இது பாம்பே தமிழ் சங்கம் முன்பு கேட்ட டயலாக்

This entry is part [part not set] of 7 in the series 20001119_Issue

சித்திரலேகா


‘ ஏண்டி பொண்ணே, உனக்கு உங்க பெரியம்மா குடும்பம் கூட நல்ல பழக்கம் உண்டோ ? ‘

‘ ஆமாம். நாங்க மெட்ராஸ்ல டிநகர்ல தஞ்சாவூர் ரோட்ல குடியிருந்தோம். எங்க பெரியம்மா இருந்தது கோடம்பாக்கம் ஸ்டேஷன் தெருல. அனேகமா எங்க பெரியம்மாவும், அம்மாவும் தினமும் மீட் பண்ணிடுவாங்க ‘

‘தஞ்சாவூருக்கு உங்க ரோட் வழியாத்தான் போகணுமா ? ‘

‘ஐயே, நீங்க ஓண்ணு. தெரு பேர் தஞ்சாவூர் ரோட். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம். மாம்பலமும் கோடம்பாக்கமும் அடுத்த அடுத்த ஸ்டேஷன் ‘

‘அப்போ இங்க தாணேல இருக்கானே, உங்க பெரியம்மா பிள்ளை சேகர், அவனையும் நன்னாத்தெரியுமா ? ‘

‘ரொம்ப நல்லாத்தெரியும். ‘

‘உங்க பெரியம்மா எல்லாம் எப்படி, நல்ல பைசா உண்டா ? சேகர் தாணேல சொந்தமா ப்ளாட் வாங்கியிருக்கான்னு சொன்னியே ? ‘

‘நாங்கள்ளாம் மிடில் க்ளாஸ்தான். எங்க வீடுகள்ள பைசா அதிகம் கிடையாது. ஏதோ சாப்பாட்டுக்குக் கவலி இல்லம் இருப்போம். சேகர் பி.ஈ ஃபைனல் இயர் படிக்கும்போதே, அவ அப்பாவுக்கு இருந்த கொஞ்சம் பணமும், பிஸினஸ்ல தொலைஞ்சு போச்சு. சேகர் பரிட்சை முடிஞ்சவொடனே பாம்பேக்கு வேலை தேடி வந்துட்டான். ரெண்டாயிரம் சம்பளம். வேலை வி.டில. அவன் குடியிருந்தது டோம்பிவிலில. தெரிஞ்சவங்க வீட்டுல பேயிங் கெஸ்ட்டா இருந்தான். ரொம்பத்தெரிஞ்சவங்க. அதனால், ஆயிரம் ரூவா வாங்கிகிட்டு தங்கிக்க இடம் கொடுத்து, ஒரு வேளை சாப்பாடும் போட்டாங்க. எண்ணூறு ரூவா அம்மா அப்பாவுக்கு அனுப்பிறுவான். ரயில் சார்ஜ் கம்பெனி குடுக்கும். காலைல ஒரேஒரு வடா பாவ், ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ப்ளாட்ஃபார்ம்ல சாப்பிடுவான். அப்புறம் ராத்திரி தங்கியிருக்கறவங்க வீட்டுல சாப்பிடற வரைக்கும் பச்சத்தண்ணியக் குடிச்சு பசிய அடக்குவான். பார்ட் டைம் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சான். மொத வேலைல ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனதும் வேறே நல்ல சம்பள வேலைக்கு அப்ளை பண்ணிச் சேர்ந்தான். அப்புறம் சைட்ல இன்னும் கொஞ்சம் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சு, இன்னும் நல்ல வேலைக்குப் போய், இப்போ கம்பெனில லோன் போட்டு, சொந்தமா வீடு வாங்கியிருக்கான். வயசு இருவத்தி ஏழுதான். ரொம்ப கஷ்டம் அனுபவிச்சவன். அதுக்காக யாரையும் ப்ளேம் பண்ண மாட்டான். வாழ்க்கைய அதும் போக்கில அக்செப்ட் பண்ணிக்கிட்டவன். ‘

‘அவன் மாமனார் அதிகம் பைசா இல்லாதவரா ? ‘

‘இல்ல அவருக்கு பைசாவுக்கு ஒண்ணும் குறைவு இல்லை. செம்பூர்ல சொந்தமா ப்ளாட் இருக்கு. வாஷில ஒண்ணு வாங்கியிருக்காறு. நல்ல சம்பளமும் கூட. ‘

‘சேகர் பொண்டாட்டிக்குப் படிப்புக் காணாதோ ? ‘

‘அவளும் பி ஈ. நல்ல வேலைல இருந்தா. இப்போ கொழந்தை ரொம்பவும் சின்னதுங்கறதால வேலைக்குப் போகலை. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போவாளா இருக்கும். இப்போத்தான் சேகர் ஒராள் வருமானம் போதுமே. அவனுக்கு நல்ல சம்பளம். ‘

‘கேக்கறேன்னு நெனைக்காதே. அவளுக்கு மூளைக் கோளாறு ஏதும்…. ‘

‘ஏன் இப்படி ஏணே, கோணே, சங்கரச் சாணேன்னு கேள்வி கேக்கறீங்க ? அவ ரொம்ப நல்லப் பொண்ணு. நீங்க கேக்கற மாதிரிலாம் இல்லை ‘

‘அவ அப்பா சம்மதத்தோடத்தான் அவா கல்யாணம் நடந்ததாமா. இல்லை, லவ்வு, கிவ்வுன்னு ஏதாவது ? ‘

‘ லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணறது என்ன தப்பா ? இருந்தாலும், இவங்க கல்யாணம் பெரியவங்க நிச்சயம் பண்ணித்தான் நடந்தது. ஆமாம் ஏன் இவ்வளவு கேக்கறீங்க ? எங்க சேகருக்கு என்ன குறைவு ? ஏன் அவன் மாமனார் அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்காமப் போகணும் ? ‘

‘ அது இல்லை, அவன் மாமனார், மாமியார் சின்ன வயசுலேயே பாம்பேல செட்டில் ஆயிட்டவங்கன்னு நீதான சொன்ன ? இப்போ நானும் இங்க செட்டில் ஆகி முப்பது வருஷம் ஆறது. என் பொண்ணக் கொண்டு மெட்ராஸ் காரப் பையனுக்குக் குடுக்க மாட்டேன். உங்க அண்ணியோட அப்பா ஏன் போயும் போயும் ஒரு மெட்ராஸ் பையனுக்குப் போய் பொண்ணக் குடுக்கணும்னு எனக்கு ஒரு சம்சயம். அதான் இவ்வளவும் கேட்டேன்.

‘! ! ! ‘

Series Navigation

சித்திரலேகா

சித்திரலேகா