ஒரு பெண்ணாதிக்கக் கதை

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

பாரதிராமன்


ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள் சன்னலோரமும் கதவோரமும் குவிந்தனர். ரயில் கிளம்பிவிட்டது.கைகள் ‘டாட்டா ‘ காட்டின.ப்ளாட்ஃபாரத்தலைகள் மறையத்தொடங்கின.

ரயில் வேகமெடுத்தது.

பாலசுப்ரமணியமும் ரேவதியும் குழந்தை மஞ்சுவுடன் இருக்கையில் அமர்ந்தனர்.ரேவதி சன்னல் ஓரம். அவளைஒட்டி குழந்தை.அடுத்து பாலசுப்ரமணியம். அடுத்து நான்.

ரேவதியும் பாலசுப்ரமணியமும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.குழந்தை கீழே இறங்கி இருவருக்கும் இடையில் நின்றது. ரேவதிக்கு சற்று ப் பருமனான சாீரம். குரல் மெல்லியது.

பருமனாக இருப்பவர்களுக்கு பெரும்பாலும் குரல் மெல்லியதாக இருக்கிறது. சி.கே.சரஸ்வதி விதிவிலக்கு. சற்றே தள்ளியிருந்த என் காதில் ரேவதியின் பேச்சு விழவில்லை.ஆனால் பாலுவின் பேச்சுகள் நன்றாக விழுந்தன. என் காதில்விழுந்தவை இவைதான்:-

ரேவதி:———-

பாலு : ஆமாம்

ரேவதி: ———

பாலு: அது சாி.

ரேவதி: ——–

பாலு : கரெக்ட், கரெக்ட்

ரேவதி:———-

பாலு : நீ சொன்னா சாிதான்

ரேவதி: ———-

பாலு : அப்படியே செய்யலாமே

ரேவதி :———-

பாலு : உம், உம்.

ரேவதி : ———-

பாலு: அதுதானே1

ரேவதி : ———–

பாலு : ரொம்ப சாி.

ரேவதி:————-

பாலு : ஓகே. நீ சொல்றபடியே செய்து விடலாமே. ஏ! மஞ்சு, அம்மா சொல்றதக் கேளு.

கண்கள் சுழல மேல் தட்டில் ஏறிப் படுத்தேன். கீழேயிருந்து ரேவதியின் குரல் இப்போது கேட்டது. ‘ ஏங்க நீங்களும் படுக்கிறதுதானே ? ‘

பாலசுப்ரமணியமும் ‘ஆமாம், படுத்துக்கிறேன் ‘ என்று கூறிக்கொண்டே நடுத்தட்டை விாித்தார்.

ரேவதியும் பாலசுப்ரமணியமும் எந்த ஸ்டேஷனில் ஏறியிருப்பார்கள் என்று இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள் கெட்டிக்கார வாசகர்களான நீங்கள்.!

ஆம், மதுரைதான்!

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.