ? ஆம் ஷாலினியே தான்… அதே நடை.. அதே ஷாலினி தான்.. பிரசாத்திற்கு கை, கால்கள் உதறல் எடுத்தன. ‘நாம் தவறு செய்கிறோமோ ? ‘மனசாட்சியின் கேள்விக்கு ‘இல்லை..நிச்சயமாக இல்லை. இதில் என்ன தவறு இருக்கிறது ? அவள் நாளைக்கு எனக்கு சொந்தமாகப் போகிறவள். நான் சென்று அவளிடம் பேசுவதில் அப்படி என்ன தவறு இருக்கப் போகிறது ? ‘ தனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டான்.

வண்டியைக் கிளப்பிக்கொண்டு கொஞ்சம் உளட்டிக்கொண்டும் சென்றான். வீரத்திற்க்கு மீசையைத் தடவிக் கொண்டான். ம்ஹ ‘ம்..ஒன்றும் பயனில்லை. நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு எதிாில் சென்றான்.

ஷாலினியைப் பார்த்து ‘ஹாய்! ‘ என்றான். ஆச்சர்யமும், அதிர்ச்சியும் பொங்க அவளும் ‘ஹாய்! ‘ என்றாள்.

இவனோ ‘ங்க.. எங்க இந்தப் பக்கம் ? ‘

‘ம்ம்ம்.. அதை நான் கேக்கனும்..! ‘ என்றாள்.

‘ஓ..ஓ ‘ என்றவன் சற்று சுதாாித்து, ‘இது.. இங்க, இங்க தான உங்க ஆபீஸ் இருக்கு.. சாாி.. நான் மறந்தே போயிட்டேன்.. ‘ என்றான்.

‘என் கேள்விக்கு ங்க இன்னும் பதில் சொல்லலையே! ‘ மடக்கினாள் ஷாலினி.

‘அதுவா… அது வந்து.. ஆ, ஆஃபீஸ் விஷயமா வந்தேன் ‘ சமாளித்தான்.

‘என்னங்க.. சும்மா ரோட்ல நின்னு பேசிட்டு.. வாங்க ஏதாவது ஐஸ் கிாீம் பார்லருக்குப் போவோம்! ‘ என்றான்.

‘ம்ம்ம்ம்…. ‘ சற்று யோசித்துவிட்டு ‘சாி.! ‘ என்றாள்.

ஷாலினி கொஞ்சமும் வெட்கப்ப்டாமல் ஃப்ாீயாக இருப்பது, பிரசாத்திற்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால், அவனுக்குள் ஆயிரமாயிரம் இரசாயன மாற்றங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டிருந்தன.

அருகில் இருந்த ஒரு ஐஸ்கிாீம் பார்லருக்குள் நுழைந்தார்கள். ‘என்ன சாப்பிடுாீங்க.. ? ‘ கேட்டான்.

‘எனக்கு பிஸ்தா..! உங்களுக்கு.. ? ‘ என்றாள். ‘ஆ…அதே பிஸ்தா தான்..! ‘ என்றான்.

‘என்னது … ? ‘ ஷாலினி செல்லமாக முறைத்தாள்.

‘அய்யோ! நான் வேற பிஸ்தாவை சொன்னேன். தப்பா எதுவும் நினைச்சுக்காதீங்க..! ‘ என்றான்.

‘எனக்கும் உங்கள மாதிாி பிஸ்தா தான் பிடிக்கும்.. சின்ன வயசில இருந்தே..! ‘ அப்பட்டமாகப் பொய் சொன்னான். அதற்கு ஷாலினி ‘எனக்கு பிஸ்தா பிடிக்கும்னு யார் சொன்னா.. ? ஏதோ இந்த கடையில வேற எதுவும் நல்லா இருக்காதேன்னு தான் நான் சொன்னேன்..! ‘ என்றாள். பிரசாத் நெளிந்தான்.

வெளியே வந்தார்கள். பிரசாத்திற்கு ஷாலினியை தன் வண்டியில் வைத்துக் கொண்டு செல்ல ஆசையாக இருந்தது. எத்தனை நாள் ஏக்கம் ? ஷாலினியிடம் கேட்கலாமா ? ாஉள்மனது வேண்டாம் !ா என்றது. மனப்போராட்டத்திற்க்கிடையே கேட்டே விட்டான். ‘என் கூட வண்டியில வர்ாிங்களா ? நானே உங்க வீட்டுக்கிட்டே டிராப் பண்றேன்.! ‘ சிதறு தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்தான். பந்து இப்பொழுது ஷாலினியின் கோர்ட்டில்… அவளுக்கு என்ன சொல்வதென்றே புாியவில்லை.. மறுக்கவும் முடியவில்லை. முடிவை பிரசாத்திடமே விட்டுவிடலாம் என்று மெளனமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

***********************************************************************

‘… ச்சே..தப்பு பண்ணிட்டோம்… ஐஸ் கிாிம் பார்லரோடு ட்டாட்டா.. சொல்லியிருக்கனும். பாவம்! என்னால் இவளுக்கு இப்ப எவ்வளவு கஷ்டம்.. ?ா தன்னைத் தானே நொந்து கொண்டான். ஷாலினி வேறுவழியில்லாமல், அவனுடன் கிளம்ப ஆயத்தமானாள். பிரசாத்திற்குப் புாிந்தது; இருந்தாலும் தயங்கினான்.

அப்பொழுது பார்த்து, தெய்வாதீனமாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது. ‘ஹாய்! ஷாலினி..! ‘ என்றாள் ஸ்கூட்டியிலிருந்த ஒரு இளம்பெண். பதிலுக்கு ‘ஹாய்! லாவண்யா ‘ என்றாள். ‘என் ஃப்ரண்டு..பக்கத்து தெருவில இருக்கா ‘ என்று பிரசாத்திற்கு அறிமுகம் செய்தாள். இவனும் ‘ஹாய் ‘ சொன்னான். ‘பை த பை இவர் தான் என்னோட…! ‘ நிறுத்தினாள் ஷாலினி.

‘ம்ம்..! ஒன்னும் சொல்ல வேணாம். புாியுது, புாியுது..! ‘ என்றாள்.

‘சாி, என்ன என் கூட வற்றியா.. ? இல்ல ? ‘ கேட்டாள். ஷாலினி பிரசாத்தைப் பார்த்தாள்.

‘ இவங்க கூடவே போ ஷாலினி. ‘ என்றான்.

‘தேங்க் யூ..! ‘ சொல்லிவிட்டு லாவன்யாவோடு கிளம்பினாள்.

‘மிஸ்டர். பிரசாத், நான் போனதுக்கப்புறம் என்னத் திட்டமாட்டாங்களே..! ‘ என்றாள் லாவண்யா.

‘இல்ல…இல்ல.! ‘ என்றான் சிாித்தவாறே….

தனியே வீடு வந்து சேர்ந்தவன், அம்மாவிற்க்குத் தொிந்தால் அவ்வளவு தான்.. என்று மனதிற்க்குள் சொல்லிக் கொண்டான். கனவுகளோடு காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது,

‘ஐஸ்கிாீம் நல்லா இருந்துச்சாண்ணா… ? ‘ கேட்டபடியே வந்தாள் ஆர்த்தி.

********************************************************************

பிரசாத் அதிர்ந்தான். தன் அருமை தங்கையிடம் வசமாக மாட்டிக்கொண்டோமே..! என்ன செய்வது ? இவள் எங்கே ஐஸ்கிாீம் பார்லர் வந்தாள் ? ஒருவேளை நாம் சென்றது போலவே, ஆர்த்தியும் யார்கூடவாவது.. ச்சேச்சே.. இருக்காது என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஆர்த்தியைப் பாிதாபமாக நோக்கினான். ‘அண்ணா..! கவலைப்படாதே.. அம்மாகிட்ட சொல்ல மாட்டேன். உனக்கு புத்திமதி சொல்லும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும் சொல்றேன். ாஎதுவுமே இருக்கிற இடத்தில் இருந்தா தான் மதிப்பு.. அதனால இனி மேலாவது பார்த்து நடந்துக்கோ.. ‘ என்று வேக்கியானம் கூறிவிட்டு சென்றாள்.

ாம்ம்… நேரம் சாியில்லையென்றால் ஒட்டகச்சிவிங்கி தலையில் ஏறி உட்கார்ந்தால் கூட நாய் எகிறி கடிக்குமாம்.. இதுகிட்ட எல்லாம் அட்வைஸ் வாங்க வேண்டி இருக்கு.. எல்லாம் என்னை சொல்லனும். ஒருத்தன் சொல்றான்னு புத்திகெட்டுப் போனேன் பாரு.. இனிமேலாவது இப்படி எல்லாம் நடக்காமல் இருக்கும்படி பார்த்துக்கனும்ா என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இனிமேல் ஷாலினி விஷயத்தில் தலையிடக்கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு ஒரு முடிவு எடுத்தான்.

நாட்கள் சென்றன. சென்றன என்று சொல்லுவதை விட நகர்ந்தன என்று சொல்லலாம். ஒரு மாதம் சென்றது.

ஒருநாள் மாலை பிரசாத் அலுவலகத்தில் இருந்து வந்ததும்..

லட்சுமி ‘பிரசாத்! இன்னிக்கு உன் மாமனார் வந்திருந்தார் ‘ என்றாள்.

‘ஆ! ஷாலினியின் அப்பாவா. ? ‘ என்றான். ‘ஆமா. இந்த மாசம் அவங்க வீட்ல ஒரு விசேஷம். அதான் வந்து சொல்லிட்டு போனார். ‘ என்றாள்.

பிரசாத் கேட்டான் ‘அப்படி என்னம்மா விசேஷம் ? ‘ என்றான் ஆர்வமாக..

அவரு அப்பாவிற்க்கு, அதான் ஷாலினியின் தாத்தா, பாட்டிக்கு அறுபதாம் கல்யாணமாம். ‘ என்றாள்.

‘அவனவன் முதலாவது கல்யாணத்திற்க்கே வழியில்லாம உட்கார்ந்திருக்கான்.. அவருக்கு அறுபதாம் கல்யாணம் ரொம்ப அவசியமா.. ? வயசானவங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்குது..ம்ம்…..! இந்த நாட்டில பொிசுக பண்ற லொள்ளு தாங்க முடியல ‘ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான்.

உடனே, ஒரு மின்னல் வெட்டியது பிரசாத்திற்கு, ‘அம்மா! யார் யாரெல்லாம் விசேஷத்திற்க்கு போகப்போறாங்க .. ? ‘ என்றான். ‘ என்ன நினைக்கிறங்கறது புாியுது..! இது பொியவங்க விசேஷம். அதுனால, நானும் உன் அப்பாவும் போய்ட்டு வரோம் ‘ என்றாள் திட்டவட்டமாக.

பிரசாத் நினைத்தான். ‘ம்ஹூம்.. என்ன பண்ணியாவது நாம் விசேஷத்திற்க்கு சென்று விடவேண்டும் என்று தீர்மானத்தோடு, ‘அம்மா! இது பொியவங்க விசேஷம் தான் ஒத்துக்கறேன். ஆனால், புதுசா கல்யாணம் ஆகப்போற நான் அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா அது நல்லது தானே.. ? ‘ என்று கொக்கி போட்டான்.

லட்சுமியால் மறுக்க முடியவில்லை. ‘ம்ம்.. சொன்னா கேக்கமாட்ட.. என்னமோ பண்ணு! ‘ என்றதும் பிரசாத் ஷாலினியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் துள்ளிக்குதித்தான். அம்மான்னா… அம்மா தான் ! ‘ என்றான்.

அதற்கு ‘அடப்பாவி! இத்தனை நாள் உன்னைப் பெத்து, வளத்து, ஆளாக்கினப்பெல்லாம் தொியல.. இப்ப ஒருத்திய பாக்கபோறத்துக்கு சாின்னாத்தான் தொியுதா.. ? எல்லாப் பயலுகளும் ஒரேமாதிாி தாண்டா இருக்கீங்க.. ‘ என்றாள் ஆதங்கத்தோடு.

‘ம்ம்ம்ம்… பிரசாத் காதில் எதுவுமே விழவில்லை..ா அவன் தான் ஷாலினியைப் பார்க்கப் போகும் உற்சாகத்தில் இருக்கிறானே!

விசேஷம் வந்தது. ாஎங்கு பார்த்தாலும் ஒரே கிழம், கெட்டைகள். அம்மா சொன்னது சாிதான். பரவாயில்லை! நாம் என்ன இவங்களைப் பார்க்கவா வந்தோம் ?ா தனக்குள் கேட்டுக்கொண்டான் பிரசாத்.

கண்கள் அங்கும், இங்கும் அலைபாய்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது பார்த்து லட்சுமி ஒரு கைக்குழந்தையை ‘இதக் கொஞ்சம் பாத்துக்கோடா..! இந்தா வந்துர்ரேன் ‘ என்று சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல், அவன் கைகளில் திணித்து விட்டுச் சென்றாள்.

பிரசாத் என்ன செய்வதின்றே புாியாமல், சோகமாகக் குழந்தையைப் பார்த்தான். குழந்தையோ உட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர் விளம்பரத்தில் வருவது போல, ‘க்கிக்கிக்கிகீ..! ‘ என்று சிாித்தது.

ாஉனக்குக் கூட என்னைப் பார்த்தா சிாிப்பு வருது.. எல்லாம் நேரம்டா சாமி..! ாஎன்றான் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளியவாறே..! ‘ சற்றும் எதிர்பாராத வண்ணம், குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. ‘என்னடா இது வம்பா போச்சு.. நம்மள பாக்யராஜ் ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே..சாி.. ம்ம்… ச்சூச்சூ ‘ என்று சமாதானப்படுத்தும் வேளையில்,

ஆலஇலை காற்றில் அசைந்து.. அசைந்து வருவதைப் போல, ஷாலினி ஆடி, அசைந்து வந்தாள். பச்சை கலர் தாவணியில், பவனி வரும் மாலை நேரத்தென்றல் போல வந்தாள். இவன் பரவசமானான்.

ஷாலினியைக் கண்டதும் சமாதானப்படுத்தும் நிகழ்ச்சியை மறந்தே விட்டான். குழந்தை மறுபடியும் சிணுங்கி அவனுக்கு ஞாபகமூட்டியது. தூரத்திலேயே இவனைக் கண்டுகொண்டாலும், அலட்டிக்காமல் அருகில் வந்தாள்ஷாலினி.

‘ஹாய்! எப்படி இருக்கீங்க ? ‘ என்றான் ஆசையோடு..

‘ம்ம்.. நல்லா இருக்கேன் .. ங்க ? ‘ என்றாள். சிாிப்பை பதிலாய் தந்தான் பிரசாத்.

தன்னை யாரும் கவனிக்காததைக் கண்டு, குழந்தை ‘ஓ… ‘ என்று அழுக ஆரம்பித்தது. இருவரும் சுயநினைவிற்கு வந்தனர்.

‘இப்படி குடுங்க..! ‘ என்று குழந்தையை வாங்கினாள் ஷாலினி. குழந்தை மட்டும் இடமாறவில்லை. இலவச இணைப்பாக அவர்களது விரல்களும் தான்..! சொக்கிப் போனான் பிரசாத். அம்மாவிற்கு மனதார நன்றி சொன்னான்.

‘என்னடா… ? என்ன ஆச்சு.. ? ‘ என்று ஷாலினி கூறியதும் அதிர்ந்து போய் நிமிர்ந்தான்.

சொன்னது குழந்தையை என்று தொிந்ததும் ஆறுதல் அடைந்தான். ஆசையுடன் ஷாலினி குழந்தையின் வாளிப்பான கன்னத்தில் அழுத்தமாக தன் கொவ்வைப்பழம் போன்ற இதழ்களை ஒற்றி எடுத்தாள். எப்போதும் இல்லாமல், முதல் முறையாக அந்த குழந்தையின் மேல் பொறாமை ஏற்பட்டது பிரசாத்திற்கு. என்ன ஆச்சர்யம் ? பிரசாத் கவலைப்படுவதைக் கண்ட குழந்தையின் அழுகை உடனே நின்றது. பிரசாத் சிாிப்பதா, அழுவதா என்று தொியாமல் முழித்தான். வரும் மாலை நேரத்தென்றல் போல வந்தாள். இவன் பரவசமானான்.

பந்தியில் அனைவரும் உட்கார்ந்தனர். பாிமாறிக்கொண்டிருந்த ஷாலினியை, தன்னருகே உட்காரச் சொன்னான் பிரசாத். ‘இல்ல.. முதல்ல ங்க உட்காருங்க.. ‘ என்றாள் உாிமையோடு. இதுபோதாதா அவனுக்கு அப்படியே.. அதே இடத்தில் உட்கார்ந்தான். அருகில் யாரோ ஒரு பாட்டி, தன் கணவாிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். ‘இந்தப்புள்ளயத் தான் நம்ம ஷாலுவுக்கு பாத்துருக்காங்க.. ‘ ஷாலினி வெட்கத்தில் சிவந்தாள். பிரசாத் ஆகாயத்தில் பறந்தான். இருந்தாலும் தன் முன்னால் ‘ஷாலு ‘ என்று அவர்கள் சொன்னது அவனுக்கு பிடிக்கவில்லை.

எல்லாருக்கும் வைப்பதை விட ஒரு சுற்று அதிகமாகவே பிரசாத்திற்கு வைத்தாள். இவனோ ரொம்ப சிரமப்பட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ஷாலினி அந்தப் பக்கம் போய் வரும்போது கொஞ்சலாய் முறைத்தான். அவள் உள்ளூர சிாித்துக் கொண்டாள்.

‘இலையப் பாத்து சாப்பிடு.. ‘ அதட்டலான குரல் ஒன்று கேட்டது. குரலுக்கு சொந்தக்காரர் லட்சுமி. ‘எங்களுக்குத் தொியும்.. ‘ என்றான் பதிலுக்கு.

‘ஏண்டா, எதோ ஆசிர்வாதம் அது இதுனு வீட்ல பெருசா டயலாக் விட்ட… இப்ப அந்தப் பக்கம் எட்டியே பாக்கமாட்டேங்கற.. ‘ என்றாள் லட்சுமி. ‘அதெல்லாம் மொத்தமா கல்யாணத்தில வாங்கிக்கலாம்..! ‘ என்றான். ‘இதெல்லாம் உனக்கே அடுக்குமாடா.. ? ம்ம்…. கலி முத்திப் போச்சு! வாடா.. ‘ என்று ஷாலினியின் தாத்தா, பாட்டியிடம் கூப்பிட்டுக்கொண்டு சென்றாள். ஒன்றும் புாியாமல் அமைதியாக் தொடர்ந்தான் பிரசாத்.

‘யும் வாம்மா.. ‘ என்று ஷாலினியையும் அழைத்துக்கொண்டு சென்றாள் லட்சுமி. சபையிலே அழைத்துப் போய் ‘ம்ம்.. கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க.. ‘ என்றாள். பிரசாத்தும், ஷாலினியும் அவர்கள் முன் குனிந்தனர். ‘இப்ப போல எப்பவுமே இரண்டு பேரும் சந்தோஷமா.. இருங்க.. உங்க குடும்பம் வாழையடி வாழையாக செழிக்கட்டும் ‘ என்று மனமாரவும், வாயாரவும் ஷாலினியின் தாத்தா, பாட்டி வாழ்த்தினார்கள்.

பிரசாத்திற்கு தன்னையறியாமல் தன் கண்களில் இரண்டு சொட்டுகள் கண்ணீர் ஊறியது.

‘அப்ப நாங்க போய்ட்டு வரோம் ‘ என்று லட்சுமி சொன்னதும், அனைவாிடமும் பிாியா விடைபெற்றான் பிரசாத்.

நாட்கள் நகர்ந்தன.

மற்றொருநாள் மாலை பிரசாத் அலுவலகத்தில் இருந்து வந்ததும் லட்சுமி ‘பிரசாத்! இன்னிக்கு உன் மாமனார் வந்திருந்தார் ‘ என்றாள். ‘ஆ! ஷாலினியின் அப்பாவா. ? ‘ என்றான்.

உடனே, மறுபடியும் ஒரு மின்னல் வெட்டியது பிரசாத்திற்கு. அது மின்னல் இல்லை… போிடி என்று அவனுக்குத் தொிந்திருக்க நியாயமில்லை.

***********************************************************************

‘ஏதாவது விஷேசமாம்மா ? ‘ என்றான் பிரசாத் ஆர்வத்தோடு…..

‘அதெல்லாம் ஒன்றும் இல்லை.. அடுத்த மாதம் உன் மச்சான், அதான்… ஷாலினியின் அண்ணன் கம்பெனி விஷயமாக வெளிநாடு போறாராம். அதனால கல்யாணத்தை முன்பே பேசினது போல வைக்க முடியாது. கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்று சொல்லீட்டுப் போனார் ‘ ‘

‘இதெல்லாம் நியாயமே இல்லம்மா…..! ஏற்கனவே லேட்டு ‘ என்றான்.

‘ எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதுக்கு நம்ம என்னடா செய்ய முடியும் ‘ என்றாள் லட்சுமி.

‘இப்ப என்ன பிரச்சனை ? ஒன்னுமேயில்ல… நான் என்ன ஷாலினி அண்ணனவா கல்யாணம் பண்ணப் போறேன். ஷாலினியத் தான.. இவரு சந்தோஷமா போயிட்டு வரட்டும்..! ‘ என்றான் ஒரு நப்பாசையில்…..

‘என்னடா பேச்சு இது! அவங்க வீட்டில முதல்முதல்ல நடக்கப்போற விஷேசம் இது!. இதுக்குப்போய் பையன் இல்லன்னா என்னடா… ? ‘ என்றாள்

‘என்னம்மா.. இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்க.. இப்பெல்லாம் பொண்ணு ஒரு நாட்டிலயும், மாப்ள ஒரு நாட்டிலயும் இருந்துகிட்டே கம்ப்யூட்டர்ல கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. இந்த காலத்தில சாமி கூட கம்ப்யூட்டர் சாம்பிராணி தான் கேட்குது. இப்ப போய் பழைய டயலாக்கெல்லாம் விட்டுட்டு இருக்கீங்க.. ‘

என்றான். ‘சாி இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற ? வேணும்னா யே போய் அவங்ககிட்ட பேசிக்கோ! ‘ என்றாள் லட்சுமி.

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஆர்த்தி ஆரம்பித்தாள் ‘ அண்ணா! ஒத்துக்கிட்டாலும் இதுக்கு ஷாலினி கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க ? ‘ என்றாள். பிரசாத் தடுமாறினான்.

‘ஏன் அண்ணா, இப்போ உன்னை எங்கயாவது அனுப்பி வச்சுட்டு எனக்கு ஒரு கல்யாணம் பண்ண சம்மதிப்பியா ? நானும் தான் சம்மதிப்பேனா ? அதனால ஷாலினி அண்ணன் வெளிநாடு போய்ட்டு வந்ததுக்கப்புறமே கல்யாணத்தை வச்சுக்கலாம்ணா..! ‘ என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

‘ஆமாண்டா! இப்படி ஒரு சான்ஸ் கிடைக்க ரொம்ப அதிர்ஷ்டம் வேண்டுமாம். போய்ட்டு வந்ததும் பிரமோஷனாம்! சம்மந்தி சொன்னார். அதான் என்னால மறுக்க முடியலை! கல்யாணத்தை வெளிநாடு போறதுக்கு முன்னாடியே வைக்கலாம்னா இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள எல்லா வேலையும் செய்ய முடியாது ‘ என்று லட்சுமி எடுத்துக் கூறினாள்.

பிரசாத்திற்கு என்ன செய்வது என்றே புாியவில்லை. ாஆர்த்தி சொல்வதும் சாிதான். ஷாலினியும் அண்ணன் இல்லாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டாள். அது நல்லாவும் இருக்காது. அம்மா சொல்வதும் சாியே… ம்ம்ம்….. விதிப்படி என்ன நடக்குமோ நடக்கட்டும்ா என்று தனக்குள் சொல்லிக்கொண்டு….

‘சாிம்மா…. அவர் வெளிநாடு போய்ட்டே வரட்டும்! ‘ என்றான். லட்சுமியும், ஆர்த்தியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ‘அப்படான்னா… எப்ப கல்யாணம் நடக்கும். ? ‘ என்றான் ஏக்கத்துடன்….

லட்சுமி விரல்களால் எண்ணியவாறே ‘ம்ம்….. இது சித்திரை கடைசி… அவர் வைகாசியில் போவார்.. போய்ட்டு ஆனியில் வருவார். ஆடியில் கல்யாணம் வைக்கக் கூடாது. அதனால் கண்டிப்பாக ஆவணியில்..! ‘

லட்சுமி சொல்லிமுடிப்பதற்குள்ளாகவே..

பிரசாத் மயங்கி விழுந்தான்….!

Series Navigation

என். அனந்த்குமார்

என். அனந்த்குமார்