இன்னொரு வகை இரத்தம்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

சேவியர்.


இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதிகளை கடுமையாகத் தண்டிப்போம். இனி உலகில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று தீவிரவாத ஆதரவு இயக்கம், இன்னொன்று தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பு. தீவிரவாதிகளை ஆதாிக்கும் நாடுகளோடெல்லாம் அமொிக்கா இனிமேல் எந்தவிதமான வர்த்தக உறவும் வைத்துக் கொள்ளாது. தீவிரவாதிகளைத் தண்டிப்போம். வெற்றி எங்களுக்கே… அமொிக்க அதிபர் பேசி முடித்ததும் கூடியிருந்த அத்தனை உயர் அதிகாாிகளும் எழுந்து நின்று கை தட்டினார்கள். அன்வர் கையிலிருந்த ாிமோட் டை இயக்கி தொலைக்காட்சிப் பெட்டியை இருட்டாக்கினான். அவனுடைய கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன. அந்த அறையிலிருந்த ஆறு பேரும் ஒரு நீளமான மெளனத்துக்குள் விழுந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே அமொிக்கச் சாலை குளிர் போர்த்திக் கிடந்தது.

அடுத்த முறை தாக்குதல் இன்னும் பலமாக இருக்க வேண்டும். இந்தமுறை நாம் நிர்ணயித்திருந்த இலக்குகளில் தாக்குதல் சாியாக நடக்கவில்லை. இருந்தாலும் உலக வர்த்தகமையத் தாக்குதல் கர்வம் பிடித்தவர்களின் தலையில் இடியாகத் தான் இறங்கியிருக்கிறது. அடுத்தமுறை என்ன வழியில் தாக்குதல் நடத்துவது என்பது பற்றி நாம் யோசித்தாக வேண்டும். முதலில் நடத்திய தாக்குதல் போல எளிதானதாக இருக்காது, இருக்கக் கூடாது இனிமேல் நாம் நடத்த இருக்கிற தாக்குதல். விமானத்தைக் கடத்துவது என்பதெல்லாம் இனிமேல் நடக்கும் என்று தோன்றவில்லை. நகம் வெட்டி, குண்டூசி இவற்றைக் கூட விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை அமொிக்கப் பாதுகாப்பு அதிகாாிகள். எல்லோரும் மிகுந்த சோதனைக்குப் பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப் படுகிறார்கள். அதுவும் இனிமேல் விமானி இருக்கும் இடத்தை நெருங்க முடியாதபடி பாதுகாப்பு அதிகாாிகள் இரண்டு பேர் ஆயுதம் தாங்கியபடி எல்லா விமானத்திலும் இருக்கப் போகிறார்கள். எனவே இனிமேல் விமானம் கடத்தலாம் என்னும் எண்ணத்தையெல்லாம் தற்காலிகமாய் மூட்டை கட்டி வைக்க வேண்டியது தான்.

அதுமட்டுமல்ல, இப்போதெல்லாம் நாம் இயல்பாக வெளியே நடமாட முடிவதில்லை. அமொிக்கர் தவிர மற்ற அனைவரையும் சந்தேகக் கண்களோடு தான் மக்கள் பார்க்கிறார்கள். எனவே நாம் எந்த செயல் செய்தாலும் மற்றவர்களுடைய கவனத்திற்குள் மாட்டிக் கொள்வோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசத் துவங்கினார்கள். அனைவர் முகத்திலும் ஆத்திரம் இருந்தது. அமொிக்கா என்ன பொிய கொம்பனா ? அவன் நினைக்கிறது போல தான் உலகம் நடக்கணுமா ? அவனுடைய கர்வத்தின் அடிப்பாகம் வரை கரைத்து விட்டு, பொருளாதாரத்தை தரைமட்டம் ஆக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.

அன்வர் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். இப்போதாவது நான் சொல்வதைக் கேளுங்கள். ஜூவான் கமாச்சோ வைப் பற்றி நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அவனுடைய அறிவியல் மூளையை நாம் உபயோகித்தால் என்ன ? நமக்குத் தேவை அமொிக்காவின் அழிவு, அது எந்த விதத்தில் வந்தால் என்ன ? இப்போதாவது யோசியுங்கள்.

அதுவரை அமைதியாக இருந்த ஷஜார் குரலை கொஞ்சம் உயர்த்திப் பேசினான். ஜூவானுடைய நோக்கம் என்ன என்பது தான் நமக்குத் தொியுமே. நாம் நாமாக வெற்றி பெற வேண்டும். யாருடைய முதுகிலும் ஏறி நாம் சவாாி செய்ய வேண்டாம். அது நம்முடைய கொள்கைக்கு ஆகாது. வேறு ஏதாவது யோசிக்கலாம்.

வேறு என்ன யோசிப்பது ?. ஜூவான் சீனா வல்லரசாக வேண்டும் என்று நினைக்கிறான். இப்போது ரஷ்யா சிதறிவிட்டது. அமொிக்காவின் பொருளாதாரம் பாதி உடைந்துவிட்டது. அமொிக்கா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, பங்குச் சந்தை படுத்து விட்டது. இந்த நிலையில் இன்னும் அமொிக்காவை தொடர்ந்து அடித்தால், அமொிக்காவின் பொருளாதாரம் முழுசாக விழுந்துவிடும். அப்படியென்றால் அடுத்த வல்லரசு சீனாதான். இதுதான் ஜூவானுடைய எண்ணம். சீன அரசாங்கம் இதற்கு மறைமுகமாக முழு ஆதரவு கொடுக்கிறது. நமக்கு அமொிக்கா முழுவதும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திறமையும் பணமும் இருக்கிறது. அவர்களோடு இணைந்து நாம் செயல் படுவது தான் நல்லது என்பதே என்னுடைய எண்ணம். எதிராளி சாகவேண்டும், அவன் அடி விழுந்து செத்தாலும், வெடி வெடித்துச் செத்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால் அடிப்பதோ வெடிப்பதோ நாமாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய கருத்து. கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு அன்வர் அனைவாின் முகத்தின் மீதும் பார்வையை மெதுவாய்ப் படர விட்டான்.

ஷஜார் எதுவும் பேசவில்லை, அவனுடைய நீளமான தாடியைத் தடவிக்கொண்டே கேட்டான். அவர்களுடைய அறிவியல் பயன் படுமா ?

‘ படும் ஷஜார், பயன் படும் ‘ – நம்பு. நாம ஆமாண்ணு நம்பறதை இல்லேண்ணு சொல்லவும். இல்லேண்ணு சொல்றதை ஆமாண்ணு சொல்லவும் அறிவியலால முடியும். மனுஷன் குரங்கில இருந்து வந்தவன்னு அறிவியல் சொல்லிட்டு இருந்தது. அதை ஆமாண்ணு நம்பினோம். இப்போ கடைசியான ஆராய்ச்சி முடிவு என்ன தொியுமா ? மனிதன் குரங்கில இருந்து வந்தவன் கிடையாதாம். மனிதன் குரங்கில இருந்து வந்தவன் என்று நிரூபிக்க ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட அறிவியலால் காட்ட முடியவில்லை. ஒரு பல் தான் அவர்களிடம் ஆதாரமாக இருந்தது. அதை வைத்துத் தான் பாிணாம வளர்ச்சியில் வந்தவன் மனிதன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அது ஒரு பன்றியின் பல் என்று ஆராச்சியில் முடிவாகியிருக்கிறது. அறிவியல் என்பது மக்களால் எப்பவுமே ஆச்சாியத்தோடு பார்க்கக் கூடிய ஒரு விஷயம். நமக்கு அதெல்லாம் முக்கியமில்லை, நமக்குத் தேவை நமது கொள்கை. அதற்காக எந்தவிதமான விட்டுக் கொடுத்தலுக்கும் நாம் கவலைப்படக் கூடாது என்பதே என்னுடைய வாதம்.

சாி அன்வர். நீ சொல்றதையே இப்போதைக்கு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது எந்த அளவுக்குச் சாத்தியம் ?

இப்போது அன்வர் முகத்தில் மெலிதாக ஒரு புன்னகை படர ஆரம்பித்தது. மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.

ஜூவானுடைய ஆராச்சிக்கூடத்தில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். எ.டி 13 எனப்படுகின்ற ஒரு மிக மிக நுண்ணிய கருவி. கருவி என்றால் அதைக் கண்ணால் பார்க்கக் கூட முடியாது. ஒரு குண்டூசித் தலையை நூறு பகுதிகளாக உடைத்தால் அதில் ஒரு பகுதி தான் இந்த கருவியின் அளவே. இதை வைத்துத் தான் அமொிக்காவையே அலற வைக்கப் போகிறோம். இந்த கருவியை ஒரு மனிதனுடைய இரத்தக் குழாயில் செலுத்திவிட்டால் அது இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் மூளையின் கட்டுப் பாட்டை தன் வசப் படுத்திவிடும்.

இந்த கருவியின் செயல் பாடுகள் எல்லாம் கணிப்பொறியின் மூலம் கண்காணிக்கப் படும். அதற்குப் பின் அந்த மனிதன் நம்முடைய கணிப்பொறிக் கட்டுப்பட்டுக்குள் வந்துவிடுவான். அவனுடைய சிந்தனைகளை எல்லாம் நம்முடைய கருவியின் கட்டளைகள் ஓவர்கம் செய்து விடும், நாம் சொல்லக் கூடிய ஒரு கருவியாக அவனை மாற்ற முடியும். இது தான் இந்த கருவியைப் பற்றிய ஒரு அவுட் லைன்… சொல்லி விட்டு நிமிர்ந்தான் அன்வர்.

ஆச்சாியமாகத் தான் இருக்கிறது ஆனால் இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும் ? அனைவர் குரலிலும் கேள்விக்குறிகள் தொங்கின.

என்ன செய்ய முடியுமாவா ? இந்த கருவியை நாம் ஆயிரக்கணக்கான மக்களுக்குள் அவர்களுக்கேத் தொியாமல் செலுத்தப் போகிறோம். பிறகு அவர்களை வைத்தே நாம் அழிவுச் செயலை ஆரம்பிக்கப் போகிறோம். அதாவது அமொிக்கர்கள் அமொிக்கர்களை அழிக்கப் போகிறார்கள். நம்மிடமிருக்கும் கெமிக்கல் ஆயுதங்களை உபயோகிக்க இதை விட நல்ல வாய்ப்பு இல்லை. ஒரு டாலர் செலவில் இந்த கெமிக்கல் வெப்பன்ஸ் ஐ தயாாிக்க முடியும். கெமிக்கலை மக்களுடைய குடிநீர்க்குழாய்களில் கலக்கலாம், விஷ வாயுவை அலுவலகங்களின் குளிர்சாதன அறைகளுக்குள் பரப்பலாம், வர்த்தக நிலையங்களின் மக்களை தற்கொலைப் படையாளிகளாக மாற்றலாம், நூற்றுக்கணக்கான கார்களில் வெடிமருந்து ஏற்றி அவற்றை மக்கள் கூட்டங்களில், திரையரங்குகளில், விளையாட்டுத் திடல்களில் வெடிக்கலாம், காவல் அதிகாாிகளையே கொலையாளிகளாக மாற்றலாம், அது மட்டுமல்ல அதிபாின் படைக்காவலன் ஒருவனின் உடம்புக்குள் இதை செலுத்த முடிந்தால் அதிபரையே கொலை செய்யலாம்…. இதில் விஷேசம் என்னவென்றால் எதையும் நாம் செய்யப் போவதில்லை. அமொிக்கர்களே செய்வார்கள். நாம் மாட்டிக்கொள்ள எந்த விதமான வாய்ப்பும் இல்லை.

அன்வர் சொல்லச் சொல்ல நிலமையின் வீாியம் ஒவ்வொருவரையும் தாக்க ஆரம்பித்தது. எல்லோரும் ஆச்சாியத்தின் எல்லைக்குள் சென்றார்கள். அன்வர் தன்னுடைய பையைத் திறந்து ஒரு கேசட்டை எடுத்து டேப் ாிகார்டாில் பொருத்தினான் அதில் ஜூவான் சீனர்களுக்கே உாிய சிதைந்த ஆங்கிலத்தில் விளக்கிக் கொண்டிருந்தான். ஆல்பா டெல்டா யுனா ஒன் டெரா திாீ ஈஸ் ஆட்டோ டிஸ்ட்ராயர்…….

அன்வர் விளக்கிய செய்திகள் எல்லாம் டெப்ாிகார்டர் மறுபடியும் ஆங்கிலத்தில் கசிந்து கொண்டிருந்தது.

முழுசாய் நாற்பது நிமிடம்…. டேப் ாிகார்டர் தன்னிடமிருந்த எல்லா விஷயங்களையும் சொல்லி முடித்து விட்டு அமைதியாகச் சுழன்று கொண்டிருந்தது.

அது சாி, எப்படி இதை நாம் மக்களுக்குள் செலுத்தப் போகிறோம் ?

அதற்கு தான் நம்முடைய உதவியைத் தேடுகிறார்கள். அமொிக்கா முழுவதும் ஏராளமான மக்கள் இரத்ததானம் செய்கிறார்கள். நம்முடைய ஆள் ஒருவர் இரத்த தானம் செய்ய செல்ல வேண்டும், சென்று எப்படியாவது அங்கிருக்கும் டாக்டர் ஒருவருடைய உடலில் இதை செலுத்த வேண்டும். ஒரு சிாிஞ்ச், அல்லது ஜூவானிடம் இதற்காகவே இருக்கக் கூடிய சின்ன சிகரட் லைட்டர் வடிவிலான துப்பாக்கி, இதை எதையாவது பயன் படுத்தலாம். ஒரு டாக்டரை நம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தால், அவர் மூலமாக அங்கிருக்கும் எல்லா இரத்த பாட்டில் களிலும் இதை கலக்க வேண்டும், அல்லது அவரைக் கொண்டே நூற்றுக் கணக்கான மக்களுடைய உடம்பில் நேரடியாக இதை செலுத்த வைக்க வேண்டும். எத்தனை பேருக்குள் இது செலுத்தப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் நம்முடைய கணிப்பொறியில் உடனுக்குடன் தொிந்துவிடும். அந்த கருவியில் மிக சக்தி வாய்ந்த நுண்ணிய தகவல் செலுத்தும் விஷயங்கள் இருக்கின்றன. அதற்குப் பிறகு அவர்களை நம் இடத்துக்கு வர வைத்து அழிவுப் பொருட்களோடு அனுப்பி வைக்கலாம், அல்லது அவர்களாகவே செயல் பட நாம் இங்கிருந்தே கட்டளைகளை அனுப்பி வைக்கலாம்.

மொத்தத்தில் நாம் இந்த அறைக்குள் தான் இருக்கப் போகிறோம்.. ஆனால் அமொிக்கா அலறி அடித்துக் கொண்டு வீதியில் விழப்போகிறது. சொல்லிக் கொண்டே வெறித்தனமாய் சிாித்தான் அன்வர். சுற்றியிருந்த ஆறு பேரும் குதூகலக் கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த புனிதச் செயலுக்கான முதல் அடியை நான் எடுத்து வைக்கப் போகிறேன். கொள்கைக்காக முதல் மனிதனாய் இருப்பது, அல்லது இறப்பதை பெருமையாய் நினைக்கிறேன்… சொல்லி விட்டு தரையில் மண்டியிட்டான் அன்வர்.

அதன் பிறகு செயல் பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்தன. சாியாக மூன்று நாட்களுக்குப் பின் கையில் திறக்கப்பட்ட ஒரு கோக் பாட்டிலுடன் சிகாகோ விமான நிலையத்தில் வந்து இறங்கினார் ஜூவான். உறிஞ்சப் படாத ஸ்டரா ஒன்று சொருகப் பட்ட கோக் பாட்டிலுடன் செக்கிங் முடித்து வெளியே வந்து வாடகை டாக்சி ஒன்றைப் பிடித்து ஹோட்டல் ஹால்டன் என்று சொல்லி விட்டு கண்ணை மூடினார் ஜூவான். கையில் கோக் பாட்டில் பத்திரமாய் இருந்தது. இரவு எட்டு மணிக்கு அன்வருடைய கூட்டாளிகளைச் சந்திப்பதாக ஏற்பாடு. வழியில் ஒரு பொதுத் தொலை பேசி அருகில் காரை நிறுத்தி அமொிக்க நாணயங்களைப் போட்டு அன்வரைக் கூப்பிட்டான் ஜூவான்.

இரவு மணி எட்டு, கதவு தட்டும் ஓசை கேட்டு அன்வர் கதவின் லென்ஸ் வழியாக வெளியே பார்த்தான்.

மெல்ல புன்னகைத்தான்.

‘ஜூ வான் … ‘

ம்ம்ம்ம்ம்…..கையில் அதே கோக் பாட்டிலோடு உள்ளே நுழைந்தார் ஜூவான்.

பயணம் எப்படி இருந்தது ?

‘ பயணம் நன்றாகத் தான் இருந்தது.. ஆனால் இந்த கோக் பாட்டிலைத் தான் கீழே வைக்க முடியவில்லை.

இதில் தானே எல்லா விஷயங்களும் இருக்கின்றன…. ‘ சொல்லி விட்டுச் சிாித்தார் ஜூவான்.

ஜூவானைத் தவிர யாரும் சிாிக்கவில்லை.

சாி நான் உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, அடுத்த கட்டத்துக்குப் போகலாமா ? ஜூவான் கேட்டார்.

போகலாம்… சொல்லுங்க…

ஜூவான் பேசுவதற்காய் வாயைத் திறந்தார், ஆனால் அதற்கு அடுத்த வினாடி, சன்னலை உடைத்துக் கொண்டு எப்.பி.ஐ அதிகாாிகள் நான்கைந்துபேர் உள்ளே பாய்ந்தார்கள். அனைவர் கைகளிலும் துப்பாக்கி.

அறையிலிருந்த அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாய் அதிர்ந்தார்கள்.

விஷயம் எப்படி வெளியே தொிந்தது ? ஏதாவது உடனடியாகச் செய்தாக வேண்டும். அன்வருடைய மனம் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஆயிரம் விஷயங்களைக் கணக்குப் போட்டது.

வினாடி நேரத்தில் படுக்கையில் சாிந்து துப்பாக்கி எடுக்கப் புரண்டான். அதற்குள் மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுத்த ஜூவான் அன்வாின் நெற்றிப்பொட்டில் அதன் முனையைப் பதித்தார்.

ஜூவான்…. நீ…. அன்வர் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் திணறின…

அன்வர், உண்மையான ஜூவான்… ஹால்டன் ஹோட்டலில் அரஸ்ட் செய்யப்பட்டார்.

புத்திசாலித்தனம்-னு நினைச்சு இனிமேலும் முட்டாள் தனமான செயல்கள் செய்ய வேண்டாம்.

நீ தப்பிக்கிறதுக்கு இனிமே எந்த வாய்ப்பும் இல்லை. சொல்லிக் கொண்டே நெருங்கினார் ஜூவான் பெயாில் வந்திருந்த எப்.பி.ஐ அதிகாாி.

அன்வர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காவல் தலைகள் கைகளில் துப்பக்கிகளோடு ஜன்னலையே குறிபார்த்துக் கிடந்தன. இனிமேல் தப்ப முடியாது என்பதை உணர்ந்த அன்வர் அமைதியானான். அத்தனை பேரும் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு போலீஸ் கார்களில் திணிக்கப் பட்டார்கள்.

பத்திாிகையாளர் கும்பலுக்கு இடையே அமர்ந்திருந்தான் விக்னேஷ். நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழகான ாிப்போட்டர்கள் கேள்வி விதைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘ எப்படி நீங்க இந்த தீவிரவாதிகளை மோப்பம் பிடிச்சீங்க ? ‘

நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிற நெட் வர்க் மென்பொருள் வல்லுனர். இவர்களுக்கு பக்கத்து அப்பார்ட் மெண்ட் தான் என்னுடையது. கொஞ்சம் நாட்களாகவே இவர்களுடைய செயல் பாடுகளின் மேல் எனக்கு சந்தேகம் இருந்து வந்தது. அதனால் தான் அவர்களுடைய நெட்வர்க்கில் என்னுடைய லேப் டாப்பை இணைத்தேன். என்னுடைய கணிப்பொறி அறிவு ஒரு நல்ல விஷயத்துக்குப் பயன்பட்டதில் சந்தோஷப் படுகிறேன். இது தொலைபேசியை ஒட்டுக் கேட்பது போல சின்ன விஷயம் இல்லை. அவர்கள் கணிப்பொறியைப் பயன்படுத்தியதால் என்னால் இந்த விஷயங்களை டிராக் செய்ய முடிந்தது. உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்தேன்.

‘ ஒரு இந்தியரான உங்களுக்கு எப்படி அமொிக்காவைக் காப்பாற்றவேண்டும் என்னும் எண்ணம் எப்படி வந்தது ? ‘

இந்தியா எப்போதுமே அமைதியை நாடும் நாடு. எத்தனை முறை முதுகில் அடித்தாலும் அன்பாய் கூப்பிட்டு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவதைத் தான் இந்தியா செய்து வருகிறது. இந்தியாவில் நடந்த எல்லா தீவிரவாதத் தாக்குதலுக்கான காரணிகளையும் இந்தியா உடனுக்குடன் கண்டு பிடித்து விடும். ஆனால் மன்னிப்பதையும், திருந்தச் சொல்லி மனுக்கொடுப்பதையும் தான் இந்தியா விரும்புகிறது. அளவுக்கு மீறி வாலாட்டுபவர்களைக் கூட பிடித்து வாலை மட்டும் நறுக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது. எப்போதுமே மனித உணர்வுகளுக்கும், மனித உாிமைகளுக்கும், மனிதாபிமானத்துக்கும்

மாியாதை செலுத்துவதே எங்கள் நாட்டின் கொள்கை. போர்கள் பெயர்களை நிலை நாட்டும். ஆனால் நடுகற்களின் மீது. உயிர்களை தீக்கிரையாக்கும் தீவிரவாதத்தை தீர்க்க அப்பாவிகளை அழிக்கும் போர்களை நாட வேண்டாம் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம்…..

விக்னேஷ் சொல்லிக் கொண்டே போனான்…..

தொலைக்காட்சிகள் அதை வீடுகளுக்குள் நேரடியாக இறக்குமதி செய்து கொண்டிருந்தது

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்